வெள்ளி, 24 ஜூலை, 2026

அரசியல் மறுமலர்ச்சி வேண்டும்!

ஒரு கட்சியின் நம்பகத்தன்மை சிதையும் போது, அது எதிர்காலத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் அது கடந்துவந்த காலத்தின் முரண்பாடுகளுடன் வைத்தே எடையும் போடப்படும்.

ஓர் அரசியல் இயக்கம் விமர்சனங்களைக் கடந்து வாழலாம்; தேர்தல் தோல்விகளைக் கூடத் தாண்டி வரலாம். ஆனால் தன் பேச்சுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவேளையால் உருவாகும் நம்பிக்கையிழப்பை அது ஒருபோதும் கடந்துவர முடியாது.

ஜனநாயகத்தின் முதன்மைத் தேவை என்னவெனில், அரசியல் கட்சிகள் தங்களின் நிறுவன இலட்சியங்களுடன் தங்களின் அன்றாட நடவடிக்கைகளைத்

தொடர்ந்து செய்துகொள்வதே. நமது செயல்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும். அதற்கு சமூக ஊடகங்களில் வரும் கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை நோக்குதல் வேண்டும். அதற்கேற்ப தம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

ஓர் அரசியல் கட்சியின் உண்மையான சொத்து அதன் சின்னமோ, தேர்தல் நிதியோ, அல்லது தலைவரின் தனிப்பட்ட கவர்ச்சியோ அன்று.

அதன் மிகச் சிறந்த சொத்து — நம்பகத்தன்மை மட்டுமே.

அரசியல் வெற்றி ஒரு தேர்தலில் வெற்றியைத் தரலாம்;

ஆனால் அரசியல் அறமே காலத்தைக் கடந்து ஒரு இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். சில நேரங்களில் முன்பு செய்த நல்வினையும் தற்போது தீமையாய் நோக்கப்படும்.

காலம் மாறும் போது முன்பு செய்த நல்ல காரியங்களும் சிலருக்குத் தீமையாகத் தோன்றலாம். சூழல் மாற்றம், மனிதர்களின் எண்ணம் மற்றும் சுயநலம் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

சூழல் மாற்றம்:

அன்று தேவைப்பட்ட உதவி, இன்று தற்காலச் சூழ்நிலைக்கு ஏற்பத் தேவையில்லாமல் போகலாம்.

எண்ணங்கள்: மக்களின் நிகழ் காலம் சார்ந்த அறிவும், கருத்துக்களும்காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.

சுயநலம்:

மற்றவர்களின் சுயநலத்துக்காக முந்தைய நன்மைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

சுயபரிசோதனை செய்யப்படாத அரசியல் தளம் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

000

ஊழல் ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி சிதைக்கிறது?

ஒரு அரசியல் இயக்கம் விமர்சனங்களைக் கடந்து வாழலாம்; தேர்தல் தோல்விகளையும் தாண்டி வரலாம். ஆனால் நம்பகத்தன்மை சிதைந்துவிட்டால்,அது மீண்டும் எழுவது மிகக் கடினம்.

ஊழல் ஜனநாயகத்தை எப்படி பாதிக்கிறது?

#நம்பிக்கை சிதைவு :-

மக்கள் அரசியலை நம்பாமல் போனால், ஜனநாயகத்தின் அடித்தளம் சீர்குலைக்கிறது. நம்பிக்கை இல்லாத ஜனநாயகம், பெயருக்கு மட்டும் இருக்கும் ஜனநாயகமாக மாறிவிடும்.

#கொள்கை முடிவுகள் பொதுநலத்திலிருந்து விலகுதல்:-

ஊழல் உள்ள இடங்களில் கொள்கைகள் பொதுநலத்திற்காக அல்ல, சிலரின் நலனுக்காக உருவாகும்.

#திறமையான நிர்வாகம் பாதிப்பு:-

ஊழல் நிர்வாகத்தை மெதுவாக்கும், திறமையை குறைக்கும், மக்கள் சேவைகளை தாமதப்படுத்தும்.

#பொருளாதார வளர்ச்சி தடுமாற்றம்:-

ஊழல் அதிகம் உள்ள நாடுகளில் முதலீடு குறையும்;உற்பத்தி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி — அனைத்தும் பாதிக்கப்படும்.

#அரசியல் ஊழலின் அடிப்படை காரணங்கள்:-

அதிகாரம் சிலரின் கைகளில் மட்டுமே குவிந்தால், கண்காணிப்பு குறையும்; ஊழல் அதிகரிக்கும்.

தேர்தல் நிதி, கட்சி நிதி, தனிநபர் நிதி — இவை தெளிவாக இல்லாதபோது ஊழல் வளர்க்கும் இடம் உருவாகிறது.

000

சட்டம் செயல்படாத இடங்களில் ஊழல் வேரூன்றுவது எளிது.

அரசின் முடிவுகள், ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடுகள் வெளிப்படையாக இல்லாதபோது, சந்தேகமும், தவறுகளும் அதிகரிக்கும்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும்’ .. இளங்கோ அடிகள் (சிலப்பதிராரம்)

000

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும். (குறள் 388)

முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அரசியல் மறுமலர்ச்சி வேண்டும்!

ஒரு கட்சியின் நம்பகத்தன்மை சிதையும் போது , அது எதிர்காலத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் அது கடந்துவந்த காலத்தின் முரண்பாடுகளுடன் வைத்...