திங்கள், 11 டிசம்பர், 2023

நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

 நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன அதில் ஆறுகள், ஏரிகள், வடிகால் பாசனங்கள்  உட்பட்டு நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா? 
பட்டியல்கள் பங்களிப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. விடுபட்டு இருந்தால் சேர்க்கலாமே.

சோழர்கள் பங்களிப்பு 
 
முற்கால, பிற்காலச் சோழ அரசர்கள் என தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, நீர் மேலாண்மையை வெகுலாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும்  என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள். 
இருப்பினும், சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள்.
காவிரி கல்லணை
வீர நாராயண ஏரி,
ஜம்பை – பள்ளிசந்தல் ஏரி  கி .பி. 871இல் விஜயாலய சோழன் ஆட்சி
மதுராந்தகம்  ஏரி,
விண்ணமங்கலம் ஏரி -
முதலாம் பராந்தக சோழன்
சோதியம்பாக்கம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் திருவண்ணாமலை
முதலாம் ராஜேந்திர சோழனின் கடம்பனேரி 
பொன்னேரி - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்,
சோமங்கலம் பெரிய ஏரி- மூன்றாம் குலோத்துங்க சோழன்

சோழர் கால வாய்க்கால்கள்:
அருள்மொழித் தேவ வாய்க்கால்
அறிஞ்சிகை வாய்க்கால்
இராசகேசரி வாய்க்கால்
இராசேந்திர சோழ வாய்க்கால்
இராசதிராச சோழ வாய்க்கால்
உத்தமசீலி வாய்க்கால்
உத்தம சோழ வாய்க்கால்
கங்கைகொண்ட சோழ வாய்க்கால்
கேரளமாதேவி வாய்க்கால்
கோதண்டராம வாய்க்கால்
சீபூதி வாய்க்கால்
சுங்கந்தவித்த வாய்க்கால்
சுந்தரசோழ வாய்க்கால்
செம்பியன் மாதேவி வாய்க்கால்
செனநாத வாய்க்கால்
சோழகுல வாய்க்கால்
சோழ சூளாமணி வாய்க்கால்
நித்தவிணோதன் வாய்க்கால்
பரசக்கரதட்ட வாய்க்கால்
பரமேஸ்வர வாய்க்கால்
மாதேவன் வாய்க்கால்
மாதேவி வாய்க்கால்
முடிகொண்ட சோழ வாய்க்கால்
வானவன் மாதேவி வாய்க்கால்
விமலாதித்த வாய்க்கால்
வீர நாரயண வாய்க்கால்
ஜெயங்கொண்டசோழ வாய்க்கால்
ஸ்ரீ அறிஞ்சிகை வாய்க்கால்,
ஸ்ரீகண்ட வாய்க்கால்
ஸ்ரீகண்டராதித்த வாய்க்கால்,
ஸ்ரீ செம்பியன்மாதேவி வாய்க்கால்

சோழர் கால வடிகால்கள் :
அமநி நாரயண வடி
ஆதித்த வடி
இராசகேசரி வடி
கண்டருள் கண்ட வடி
கண்ணர வடி
கிடாரங்கொண்ட வடி
குலோத்துங்க சோழ வடி
சோழகுலவல்ல வடி
சோழமாதேவி வடி
திரிபுவன மாதேவி வடி
நரதொங்க வடி
பஞ்சவன் மாதேவி வடி
பரமேஸ்வர வடி
பராக்கிரம வடி
மதுராந்தக வடி
மாதேவடிகள் வடி
மும்முடிசசோழ வடி
வயிரமேக வடி
வானவன் வடி
விடேல்விடுகு வடி
வீரநாராயண வடி
ஆயன நாத வடி,
ஸ்ரீ கண்டராத்தித்த வடி
ஸ்ரீ கொண்டக மாதேவி வடி
ஸ்ரீ செம்பியன் மாதேவி வடி
ஸ்ரீ இராசகேசரி வடி
ஸ்ரீ வானவன்மாதேவி வடி
ஸ்ரீ வீரநாராயண வடி
கவுசல வடி
காமதேவ வடி,
சங்கர வடி
திருசிற்றம்பலேச வடி
திருவரங்க வடி, ஸ்ரீதர வடி
பெருமாள் வடி
ஸ்ரீதேவி வடி
ஸ்ரீகாமுக வடி
ஸ்ரீவீரமுக வடி

பல்லவர்கள் பங்களிப்பு  

இவங்க எரிகளை தடாகம் என்றும் குறிப்பிட்டனர். தடாகம் என்பது நீர்நிலைகள் இருக்கும் ஏரிகளில் தாமரை, அல்லிப் பூக்கள் நிறைந்து இருக்கும். கோடை காலங்களில் நீராவியாகமல் இருக்க இது போன்ற தாவரங்களை விளையச் செய்ததினால், எரிகளை தடாகங்கள் என்றும் கூறினார்.

காவிரி ஆறு, பாலாறு முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 
அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. அவற்றும் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்பன.
பெரிய கால்வாய்களிலிருந்து நீரை எடுத்துச் செல்லச் சிறுசிறு கால்வாய்கள் பல்லவ நாடெங்கும் அமைக்கப்பட்டிருந்தன.

குணமிலி ஏரி - ஆனத்தூர், செஞ்சி — மகேந்திரவர்மன் காலம்,  பனமலை ஏரி — இராஜசிம்மன் காலம்,  ஓங்கூர் ஏரி — இரண்டாம் நந்திவர்மன்,  வைரமேகத்தடாகம் — உத்திரமேரூர்,  சித்திரமேகத் தடாகம் – மாமண்டூர் – சாருதேவி பல்லவர் தேவி,  இராச தடாகம் – மாமண்டூர்,  திரளய ஏரி – தென்னேரி – சாருதேவி பல்லவர் தேவி,  மகேந்திர தடாகம் – சோழிங்கர்,  சந்திரமேக தடாகம் – களக்காட்டூர்,  பரமேஸ்வர தடாகம் – பரமேஸ்வரமங்கலம், காஞ்சிபுரம்.
காவேரிப்பாக்கம் ஏரி — வேலூர் — மூன்றாம் நந்திவர்மன்,  மருதநாடு ஏரி — மருதாடு, வந்தவாசிமார்ப்பிடுகு ஏரி — ஆலம்பாக்கம் — மார்ப்பிடுகு பேரடியரையன், இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன், வெள்ளேரி ஏரி — எச்சூர், காஞ்சிபுரம், கனகவல்லி தடாகம் — வேலூர், தாமல் ஏரி- அதில் பாலாற்றை கலக்க செய்து, வேகவதி என்ற ஒரு கிளை நதியை உருவாக்குதல்
, செம்பரம்பாக்கம் ஏரி, பழவேற்காடு ஏரி, புழலேரி செங்குன்றம் ஏரி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

சாராள் தக்கர் (Sarah Tucker ) அம்மையாரின் பணி

 சாராள் தக்கர் அம்மையாரின் பணி 

சாராள் தக்கர் (Sarah Tucker ) இங்கிலாந்து நாட்டில், லண்டனில் பிறந்து இருந்தார். அவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரர் அவர் பெயர் ஜான் தக்கர் (John Tucker) இந்தியாவில் சென்னை மாகாணத்தில் சி.எம்.எஸ் கிருத்துவ மிஷினரியில் பணியாற்றிக் கொண்டு வந்தார். தனது சகோதரிக்கு தம்மை சுற்றிலும்  நடக்கும் நிகழ்வுகளை கடிதங்கள் மூலம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தார். தங்கைக்கு இரு கால்களாலும் எழுந்து நடக்க முடியாது. தங்கை மேல் உள்ள பாசத்தினால், அவரின் மகிழ்ச்சிக்காக இந்தியாவில் நடக்கும் செய்திகளை அடிக்கடி அனுப்புவது உண்டு. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ஜில்லாவில் தான் பார்த்திட்ட செய்தியை கடிதமாக அனுப்பி இருந்தார். அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 



இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என்றே சொல்லலாம்.

சாராள் தக்கர் (Sarah Tucker )ஆசிரியை பயிற்சி நிறுவனத்தின் வரலாறு

சிஎம்எஸ் ஸின் (CMS) செயலராக சென்னையில் பணியாற்றிய ஐயர் கனம் ஜான்தக்கர் அவர்களின் சகோதரி தான் சாராள் தக்கர். 

ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து விட்டு பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். வேற்று ஆண்களை பார்த்தால்கூட வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்கிறார்கள் என்று எழுதின கடிதம், 

மாற்றுத் திறனாளி

இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சகோதரி, மாற்று திறனாளியான பதினாலு வயது சாராள் தக்கர் வாழ்வில் பெரும்பாதிப்பை கொண்டு வந்தது. 

இந்தியாவில், பெண்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பாமல் “அடுப்பூதும் பெண்டிருக்கு படிப்பெதற்கு” என நினைத்த சமுதாயத்தில் பெண்கள் கல்விக்காக உதவிகள் தேவை என்பதை கனம் ஜான் தக்கர் அவர்கள் தனது சகோதரிக்கு எழுதி அடிக்கடி தெரிவித்ததால் இருகால்களும் ஊனமுற்ற நிலையில் இருந்தாலும் பெண்கல்விக்காக தன்னை அர்பணித்தாள் சாராள் தக்கர். 


ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம்

ஜான் தக்காரின் கடிதத்தைப் படித்தவுடன், சாராள் தக்கர் தன்னுடைய 24 சவரன் நகைகளை   முதலில் (முதல் தவணையாக)  பின்னர் மேலும் தன்னுடைய 100 பவுன் நகைகளுடன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சுமார் 200 பவுன் வசூலித்து தனது அண்ணன் ஜான் தக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய பணி புரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள்.

🔅சாராள் தக்கர் அனுப்பின முதல் உதவித்தொகையில் 1843 ல் கடாட்சபுரத்தில் ஆசிரிய பயிற்சிப்பள்ளி பெண்களுக்கென தொடங்கபபட்டது. 

🔅அதே வருடம் சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும்,விடுதியும் கட்டப்பட்டது. சாராள்தக்கர் ஆசிரியை பயிற்சியில் படித்து முடித்த ஆசிரியைகளைக் கொண்டு மிக குறுகிய காலத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, நல்லூர், திருநெல்வேலி சந்திப்பு போன்ற இடங்களில் 20க்கும் மேற்பட்ட கிளைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

🔅அதுமட்டுமல்ல 1895ல் சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி தென் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. இன்று அநேக பள்ளிகள் ஆலமரம் போல் விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது. 

ஒவ்வொரு முறையும் தனது கால்கள் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் ஒரு நல்ல பணத்தொகையை சேர்த்து அனுப்பினார்.

1857ஆம் ஆண்டில்மறைவுற்றார் 

இந்நிலையில் 1857ஆம் ஆண்டில் செல்வி சாராள் தக்கர் இவ்வுலக வாழ்வை விட்டு மரணமுற்றார்.  இந்தியாவில் அவருக்கு நினைவகம் கட்டுவதற்காக அவரது சிநேகிதிகள் அருளட்திரு. ஜான் தக்கர் அவர்களுக்கு அனுப்பிய நிதியை கொண்டு ஜான் தக்கர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டையில் 1858ல் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், அதனுடன் இணைந்த ஒரு சிறு மாதிரி பள்ளியும் உருவாக்கப்பட்டது. முதன் முதலாக டிப் தம்பதியினர் அதன் பொறுப்பை ஏற்றனர்.

தோழிகள் உதவி 

சாராள் தக்கர் தோழிகள், மரியா சைல்டர்ஸ், சோபியா டீக்கள், ஜோவன்னாகர் ஆகியோர்கள்   சாராள் தக்காரின் பொறுப்பினை ஏற்று மேலும் பணம், நகைகளை இங்கிலாந்தில் சேகரித்தும் அனுப்பிய தொகையில் பாளையங்கோட்டையில்  மேற்சொல்லப்பட்ட  சாராள் தக்கர் பெண்கள் பள்ளி மற்றும் ஆசிரியை பயிற்சிப்பள்ளி 1858ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி பல வருடங்களுக்கு முன்னால் உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததும் இல்லை.

The Sarah Tucker Institutions are to be remembered as the nursery of some pioneer institutions for the education of the handicapped in the whole of India. 

After three decades of resolute spadework, the Upper Primary Boarding School attached to the Training Institution was upgraded as the ‘Sarah Tucker High School’ in 1890 with 5 Girl students. 

Miss Askwith had the Confidence and Courage to raise the Sarah Tucker High School to a Second Grade College and get it affiliated to the University of Madras in 1895 as the First College exclusively for women in the whole of India to the South of Lucknow.


“Rome was not built in a day and so was Sarah Tucker College”


புதன், 29 நவம்பர், 2023

வர்த்தமான மகாவீரர்

 

வர்த்தமான மகாவீரர்

வர்த்தமான மகாவீரர்‌ இருபத்து நான்காவது (24) தீர்த்தங்கரராகக்‌ கூறப்படுகிறார்‌. 

அர்த்தமாகதியில்‌ எழுதப்பட்ட பல நூல்களிலும்‌ இவர்‌ (வைசாலிகா) வேசாலியன்‌ என்றே அழைக்கப்பட்டார்‌. 

'ஜைனமதம்‌' என்ற உயர்ந்த கட்டடத்திற்கு மிக உறுதியான அடித்தளம்‌ இட்டவர்‌. அதன்‌ காரணமாகவே இன்றைக்கும் ஜைனமதம்‌ விரிசல்களும்‌ ஓட்டைகளும்‌ இன்றி சிறந்து நிற்கக்‌ காண்கிறோம்‌. மற்றைய மதங்களைப் போல இவர்களுக்குள் பூசல்கள் இல்லை.

மகாவீரர்‌ “நிகந்த நாதபுத்த” என்ற பெயருடன்‌ நிர்கிரந்த பிரிவின்‌ தலைவராக விளங்கினார்‌ என்பதையும்‌ அவருடைய பரிநிர்வாண காலத்தைப்‌ பற்றியும்‌ பவுத்த நூல்கள்‌ தெளிவாகக்‌ கூறுகின்றன. 

பெற்றோர்‌ இவருக்கு வர்த்தமானர்‌ என்று பெயரிட்டனர்‌. யசோதா என்ற பெண்ணை மணந்து அனோஜா என்ற மகளுக்கும்‌ தகப்பன்‌ ஆகிறார். 

பெற்றோரின்‌ இறப்பிற்கு பின்னர்‌ அரசபதவிக்கு வந்த தன்‌ அண்ணன்‌ நந்தி வர்த்தன்‌ மற்றும்‌ முக்கிய மனிதர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ சமணத்‌ துறவியானார்‌. 

தன்னுடைய முப்பதாவது வயதில்‌ அரச வாழ்வைத்‌ துறந்து பன்னிரெண்டு 
ஆண்டுக்காலம்‌ கடுந்தவமிருந்து ஞானம்‌ பெற்றார்‌. தன்னுடைய 72 வது வயதில்‌ பாவாபுரியில்‌ பரிநிர்வாணம்‌ அடைந்தார்‌. 

72 ஆண்டுக்காலம்‌ அலைந்து திரிந்து கடுந்தவத்தால்‌ கேவல ஞானம்‌ பெற்ற அவர்‌ தம்முடைய 42 வது வயது முதல்‌ முப்பதாண்டுகள்‌ தம்‌ கொள்கைகளான கொல்லாமை, வாய்மை, பிறர்‌ பொருள்‌ விழையாமை, மிகுபொருள்‌ வெஃகாமை, பிரம்மச்சரியம்‌ என்ற ஐந்தையும்‌ மக்களுக்குப்‌ போதித்தார்‌. 



(மகாவீரர் பொன்னூர் மலை, வந்தவாசி)

ஜைனமதத்தின்‌ பழைய தத்துவங்களின்‌ நீண்ட பயணத்தில்‌ சில சீர்த்திருத்தங்களை கொண்டு வந்து கட்டுக்‌ கோப்பான மதமாக மாற்றினார்‌.

மக்களை ஒன்று திரட்டி. வழி நடத்தும்‌ சிறந்த வித்தையை அறிந்திருந்தார்‌. 

சங்கங்களை உருவாக்கினார்‌. பெண்களுக்கும்‌ தம்‌ மதத்தில்‌ இடங் கொடுத்தார்‌. 

பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினாலு.ம்‌ உலக வாழ்வில்‌ ஈடுபட்டவர்களுக்கென ஸ்ராவக விரதத்தை ஏற்படுத்தியதால்‌: ஜைன மதத்தின்‌ வேர்‌ மக்கள்‌ வாழ்வின்‌ அடிவரை பரவித்‌ தழைத்தது. 

மகாவீரர்
மகாவீரர்‌ வலியுறுத்தி சென்ற ஐந்து விரதங்கள்‌ ஜைன மதத்தி னரால்‌ இன்று வரை மாறாது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்ற பெருமையோடு அவருடைய மதக்‌ கொள்கைகளின்‌ தாக்கம்‌ இந்தியாவில்‌ வளர்ந்த பல மதங்களிலும்‌ காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்‌. அதிலும்‌ குறிப்பாக கொல்லாமை அதாவது உயிர்க்கொலை செய்தலை வெறுக்கும்‌ மாபெரும்‌ 
அறத்தைத்‌ தொடக்க காலத்திலிருந்து வலியுறுத்தி வரும்‌ நிலையில்‌ இந்து மதம்‌ போன்ற பிற பெரிய மதங்களும்‌ பிற்காலத்தில்‌ இதனை ஏற்றுக்‌ கொண்டு கொல்லாமையை வலியுறுத்தி வருவதைக்‌ காணலாம்‌. இது போல வாய்மை(சத்தியம்‌) என்பதையும்‌ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

யாகங்களில்‌ உயிர்கள்‌ பலியிடப்படுவதை வெகுவாகக்‌ கண்டித்தும்‌, கள்ளுண்ணும்‌ பழக்கத்தைக்‌ கைவிட்டெடொழிக்க கோரியும்‌ 2500 ஆண்டுகளுக்கு முன்பே அஹிம்சைப்‌ புரட்சி செய்த பெருமையாளர்‌. மகாவீரர்‌, கொல்லாமை, வாய்மை, கள்‌ உண்ணாமை இவற்றையே அடிப்படைக்‌ கொள்கையாக்கி நாடெங்கும்‌ அதைப்‌ பரப்பி மக்களை நெறிப்படுத்தியவர்‌. 

இந்திய மக்கள்‌. மனதில்‌ அவ்வெண்ணங்களை இன்று வரை நிலைத்திருக்கும் படிச்‌ செய்தவர்‌. அதனால்‌ அவர்‌ மகாவீரர்.

காந்தியடிகள்‌ 
அம்மாவீரரின்‌ கொள்கைகளை இந்த இருபதாம்‌ நூற்றாண்டில்‌ மீண்டும்‌ நாடெங்கும்‌ பரப்பியவர்‌ மகாத்மா காந்தியடிகள்‌. அவர்‌ எம்‌ மதமும்‌ சம்மதம்‌ என்ற கொள்கையினை உடையவார்‌. அஹிம்சை மற்றும்‌ வாய்மை என்பதை தாரக மந்திரமாகக்‌ கொண்டவர்‌. அதன்படி. வாழ்ந்தவர்‌. எனவே இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இணையற்ற அஹிம்சைப்‌ புரட்சியாளர்‌ காந்தியடிகள்‌ வரை இந்திய மக்கள்‌ அனைவருடைய மனத்திலும்‌ அஹிம்சையையும்‌ வாய்மையையும்‌ ஆழமாகப்‌ பதியச்‌ செய்தவர்‌ வர்த்தமான மகாவீரர்‌ தான்‌ என்பதில்‌ ஐயமில்லை. 

இன்று குடி குடியைக்‌ கெடுக்கும்‌ என்று இடிமுழக்கம்‌ செய்கிறோம்‌. இதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே முழக்கம்‌ செய்து மக்களை நல்வழிப்‌ படுத்தியவர்‌. எனவே மகாவீரர்‌ கொள்கைகளை தாமும்‌ கடைப்‌ பிடித்து நடக்க சபதம்‌ எடுப்போம்‌.


நாகமலை சமணர் வரலாற்றுச் சின்னங்கள்

மேம் ல்மருவத்தூர்-செய்யூர் நெடுஞ் சாலையில் உள்ள நாகமலை யில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுச் சான்றுகளுடன் சிறிய அளவிலான பல்லவர் கால குடை வரை கோயில் உள்ளது. இதனை சம ணத் துறவியர்கள் தங்களது வாழ்விடமா கவும், சமயத்தைப் போதிக்கும் கூடமா கவும், நோய்களைத் தீர்க்கும் இயற்கை மூலிகை மருத்துவத்தை அளிக்கும் இட மாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகத்தை அடுத்த விராலூரில் உள்ள இந்த மலையானது 'பஞ்சபாண்டவர்கள் மலை', 'கருப் பங்குன்று' உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையில் துற விகள் செய்த அறப்பணிகள் குறித்த விவரங்கள் மலைக்குன்றுகளில் கல் வெட்டுகளாக உள்ளன.

மூலிகைச் செடிகளை அரைக்கப் பயன்படுத்தும் கல் உரல்கள், மழைக்காலங்ளில் மழைநீர் உள்புகாதவாறு இயற்கையாக அமைந்த குகைகள், கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் திருவுருவச் சிலை கள் உள்ள தடயங்கள் வரலாற்றுச் சான்றுகள் இன்றளவிலும் காணப்படு கின்றன.

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய தமிழ் இலக்கியத் தொகுப்பு கல்வெட்டுக ளும் சிறிய குடவரை கோயிலில் உள் ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாக மலைக்கு தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாட்டு சுற்று லாப் பயணியர் என நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து பார் வையிட்டுச் செல்கின்றனர். வடமாநி லங்களில் இருந்து சமணர்கள் மாதம் தோறும் குறிப்பிட்ட சில நாள்களில் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

-மதுராந்தகம் குமார்



வியாழன், 9 மார்ச், 2023

 

அறன் வலியுறுத்தல்

 அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் வள்ளுவர் கூறும் மனிதநேய பண்புகளை பார்ப்போம்

மனிதன் மனிதனாக வாழ. மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல்  திருக்குறள் ஆகும். இது. நாடு மொழி இனம், சமயம் கடந்து எக்காலத்திற்கும் பொதுவான நூல் ஆகும்.

பொதுவாக இலக்கியங்களை. அகஇலக்கியம், புற இலக்கியம் என பகுப்பது ஒரு மரபு.

 அறம், பொருள், இன்பம் என்னும். உறுதிப்பொருள் மூன்றை  உணர்த்தும்.

திருக்குறளானது இந்த மூன்றினையும், கூறுவதால்  முப்பால் என்ற பெயரை பெற்றுள்ளது. பொருளும் இன்பமும் அறத்தின் அடிப்படையில் வந்தால் அது போற்றப்படும்.

ஆனால், அறத்தின் வழியில் வராத பொருளும், இன்பமும். பழிக்கப்படும். அதனால்தான். வள்ளுவர். அறத்தை வலியுறுத்திக் கூறுகிறார் மற்ற அதிகாரங்களில்   உள்ள தலைப்புகளை பார்த்தல் அறத்தை தவிர வேறு எதையும்  வலியுறுத்திக் கூறவில்லை.

இந்த அதிகாரத்தை பற்றி சுருக்கமாக சொன்னால்...

 மனத்தால் நேர்மையுடன் இருப்பதே அறமாகும். அப்படி அறமுடன் இருப்பவருக்கு செல்வமும் சிறப்பும் வளரும். அறத்தை மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி.

மனதளவில் மற்றவர்களை  அழிக்கும் குணம், பொருள்கள் அளவற்ற ஆசை, கடும் கோபம் வன்சொல்  இவை நான்கும் இல்லாமல் இருப்பது அறமாகும்.

அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை போலியாக செய்யாமல், தனக்காக செய்ய வேண்டும்.

அடிமையாக இருப்பது அறமாகாது.

இறுதியில் அறமே  இன்பத்தைத் தரும்.

இந்தக் கருத்துகளை தான் வள்ளுவர் அதிகாரம் 4ல் அறன் என்று வலியுறுத்தி நமக்கு கூறுகிறார்.

எங்கெங்கு எப்படி எல்லா அறத்தை  செயல்படுத்த முடியுமோ அங்கெல்லாம் இயன்ற வரை  அறத்தைச் செயல்படுத்துவதே சிறப்பு.

அறத்தைப் போல உயர்வு  வேறு இல்லை. அதே நேரத்தில் செய்ய வேண்டிய  அறத்தை மறுத்தால் உயர்வு இல்லை. அதனால் கேடுதான் விளையும்.

மனதளவில்.குற்றம் குறை இல்லாமல் இருப்பதே அறம். மற்ற செயல்கள் எல்லாம் வெறும் சடங்குகளே.

அறம்  என்பது பல நற்பண்புகளை அகத்தே அதாவது உள்ளத்தில்  அடக்கிய ஒரு சொல்லாக கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்துகளை வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் மட்டும் சொல்லவில்லை. திருக்குறளில் பல்வேறு இடங்களில் சொல்லி இருக்கிறார்.

உதாரணம்.

·         “அகத் தானாம் இன்சொலினதே அறம்” (குறள் - 93)

·         “அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்

          பெண்மை நயவா தவன்” (குறள் - 147)

·         “அறவினை யாதெனிற் கொல்லாமை” (குறள் - 321)

என்னும் இக்குறள்கள் இனியவை கூறலையும், பிறர் மனை விழையாமையையும், கொல்லாமையையும் அறமெனக் கூறுதல் ஆகும்.

அறத்திற்கு அடிப்படை அன்பே. அறத்திற்குச் சிறந்தது அன்பாகும். அன்பின் முதிர்ச்சியில் பிறப்பது அருளாகும். அருளின்றிச் செய்யும் அறவினை பயன்படாது

இதனை;

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்” (குறள் - 249)

என்னும் குறளில் அருள் சிந்தை இல்லாதவன் அறத்தை ஆராய்ந்தால் அது, அறிவுத் தெளிவில்லாதவன் நூலின் மெய்ப் பொருள் தெரிந்தது போலாகும்.என்கிறார்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும்

வாய்மையின் நல்ல பிற” (குறள் -300)

என்னும் குறளில் யாம் உண்மையறிந்து கண்டவற்று எல்லாம் உண்மை பேசுதலைப் போல் நன்மையுடையது வேறு எதுவும் இல்லை. இங்கே வாய்மையை அறம் என்று போற்றுகிறார்.

இறுதியாக அறத்தின் வழி எது என்றால் அது மனத்தின் தூய்மையே என்கிறார்

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள்- 322)

என்னும் குறளில் இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பல உயிர்களையும் காத்தல் அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களில் எல்லாம் முதன்மையானது. எனவே உயிரோம்பலைச் சிறந்த அறமாக வள்ளுவர் கூறுகிறார்.

எச்செயல் செய்தாலும், எம்மொழி பேசினாலும் அடிப்படையான மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தூய மனத்தின்வழி வரும் மொழியும் செயலும் தூயனவாக இருக்கும்.

வினைத்தூய்மை, மனத் தூய்மைகளைக் காப்பதற்காகத்தான்.

 மனத்தூய்மையைப் பெரிதும் வற்புறுத்துகின்றார் வள்ளுவர். ஆகவே, மனத்தை எவ்வகை மாசும் படியாமல் காக்க வேண்டும். இல்லறமாயினும், துறவறமாயினும் திருவள்ளுவர் மனத்தூய்மையையே வற்புறுத்துகின்றார். இதனை;

·         “மனத்துக்கண் மாசிலனாதல்” (குறள் -36)

·         “உள்ளத்தால் பொய்யா தொழுகின்” (குறள் -294)

·         “தன்னெஞ்சறிவது பொய்யற்க” (குறள் -293)

·         “மனத்தொடு வாய்மை மொழியின்” (குறள் - 295)

·         “மனத்தது மாசாக மாண்டார் நீராடி” (குறள் -278)

என்னும் பல குறளால் வள்ளுவர் மனமாசு கூடாது என்பதை வலியுறுத்தல் மூலம் சொல்கிறார்.  

எனவே, அறன் வலியுறுத்தல் என்பது மனம் தூய்மையாக இருப்பதே என்பதை பல்வேறு வகைகளில் வள்ளுவர் திருக்குறளில் நமக்கு வலியுறுத்தி சொல்கிறார்.

 

சூப்பர் எல்–நினோ (El Niño): 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர்

  சூப்பர் எல்–நினோ (El Ni ñ o) 2026 உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய காலநிலை பேரிடர் உலக காலநிலை அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும...