ருக்மா சிறு வயது திருமணம் - இந்தியாவில் தடை குறித்து..
ருக்மாவின் சிறுவயது திருமணமும் தடையும்..
ருக்மா பிறந்த நாள் 22 நவம்பர் 1864.
1864ல் மகராஷ்டிராவின் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ருக்மா. அப்பா ஜனார்த்தனன் பாண்டுரங்கன் . ஆசாரி குடும்பத்தை சேர்ந்தவர்..அம்மா ஜெயந்திபாய் ..ஒரளவு வசதியான குடும்பம்.அப்பா சிறு வயதில் இறந்து போக, அம்மா ஜெயந்தி குடும்ப சொத்துகளை மகள் ருக்மா பேரில் எழுதி வைத்துவிட்டு மனைவியை இழந்த சக்ராம் அர்ஜுன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்கிறார்.
சிறுவயது திருமணம்
11 வயதில் அந்த கால முறைபடி தன்னை விட 9 வயது மூத்த தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மா திருமணம் செய்து வைக்க படுகிறார். ஆனாலும் கணவன் வீட்டுக்கு போகாமல் ஸ்டெப் பாதர் அர்ஜுன் ,தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அருகில் இருந்த கிறிஸ்துவ மிஷன் லைப்ரரியில் வாசிப்பு .அம்மாவும் பெண்ணும் ஆரிய சமாஜ கூட்டங்களுக்கும் போகிறவர்கள்.
ருக்மாவின் மாமியார் இறந்து போக, தாதாஜி ருக்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார்..ருக்மா தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கிறார்.அவர் இரண்டாவது தந்தை அர்ஜுன், ருக்மாவின் கருத்தை ஆதரிக்கிறார்.
தாதாஜி ருக்மாவின் பேரில் இருக்கும் சொத்துக்காக, அர்ஜுன் ருக்மாவை தன்னுடன் வாழ அனுப்பவில்லை என்று வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார்..
ருக்மா தான் தாதாஜியுடன் வாழ விரும்பவில்லை என்று கோர்ட் ஏறுகிறார்.
1885 ல் dadaji vs rukmabai வழக்கு சட்ட அறிஞர்கள் Payne,Gilbert, sajam , தலைமையில் வழக்காகிறது..கோர்ட் ஹிந்துதிருமண முறைக்கும், ஆங்கில சட்ட முறைக்கும் இடையில் அல்லாடுகிறது..அறியா பருவத்தில் ருக்மாவின் நடந்துள்ளது என்று நீதிபதி Robert hill pinley தீர்ப்பு சொல்ல, வழக்கு பரபரப்படைகிறது..
புனித தன்மை
ஹிந்து அமைப்புகள் ஆங்கில சட்டம் ஹிந்துக்களின் புனித தன்மைக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டினர். பாலகங்காதர திலகர் தன் பத்திரிக்கையில் நீதிபதியை கடுமையா விமர்சிக்கிறார். இங்கிலாந்தில் ராணிக்கு நீதிபதி குறித்து கண்டனம் அனுப்பப்படுகிறது.
.
வழக்கு
இந்திய வரலாற்றில் முதன் முதலாக ருக்மா வழக்கு அப்பிலுக்கு போகிறது. பெண்ணுரிமை அமைப்புகள் ருக்மாவுக்கு ஆதரவாக களம் இறங்கின..
ருக்மா கணவருடன் வாழ வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை என்று தீர்ப்பளிக்க, தான் இன்னும் அதிக பட்ச தண்டனை கூட ஏற்க தயார். ஆனால் கணவருடன் வாழ மாட்டேன் என்று கோர்டில் ரிட்டர்ன் சப்மிட் செய்கிறார்.
வழக்கு மேலும் பரபரப்பாகிறது. ருக்மாவுக்கு ஆதரவா Eva macmulan ,Walter macmulan , shivajirao , behramji malabari போன்றவர்கள் போராட தத்துவவாதி மேக்ஸ் முல்லர் எலிஸபத் ராணிக்கு நீண்ட வேண்டுகோள் ஒன்றை அனுப்புகிறார்.
ஹிந்து திருமண அமைப்பு பெண்களுக்கு எதிராக உள்ளது.ருக்மா நல்ல புத்திசாலி.அவர் படிக்க வைக்கப்பட வேண்டும்.திருமண வயது குறித்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று எழுதுகிறார்.
நாளிதழில்
ருக்மா டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் Hindu lady என்ற புனை பெயரில் தொடர்ந்து பெண்ணுரிமைக்காக எழுதினார்.
1888 ல் ருக்மாவிற்கு எதிரான வழக்கு டிஸால்வ் செய்ய படுகிறது. தாதாஜிக்கு நஷ்ட ஈடு கொடுத்து, ருக்மா திருமணம் செல்லாது என்று அறிவிக்கப் படுகிறது.அன்றிலிருந்து ருக்மா வெள்ளை புடவை உடுத்த நிர்பந்தப்படுத்த பட்டார்.
மருத்துவராக
ருக்மா தான் மருத்துவராக விருப்பம் தெரிவித்தார்...பல பெண்ணுரிமை அமைப்புகள், கிறிஸ்துவ மிஷனரிகள் பெக்ரம் மலபாரி போன்ற தனிநபர்கள் நிதி சேர்த்து தர 1889 லண்டனில் டாக்டராக படிக்க போகிறர்.
இங்கிலாந்த் ராணி முயற்சியால் 1891 ல் age of consent act கொண்டுவரப் படுகிறது.பெண் குழந்தைகளின் பால்ய விவாகம் தடை செய்ய படுகிறது .
ஆனந்தி பென் ஜோஷிக்கு முன்னதாக படிப்பை முடுத்து விட்டு டாக்டராக பணிசெய்ய ராஜ்கோட்டில் சேர்கிறார். 1930 வரை மும்பையில் டாக்டராக சேவை செய்தார் ருக்மா.. Purdah - the needs for its abolition என்ற சேவை மையத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்..
மதம் குறுக்கீடு
ஹிந்து மதம், இங்கிலாந்து அரசு ,ஆணாதிக்க சமுகம்.உறவுகள் என்று நாலா புறமும் தொடர்ந்து எதிர்த்த போதும் தன் உரிமைக்காக விடாது போராடிய ருக்மா பாய் ராவ்ட் அவர்களின் பிறந்த தினம் இன்று..
பால்ய விவாகம் என்ற பேராபத்தில் இருந்து நம்மை எல்லாம் காக்க போராடிய மாபெரும் புரட்சியாளர்க்கு நன்றியோடு இருப்போம்..
ஆங்கில மொழியாக்கம்
Rukma's Birth Anniversary
Rukma was born in 1864 into a Marathi family in Maharashtra. Her father, Janardhan Pandurang, belonged to the Asari community, and her mother, Jayantibai, came from a relatively affluent family. After her father's early death, her mother Jayanti transferred the family property to Rukma's name and married Dr. Chakram Arjun, a widower.
At the age of 11, following the customs of the time, Rukma was married to Dadaji Bhikaji, who was nine years older than her. However, she continued to live with her stepfather Arjun and mother, rather than moving to her husband's house.
Rukma spent her time reading at the nearby Christian Mission Library and attending Arya Samaj meetings with her mother. After her mother-in-law's death, Dadaji invited Rukma to live with him, but she refused, supported by her stepfather Arjun.
Dadaji, seeking the property in Rukma's name, sent a legal notice accusing Arjun of preventing Rukma from living with him. Rukma took the matter to court, stating her unwillingness to live with Dadaji.
In 1885, the case of Dadaji vs. Rukmabai was heard under the leadership of lawyers Payne, Gilbert, and Sajam. The court struggled between Hindu marriage customs and English law. Judge Robert Hill Pinley ruled that Rukma's marriage occurred during her childhood, causing a stir.
Hindu organizations accused English law of opposing Hindu sanctity, and Bal Gangadhar Tilak harshly criticized the judge in his newspaper.
The Queen of England received condemnations regarding the judge.
For the first time in Indian history, Rukma's case went to appeal, with women's rights organizations supporting her. The court ruled that Rukma must live with her husband or face three months in prison. Rukma submitted a return to the court, stating she would rather accept the maximum punishment than live with her husband.
The case gained further attention, with supporters like Eva McMullan, Walter McMullan, Shivajirao, and Behramji Malabari fighting for Rukma. Philosopher Max Müller sent a lengthy appeal to Queen Elizabeth, arguing that Hindu marriage customs were against women's rights and that Rukma, a bright individual, should be educated. He called for legislation on the marriage age. Rukma wrote for women's rights under the pseudonym "Hindu Lady" in the Times of India.
In 1888, the case against Rukma was dissolved. Dadaji received compensation, and Rukma's marriage was annulled. From then on, Rukma was pressured to wear a white saree.
Rukma expressed her desire to become a doctor. With financial support from various women's rights organizations, Christian missionaries, and individuals like Behram Malabari, she went to London to study medicine in 1889.
Due to the efforts of Queen Victoria, the Age of Consent Act was introduced in 1891, banning child marriages for girls.
Rukma completed her studies before Anandi Ben Joshi and began working as a doctor in Rajkot. She served as a doctor in Mumbai until 1930 and continued to run the service center "Purdah - The Need for Its Abolition."
Despite opposition from Hinduism, the British government, patriarchal society, and relatives, Rukmabai Raut fought tirelessly for her rights. Today, we celebrate the birth anniversary of this great revolutionary who fought to protect us from the menace of child marriage.
Let us remember and honor the great revolutionary who fought to protect us from the menace of child marriage.
கருத்துகள்
கருத்துரையிடுக