ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West) டிசம்பர்.21, 1892. 



 பிரிட்டன் எழுத்தாளர், 
பத்திரிகையாளர் மற்றும் 
பெண் உரிமை ஆர்வலர் 

டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு, ரெபெக்கா வெஸ்ட்  லண்டனில் பிறந்தவர். அவரது தந்தை துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உதவியது. அவரது தந்தை இறந்தபோது, அவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது. 

பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக் கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 

'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் அவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந்த உறவு நீடித்தது. 

 * பெண் உரிமை மற்றும் சமூக நலனுக்கு குரல் கொடுப்பதிலும் கூர்மையான விமர்சனம் எழுதுவதிலும் புகழ்பெற்றார் ரெபெக்கா. தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள் மற்றும் இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். அவரது எழுத்தாற்றலை ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பாராட்டியுள்ளார். 

பத்திரிகைத் துறையில் சாதனை படைத்ததற்காக அவருக்கு 'வுமன்ஸ் பிரஸ் கிளப் அவார்டு' விருதை 1948-ல் அமெரிக்க அதிபர் ட்ரூமேன் வழங்கினார். 'உலகின் தலைசிறந்த நிருபர்' என்று விழாவில் அதிபர் அவருக்கு புகழாரம் சூட்டினார். அவரது எழுத்துகள் புகழோடு, பணத்தையும் குவித்தது. 

இரண்டாம் உலகப்போரின்போது, தனது பிரம்மாண்ட வீட்டில் யூகோஸ்லேவிய அகதிகள் பலரைத் தங்கவைத்திருந்தார்.




 ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும் எப்படி ஆரம்பிப்பது என்று யோசிக்க பல மணி நேரம் செலவிடுவாராம். ஒரு நாவலுக்கான அத்தியாயம் ஒன்றை சளைக்காமல் 26 முறை மாற்றி மாற்றி எழுதிப்பார்த்திருக்கிறார். 

பிளாக் லாம்ப், மீனிங் ஆஃப் டிரேசன், தி ரிட்டர்ன் ஆஃப் தி சோல்ஜர் என வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் போர் குறித்து பல நாவல்களை எழுதியுள்ளார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டுக்கான கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்கு முன்பும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அரசியல் மற்றும் பயண நாவல்கள் எழுதுவதற்கான விஷயங்களைத் திரட்டினார். 

இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டிருந்த ரெபெக்கா வெஸ்ட் 91-வது வயதில் மறைந்தார். அவரைப் பற்றி 2004-ல் இரண்டு நாடகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Rebecca West



 --- Dame Cicily Isabel Fairfield, known as Rebecca West, a British writer, journalist, and women's rights advocate. 

Born in London, her father was a daring journalist. Russian revolutionaries and political enthusiasts often visited their home, engaging in heated political debates. This environment later influenced her writings. Her father passed away when she was 14, after which her family moved to Scotland. 

Due to financial constraints, she couldn't continue her education. Aspiring to become a famous actress, she trained in acting in London, adopting the name 'Rebecca West' during this period. Later, she developed an interest in writing.

She joined the women's weekly magazine 'Freewoman.' In 1912, she wrote a scathing review of H.G. Wells' novel 'Marriage' in this magazine. Wells, impressed by her writing, was captivated by her. They fell in love, and their relationship lasted until Wells' death. 




 Rebecca West was renowned for her sharp critiques and advocacy for women's rights and social welfare. She wrote numerous articles and reviews for various newspapers and magazines, including The New Republic, New York Herald Tribune, and New York American. Her writing talent was praised by George Bernard Shaw.

 In recognition of her achievements in journalism, she received the 'Women's Press Club Award' from U.S. President Truman in 1948. At the ceremony, the President hailed her as 'the world's best reporter.' Her writings brought her both fame and wealth. 

During World War II, she housed many Yugoslav refugees in her grand home. 

She would spend hours contemplating how to begin each piece of writing. She once rewrote a chapter of a novel 26 times without tiring. 

She authored several novels on history, culture, politics, and war, including 'Black Lamb and Grey Falcon,' 'The Meaning of Treason,' and 'The Return of the Soldier.' She was appointed as an honorary member of the American Academy of Arts and Sciences. 

Before and during World War II, she traveled extensively around the world, gathering material for her political and travel writings. 

Rebecca West continued writing until her last breath and passed away at the age of 91. In 2004, two plays were produced about her life.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..