வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா - விண்வெளி வீராங்கனை
வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா - விண்வெளி வீராங்கனை
மார்ச் 06. 1961 மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர்
வாலெண்டினா தெரெஷ்கோவா ரஷ்யாவின் யாரோஸ்லாவ்ல் அருகே மாஸ்லென்னிகோவோவில் 6 மார்ச் 1937 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராக்டர் டிரைவர் மற்றும் அவரது தாய் ஒரு நெசவுத் தொழிற்சாலையில் வேலை செய்தார். சிறிய வயதிலிருந்தே பறக்கும் ஆர்வம் கொண்ட தெரெஷ்கோவா, 1959 மே மாதம் 22 வயதில் தனது முதல் பயணத்தைத் தொடர்ந்தார். . ஒரு நெசவுத் தொழிலாளராக வேலை செய்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யூரி காகரின் முதல் மனித விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து, சோவியத் அரசு பெண் விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை அனுமதித்தது, முதல் பெண் விண்வெளி வீரர் சோவியத் குடிமகனாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அது திட்டத்தை தொடர்ந்தது.
வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.
இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.
இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.
சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.
‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக