வியாழன், 15 மே, 2025

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர்.

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர்.


பிறப்பு 

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது.


இளம் வயதில் மின் குவார்ட்ஸ் உருவாக்கம் 

ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கிய மான அறிவியல் ஆய்வில் பியேர் கியூரி ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின. அழுத்த மின்விளைவுத் தத்து வத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உரு வாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன், குவார்ட்சு கடிகாரங்கள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.



‘கியூரி விதி’ என்பது 

முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் ‘முறுக்குத் தராசு’ ஒன்றை உருவாக்கினார். காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது. மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் ‘கியூரி புள்ளி’ எனப்படுகிறது.

மேரி கியூரியுடன் திருமணம் 

1895-ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் “ கதிரியக்கம்” (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட ‘படிக மின் அழுத்தமானி’ மிகவும் பயன்பட்டது.




கதிரியக்க அலகு 

பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளி வரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளி யிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டு பிடித்தனர். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும் , சில எதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர், இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் எனப்பட்டன. கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி எனப்படும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7x1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910-ல் ‘கதிரியக்கத் துறை காங்கிரஸ் என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.




திங்கள், 12 மே, 2025

The History of Indian Civil Service

 

மே 12. 1806

 1806 - இந்தியாவில் ஐஏஎஸ் போன்று உலகின் பல பகுதிகளிலும் காணப்படும், அரசுப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடங்கிவைத்த, கிழக்கிந்தியக் கம்ப்பெனிக் கல்லூரி தொடங்கப்பட்ட நாள்.

 # அரசு நிர்வாகத்துக்காகு அலுவலர்களுக்குப் பயிற்சியளிப்பது என்பதைத் தொடங்கியது ஒரு தனியார் வணிக நிறுவனம்தான்! இண்டீஸ் என்றழைக்கப்பட்ட, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் வணிகம் புரிவதற்காகத் தொடங்கப்பட்ட ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி(எச்ஈஐசி), 1700களின் இடைப்பகுதியில், அன்றைய உலக வணிகத்தில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருந்தது.

# 1757இல் ப்ளாசிப் போரின் வெற்றியையடுத்து, அரசாட்சி செய்யும் அமைப்பாக மாறி, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மட்டுமின்றி, ஹாங்க்காங் வரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது.

# உலகின் குறிப்பிடத்தக்க அளவு நிலப்பரப்பை ஒரு நிறுவனம் ஆட்சி செய்தது எனும்போது, அதற்கேற்ற அளவு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் 16-18 வயதுடைய ஆங்கிலேய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பணிகளைச் செய்வதற்குரிய பயிற்சியளித்து, ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி'ஸ் சிவில் சர்வீஸ்(எச்ஈஐசிசிஎஸ்) என்று பட்டமளித்துப் பயன்படுத்த இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.

# இதுவே உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சிவில் சர்வீசஸ் என்ற தற்காலத்திய முறைக்குத் தொடக்கம் என்றாலும், கி.மு.140இல் சீனப் பேரரசர் வூ, 100 இளைஞர்களுக்கு நடத்திய 'இம்ப்பீரியல் எக்ஸாமினேஷன்' என்பதுதான், அரசுப் பணிகளுக்கான முதல் தேர்வு.

# பின்னாளில் மெரிட்டோக்ரசி என்று பெயரிடப்பட்ட, கன்ஃபூசியச் சிந்தனையின் அடிப்படையில், சீன அரசுப் பணிகளுக்கு, உயர்குடியினர் என்ற கட்டுப்பாடின்றி யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தேர்வுகள் அதன்பின் சீனாவில் 1905 வரை வழக்கமாகவே இருந்தன. பிரபுக்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் நடைமுறை இங்கிலாந்தில் இருந்த நிலையில், 18ஆம் நூற்றாண்டின் பல ஆங்கில எழுத்தாளர்கள், சீனத் தேர்வு முறையைப் பற்றிப் புகழ்ந்து எழுதினர். அந்தப் பின்னணியில்தான், தனக்கான ஊழியர்களை உருவாக்க கிழக்கிந்தியக் கம்ப்பெனி இந்தக் கல்லூரியைத் தொடங்கியது.

 # இந்தியன் சிவில் சர்வீஸ்(ஐசிஎஸ்) என்ற பெயரையும், தேர்வையும் 1829இல் அது அறிமுகப்படுத்தியது.

# 1857இன் முதல் சுதந்திரப் போருக்குப்பின், இந்தியாவின் ஆட்சி நேரடியாக இங்கிலாந்து அரசின்கீழ் சென்ற பின்னணியில், அரசுப் பணிக்கான தேர்வாகவே ஐசிஎஸ் மாறி, விடுதலைக்குப்பின் ஐஏஸ் ஆகியது.

# இங்கிலாந்து அரசுப் பணிகளுக்கான 'ஹர் மெஜஸ்ட்டீ'ஸ் சிவில் சர்வீஸ்' என்பதே 1855இல்தான் தொடங்கப்பட்டது. இன்று உலகின் பல நாடுகளில் இம்முறை நடைமுறையிலிருப்பதுடன், ஐநாவின் அமைப்புகளுக்கும் இண்ட்டர்நேஷனல் சிவில் சர்வீஸ் கமிஷன்(ஐசிஎஸ்சி) என்ற அமைப்பின்மூலம்தான் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்!

 

 May 12, 1806

1806 - The East India Company College, which initiated the system of selecting civil servants for government service, similar to the IAS in India and other parts of the world, was established on this day.

  • It was a private commercial company that started training officers for government administration! The Honourable East India Company (HEIC), which was established for trading in the regions known as the Indies, including the Indian subcontinent and Southeast Asia, had grown into a massive company controlling half of the world's trade by the mid-1700s.

  • Following the victory in the Battle of Plassey in 1757, it transformed into a governing body, extending its control over the Indian subcontinent, Southeast Asia, and even Hong Kong.

  • When a company governed a significant portion of the world's land, it required a large number of employees. This college was established to select English youths aged 16-18, train them for their duties, and employ them under the title of Honourable East India Company's Civil Service (HEICCS).

  • Although this marked the beginning of the modern civil services system in many countries, the first examination for government service was conducted by Chinese Emperor Wu in 140 BC, known as the 'Imperial Examination' for 100 youths.

  • These exams, based on Confucian thought and later termed meritocracy, allowed anyone to be selected for Chinese government service without the restriction of noble birth and remained common in China until 1905. In England, where only nobles and their chosen ones were appointed to government positions, many English writers of the 18th century praised the Chinese examination system. It was against this backdrop that the East India Company established this college to create its employees.

  • The Indian Civil Service (ICS) and its examination were introduced in 1829.

  • After the First War of Independence in 1857, when the governance of India came directly under the British Crown, the ICS became the examination for government service, which later became the IAS after independence.

  • The 'Her Majesty's Civil Service' for British government service was only started in 1855. Today, this system is in practice in many countries around the world, and even the United Nations selects its officers through the International Civil Service Commission (ICSC).

புதன், 19 மார்ச், 2025

தமிழர்கள் கொண்டாடிய சித்திரைத் திருநாள்

சித்திரையை கொண்டாடுவோம்

தமிழ் மரபில் சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். 

மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடையது. சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப்படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.



 சிலப்பதிகாரத்தில்

பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் சித்திரையின் சிறப்பை பதிவு செய்து வைத்துள்ளன. இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. "சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.



சித்திரை மாதத்தில் வானத்திலே மேகம் சித்திரம் போல இருக்கும். அதாவது சித்திரங்களால்  ஒப்பனை செய்யப்பட்டிருப்பது போலத் தோன்றும். இக்காலத்தில் 'சித்திரைக் கார்' என்னும் நெல் அறுவடை செய்யப்படும். இம்மாதம் மக்களின் உணவை நிறைவு செய்யும் மாதமாக இருப்பதால் சூரியனுக்குப் பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இன்று வரை உள்ளது.

சித்திரைக் கார் நெல் 

கார் நெல் (Kar), கார் அரிசி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே இரகமாக உள்ள இந்த கார் நெல், பாரம்பரிய நெல்லில் நடுத்தர இரகமாகவும் மத்திய கால பயிராகவும் விளங்குகிறது. 

ஒரு ஏக்கருக்கு குறைந்தது இருபத்தி நான்கு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்குத் தேவையின்றி, இயற்கையில் கிடைக்கும் சத்துகளைக் கிரகித்துக்கொண்டு செழித்து வளரக்கூடியது. 

மேலும், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த இரகம். சிவப்பு நிற நெல்லும், வெள்ளை அரிசியும் உடையது, நடவு செய்ய மட்டுமே ஏற்ற இரகமாக உள்ள இது, பயிர் வளர்ந்து பச்சை பிடித்துவிட்டால் அதன்பிறகு பதினைந்து நாட்களில் நீர் நிரம்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இந்த நெல் இரகம் தண்ணீருக்கு உள்ளேயே பூத்து, பால் பிடித்து, கதிர் முற்றி முழு வளர்ச்சி அடைந்து விளையக்கூடியது இதன் மூலம் அதிகம் தண்ணீர் தேங்கினாலும் இதற்கு பாதிப்பு இல்லை. இதன் வைக்கோல் அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதால் தண்ணீரில் வாரக் கணக்கில் இருந்தாலும் அழுகுவதில்லை.

அகத்தியர் குணபாடம் என்ற சித்தர்  பாடலில் 

"காரரிசி மந்தங் கனப்புடலில் தூலிப்பும்

பாரறிய வாயுவையும் பண்ணுங்காண் – நேரே

கரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த

உரப்பாகும் என்றே யுரை".

மேற்கூறிய பாடலின் பொருளானது, மந்த குணமுள்ள காரரிசி, உடல் பெருக்கையும், வளிக்குற்றத்தையும் வன்மையையும் தருவதாகவும், இதனால் கரப்பான் நோய்கள் உண்டாகும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது.

சித்திரை மாத முழு நிலவு நாளில் 'சித்திரைக் கஞ்சி' வழங்கும் நடைமுறையும், காவேரி ஆற்றில் இம்மாதத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கிற்கு 'சித்திரைச் சிலம்பன்' எனச் சிறப்புப் பெயரும் இருந்துள்ளது. 

நமது முன்னோர் இயற்கையின் தொழிற்பாட்டை நன்கு கண்காணித்து வாழ்ந்தனர். ஐம்பெரும் பூதங்களான நீர்,நெருப்பு, காற்று,மண், ஆகாயம் என்பவற்றில் சித்திரை மாதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து அம்மாதத்தைத் தனித்துவமுடையதாகக் கருதி வாழ்ந்துள்ளனர். சித்திரை மாத நிறைமதி நாளில் திருவிழாக்கள் நடத்தினர். சித்திரா பௌர்ணமி, சித்திரைக் கஞ்சி, சித்திரைக் கார், சித்திரைச் சுழி, சித்திரைச் சிலம்பன், சித்திரைக் கதை, சித்திரைக் குழப்பம் என்ற சொற்களின் பயன்பாடு இம்மாதத்தின் சிறப்பை நன்கு விளக்குகிறது.

சித்திரை மாதத்தின் முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப்பட்டது. தை மாதம் தமிழர் புது வருடத்தின் தொடக்க மாதமாக இருந்ததையும் இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்துள்ளன. எனவே எதை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பங்கள் தமிழக அரசியலில் இருந்தாலும், சித்திரையும், தை யும் தமிழர்கள் மத்தியில் சிறப்பு பெற்ற மாதங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா 

ஜம்பெரும் காப்பியங்களில் முதன்மையானதாக விளங்குவது சிலப்பதிகாரம். இந்த காப்பியத்தின் கதாநாயகர்களான கோவலன், கண்ணகி பிறந்து வாழ்ந்த மண் என்ற பெருமையை பூம்புகார் பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூம்புகார் வாணிபத்தில் சிறந்து விளங்கியதும், இங்கு பிறந்த மகான் பட்டினத்தடிகள் கப்பல் மூலம் பல நாடுகளுக்கு வாணிபம் செய்ததும் காப்பியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா நடந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. 

சிலப்பதிகாரம் தமிழர்களின் பழைமையை பறைசாற்றுகிறது என்றால் மிகையாகாது. இந்த காப்பியத்தின் எச்சங்களாக இன்றளவும் சாயவனம் சாயவனேஸ்வரர் கோயில், சதுக்கு புதங்கள் சான்றாக காட்சியளிக்கின்றன. 

சித்திரா பௌர்ணமியின் விடையாற்று விழாவில் கோவலனும் மாதவியும் கடற்கரையில் பாடிய பாட்டே கண்ணகி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாவும், கோவலனைக் கண்ணகியுடன் கொண்டு சேர்ப்பதாகவும் அமைந்தது. சித்திரை முழு நிலவு விழா இல்லையேல், கோவலன் கண்ணகியுடன் மீண்டும் சேர வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதனைக் கருத்தில் கொண்டே இளங்கோவடிகள் மாடல மறையோன் கூற்றில் வைத்து, ""மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது" என்கிறார்.

சித்திரா பௌர்ணமி விழா

கண்ணகி கதையின் வளர்ச்சிக்குச் சிலம்பு துணைக்காரணமாகவும், சித்திரா பௌர்ணமி விழா முதற்காரணமாகவும் அமைகிறது. எந்த வகையில் பார்த்தாலும் சித்திரை முழுநிலவு கண்ணகியுடன் தொடர்புப்படுவதால், அந்தப் பத்தினித் தெய்வத்தின் விழாவைச் சித்திரை முழு நிலவு நாளில் கொண்டாடுவதில் தவறில்லை.


Chithirai in Tamil tradition. 


It highlights various festivals such as Indra Vizha and Vasantha Vizha that are celebrated during the full moon day of Chithirai in places like Mamallapuram and Poompuhar. The month of Chithirai is associated with the harvest season, leading to village-wide festivals and general happiness among people. It is also linked to spring, with celebrations taking place on beaches and riverbanks.

Ancient Tamil literature records the significance of Chithirai, describing it as the time for spring festivals, with references in works like Silappadikaram. The month is characterized by clouds resembling paintings, and the harvest of 'Chithirai rice'. Traditional practices include offering Pongal to the sun and distributing 'Chithirai Kanji'. The paragraph also mentions the observation of natural changes during Chithirai by ancestors, who considered it a unique month.

The first day of Chithirai is regarded as the beginning of the year, although there is some political confusion about whether Chithirai or Thai should be celebrated as the Tamil New Year. Despite this, both months are special to Tamils. The hope is that future generations will resolve these confusions through proper research and clear thinking.

Overall, Chithirai is celebrated as the start of the summer season, with various festivals and rituals marking its significance in Tamil culture.

சனி, 15 மார்ச், 2025

நமது முன்னோர்களின் தேடலில் – மொரீஷியஸ் (IN SEARCH OF OUR ANCESTORS)

 IN SEARCH OF OUR ANCESTORS – MAURITIUS

நமது முன்னோர்களின் தேடலில் – மொரீஷியஸ் 


மொரீசியஸ் நாட்டில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை தூணில் பிரெஞ்சு மற்றும் தமிழில் கல்வெட்டு வைக்கப் பட்டுள்ளது. கி.பி. 1700-ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ளது.


நமது முன்னோர்களின் தேடலில் – மொரீஷியஸ்


இல் டி பிரான்சின் கட்டுமானர்கள்:

இல் டி பிரான்சின் கட்டுமானர்கள்: இல் டி பிரான்சுக்கு தமிழ் தென்னிந்திய குடியேற்றத்தின் தோற்றம், கி.பி. 1728-1806

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை, மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைத் தலைவர்களான திரு. பார்லென் வியாபூரி மற்றும் திரு. ரவூப் புந்துன் ஆகியோரால் “நமது முன்னோர்களின் தேடலில்”: மொரீஷியஸ் மற்றும் உலகின் பிற பகுதிகளில் தமிழ் இந்திய குடியேற்றம் மற்றும் குடியேற்றத்தின் வரலாற்று மற்றும் படக்காட்சி  (1728 முதல் தற்போதைய காலம் வரை) என்ற முக்கியமான புத்தகம் வெளியிடப்பட்டது.

மொரீஷியன் வரலாற்றாசிரியர்களின் வரலாற்றில் முதன்முறையாக, இந்த கலைக்களஞ்சிய மக்னம் ஓபஸ், தமிழ் சுதந்திர குடியேற்றக்காரர்கள், அடிமைகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள், மொரீஷியன் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த தமிழ் இந்தோ-மொரீஷியர்கள் ஆகியோரின் கதை, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் ஆவணப்படுத்துகிறது. பிரெஞ்சு குடியேற்றத்தின் தோற்றம் முதல், அவர்கள் இந்த சிறிய இந்தியப் பெருங்கடல் தீவின் பொருளாதார, சமூக மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.

பிரெஞ்சு ஆட்சியின் ஆரம்ப காலத்தில், லூயி XV மன்னர் கம்பேனி டெஸ் இந்தெஸ் அல்லது பிரெஞ்சு கிழக்கு இந்தியா கம்பெனிக்கு இல் டி பிரான்சு அல்லது பிரெஞ்சு மொரீஷியஸ் மற்றும் போர்பன் அல்லது ரியூனியன் தீவு மற்றும் அதன் சார்ந்த பகுதிகளை ஒரு செயல்படும் குடியேற்றமாக மாற்ற அனுமதித்தார். 

இது தென்-மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய இடத்தில் அமைந்திருந்தது, ஏனெனில் இது ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் ஆசியா ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய கடல் வர்த்தக மற்றும் கப்பல் வழித்தடங்களின் ஆரம்பம் முதல் சென்றடையும் வரை  (Sepanjang) அமைந்திருந்தது.


முதல் தமிழ் குடியேற்றக்காரர்களின் வருகை

1728 நவம்பர் 11 அன்று, புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட லெனாயர் தனது புதிய எஸ்டேட்டில் வேலை செய்ய 28 தமிழ் அடிமைகளை இல் டி பிரான்சுக்கு அனுப்பினார். மூன்று மாதங்களுக்கு மேல், ஆளுநர் மாப்பின் கோரிக்கையின் பேரில் புதுச்சேரியில் இருந்து 163 தமிழ் கலைஞர்கள் மற்றும் அடிமைகள் மொரீஷியசுக்கு வந்தனர். 

1728 நவம்பர் மற்றும் 1731 டிசம்பர் இடையே, சுமார் 500 தமிழ் மற்றும் பிற தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் அடிமைகள் பிரெஞ்சு கிழக்கு இந்தியா கம்பெனி மூலம் மொரீஷியன் கரைகளுக்கு கொண்டு வரப்பட்டனர்.


இந்த நபர்கள் அரசாங்க கட்டிடங்கள், கடைகள் மற்றும் பிற பொது வேலைகள் போன்ற பொது கட்டமைப்புகளில் வேலை செய்த கல் வேலைப்பாடுகள் மற்றும் தச்சர்கள் போன்ற கலைஞர்கள் ஆவார்கள். 1728 மற்றும் 1746 இடையே, 1000 தமிழ் இந்திய அடிமைகள் மற்றும் 600 தமிழ் கலைஞர்கள் மற்றும் சுதந்திர தொழிலாளர்கள் பிரெஞ்சு குடியேற்ற அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்கள் புதிதாக நிறுவப்பட்ட எஸ்டேட்டுகள் மற்றும் தோட்டங்களில் வேலை செய்ய கொண்டு வரப்பட்டனர் மற்றும் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் அவர்களின் உழைப்பு மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்பட்டது.

போர்ட் லூயிஸ்
1735 மற்றும் 1745 இடையே, பிரெஞ்சு மற்றும் குடியேற்ற மொரீஷியசின் தந்தை ஆளுநர் பெர்ட்ராண்ட் பிரான்சுவா மாஹே டி லா போர்டோனைஸ், கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை பராமரிக்க, பழுது பார்க்க மற்றும் கட்ட 150 முஸ்லிம் மாலுமிகளை கொண்டு வந்தார், அவர்களில் பலர் தமிழ் பேசும் மாவட்டங்களில் இருந்து வந்தனர். அவரது ஆளுநர் பதவியில், கல் வேலைப்பாடுகள், கரிமிக்கள் மற்றும் தச்சர்கள் போன்ற 300 திறமையான கலைஞர்களை மொசாம்பிக், மலாகாசி, மேற்கு ஆப்பிரிக்க கினியன் மற்றும் இந்திய அடிமைகளுடன் சேர்த்து துறைமுகம், கல்லிடை வீதிகள், கோட்டை மற்றும் போர்ட் லூயிஸ் நகரத்தை கட்டியவர்கள். இதே காலத்தில், பல தமிழ் இந்திய வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போர்ட் லூயிஸ் நகர மையத்தில் தங்கள் கடைகள் மற்றும் வணிகங்களை நிறுவி திறந்தனர்.

தமிழ் கலைஞர்கள்
அவர்கள் அரசாங்க மாளிகை, காசெர்ன்ஸ் சென்ட்ரால்ஸ், இராணுவ மருத்துவமனை, நீர்வழிகள், காற்றாலை மற்றும் டோன்ஜான் செயின்ட் லூயிஸ் ஆகிய முக்கிய கட்டமைப்புகளில் வேலை செய்தனர். 1741 ஆம் ஆண்டு, பிரான்சிலிருந்து இல் டி பிரான்சுக்கு திரும்பிய பிறகு, ஆளுநர் மாஹே டி லா போர்டோனைஸ் மேலும் தமிழ் கலைஞர்கள் மற்றும் சில முதன்மை கலைஞர்கள் மற்றும் கூடுதல் தமிழ் அடிமைகளைப் பெற இந்தியா சென்றார்.


மதராசைப் பிடித்து..
1744 ஆம் ஆண்டில், ஆஸ்திரியன் வாரிசு போரின் போது, லாபோர்டோனைஸ் பல கப்பல்கள் மற்றும் 3342 ஆட்கள் அடங்கிய ஒரு படையை, 720 அடிமைகள் உட்பட, 400 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் தென்னிந்திய அடிமைகளுடன், போர்ட் லூயிஸ், இல் டி பிரான்சில் திரட்டினார் என்பது சுவாரஸ்யமானது. எனவே, இந்த போர் பிரச்சாரத்தில் வேலை செய்த மற்றும் உதவிய அடிமைகளில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் மற்றும் தென்னிந்திய துணைக்கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்தவர்கள். இந்த பெரிய மற்றும் நன்கு ஆயுதப்படைத்துடன், பேராசை கொண்ட பிரெஞ்சு ஆளுநர் திறந்த மோதலில் பிரிட்டிஷாரை தோற்கடித்து, மதராசைப் பிடித்து, அதன் மீளப்பெறுதலுக்கான நிபந்தனைகளை பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது.

இல் டி பிரான்சின் கட்டுமானர்களாக தமிழர்கள்

1740களின் நடுப்பகுதியில், தமிழ் பேசும் மாவட்டங்களில் இருந்து வந்த இந்திய அடிமைகள், மொத்த குடியேற்ற அடிமை மக்கள்தொகையில் 15% க்கும் மேல் இருந்தனர். 1728 மற்றும் 1806 இடையே, பிரெஞ்சு குடியேற்ற அரசு மதராஸ், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோமண்டல் கடற்கரை பகுதிகளில் இருந்து மொரீஷியன் கரைகளுக்கு 10,000 க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் அடிமைகள் மற்றும் 2,000 கல் வேலைப்பாடுகள், தச்சர்கள், கரிமிக்கள், வண்டி ஓட்டிகள், விவசாயிகள், சமையல்காரர்கள், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் தையல்காரர்கள் கொண்டு வந்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, அவர்கள் தீவின் பொது கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் விநியோக அமைப்பு போன்ற கட்டமைப்புகளில் வேலை செய்தனர்.


தமிழ் இந்தோ-மொரீஷியன்
மேலும், 1740 மற்றும் 1830 இடையே, தமிழ் இந்திய மற்றும் தமிழ் இந்தோ-மொரீஷியன் அடிமைகள் பெரும்பாலும் அவர்களின் உரிமையாளர்களால் விடுவிக்கப்பட்டனர் மற்றும் குறிப்பாக பெண் அடிமைகளின் சுதந்திரத்தை வாங்கினர். அடிமைகளை விடுதலை செய்வது அல்லது விடுதலை செய்வது, 1835 இல் அடிமைத்தனம் ரத்து செய்யப்படும் முன் மற்றும் 1839 இல் பயிற்சி முறை முடிவடையும் முன், இல் டி பிரான்சின் கடைசி ஆண்டுகள் மற்றும் ஆரம்ப பிரிட்டிஷ் காலத்தில் தமிழ் இந்திய மற்றும் தமிழ் இந்தோ-மொரீஷியன் அடிமைகளின் எண்ணிக்கையில் குறைந்த அளவில் பங்களித்தது. இதே காலத்தில், ஒரு அளவிற்கு, இது உள்ளூர் சுதந்திர தமிழ் இந்தோ-மொரீஷியன் மற்றும் சுதந்திர நிறமுள்ள சமூகங்களின் எழுச்சிக்கு பங்களித்தது.

‘In Search of our Ancestors’.புத்தகத்தில்

1728 மற்றும் 1806 இடையே, தமிழ் அடிமைகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், மலாகாசி மற்றும் மொசாம்பிக் அடிமைகளுடன் சேர்ந்து, டோன்ஜான் செயின்ட் லூயிஸ் கோட்டை, செயின்ட் லூயிஸ் பேராலயத்தின் முதல் கல் கட்டிடம், இராணுவ மருத்துவமனை, அரச மாளிகை, சாட்டோ லெ ரெட்யூட், காசெர்ன்ஸ் சென்ட்ரால்ஸ் (லைன் பராக்ஸ்), காற்றாலை, உச்ச நீதிமன்றம், போர்ட் லூயிஸ் நகரின் கல்லிடை வீதிகள் மற்றும் போர்ட் லூயிஸ் துறைமுகத்தின் சில பகுதிகளை கட்டினர். இந்த கல் கட்டிடங்கள், வீதிகள் மற்றும் பொது கட்டமைப்புகளில் பல இன்னும் பயன்படுத்தப்படுகின்றன, அவை தேசிய பாரம்பரிய தளங்கள் ஆகும் மற்றும் நமது தீவின் நகர பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும், இது 'நமது முன்னோர்களின் தேடலில்' என்ற பெரிய புத்தகத்தில் தெளிவாகக் காட்டப்பட்டு விவாதிக்கப்படுகிறது.


IN ENGLISH 

The Builders of Ile de France: The Genesis of the Tamil South Indian Migration to Ile de France, c.1728-1806.

On Saturday 25th February 2023, the landmark book, “In Search of our Ancestors”: A Historical & Pictorial Presentation & Tribute to the Tamil Indian Migration and Settlement in Mauritius and their Descendants (1728 To Present Times) & in other Parts of the World was launched at the University of Mauritius by former Vice-Presidents Mr. Barlen Vyapoory and Mr. Raouf Bundhun. For the first time in Mauritian historiography, this encyclopedic magnum opus documents, over a period of almost three centuries, the saga of the Tamil free immigrants, slaves, and indentured labourers and their descendants, the Tamil Indo-Mauritians who have played a prominent role in Mauritian history. Ever since the genesis of French colonization, they made a major contribution to the economic, social, and demographic development of this small Indian Ocean island.

- Publicité -

During the early period of French rule, King Louis XV allowed the Compagnie des Indes or the French East India Company to take possession and develop the Ile de France or French Mauritius and Bourbon or Reunion Island and its dependencies into a viable colony. It was situated in a strategic position in the south-western Indian Ocean as it was located along the major maritime trading and shipping routes between Europe and the Atlantic Ocean to India, the East Indies, and Asia in the greater Indian Ocean World.

The Arrival of the First Tamil Immigrants

On 11 November 1728, the newly appointed Governor Lenoir of Pondicherry sent 28 Tamil slaves to work on his new estate in the Ile de France. More than three months later, 163 Tamil artisans and slaves arrived in Mauritius from Pondicherry at the behest of Governor Maupin. Between November 1728 and December 1731, around 500 Tamil and other South Indian artisans and slaves were brought to Mauritian shores by the French East India Company.

These individuals were artisans such as stone masons and carpenters who worked on the public structures such as the government buildings, stores, and other public works. From 1728 and 1746, more than 1000 Tamil Indian slaves and another 600 Tamil artisans and free workers were introduced by the French colonial authorities. They were brought to work also on some of the newly founded estates and plantations and their labour was considered to be extremely precious during this early period of colonization.

Between 1735 and 1745, Governor Bertrand Francois Mahé de La Bourdonnais, the father of French and Colonial Mauritius, brought 150 Muslim sailors, many among them came from the Tamil-speaking districts, to maintain, repair, and build ships and also the docks.  During his governorship, he brought another 300 skilled artisans such as stone masons, blacksmiths, and carpenters who along with the Mozambican, Malagasy, West African Guinean, and Indian slaves were the builders of the harbour, cobblestone streets, the fortifications, and the town of Port Louis. During the same period, dozens of early Tamil Indian merchants, traders, and businessmen also settled and opened their shops and businesses in the town centre of Port Louis.




They worked on key structures such as the Government House, the Casernes Centrales, the Military Hospital, the aqueducts, the Windmill, and the completion of the Donjon Saint Louis. In 1741, after his return to Ile de France from France, Governor Mahé de La Bourdonnais went to India with a view to obtaining more Tamil artisans and even some master craftsmen and some additional Tamil slaves.

It is interesting to note that in 1744, Labourdonnais assembled a squadron of several ships and 3342 men including 720 slaves with more than 400 Indian and South Indian slaves in Port Louis, Ile de France, during the War of the Austrian Succession. Therefore, the majority of the slaves who worked and helped with this war campaign were Tamils and from other parts of the southern Indian subcontinent. With this large and well-armed force, the ambitious French Governor was able to defeat the British in open conflict, capture Madras, and negotiate terms for its retrocession.




Tamil and French language inscription found on a 18th century grave tomb (1700 B.C.) in Mauritius.

The Tamils as the Builders of Ile de France

By the mid-1740s, the Indian slaves, coming mostly from the Tamil-speaking districts, consisted of more than 15% of the total colonial slave population. Between 1728 and 1806, the French colonial government imported an estimated more than 10,000 Tamil-speaking slaves and more than 2,000 stone masons, carpenters, blacksmiths, cart drivers, farmers-cultivators, cooks, domestics, and tailors to Mauritian shores from Madras, Pondicherry, Karikal, and other parts of the Coromandel coast under French control. Over a period of more than half a century, they worked on the island’s infrastructure such as the public buildings, roads, bridges, and water distribution system.

Furthermore between the 1740 and 1830, Tamil Indian and Tamil Indo-Mauritians slaves were most often freed by their owners and also bought the freedom, especially of female slaves. Manumission or the freeing of slaves contributed to the gradual decline in the number of Tamil Indian and Tamil Indo-Mauritian slaves during the last years of Ile de France and the early British Period before the abolition of slavery in 1835 and the termination of the Apprenticeship System in 1839. In the process, during the same period, to a certain extent, it contributed in the rise of the local free Tamil Indo-Mauritian and Free Coloured communities.

Between 1728 and 1806, the Tamil slaves and contract workers, along with Malagasy and Mozambican slaves, built the Donjon Saint Louis Fortification, the first stone structure of Cathedral Saint Louis, the Military Hospital, Government House, Chateau Le Réduit, the Casernes Centrales (Line Barracks), the Windmill, the Supreme Court, cobblestone streets of Port Louis, and some sections of Port Louis harbour. Many of these stone buildings, streets, and public infrastructure are still in use today, they are national heritage sites, and form an integral part of our island urban architectural heritage which is clearly shown and discussed in the voluminous book ‘In Search of our Ancestors’.

சனி, 8 மார்ச், 2025

தமிழிசை - சங்க காலம், இடைக் காலம், தற்காலம்

 தமிழிசை - சங்க காலம், இடைக் காலம், தற்காலம் 

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு 

Kudumiyanmalai music inscription:

  • Location: Kudumiyanmalai, a village in the Pudukkottai district of Tamil Nadu, 20 km from Pudukkottai town.

  • Temple: Found in the Sikanatha Swamy Temple.

  • Inscription Details: Carved on a rock face measuring 13 feet by 14 feet.

  • Script: Written in Devanagari script with some Tamil words.

  • Discovery: Discovered in 1904.

  • Significance: The musical importance of the inscription was recognized around 27 years later in 1931 by T.N. Ramachandran.

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு என்பது, தமிழ் நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை என்னும் இடத்தில் காணப்படும் இசைத் தகவல்களைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். 

குடுமியான்மலை புதுக்கோட்டை நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூரில் உள்ள சிகாநாதசுவாமி கோயிலிலேயே மேற்படி கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. 

தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன. இது 1904ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இசை தொடர்பான இதன் முக்கியத்துவம் ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பின்பே உணரப்பட்டது. 

1931ல் டி. என். இராமச்சந்திரன் என்பார் இதன் இசைசார்ந்த சிறப்புக் குறித்து அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் இசை மேன்மை

பல்லவ அரசர்களில் தனித்துவமான கலைநயத்தால் பிரசித்தி பெற்றவர் மகேந்திரவர்மன். காஞ்சியை ஆண்ட இந்த மன்னன், சிறந்த நிர்மாணக் கலைஞர் மட்டுமல்லாமல், இசைத் துறையிலும் அபார திறமை கொண்டவராக விளங்கினார். இசைக்கான அவரது ஆழ்ந்த பற்றும் புதுமை உணர்வும் காரணமாக, அவர் ‘சங்கீர்ண ஜாதி’ என்ற விருதுப் பெயரால் அழைக்கப்பட்டார்.

‘சங்கீர்ண ஜாதி’ என்ற பட்டத்தின் பின்னணி

பல்லாவரத்தில் உள்ள குடைவரைக் கோயிலின் கல்வெட்டுகளில், மகேந்திரவர்மனின் பெயருடன் ‘சங்கீர்ண ஜாதி’ எனப் பதிவு காணப்படுகிறது. இது அவருக்கான ஒரு சிறப்பு விருதுப் பெயராக அறிஞர்களால் கருதப்படுகிறது.

இசையில் தாளவகைகள் ஐந்து எனக் கூறப்படுகின்றன. அவற்றில் ஐந்தாவது தாளம் ‘சங்கீர்ணம்’ எனப்படும். இந்த சங்கீர்ண தாளத்தின் வகைகள், ஒழுங்குகள், பயன்பாடுகள் ஆகியவற்றை புதிதாக ஆராய்ந்து அமைத்தவர் மகேந்திரவர்மர் என இசை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் தான் அவர் தன்னை ‘சங்கீர்ண ஜாதி’ என்று அழைத்துக்கொண்டதாக அறிஞர்கள் விளக்குகின்றனர்.

வீணையின் நரம்புகள் – மகேந்திரவர்மரின் புதுமை

மகேந்திரவர்மரின் குடுமியான்மலை கல்வெட்டில் பல்வேறு பண்களும் தாளவகைகளும் விளக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் இறுதியில்:

“இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், அவர் கண்டறிந்த இசைப் பண்கள் ஏழு நரம்பு வீணைக்கும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு நரம்பு வீணைக்கும் பொருந்தும் என்பதாகும். பொதுவாக ஏழு நரம்பு வீணையே பரவலாக இருந்த நிலையில், எட்டு நரம்பு வீணையை உருவாக்கி பயன்படுத்தியவர் மகேந்திரவர்மர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதனால் அவரை ‘இசைப்பித்தன்’ எனப் புகழலாம்.

மத்தவிலாசப் பிரஹசனத்தில் இசை–நடனப் பாராட்டு

மகேந்திரவர்மர் இயற்றிய மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நாடகத்தில், ஒரு நடிகன் இசை–நடனங்களின் மேன்மையைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:

“இசை எனது செல்வம். ஆஹா! நடிப்பவர்களின் அழகிய நடனம் கண்களுக்கு இன்பம் தருகிறது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.”

இந்த வரிகள், மகேந்திரவர்மரின் காலத்தில் இசை–நடனக் கலைகள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தன என்பதையும், மன்னனின் கலைப் பார்வை எவ்வளவு நுணுக்கமானது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.









தற்காலம்

இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:

  1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
  2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
  3. இராமகவி
  4. ஆனை ஐயா
  5. பட்டாபிராமய்யர்
  6. கனம் கிருஷ்ண ஐயர்
  7. பராங்குசதாசர்
  8. நீலகண்ட சிவம்
  9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
  10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
  11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  12. சுந்தர முதலியார்
  13. ஆறுமுக உபாத்தியாயர்
  14. முருகேச கவிராயர்
  15. சுப்பிரமணிய பண்டிதர்
  16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
  17. அகத்தியலிங்க கவிராயர்
  18. இராசப்ப முதலியார்
  19. சின்னசாமி நாயுடு
  20. சரவணபவ தாசர்
  21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
  22. நமச்சிவாய நாவலர்
  23. குப்புசாமி கிராமணி
  24. காஞ்சி சபாபதி முதலியார்
  25. கிருஷ்ணசாமி ஐயா
  26. வேலாயுதக் கவிராயர்
  27. கோவிந்தராச தேசிகர்
  28. சண்முக முதலியார்
  29. சாமிநாத தாசர்
  30. பாலசுப்ரமணிய முதலியார்
  31. காமியப்பக் கவிராயர்
  32. முத்துசாமிக் கவிராயர்
  33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
  34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
  35. குணங்குடி மஸ்தான் சாகிபு
  36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
  37. கவி குஞ்சரபாரதி
  38. முத்துத் தாண்டவர்
  39. பாபநாசம் சிவன்
  40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  41. பாரதியார்
  42. தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார்.
  43. பாரதிதாசன்
  44. சுத்தானந்த பாரதியார்
  45. பெரியசாமித்தூரன் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.


                                                                  000

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுதினம் 09.03.

மிகப்பெரும் இசைப் பெருமையைக் கொண்டிருந்த இத்தமிழினத்தார் தன் சிறப்பை உணராமல் இன்றும் இருந்துவருகின்றனர். இச் சூழலில் ஆபிரகாம் பண்டிதர். சுவாமி விபுலானந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் போன்ற அறிஞர்களின் உழைப்பைத் தமிழர்கள் போற்றிக் கொண்டாடாமல் வீணர்களின் ஆர்ப்பாட்ட இரைச்சல்களுக்கு மயங்கிக் கிடப்பது வருத்தம் தருகின்றது.

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தமிழிசை ஆய்வினைத் தொடர்வதற்கு அறிஞர்கள் யாரும் இன்று நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாரேனும் ஆய்வில் ஈடுபட முன்வந்தாலும் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க அண்ணாமலை அரசர், அருட்செல்வர் நா. மகாலிங்கம் போன்ற வள்ளல்களும் இன்று இல்லை.




வீ.ப.கா.சுந்தரம் போன்ற இசை மேதைகளின் ஆராய்ச்சியை விளங்கிக்கொள்ள நூற்றாண்டுகள் தேவைப்படும். அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை ஒருவர் புரிந்துகொண்டால் அவர் வழியில் ஆய்வை முன்னெடுக்க இயலும். அவர்தம் பிற நூல்களைப் புரிந்துகொண்டால் பரந்துபட்ட ஆராய்ச்சிக் களங்களை அடையாளம் காணலாம். உலக அளவில் எந்த மொழியிலும் இசைக்கெனக் கலைக்களஞ்சியம் இல்லை என அறிகிறோம். குறிப்பாக இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் கலைக்களஞ்சியம் இல்லை என்று வீ.ப.கா.சுந்தரம் கூறி, தமிழில் மட்டும் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளதைப் பெருமிதம் பொங்க எடுத்துரைப்பார்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் பணிகளை மதிப்பிடும்பொழுது, மறைந்து கிடந்த பழந்தமிழிசை உண்மைகளைத் துலக்கிக் காட்டியமையை முதன்மைப் பணியாகக் குறிக்கலாம். அதுபோல் அறிஞர்கள் இசைகுறித்துத் தவறான விளக்கம் சொன்ன இடங்களை நமக்கு அடையாளம்காட்டி, அதற்குரிய உண்மையை நிறுவியுள்ளமையை அடுத்ததாகக் குறிப்பிடலாம்.

மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினை(1981)ஒட்டி வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் ஆக்கிய, “இன்று இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொல்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ்ச்சொல்கள்" என்னும் நூலில் நமக்குத் தொகுத்து வழங்கியுள்ள இசைத்துறையில் புழக்கத்தில் உள்ள வடசொற்களும், அவற்றிற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் அவர்தம் தமிழிசைப் பற்றைக் காட்டும் சான்றாக உள்ளன.

தமிழக அரசு பலதுறை அகராதிகளை வெளியிட்டது. ஆனால் இசைத்துறை அகராதியை வெளியிடவில்லை என்று கவலைகொண்டு இந்த அகராதியை வீ.ப.கா.சு. வெளியிட்டுள்ளார். 

1.கோவை(சுரம்) 2.பண்ணுப் பகுப்பு இயல், 3. பண்ணுப்பெயர்த்தல் இயல், 4. பொருந்து இசைக் கோவை இயல், 5. பண்ணில் சில இயல்கள், 6. ஆளத்தி இயல், 7. தாள உறுப்பு இயல், 8. முழக்குக் கோல இயல், 9. முழக்குப் பரப்பு இயல் 

என்ற தலைப்புகளில் இசையுலகில் செல்வாக்குடன் உள்ள வடசொற்களை அடையாளம் காட்டி, அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களைத் தந்து தென்னக இசையை மீட்கும் ஒரு கருவி நூலாக இதனை ஐயா அவர்கள் தந்துள்ளார்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைப் பணியையும் வாழ்வையும் இத் தமிழுலகுக்கு ஆவணப்படுத்தி வழங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று அவரின் நினைவுநாளில் உறுதியேற்போம்!

                                                         000





வியாழன், 6 மார்ச், 2025

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா - விண்வெளி வீராங்கனை

 வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா - விண்வெளி வீராங்கனை

மார்ச் 06. 1961 மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர்

வாலெண்டினா தெரெஷ்கோவா ரஷ்யாவின் யாரோஸ்லாவ்ல் அருகே மாஸ்லென்னிகோவோவில் 6 மார்ச் 1937 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராக்டர் டிரைவர் மற்றும் அவரது தாய் ஒரு நெசவுத் தொழிற்சாலையில் வேலை செய்தார். சிறிய வயதிலிருந்தே பறக்கும் ஆர்வம் கொண்ட தெரெஷ்கோவா, 1959 மே மாதம் 22 வயதில் தனது முதல் பயணத்தைத் தொடர்ந்தார். . ஒரு நெசவுத் தொழிலாளராக வேலை செய்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யூரி காகரின் முதல் மனித விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து, சோவியத் அரசு பெண் விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை அனுமதித்தது, முதல் பெண் விண்வெளி வீரர் சோவியத் குடிமகனாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அது திட்டத்தை தொடர்ந்தது. 




வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். 

இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். 

அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. 

இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.

‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.









ஞாயிறு, 22 டிசம்பர், 2024

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West) டிசம்பர்.21, 1892. 



 பிரிட்டன் எழுத்தாளர், 
பத்திரிகையாளர் மற்றும் 
பெண் உரிமை ஆர்வலர் 

டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு, ரெபெக்கா வெஸ்ட்  லண்டனில் பிறந்தவர். அவரது தந்தை துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உதவியது. அவரது தந்தை இறந்தபோது, அவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது. 

பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக் கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 

'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் அவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந்த உறவு நீடித்தது. 

 * பெண் உரிமை மற்றும் சமூக நலனுக்கு குரல் கொடுப்பதிலும் கூர்மையான விமர்சனம் எழுதுவதிலும் புகழ்பெற்றார் ரெபெக்கா. தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள் மற்றும் இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். அவரது எழுத்தாற்றலை ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பாராட்டியுள்ளார். 

பத்திரிகைத் துறையில் சாதனை படைத்ததற்காக அவருக்கு 'வுமன்ஸ் பிரஸ் கிளப் அவார்டு' விருதை 1948-ல் அமெரிக்க அதிபர் ட்ரூமேன் வழங்கினார். 'உலகின் தலைசிறந்த நிருபர்' என்று விழாவில் அதிபர் அவருக்கு புகழாரம் சூட்டினார். அவரது எழுத்துகள் புகழோடு, பணத்தையும் குவித்தது. 

இரண்டாம் உலகப்போரின்போது, தனது பிரம்மாண்ட வீட்டில் யூகோஸ்லேவிய அகதிகள் பலரைத் தங்கவைத்திருந்தார்.




 ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும் எப்படி ஆரம்பிப்பது என்று யோசிக்க பல மணி நேரம் செலவிடுவாராம். ஒரு நாவலுக்கான அத்தியாயம் ஒன்றை சளைக்காமல் 26 முறை மாற்றி மாற்றி எழுதிப்பார்த்திருக்கிறார். 

பிளாக் லாம்ப், மீனிங் ஆஃப் டிரேசன், தி ரிட்டர்ன் ஆஃப் தி சோல்ஜர் என வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் போர் குறித்து பல நாவல்களை எழுதியுள்ளார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டுக்கான கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்கு முன்பும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அரசியல் மற்றும் பயண நாவல்கள் எழுதுவதற்கான விஷயங்களைத் திரட்டினார். 

இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டிருந்த ரெபெக்கா வெஸ்ட் 91-வது வயதில் மறைந்தார். அவரைப் பற்றி 2004-ல் இரண்டு நாடகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Rebecca West



 --- Dame Cicily Isabel Fairfield, known as Rebecca West, a British writer, journalist, and women's rights advocate. 

Born in London, her father was a daring journalist. Russian revolutionaries and political enthusiasts often visited their home, engaging in heated political debates. This environment later influenced her writings. Her father passed away when she was 14, after which her family moved to Scotland. 

Due to financial constraints, she couldn't continue her education. Aspiring to become a famous actress, she trained in acting in London, adopting the name 'Rebecca West' during this period. Later, she developed an interest in writing.

She joined the women's weekly magazine 'Freewoman.' In 1912, she wrote a scathing review of H.G. Wells' novel 'Marriage' in this magazine. Wells, impressed by her writing, was captivated by her. They fell in love, and their relationship lasted until Wells' death. 




 Rebecca West was renowned for her sharp critiques and advocacy for women's rights and social welfare. She wrote numerous articles and reviews for various newspapers and magazines, including The New Republic, New York Herald Tribune, and New York American. Her writing talent was praised by George Bernard Shaw.

 In recognition of her achievements in journalism, she received the 'Women's Press Club Award' from U.S. President Truman in 1948. At the ceremony, the President hailed her as 'the world's best reporter.' Her writings brought her both fame and wealth. 

During World War II, she housed many Yugoslav refugees in her grand home. 

She would spend hours contemplating how to begin each piece of writing. She once rewrote a chapter of a novel 26 times without tiring. 

She authored several novels on history, culture, politics, and war, including 'Black Lamb and Grey Falcon,' 'The Meaning of Treason,' and 'The Return of the Soldier.' She was appointed as an honorary member of the American Academy of Arts and Sciences. 

Before and during World War II, she traveled extensively around the world, gathering material for her political and travel writings. 

Rebecca West continued writing until her last breath and passed away at the age of 91. In 2004, two plays were produced about her life.




வியாழன், 5 டிசம்பர், 2024

சென்னை கன்னிமாரா பொது நூலகம்


சென்னை கன்னிமாரா பொது நூலகம்

சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896

டிசம்பர் 05, 

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.



பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.

இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.



நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 


தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, பிறந்த தினம் - 1795)




இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார்.


* தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார்.


* படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.


* 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, தனது பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான கணிதம், அறிவியலைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து 1833-ல் விலகி, சிலகாலம் எழுதிவந்தார். அண்ணனுடன் சேர்ந்து ரோட்டரி பிரின்டிங் பிரஸ் இயந்திரத்தை உருவாக்கினார்.


* சிறுவனாக இவர் இருந்தபோது, தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. வீட்டுக்கு தபால் வரும் நேரத்தில் பணம் இருக்காது. உடனே, வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அருகே உள்ள நகரில் விற்றுவிட்டு பணம் கொண்டுவருமாறு சிறுவன் ஹில்லை அனுப்புவார்கள். இந்த அனுபவம்தான் தபால்துறை சீர்திருத்த யோசனையை இவருக்குள் விதைத்ததாகக் கூறப்படுகிறது.


* தபால் துறை சீரமைப்பில் பலரும் ஆர்வத்தோடு இருப்பதை அறிந்தார். அவர்கள் எழுதிய கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை அலசி, ஆராய்ந்து, ‘போஸ்ட் ஆபீஸ் ரிஃபார்ம்: இட்ஸ் இம்பார்டன்ஸ் அண்ட் பிராக்டிகபிலிட்டி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி, 4 தொகுதிகளாக வெளியிட்டார்.


* இவரது புதுமையான, புள்ளிவிவர அடிப்படையிலான யோசனைகள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. நாளிதழ்களும் வரவேற்றன. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.


* இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839-ல் நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலைப் பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840-ல் விற்பனைக்கு வந்தன.


* லண்டன் பிரைட்டன் ரயில்வே இயக்குநராகவும், பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார். ரயில்வேயிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1846-ல் மீண்டும் தலைமை தபால் அதிகாரியின் செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்தார்.


* பணியாற்றிய அனைத்து துறைகளிலும், தனது தனித்துவம் வாய்ந்த அறிவாற்றலால், பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். எப்போதும் பாமர மக்கள் மீதான அக்கறையுடன் மனித குலத்துக்கு சேவை செய்த ரோலண்ட் ஹில் 84-வது வயதில் (1879) மறைந்தார்.

31 ஜூலை 1498, தனது மூன்றாவது பயணத்தின் போது கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் டிரினிடாட் தீவை கண்டடைந்தார்

  கொலம்பஸ் தனது மூன்றாவது பயணத்தில் ( 1498) டிரினிடாட் தீவை 31 ஜூலை 1498 அன்று கண்டடைந்தது , ஐரோப்பியர்கள் தென் அமெரிக்கக் கண்டத்தை முதன்முத...