வெள்ளி, 23 மே, 2025

வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு

 

வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு.




உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!

அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!


ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை  தடுத்துள்ளார்.

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!



வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! 

இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள்,  5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!

இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!

தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.

வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு 


 000

**The Only Leader in the World Who Was Sentenced to 40 Years in Prison – V.O. Chidambaram..!**

The Coimbatore prison had a profound impact on V.O.C...!

The jailer’s name was Minjel—he was a terrible and cruel man..!

As soon as V.O.C. was taken to prison, his hands and legs were bound, and he was dragged through the streets..!

Inside the prison, V.O.C. was given a separate room, but it had no ventilation. There was no cleanliness or hygiene. His legs were shackled while he was locked up..!

The moment he entered prison, his head was shaved. He was given only one outfit, stitched from sackcloth..!

The man who once fed thousands of people daily was now given gruel in prison. It had already soured, and sometimes worms would be floating in it..!

Due to his deteriorating health, V.O.C. requested rice for just one day. As punishment, jailer Minjel denied him food for three days..!

His first assigned task was manually operating a coir-weaving machine. His hands became torn and bled as a result. Seeing this, a fellow prisoner rushed to stop the machine, unable to bear the sight..!

However, Minjel mercilessly beat that prisoner. After that, instead of hand-based labor, V.O.C. was assigned the task of pulling the oil press—like a bull—under the scorching sun. If he fainted and collapsed, he was whipped brutally..!

One prisoner, recognizing V.O.C.'s greatness, raised his hands above his head and greeted him with a respectful “Namaste, Sir.” That single gesture was enough to spark unrest in the prison, leading to gunfire and the death of a prisoner..!

Even after his release, V.O.C. was stripped of his license to continue practicing law. He had to work at a rice shop, laboring all day and taking home only four measures of rice. When the British authorities learned of this, they shut down the shop..!

Struggling for even half a meal, he had to carry kerosene cans on his head and sell them..! 

The worst part was when he approached senior lawyer Rajaji to help him regain his legal practice, but Rajaji refused..!

At times, V.O.C. opposed Gandhi, unable to accept his policies completely..!

Upon hearing of V.O.C.'s family's financial struggles, Tamil people in South Africa raised ₹5000 and gave it to Gandhi, requesting him to pass it on to V.O.C. They repeatedly reminded him through letters..!

However, Gandhi never gave the money to V.O.C. People often refer to "Gandhi’s calculations"—this is what they mean! (Tilak later intervened to retrieve the funds for V.O.C., but that is another story..!)

No leader in Indian politics matches V.O.C. in sacrifice and warrior spirit. Yet, even after his death, his own party failed to honor him properly. Congress did not support him even in facing certain legal cases—this is a bitter truth..!

To be frank, V.O.C. suffered more due to betrayal from his own party than from British oppression..!

Tamil Nadu alone holds the honor of launching a ship against colonial rulers—thanks to V.O.C..! 

From now on, instead of merely saying “V.O.C. sailed a ship and pulled the oil press,” the youth must actively spread his principles of social justice..!

We must loudly proclaim that Tamil people cannot be limited or ridiculed, and that no one has the authority to question their qualifications..!

Let us remember with gratitude the sacrifices made by freedom fighters who devoted their lives for India's independence.

V.O.C.'s legacy and the freedom he won for us should be taught to future generations.



தமிழகமும் சீனமும் வரலாற்றுத் தொடர்புகள்


பண்டைத் தமிழகமும், சீனமும் மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்டவை. பண்டைத் தமிழகமும் சீனாவும் பண்பாட்டால், கல்வியால், கடல் வணிகத்தால், தொழில்நுட்பம் முதலானவற்றால் இரண்டறக் கலந்திருந்ததற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு சான்றுகளை நிறுவியுள்ளனர்; பலரது ஆய்வு நூல்களிலும் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சங்க காலத்தில்...

புறநானூற்றில் பரணரும், ஔவையாரும் பண்டைத் தமிழகத்துக்குக் கரும்பினை அறிமுகப்படுத்தியவர்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் என்கின்றனர்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோரில் ஒருவர் சீனத்திலிருந்தோ சாவகத்திலிருந்தோ கரும்பைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும், பின்பு சாவகத்திலும் பயிராய் இருந்தது. பண்டைத் தமிழகத்திற்கும், சீனத்திற்கும் கரும்பு இணைப்புப் பாலமாக இருந்துள்ளது.

'காலில் வந்த கருங்கறி மூடையும்' எனும் புறப்பாடலால் முசிறியிலிருந்து கலத்தில் ஏற்றப்பட்டு காவிரிப்பூம்பட்டினம் வந்த மிளகுப் பொதிகள், அங்கிருந்து காழகம், கடாரம், சாவகம், சீனம் முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், சீன நாடு சேர நாட்டு மிளகை சங்க காலத்துக்கு முன்பே பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், சிலப்பதிகார உரையாசிரியரான அடியாருக்குநல்லார், 'வங்க வீட்டத்துத் தொண்டியோ/அகிலுந் துகிலு மாரமும் வாசமும்/தொகு கருப்பூரமுஞ்சுமந்துடன் வந்த' என்ற அடிகளால் தொண்டித் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் 'சீனச்சூடன்' என்ற கற்பூர வகையும் ஒன்றெறனக் குறிப்பிடுகிறார்.

காஞ்சி மாநகரில் 18 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்ததாக கச்சிமாநகர் புக்ககாதையில் 'மொய்த்த மூவறு பாடை மாக்களில்' என்னும் அடியில் மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் குறிப்பிடுகிறார்.

கி.பி.8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகர நிகண்டில் தமிழர்களுக்கு அறிமுகமாகியிருந்த 18 மொழிகளில் சீனமும் ஒன்றெறனக் குறிப்பிடுகிறது. எனவே, பண்டைத் தமிழர்களுக்கும், சீனர்களுக்கும் முதலில் வணிகத்தால் தொடர்பு ஏற்பட்டது.

அதனால் இங்கு வந்து குடியேறினர் என்பதைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், திவாகர நிகண்டு, நன்னூல் முதலிய இலக்கிய-இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
 
அயல்நாட்டார் குறிப்புகள்

தென்னிந்தியா குறித்த 'அயல்நாட்டார் குறிப்புகள்' என்னும் தமது நூலில் சீன நாகரிகம் 6,000 ஆண்டுகள் பழைமையானது என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். அதே போன்று தமிழர் நாகரிகமும் மிகவும் பழைமையானது.

தமிழகம் குறித்து கி.மு.2000-ஆம் நூற்றாண்டிலேயே சீனர்கள் அறிந்திருக்கிறார்கள். கி.மு.1408-இல் சீன அரசர் 'வூடி' காலத்தில் சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததாகச் 'சியன்-ஹன்சு' என்னும் சீன நூல் குறிப்பிடுகிறது.

தமிழகத்தில் 'ஹுவங்சு' என்ற ஊர் காஞ்சிபுரமாகும். இந்த ஊர் 2,000 ஆண்டுகள் பழைமையான நகரமாகும்.



பண்டைத் தமிழர்களின் கடல் வணிகம் என்பது, இந்தோனேசியத் தீவுகளிலிருந்து தமிழகம் வழியாகப் பாரசீக வளைகுடா வரையிலும் கடற்கரை ஓரமாக முதலில் நடைபெற்றது. பின்னர், அது நடுக்கடல் வணிகமாகப் பரிணமித்தது.

இதனால் எகிப்து, ரோம், சீனா முதலிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு ஏற்பட்டது. அதாவது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் சீனக் கப்பல்கள் இந்தியாவுக்கு வந்து, தமிழகத் துறைமுகங்களில் தங்கி விட்டு, தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியவுடன் சீனாவுக்குச் செல்லும்.

சீனம் முதலிய கீழைத் தேசங்களிலிருந்து கற்பூரம், பதநீர், குங்குமம் முதலியன தமிழகத்துக்கு வந்தன. சீனக் கண்ணாடி, சீனக் கிண்ணம், சீனச்சூடம், சீனப்பட்டு முதலிய பண்டங்கள் சீனத்திலிருந்து வந்தன.

எகிப்திலிருந்தும் அரேபியாவின் மூசாவிலிருந்தும் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இறக்குமதியான வண்ணக் கண்ணாடிகளும் அதன் மூலப் பொருள்களும் வசவ சமுத்திரம் அரிக்கமேட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு மணிகளாகவும், பொருள்களாகவும் வடிவமைக்கப்பட்டு மீண்டும் சீனாவுக்கு ஏற்றுமதியாயின.

மேலும், ரோமாபுரி பெண்களுக்கு தமிழக முத்துக்கள் மீது எந்தளவுக்கு மோகம் இருந்ததோ, அந்த அளவுக்கு தமிழகப் பெண்களுக்கு சீனக் கண்ணாடி வளையல்கள் மீது மோகம் இருந்ததால் நாகப்பட்டினத்துக்கு வளையல்களை சீனக் கப்பல்கள் கொண்டுவந்து குவித்தன.

குறிப்புகள்

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்துக்கும் சீனக் கப்பல்கள் வந்து சென்றதையும், பதினான்காம் நூற்றாண்டில் சீன வர்த்தகக் கலன்கள் கிழக்குக் கடற்கரையில் ஏராளமாகத் தென்பட்டதையும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




மேலும், 'சீனத்திற்குப் பாண்டிய நாட்டுத் துறைமுகத்திலிருந்து மிளகும், முத்தும்; சே ரநாட்டிலிருந்து ஏலமும், நீலமும், பாக்கும், தேக்கும், பல வித்துக்களும்; சோழ நாட்டிலிருந்து உறையூர்ப் பூந்துகில்களும், கண்ணாடிச் சாமான்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தியாடை, நறுமணப் பொருள்கள், மருந்துகள், அணிகலன்கள், யானைத் தந்தம், கருங்காலி, ஓர்க்கோலை (அம்பர்), பவழம் முதலானவற்றை தமிழகத்திலிருந்து சீனர்கள் விரும்பிப் பெற்றனர்.

சீனத்துப் பட்டாடைகளையும், சர்க்கரையையும் தமிழக மக்கள் விரும்பியதால், பட்டுக்குச் சீனம் என்றும், சர்க்கரைக்குச் சீனி என்றும் பெயர் வழங்கி வருகிறது.

சீனக் கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண், சீனக் காக்கை, சீனக் கிழங்கு, சீனக் கிளி, சீனக் குடை, சீனச் சட்டி, சீனத்து முத்து, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீன நெல், சீனப் பட்டாடை, சீனப் பரணி, சீனப் பருத்தி, சீனப் புல், சீனப் பூ, சீன மல்லிகை, சீன மிளகு, சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் ஆகிய சொற்கள் இன்றளவும் தமிழில் பயின்று வருகின்றன.

பண்டைய தமிழகமும் சீனமும் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை வெளிப்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாணயங்கள் மூன்று இடங்களில் புதையலாகக் கிடைத்துள்ளன. முதல் புதையல் பட்டுக்கோட்டை வட்டம் 'விக்ரம்' என்ற ஊரிலும், இரண்டாவது புதையல் மன்னார்குடி வட்டம் 'தாலிக்கோட்டை' என்ற ஊரிலும், மூன்றாம் புதையல் பட்டுக்கோட்டை வட்டம் 'ஒலயக்குன்னம்' என்ற ஊரிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

முதல் புதையலில் 20 நாணயங்கள் கிடைத்தன. அந்த நாணயங்கள் கி.பி.713-க்கும் கி.பி.1241-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த நாணயங்களாகும். இரண்டாவது புதையலில் 1,822 நாணயங்கள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் கி.பி.1260-ஆம் ஆண்டிலிருந்து 1268-ஆம் ஆண்டுவரை வெளியிடப்பட்ட நாணயங்களாகும்.

மூன்றாம் புதையலில் 323 நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்கள் கி.மு.126-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாணயங்களாகும். இவை அனைத்தும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 
சீனாவில் 'கேண்டன்' நகருக்கு வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகரில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நிறுவப் பெற்றுள்ள சிலைகள் (கி.பி.1269) குப்லாய்கான் என்னும் புகழ்பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் கட்டப்பட்டதாகும்.

இந்தக் கோயில் கட்டப்பட்டு, 'திருக்கதாலீசுவரன் உதயநாயனார்' என்னும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிவன் கோயில் இவரது ஆணையின்படி கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

இதே போன்று, அதே காலத்தில் சீன அரசர் ஒருவர் காஞ்சிபுரத்துப் பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மனின் (ராஜசிம்மன்) அனுமதி பெற்று சீனாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் புத்த பிக்குகள் வழிபடுவதற்காக நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விஹாரம் கட்டினார். 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அந்த விஹாரம் 'சீனக் கோடா' என்ற பெயரில் சென்ற நூற்றாண்டு வரையில் இருந்ததாகச் சீன நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு ஒரே காலத்தில் சீனாவில் இந்துக்கள் வழிபடுவதற்குச் சிவன் கோயிலையும், தமிழகத்தில் சீனப் பிக்குகள் வழிபடுவதற்கு விஹாரத்தையும் கட்டியதிலிருந்து பண்பாட்டுத் தொடர்பு வெளிப்படுகிறது.

குவான்சு' நகரம்

சீனாவின் 'குவான்சு' நகரம் தமிழ் வணிகர்களின் நகரமாக இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சோழ அரசர்கள், தம்முடைய ஆட்சிக் காலத்தில் சமுதாய வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த பொதுமக்களுக்கு சிறப்புச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

அதாவது, கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அரசனுடைய கருவூலத்தில் வைப்புநிதி வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அரசன் பல்லக்கேற்றல், குதிரையின்மீது ஏறி வருதல், அரசவையில் வீற்றிருத்தல், சீனக் குடை பிடித்தல், படைகள் சூழ அரசன் உலா வரும்போது பொன்னாரம் பூண்டு உடன்வருதல், பச்சைப்பட்டு போர்த்திக் கொள்ளுதல், தன் வீட்டுத் திருமணத்தின்போது மணமக்கள் பல்லக்கில் ஊர்வலமாக வர அனுமதித்தல் எனச் சிறப்புச் செய்துள்ளார்.

இதை, 'கோனேரின்மை கொண்டான் (சோழன் வீரராசேந்திரன் கி.பி.1207-1256) தன் 15-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1222) வட பரிசார நாட்டு பார்பார் தன் சரக்குப் (கருவூலத்தில்) பொருள் வைத்திருக்கும் சான்றோர்களுக்குச் சிறப்புச் செய்தான்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் குறிப்பிடத்தக்கது சீனக் குடை பிடித்தல். இந்த நிகழ்வு தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காத வரலாற்றுக் குறிப்பாகும்.

நன்றி தினமணி (12-10-2019)

 

 


வியாழன், 15 மே, 2025

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர்.

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர்.


பிறப்பு 

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது.


இளம் வயதில் மின் குவார்ட்ஸ் உருவாக்கம் 

ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கிய மான அறிவியல் ஆய்வில் பியேர் கியூரி ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின. அழுத்த மின்விளைவுத் தத்து வத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உரு வாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன், குவார்ட்சு கடிகாரங்கள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.



‘கியூரி விதி’ என்பது 

முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் ‘முறுக்குத் தராசு’ ஒன்றை உருவாக்கினார். காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது. மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் ‘கியூரி புள்ளி’ எனப்படுகிறது.

மேரி கியூரியுடன் திருமணம் 

1895-ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் “ கதிரியக்கம்” (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட ‘படிக மின் அழுத்தமானி’ மிகவும் பயன்பட்டது.




கதிரியக்க அலகு 

பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளி வரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளி யிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டு பிடித்தனர். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும் , சில எதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர், இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் எனப்பட்டன. கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி எனப்படும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7x1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910-ல் ‘கதிரியக்கத் துறை காங்கிரஸ் என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.




திங்கள், 12 மே, 2025

The History of Indian Civil Service

 

மே 12. 1806

 1806 - இந்தியாவில் ஐஏஎஸ் போன்று உலகின் பல பகுதிகளிலும் காணப்படும், அரசுப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடங்கிவைத்த, கிழக்கிந்தியக் கம்ப்பெனிக் கல்லூரி தொடங்கப்பட்ட நாள்.

 # அரசு நிர்வாகத்துக்காகு அலுவலர்களுக்குப் பயிற்சியளிப்பது என்பதைத் தொடங்கியது ஒரு தனியார் வணிக நிறுவனம்தான்! இண்டீஸ் என்றழைக்கப்பட்ட, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் வணிகம் புரிவதற்காகத் தொடங்கப்பட்ட ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி(எச்ஈஐசி), 1700களின் இடைப்பகுதியில், அன்றைய உலக வணிகத்தில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருந்தது.

# 1757இல் ப்ளாசிப் போரின் வெற்றியையடுத்து, அரசாட்சி செய்யும் அமைப்பாக மாறி, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மட்டுமின்றி, ஹாங்க்காங் வரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது.

# உலகின் குறிப்பிடத்தக்க அளவு நிலப்பரப்பை ஒரு நிறுவனம் ஆட்சி செய்தது எனும்போது, அதற்கேற்ற அளவு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் 16-18 வயதுடைய ஆங்கிலேய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பணிகளைச் செய்வதற்குரிய பயிற்சியளித்து, ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி'ஸ் சிவில் சர்வீஸ்(எச்ஈஐசிசிஎஸ்) என்று பட்டமளித்துப் பயன்படுத்த இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.

# இதுவே உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சிவில் சர்வீசஸ் என்ற தற்காலத்திய முறைக்குத் தொடக்கம் என்றாலும், கி.மு.140இல் சீனப் பேரரசர் வூ, 100 இளைஞர்களுக்கு நடத்திய 'இம்ப்பீரியல் எக்ஸாமினேஷன்' என்பதுதான், அரசுப் பணிகளுக்கான முதல் தேர்வு.

# பின்னாளில் மெரிட்டோக்ரசி என்று பெயரிடப்பட்ட, கன்ஃபூசியச் சிந்தனையின் அடிப்படையில், சீன அரசுப் பணிகளுக்கு, உயர்குடியினர் என்ற கட்டுப்பாடின்றி யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தேர்வுகள் அதன்பின் சீனாவில் 1905 வரை வழக்கமாகவே இருந்தன. பிரபுக்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் நடைமுறை இங்கிலாந்தில் இருந்த நிலையில், 18ஆம் நூற்றாண்டின் பல ஆங்கில எழுத்தாளர்கள், சீனத் தேர்வு முறையைப் பற்றிப் புகழ்ந்து எழுதினர். அந்தப் பின்னணியில்தான், தனக்கான ஊழியர்களை உருவாக்க கிழக்கிந்தியக் கம்ப்பெனி இந்தக் கல்லூரியைத் தொடங்கியது.

 # இந்தியன் சிவில் சர்வீஸ்(ஐசிஎஸ்) என்ற பெயரையும், தேர்வையும் 1829இல் அது அறிமுகப்படுத்தியது.

# 1857இன் முதல் சுதந்திரப் போருக்குப்பின், இந்தியாவின் ஆட்சி நேரடியாக இங்கிலாந்து அரசின்கீழ் சென்ற பின்னணியில், அரசுப் பணிக்கான தேர்வாகவே ஐசிஎஸ் மாறி, விடுதலைக்குப்பின் ஐஏஸ் ஆகியது.

# இங்கிலாந்து அரசுப் பணிகளுக்கான 'ஹர் மெஜஸ்ட்டீ'ஸ் சிவில் சர்வீஸ்' என்பதே 1855இல்தான் தொடங்கப்பட்டது. இன்று உலகின் பல நாடுகளில் இம்முறை நடைமுறையிலிருப்பதுடன், ஐநாவின் அமைப்புகளுக்கும் இண்ட்டர்நேஷனல் சிவில் சர்வீஸ் கமிஷன்(ஐசிஎஸ்சி) என்ற அமைப்பின்மூலம்தான் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்!

 

 May 12, 1806

1806 - The East India Company College, which initiated the system of selecting civil servants for government service, similar to the IAS in India and other parts of the world, was established on this day.

  • It was a private commercial company that started training officers for government administration! The Honourable East India Company (HEIC), which was established for trading in the regions known as the Indies, including the Indian subcontinent and Southeast Asia, had grown into a massive company controlling half of the world's trade by the mid-1700s.

  • Following the victory in the Battle of Plassey in 1757, it transformed into a governing body, extending its control over the Indian subcontinent, Southeast Asia, and even Hong Kong.

  • When a company governed a significant portion of the world's land, it required a large number of employees. This college was established to select English youths aged 16-18, train them for their duties, and employ them under the title of Honourable East India Company's Civil Service (HEICCS).

  • Although this marked the beginning of the modern civil services system in many countries, the first examination for government service was conducted by Chinese Emperor Wu in 140 BC, known as the 'Imperial Examination' for 100 youths.

  • These exams, based on Confucian thought and later termed meritocracy, allowed anyone to be selected for Chinese government service without the restriction of noble birth and remained common in China until 1905. In England, where only nobles and their chosen ones were appointed to government positions, many English writers of the 18th century praised the Chinese examination system. It was against this backdrop that the East India Company established this college to create its employees.

  • The Indian Civil Service (ICS) and its examination were introduced in 1829.

  • After the First War of Independence in 1857, when the governance of India came directly under the British Crown, the ICS became the examination for government service, which later became the IAS after independence.

  • The 'Her Majesty's Civil Service' for British government service was only started in 1855. Today, this system is in practice in many countries around the world, and even the United Nations selects its officers through the International Civil Service Commission (ICSC).

சூப்பர் எல்–நினோ (El Niño): 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர்

  சூப்பர் எல்–நினோ (El Ni ñ o) 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர் உலக காலநிலை அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும...