ஞாயிறு, 22 டிசம்பர், 2024
ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)
வியாழன், 5 டிசம்பர், 2024
சென்னை கன்னிமாரா பொது நூலகம்
சென்னை கன்னிமாரா பொது நூலகம்
சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896
டிசம்பர் 05,
கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.
கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.
பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.
இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.
நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில்
தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, பிறந்த தினம் - 1795)
இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார்.
* தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார்.
* படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
* 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, தனது பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான கணிதம், அறிவியலைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து 1833-ல் விலகி, சிலகாலம் எழுதிவந்தார். அண்ணனுடன் சேர்ந்து ரோட்டரி பிரின்டிங் பிரஸ் இயந்திரத்தை உருவாக்கினார்.
* சிறுவனாக இவர் இருந்தபோது, தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. வீட்டுக்கு தபால் வரும் நேரத்தில் பணம் இருக்காது. உடனே, வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அருகே உள்ள நகரில் விற்றுவிட்டு பணம் கொண்டுவருமாறு சிறுவன் ஹில்லை அனுப்புவார்கள். இந்த அனுபவம்தான் தபால்துறை சீர்திருத்த யோசனையை இவருக்குள் விதைத்ததாகக் கூறப்படுகிறது.
* தபால் துறை சீரமைப்பில் பலரும் ஆர்வத்தோடு இருப்பதை அறிந்தார். அவர்கள் எழுதிய கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை அலசி, ஆராய்ந்து, ‘போஸ்ட் ஆபீஸ் ரிஃபார்ம்: இட்ஸ் இம்பார்டன்ஸ் அண்ட் பிராக்டிகபிலிட்டி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி, 4 தொகுதிகளாக வெளியிட்டார்.
* இவரது புதுமையான, புள்ளிவிவர அடிப்படையிலான யோசனைகள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. நாளிதழ்களும் வரவேற்றன. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.
* இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839-ல் நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலைப் பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840-ல் விற்பனைக்கு வந்தன.
* லண்டன் பிரைட்டன் ரயில்வே இயக்குநராகவும், பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார். ரயில்வேயிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1846-ல் மீண்டும் தலைமை தபால் அதிகாரியின் செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்தார்.
* பணியாற்றிய அனைத்து துறைகளிலும், தனது தனித்துவம் வாய்ந்த அறிவாற்றலால், பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். எப்போதும் பாமர மக்கள் மீதான அக்கறையுடன் மனித குலத்துக்கு சேவை செய்த ரோலண்ட் ஹில் 84-வது வயதில் (1879) மறைந்தார்.
வியாழன், 21 நவம்பர், 2024
ருக்மா சிறு வயது திருமணம் - இந்தியாவில் தடை குறித்து..
ஆங்கில மொழியாக்கம்
வியாழன், 23 மே, 2024
LIST OF FREEDOM FIGHTERS IN TAMILNADU (MADRAS STATE)
LIST OF FREEDOM FIGHTERS IN TAMILNADU (MADRAS STATE)
- அண்ணா சாமி ஐயர்
- அசலாம்பிகை அம்மையார்
- அன்னதான சிவம்
- அன்பில் ராஜகோபால ஐயங்கார்
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (சட்டம்)
- அனுமந்தன்பட்டி கிருஷ்ணசாமி ஐயங்கார்
- அம்மாபேட்டை வேங்கடராம ஐயர்
- அகிலாண்டம்மாள் (வைதியநாத ஐயர் மனைவி)
- அ.மாதவ ஐயா (சட்டம்)
- அலமேலு மங்கை
- ஆந்திர கேசரி பிரகாசம்
- ஆக்கூர் அனந்தா சாரியார்
- ஆரணி சுப்பரமணிய சாஸ்திரி
- ஆர். ராமசுப்ப ஐயர்
- ஆர்.வி.சுவாமிநாதன்
- ஆ.நா.சிவராமன்
- ஆர்.வெங்கடராமன்
- இரட்டைமலை சீனிவாசன்
- இராசம்மா பூபாலன்
- இராமு தேவர்
- இலட்சுமி சாகல் தந்தை சுவாமிநாதன்
- இ.எல்.ஐயர் (தொழிற் சங்கம்)
- எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
- எம்.அனந்தசயன ஐயங்கார்
- எம்.சங்கையா
- எம்.பக்தவத்சலம்
- எம்.ஜே.ஜமால் மொய்தீன்
- எம்.பி.டி. ஆச்சார்யா
- எம். சேஷாசாரியார்
- என்.சங்கரய்யா
- என்.ஹாலாஸ்யம் ஐயர்
- என்.எஸ். வரதாசாரியார்
- என்.சோமசசுந்திர ஐயர்
- என்.குருசாமி (தொழிற் சங்கம்)
- என்.ஜெயராம ஐயர் (தொழிற் சங்கம்)
- எஸ். அம்புஜம்மாள்
- எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
- எஸ்.சுப்பரமணிய ஐயர்
- எஸ். ராமகிருஷ்ண ஐயர்
- எஸ். வரதாசாரி வக்கீல்
- எஸ்.சீனிவாச ஐயங்கார்
- எஸ். ராஜம் ஐயங்கார்
- எஸ்.ஏ.ஐயர்
- எஸ்.ஆர். வெங்கடராமன்
- எம்.சிவசாமி
- எம்.ஆர்.வெங்கடராமன் (கம்யூனிஸ்ட்)
- எம்.ஆர்.கமலவேணி (பாடகர்)
- எம்.ஆர்.எஸ்.மணி
- எஸ்.என். சோயியாஜுலு
- எல்.என்.கோபால்சாமி ஐயர்
- எஸ்.பி.வி.அழகர் சாமி கொடைக்கானல்
- எஸ்.கமலம்
- ஏ.ரங்கசாமி ஐயங்கார்
- ஏ.கே.ஜி அகமது தம்பி மரைக்காயர்
- ஏ.பி.சி. வீரபாகு
- ஏ.வி.செல்லையா
- ஏ.வி. கங்காதர சாஸ்திரி
- ஏ.பாலசுப்பரமணியன் (கம்யூனிஸ்ட்)
- ஏ.எஸ்.பி.ஐயர் (சட்டம்)
- ஏ.என்.சிவராமன்
- ஐ. மாயாண்டி பாரத
- ஓமந்தூர் ராமமசாமி ரெட்டியார்
- கட்டபொம்மன்
- கண்ணம்மையார் ( பெரியார் நாகம்மையாரின் தங்கை )*
- கம்பன் அடிப்பொடி சா.கனேசன்
- கருமுத்து தியாகராசர்
- கரீம் கனி
- க.சந்தானம்
- க.மு.ஷெரிப் கவிஞர்
- கல்கி தி. சதாசிவம்
- கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி
- கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கர ஐயர் மனைவி லஷ்மி
- கல்லிடைக்குறிச்சி யக்னேஸ்வர சர்மா
- கல்லிடைக்குறிச்சி ஜி.மஹாதேவ ஐயர்
- கதர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்
- கஸ்தூரி ஐயங்கார்
- கருப்பு சேர்வை
- கரூர் எஸ்.பாப்பா அம்மாள்
- காந்தி ஆசிரம கிருஷ்ணன்
- கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்
- கிருஷ்ணசாமி ஐயர் வக்கீல்
- காளிஅம்மாள் (தலித்)
- காஞ்சிபுரம் கல்யாணராம ஐயர்
- காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா
- காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சினுவாசன்
- காஞ்சிபுரம் டாக்டர் பி..எ.எஸ். ரகுராமன்
- குமாரண்டி பாளையம் ஏ.நாச்சி்ப்பன்
- குருசாமி ஐயர்
- குருமூர்த்தி (தொழிற் சங்கம்)
- கு.காமராசர
- கு.ராஜவேலு
- கும்பகோணம் டாக்டர் எம்.கே. சாம்பசிவ ஐயர்
- கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் கே.பி.சுந்தராம்பாள். கணவர் கிட்டப்பா
- கே. சுப்ரமணியம்
- கே.ஜகதீச ஐயர் (தொழிற் சங்கம்)
- கே.எஸ். ஜானகி ராமன் (தொழிற் சங்கம்)
- கே.எஸ்.மார்கம் ஐயர் (தொழிற் சங்கம்)
- கே.கே.காளியம்மாள்
- கே.பி.ஜானகியம்மாள்
- கே.ஆர். ராம ஐயர்
- கே.ஆர். கல்யாணராம ஐயர்
- கே.ஆர். வாசுதேவன்
- கே.ஜயராம ஐயர் வக்கீல்
- கே.ராஜா ஐயர் வக்கீல்
- கே.நாகேஸ்வர ராவ் பந்துலு
- கோவிந்தம்மாள்
- கோ. வெங்கடாசலபதி
- கோடை எஸ்.பி.வி. அழகர்சாமி
- கோத்தகிரி ஜி. மஹாதேவ ஐயர்
- கோவை என்.ஜி. ராமசாமி
- கோவை கே.வி். ராமசாமி
- கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
- கோவை அய்யா முத்து
- கோவை சி.பி.சுப்பையா
- பிசெட்டிபாளையம் வி. இராம ஐயங்கார்
- கோபிசெட்டிபாளையம் ஸ்ரீகண்ட ஐயர்
- கோபிசெட்டிபாளையம் லஷ்மண ஐயர்
- கோமதி சங்கர தீட்சிதர்
- சமையல் ரங்கசாமி ஐயங்கார்
- சங்கரலிங்கம் ஜெகன்நாதன்
- சர்தார் வேதரத்தினம் பிள்ளை
- சரஸ்வதி பாண்டுரங்கன்
- சரஸ்வதி ராஜாமணி (நேதாஜி படையின் உளவாளி )
- சர்தார் வேதரத்தினம் பிள்ளை
- ச.அ. சாமிநாத ஐயர்
- சாவடி அருணாசலம் பிள்ளை
- சின்ன மருது மகன் துரைச்சாமி
- சிதம்பரம் ஐயர்
- சி.சுப்பரமணியம்
- சி்.பி் ராமசாமி ஐயர்
- சி.எஸ். ரங்க ஐயர்
- சி.சு.செல்லப்பா
- சின்ன சேலம் கே.வேங்கடேச ஐயர்
- சீர்காழி சுப்பராயன்
- சுந்தர வரதன்
- சுந்தரம் சாஸ்திரி
- சுத்தானந்த பாரதி
- சுப்பரணிய சிவா
- சு.நாராஜ மணியகாரர்
- சுரேந்திரநாத் ஆர்யா
- செங்காளியப்பன் ( தொழிலாளர் தலைவர் )
- சென்பகராமன் பிள்ளை
- செல்லம்மா பாரதி
- சென்னை சங்கு எஸ். கனேசன்
- சென்னை ஆதம்பாக்கம் என். ராமகிருஷ்ண ஐயர்
- சேலம் ஏ.சுப்பிரணியம்
- சேலம் சி.வஜயராகாவாச்சாரியார்
- சேலம் கே.வி.சுப்பாராவ்
- சேலம் வாஞ்சிநாத ஐயர்
- டாக்டர் பெ.வரதராஜுலு நாயுடு
- டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
- டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன்
- டாக்டர் ஆர்.காளமேக ஐயர்
- டி.சதாசிவ ஐயர் (சட்டம்)
- டி.செங்கல்வராயன்
- டி.என். தீரத்தகிரி.
- டி.கே.மாதவன்
- டி.ஆர்.பத்பநாப ஐயர்
- டி.வி.வெங்கடராம ஐயர்
- டி.வி.கனேசன்
- டி.வி.ராமசுப்ப ஐயர் (சட்டம்)
- டி.ஆ ர். வெங்கடராம ஐயர்
- டி.ரங்காசாரியார் வக்கீல்
- டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி (சட்டம்)
- டி.ராமசந்திர ஐயர் வக்கீல்
- டி.எஸ்.ராமானுஜம் (தொழிற் சங்கம்)
- டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் (சட்டம்)
- டி.எல்.சசிவர்ண தேவர்
- தஞ்சை ஏ.ஒய்.எஸ். பரிசுத்த நாடார்
- தஞ்சை வி.வி.சடகோபாசாரியார்
- தஞ்சை வி. பூவராக ஐயங்கார்
- தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
- தர்மபுரி குமாரசாமி
- தர்மபுரி தீர்த்தகிரி முதலியார்
- தலையயூர் மிராசுதார் ராயணசாமி ஐயர்
- தாணு ஐயர்
- தியாகி வைரப்பன் வேதாரண்யம்
- தியாகி விஸ்வநாத தாஸ்
- தியாகி தங்கவேல் நாடார் ஆறுமுகனேரி
- தியாகி பி.எஸ். சின்னதுரை
- தியாகி ஆர்.சிதம்பர பாரதி
- திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
- திண்டுக்கல் டி. அமிர்தலிங்க ஐயர்
- திண்டுக்கல் மஹாதேவ ஐயர்
- திண்டுக்கல் கே.கனேசன்
- திண்டுக்கல் மணிபாரதி
- திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
- திருச்சி டி.எஸ் அருணாசலம்
- திருச்சி டாக்டர் டி.வி.சாமிநாத சாஸ்திரி
- திருச்சி டாக்டர் ராமசந்திர ஐயர்
- திருச்சி பி.ஆர். ரத்னவேல் தேவர்
- திருச்சி.வை. சாமிநாதன்
- திருப்பூர் குமரன்
- திருப்பூர் பி.எஸ். சுந்தரம்
- திருப்பூர் எஸ்..என். சுந்தராம்பாள்
- தில்லையாடி வள்ளியம்மை
- திருவள்ளூர் டி.என்.ஐயர்
- திருவல்லிக்கேணி கிருஷ்ணசாமி
- திருநெல்வேலி ஆயக்குடி ச.வெ. இராமசந்திர ஐயர்
- திருச்செங்கோடு தியாகராய ஐயர்
- திருசெந்தூர் திரிசுதந்திரர் கே.சுப்பையர்
- திருசெந்தூர் மு. கிருஷ்ண சர்மா
- திருவாரூர் டாக்டர் வி.வி.நாகநாத ஐயர்
- திருச்சூர் ஏ.சுப்பரமணிய ஐயர் (எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர்)
- தினமணி என்.ராமரத்தினம்
- திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து
- தீரர் சத்தியமூர்த்தி
- தீரன் சின்னமலை
- து.நவநீத கிருஷ்ணன்
- துரைசாமி ஐயர் .ஆர்
- தூக்குமேடை ராஜகோபால் நாடார்
- தூத்துக்குடி பால்பாண்டியன்
- தூத்துக்குடி வேங்கட கிருஷ்ணன்
- தென்னாற்காடு நாராயண ஐயர்
- தென்னோடி விஸ்வநாதன்
- தொண்டர் காப்டன் சுப்பரமணிய ஐயர்
- தேசியகீதம் சுப்பையர்
- தேசிய கல்லூரி முதல்வர் வி.சாரநாத ஐயங்கார்
- தேனி என்.ஆர். தியாகராஜன்
- தேவகோட்டை என்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்
- தேவகோட்டை ரங்கசாமி ஐயங்கார் ( ஹரிஜன ரங்கண்ணா )
- தோழர் கே.டி. தங்கமணி
- தோழர் பாலதண்டாயுதம்
- நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
- நாமக்கல் ஏ. ரங்காசாரி
- நாகம்மையார்*
- நீலாவதி இராம.சுப்பரமணியம்*
- நீலகண்ட பிரம்மசாரி
- நீலமேகம் பிள்ளை
- பத்மாசினியம்மாள்
- பங்கஜத்தம்மாள்
- பர்வதவர்தினி
- பத்மாவதி ஆஷா
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
- ப.ஜீவானந்தம்
- பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி
- பழனி கே.ஆர். செல்லம் ஐயர்
- பதிப்பாளர் ஜி.ஏ.நடேசன்
- பழனி பி.எஸ்.கே. லக்ஷ்மிபதி ராஜு
- பழனி சே.அ. ஷேச ஐயர்
- பாஷயம் என்கிற ஆர்யா
- பாஷ்யம் ஐயங்கார் வக்கீல்
- பால் பாண்டியன்
- பி.எஸ். சிவசாமி ஐயர்
- பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (ஹரிஜன ஐயங்கார்)
- பி.எஸ். சின்னதுரை
- பி.எஸ்.குமாரசாமி ராஜா
- பி.கக்கன்
- பி.சீனிவாச ராவ் (கம்யூனிஸ்ட்)
- பி.என். சங்கர நாராயண ஐயர்
- பி.வேலுச்சாமி
- பி.கே. நாராயண ஐயங்கார்
- பி.கே.ராமாசாரி
- பி.கே.மூக்கையா தேவர்
- பி.ரே.கே.சர்மா (தொழிற் சங்கம்)
- புலி மீனாட்சி சுந்தரம் (திருமங்கலம்)
- புதுச்சேரி வ. சுப்பையா
- பூமேடை ராமையா
- பூலித்தேவன்
- பெரிய காலாடி
- பெரியகுளம் இராம சதாசிவம்
- பெரம்பலூர் ஆசிரியர் நரசிங்க ஐயங்கார்
- பெரியார் ஈ. வே. ரா
- பொட்டி ஸ்ரீராமுலு
- மட்டப்பாறை வெங்கடராம ஐயர்
- மதுரை அ.வைத்தியநாதய்யர்
- மதுரை என்.எம்.ஆர்.சுப்பராமன்
- மதுரை ஆர். சுந்தர ராஜ ஐயங்கார்
- மதுரை கே.ஆர். சினுவாச ஐயங்கார்
- மதுரை ஏ.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
- மதுரை திரு கிருஷ்ண குந்து
- மதுரை தியாகராஜ சிவம்
- மதுரை கே.என். கிருஷ்ணன்.
- மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
- மதுரை பழனிகுமாரு பிள்ளை
- மதுரை ஜாரஜ் ஜோசப்
- மதுரை எஸ்.வி.கே.தாஸ்
- மதுரை கே.எஸ்.பரமன் ( சுப்பு கோனார் மகன்)
- மதுரை எம்.என்.ஆதிநாராயணன்
- மதுரை ஸ்ரீநிவாசவரத ஐயங்கார்- ( மனைவி) பத்மாசினியம்மாள்
- ம.ப.பெரியசாமித்தூரன்
- மஞ்சுபாசினி
- மண்டையம் சீனிவாசச்சாரியார்
- மகாகவி பாரதியார்
- மார்ஷல் ஏ.நேசமணி
- மணலூர் மணியம்மா
- மயிலப்பன் சேர்வைகாரர்
- மருதநாயகம்
- மருது பாண்டியர்
- ம.சிங்காரவேலர்
- ம.பொ.சிவஞானம் கிராமணி
- மன்னார்குடி டாக்டர் பி.வி.முத்துகிருஷ்ண ஐயர்
- மாடசாமி பிள்ளை
- மாவீரன் அழகு முத்துகோன்
- மானாமதுரை என். இராமசாமி ஐயர்
- மாயனூர் கே.ஜி சிவசாமி ஐயர்
- மாயனூர் சாம்பசிவ ஐயர்
- மீனாம்பாள்
- மு.சுப்பையா பிள்ளை
- மு.பழனியாண்டி சேர்வை
- முனகால பட்டாபிராமையா (சோழவந்தான்)
- முத்துரங்க முதலியார்
- மு.வீரராகவ ஆச்சாரியார்
- முத்துலஷ்மி ரெட்டி
- முத்து விநாயகம்
- முஹம்மது இஸ்மாயில்
- மூவலூர் இராமாமிர்தம்
- மேயர் செங்கல்வராயன்
- மோகன் குமார மங்கலம்
- ராமசந்திர நாயக்கர்
- ராஜாஜி
- ரா.கிருஷ்ணசாமி நாயுடு
- லால்குடி டி.எஸ் அனந்த நாராயண ஐயர்
- லீலாவதி என்கிற அம்மாபொண்ணு
- வட ஆற்காடு சுப்பரமணிய சாஸ்திரியார்
- வக்கீல் பாஷ்யம் ஐயங்கார்
- வத்தலகுண்டு பி.எஸ்.சங்கரன்
- வடஆற்காடு ஏ.தேவராஜ ஐயங்கார்
- வடிவு
- வ.ராமசாமி ஐயங்கார் (வா.ரா)
- வ.வு.சிதம்பரனார் ( வ.வு.சி )
- வ.வே. சுப்பரமணியம் ( வா.வே.சு )
- வாலாஜா சுந்திர வரதன்
- வாண்டாயத் தேவன்
- வி.கிருஷ்ணசாமி ஐயர்
- வி.கல்யானசுந்தரனார் (திரு.வி.க.)
- வி.பாஷ்யம் ஐயங்கார்
- வி.அனந்தாசாரியார்
- வி.வி.சினுவாச ஐயங்கார் வக்கீல்
- வி.வி.கிரி
- வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி
- வீரன் சுந்தரலிங்கம்
- வீரன் வாஞ்சிநாதன்
- வெ.துரையனார்
- வெ.அ. சுந்தரம்
- வெ.சாமிநாத சர்மா
- வேலுநாச்சியார் (கணவர் முத்து வடுகநாதர்)
- வேலூர் என்.சோமசுந்திரம் ஐயர்
- வேலூர் சோளிங்கர் தேவராஜ ஐயங்கார்
- வை.மு. கோதைநாயகி
- வை.சங்கரன்
- ஜானாம்பாள் (பாஷ்யம் ஐயங்கார் மகள்)
- ஜானகி ஆதி நாகப்பன்
- ஜி.சுப்பரமணிய ஐயர்
- ஜி.ராமானுஜம் (தொழிற் சங்கம்)
- ஜி.கிருஷ்ணமூர்த்தி (தொழிற் சங்கம்)
- ஹரிஹர சர்மா
- ஹாஜி முகமது மௌலானா சாகிப்
- ஸ்டோர் கீபர் சீனுவாச ஐயர்
- ஸ்ரீமதி சௌந்திரம் ராமச்சந்திரன்
- ஸ்ரீநிவாச ஆழ்வார்
- ஸ்ரீரங்கம் ஜே. நடராஜ ஐயர்
- சுதந்திர போராட்ட வீரர்கள்
- சுவாமி நாகப்பப் படையாச்சி தென்னாப்பிரிக்கா
- கடலூர் அஞ்சலையம்மாள்
- சர்தார் பட்டம் வாங்கிய #பு.ம.#ஆதிகேசவ_நாயகர்
- தன் எழுத்துக்களால் சுதந்திரத்தை ஊட்டிய சு.#அர்த்தநாரீசநாயகவர்மாவையும்,
- சுதேசமித்திரன் துணை ஆசிரியர் #உலகநாதன்நாயகர்.
- #அத்திப்பாக்கம் #வெங்கடாசல_நாயகர்.
- #தன் ஆன்மீகத்தின் மூலம் விடுதலையை ஊட்டியதை சொல்லும் நாம் அதற்கு காரணமும் அவரையே வெற்றிக்கொண்ட சூளை.#சோமசுந்தர_நாயகர்.
- ஆங்கிலேயன் கொடியை இறக்கிவிட்டு நம் தேசிய கொடியை முதலில் ஏற்றிய ஐயா.#முனுசாமி_நாயகர்.
- விடுதலைக்கு பாடுபட்டு சிறைசென்ற ஐயா #மாணிக்கவேல்_நாயகரை சொல்லமாட்டோம்.
- சுதேசி கப்பலை வாங்க வ.உ.#சிதம்பரம்சைவவேளார் முயற்சித்தபோது பொருள் தந்து ஆலோசனையும் வழங்கியவர் பு.ம.#ஆதிகேசவநாயகர்.
- புதுவையின் தந்தை என போற்றப்படுகிற செவாலிய #செல்லாநாயகர்.
- மக்கள் எழுத்தாளர் விந்தன் எனும் புனைப்பெயரை கொண்ட கோவிந்தன்_நாயகர்.
- ஜமதக்கனி
- ஐயா #ராமையா_நாயகர்
- ஐயா #குப்புசாமி_நாயகர்
- ஐயா #சுப்பிரமணி_நாயகர்
- ஐயா #உத்திரகுப்புசாமிநாயகர்
- ஐயா #அன்சாரிபெதுரைசாமி_நாயகர்
- ஐயா #தூசிஇராஜகோபால்பூபதி_நாயகர்
- ஐயா #பாலமுருகேச_நாயகர்
- ஐயா #சோமசுந்தரபாரதிநாயகர்
- ஐயா #வேகிருஷ்ணசாமிநாயகர்
- வீரமங்கை #வீரம்மாள்_நாச்சியார்
- வீரமங்கை #குப்பம்மாள்மாணிக்கவேல்நாயகர்
- தியாகி சொக்கலிங்கம் நாயகர் (உறவினர்)
- பூண்டியாங்குப்பம் இராமச்சந்திர படையாச்சி
- செய்யூர்நா. வேணுகோபால் நாயகர்
- T.R. ராமாமிர்த தொண்டைமான்
- விருப்பாச்சி கோபால நாயகர்
வியாழன், 2 மே, 2024
பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) Brazil
பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) Brazil
தமிழ் நாட்டில் மதிய உணவைப் புகுத்திய அதே சிந்தனையில் பிரேசிலில் ஒரு சிந்தனையாளர், கல்வியாளர் பாவுலோ பிரெய்ரி, மே 2 நினைவு நாள்.
கற்றல் கலை
பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) ஒரு பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆவார். கற்றல் கலையில் நுண்ணாய்வுடைய திறனுடன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது.
பாவ்லோ பிரையர் 1921 ஆம் ஆண்டில் பிரேசிலில் பிறந்தார். உலகத்தின் மிகப்பெரும் பொருளாதார மந்தம் 1930களில் ஏற்பட்ட நேரம் இவரது குடும்பத்தையும் பாதித்தது . அந்த நேரம் கடும் பசியும் பட்டினியும் பாவ்லோ பிரையரை வாட்டியது. இந்த வறுமையின் காரணமாக அவரது படிப்பு நான்கு ஆண்டுகள் தாமதப்பட்டது. அந்த நேரத்தில் அவர் அருகாமையில் இருந்த சேரியில் வசிக்கும் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியபடியே கழித்தார். இந்த சேரியில் இருக்கும் சிறுவர்களுடன் அவர் மிகுந்த நட்புடன் இருந்த காலத்தில் தான் அவர் ஏராளமான விஷயங்களை கற்றார். கற்றல் என்பது வேறு படிப்பு என்பது வேறு என்பதை அங்கு உணர்கிறார் பாவ்லோ பிரையர்.பசிக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி சிந்திக்கும் பாவ்லோ பிரையர் , வகுப்பறையில் ஒருவன் பட்டினியாக அமர்ந்திருந்தால், நிச்சயமாக அவனுக்கு அங்கு நடத்தப்படும் பாடங்கள் புரியாது, அது புரியாததற்கு காரணம் அவன் மந்தமானவனோ, அல்லது படிப்பில் ஆர்வம் குறைவானவனோ என்பது அல்ல என்கிறார் பாவ்லோ பிரையர்.
" அனுபவம், வர்க்கம் மற்றும் அறிவுக்கு இடையிலான உறவை எனக்கு மீண்டும் காட்டியது"
1943ல் பாவ்லோ பிரையர் சட்டம் பயின்றார். 1946ல் அவர் சமூகப் பணி - கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1961ல் கலாச்சாரத்துறையின் இயக்குநரானார். 1964ல் அங்கு நடந்த ராணுவ ஆட்சியின் போது 70 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் சிறிது நாட்கள் பொலிவியாவில் இருந்து விட்டு பிறகு சிலியில் கிரிஸ்துவ ஜனநாயக விவசாய சீர்திருத்த இயக்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தார்.
முதல் நூல்
1967ல் விடுதலையின் ஆயுதமான கல்வி (Education as the Practice of Freedom) என்கிற அவரது முதல் நூல் வெளியானது. 1968ல் அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி (Pedagogy of the Oppressed) நூல் வெளியானது. போர்த்துகீசிய மொழியில் வெளியான இந்த நூல் 1970ல் தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பாவ்லோ பிரையர் மே 2, 1997 இல் இதயக் கோளாறு காரணமாக இறந்தார்.
வள்ளுவரின்
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
செவிக்கும், வயிற்றுக்கும் உணவு என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை, வள்ளுவரும், மதிய உணவு அளித்த தமிழ் அரசியலாளர்களும், பாவ்லோ பிரையரும் எளிய மக்களின் நண்பர்கள்.
திங்கள், 1 ஏப்ரல், 2024
வின்செண்ட் வான்கா ((Vincent Van Gogh) டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர்.
மார்ச் 30 வின்செண்ட் வான்கா (Vincent Van Gogh)
வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு:; (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர்.
இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும்.
ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர்.
பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..
இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை.
தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார்.
வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
வாங்கரி மாத்தாய் (Wangari Maathai), கென்யா, சுற்றுச்சூழல் ஆர்வலர்
வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்.
ஏப்ரல் 01 வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்
வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.
1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார்.
நோபெல் பரிசு
2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார்.
இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.
ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.
முதல் பெண் பேராசிரியர்
இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி இவரே.
நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.
ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.
30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.
இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.
1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.
நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.
கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது.
இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
சனி, 30 மார்ச், 2024
ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens)
ஜெசி ஓவென்ஸ்
ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார்.
1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது.
அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார்.
ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.
ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமையான் (வள்ளுவர்)
ஜெரனீமோ – அப்பாச்சி பழங்குடியினத்தின் வீரத் தலைவர் (04.09.1886 – ஜெரனீமோ சரணடைந்த நாள்)
ஜெரனீமோ – அப்பாச்சி பழங்குடியினத்தின் வீரத் தலைவர் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்த அப்பாச்சி ( Apache) பழங்குடியினர் , 19 ஆம்...
-
தமிழின் பெருமை.. புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. அறம் என்றால் என்ன என்பதைப் ப...
-
பல்லவப் பேரரசர்கள் பல்லவர்கள் யார்? அவர்களின் பூர்வீகம்- காஞ்சி - மாமல்லபுரம் - வழி வழி மன்னர்கள் -சீனா, ஜப்பான் கொரியா, கம்போடியா உள்ளிட்...


