தமிழிசை - சங்க காலம், இடைக் காலம், தற்காலம்

 தமிழிசை - சங்க காலம், இடைக் காலம், தற்காலம் 

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு 

Kudumiyanmalai music inscription:

  • Location: Kudumiyanmalai, a village in the Pudukkottai district of Tamil Nadu, 20 km from Pudukkottai town.

  • Temple: Found in the Sikanatha Swamy Temple.

  • Inscription Details: Carved on a rock face measuring 13 feet by 14 feet.

  • Script: Written in Devanagari script with some Tamil words.

  • Discovery: Discovered in 1904.

  • Significance: The musical importance of the inscription was recognized around 27 years later in 1931 by T.N. Ramachandran.

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு என்பது, தமிழ் நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை என்னும் இடத்தில் காணப்படும் இசைத் தகவல்களைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். 

குடுமியான்மலை புதுக்கோட்டை நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூரில் உள்ள சிகாநாதசுவாமி கோயிலிலேயே மேற்படி கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. 

தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன. இது 1904ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இசை தொடர்பான இதன் முக்கியத்துவம் ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பின்பே உணரப்பட்டது. 

1931ல் டி. என். இராமச்சந்திரன் என்பார் இதன் இசைசார்ந்த சிறப்புக் குறித்து அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.







தற்காலம்

இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:

  1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
  2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
  3. இராமகவி
  4. ஆனை ஐயா
  5. பட்டாபிராமய்யர்
  6. கனம் கிருஷ்ண ஐயர்
  7. பராங்குசதாசர்
  8. நீலகண்ட சிவம்
  9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
  10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
  11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  12. சுந்தர முதலியார்
  13. ஆறுமுக உபாத்தியாயர்
  14. முருகேச கவிராயர்
  15. சுப்பிரமணிய பண்டிதர்
  16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
  17. அகத்தியலிங்க கவிராயர்
  18. இராசப்ப முதலியார்
  19. சின்னசாமி நாயுடு
  20. சரவணபவ தாசர்
  21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
  22. நமச்சிவாய நாவலர்
  23. குப்புசாமி கிராமணி
  24. காஞ்சி சபாபதி முதலியார்
  25. கிருஷ்ணசாமி ஐயா
  26. வேலாயுதக் கவிராயர்
  27. கோவிந்தராச தேசிகர்
  28. சண்முக முதலியார்
  29. சாமிநாத தாசர்
  30. பாலசுப்ரமணிய முதலியார்
  31. காமியப்பக் கவிராயர்
  32. முத்துசாமிக் கவிராயர்
  33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
  34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
  35. குணங்குடி மஸ்தான் சாகிபு
  36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
  37. கவி குஞ்சரபாரதி
  38. முத்துத் தாண்டவர்
  39. பாபநாசம் சிவன்
  40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  41. பாரதியார்
  42. தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார்.
  43. பாரதிதாசன்
  44. சுத்தானந்த பாரதியார்
  45. பெரியசாமித்தூரன் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.


                                                                  000

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுதினம் 09.03.

மிகப்பெரும் இசைப் பெருமையைக் கொண்டிருந்த இத்தமிழினத்தார் தன் சிறப்பை உணராமல் இன்றும் இருந்துவருகின்றனர். இச் சூழலில் ஆபிரகாம் பண்டிதர். சுவாமி விபுலானந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் போன்ற அறிஞர்களின் உழைப்பைத் தமிழர்கள் போற்றிக் கொண்டாடாமல் வீணர்களின் ஆர்ப்பாட்ட இரைச்சல்களுக்கு மயங்கிக் கிடப்பது வருத்தம் தருகின்றது.

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தமிழிசை ஆய்வினைத் தொடர்வதற்கு அறிஞர்கள் யாரும் இன்று நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாரேனும் ஆய்வில் ஈடுபட முன்வந்தாலும் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க அண்ணாமலை அரசர், அருட்செல்வர் நா. மகாலிங்கம் போன்ற வள்ளல்களும் இன்று இல்லை.




வீ.ப.கா.சுந்தரம் போன்ற இசை மேதைகளின் ஆராய்ச்சியை விளங்கிக்கொள்ள நூற்றாண்டுகள் தேவைப்படும். அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை ஒருவர் புரிந்துகொண்டால் அவர் வழியில் ஆய்வை முன்னெடுக்க இயலும். அவர்தம் பிற நூல்களைப் புரிந்துகொண்டால் பரந்துபட்ட ஆராய்ச்சிக் களங்களை அடையாளம் காணலாம். உலக அளவில் எந்த மொழியிலும் இசைக்கெனக் கலைக்களஞ்சியம் இல்லை என அறிகிறோம். குறிப்பாக இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் கலைக்களஞ்சியம் இல்லை என்று வீ.ப.கா.சுந்தரம் கூறி, தமிழில் மட்டும் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளதைப் பெருமிதம் பொங்க எடுத்துரைப்பார்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் பணிகளை மதிப்பிடும்பொழுது, மறைந்து கிடந்த பழந்தமிழிசை உண்மைகளைத் துலக்கிக் காட்டியமையை முதன்மைப் பணியாகக் குறிக்கலாம். அதுபோல் அறிஞர்கள் இசைகுறித்துத் தவறான விளக்கம் சொன்ன இடங்களை நமக்கு அடையாளம்காட்டி, அதற்குரிய உண்மையை நிறுவியுள்ளமையை அடுத்ததாகக் குறிப்பிடலாம்.

மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினை(1981)ஒட்டி வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் ஆக்கிய, “இன்று இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொல்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ்ச்சொல்கள்" என்னும் நூலில் நமக்குத் தொகுத்து வழங்கியுள்ள இசைத்துறையில் புழக்கத்தில் உள்ள வடசொற்களும், அவற்றிற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் அவர்தம் தமிழிசைப் பற்றைக் காட்டும் சான்றாக உள்ளன.

தமிழக அரசு பலதுறை அகராதிகளை வெளியிட்டது. ஆனால் இசைத்துறை அகராதியை வெளியிடவில்லை என்று கவலைகொண்டு இந்த அகராதியை வீ.ப.கா.சு. வெளியிட்டுள்ளார். 

1.கோவை(சுரம்) 2.பண்ணுப் பகுப்பு இயல், 3. பண்ணுப்பெயர்த்தல் இயல், 4. பொருந்து இசைக் கோவை இயல், 5. பண்ணில் சில இயல்கள், 6. ஆளத்தி இயல், 7. தாள உறுப்பு இயல், 8. முழக்குக் கோல இயல், 9. முழக்குப் பரப்பு இயல் 

என்ற தலைப்புகளில் இசையுலகில் செல்வாக்குடன் உள்ள வடசொற்களை அடையாளம் காட்டி, அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களைத் தந்து தென்னக இசையை மீட்கும் ஒரு கருவி நூலாக இதனை ஐயா அவர்கள் தந்துள்ளார்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைப் பணியையும் வாழ்வையும் இத் தமிழுலகுக்கு ஆவணப்படுத்தி வழங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று அவரின் நினைவுநாளில் உறுதியேற்போம்!

                                                         000





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..