சென்னை கன்னிமாரா பொது நூலகம்


சென்னை கன்னிமாரா பொது நூலகம்

சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896

டிசம்பர் 05, 

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.



பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.

இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..