வியாழன், 23 மே, 2024

LIST OF FREEDOM FIGHTERS IN TAMILNADU (MADRAS STATE)

 

LIST OF FREEDOM FIGHTERS IN TAMILNADU (MADRAS STATE)

  1. அண்ணா சாமி ஐயர்
  2. அசலாம்பிகை அம்மையார்
  3. அன்னதான சிவம்
  4. அன்பில் ராஜகோபால ஐயங்கார்
  5. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (சட்டம்)
  6. அனுமந்தன்பட்டி கிருஷ்ணசாமி ஐயங்கார்
  7. அம்மாபேட்டை வேங்கடராம ஐயர்
  8. அகிலாண்டம்மாள் (வைதியநாத ஐயர் மனைவி)
  9. அ.மாதவ ஐயா (சட்டம்)
  10. அலமேலு மங்கை
  11. ஆந்திர கேசரி பிரகாசம்
  12. ஆக்கூர் அனந்தா சாரியார்
  13. ஆரணி சுப்பரமணிய சாஸ்திரி
  14. ஆர். ராமசுப்ப ஐயர்
  15. ஆர்.வி.சுவாமிநாதன்
  16. ஆ.நா.சிவராமன்
  17. ஆர்.வெங்கடராமன்
  18. இரட்டைமலை சீனிவாசன்
  19. இராசம்மா பூபாலன்
  20. இராமு தேவர்
  21. இலட்சுமி சாகல் தந்தை சுவாமிநாதன்
  22. இ.எல்.ஐயர் (தொழிற் சங்கம்)
  23. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
  24. எம்.அனந்தசயன ஐயங்கார்
  25. எம்.சங்கையா
  26. எம்.பக்தவத்சலம்
  27. எம்.ஜே.ஜமால் மொய்தீன்
  28. எம்.பி.டி. ஆச்சார்யா
  29. எம். சேஷாசாரியார்
  30. என்.சங்கரய்யா
  31. என்.ஹாலாஸ்யம் ஐயர்
  32. என்.எஸ். வரதாசாரியார்
  33. என்.சோமசசுந்திர ஐயர்
  34. என்.குருசாமி (தொழிற்  சங்கம்)
  35. என்.ஜெயராம ஐயர் (தொழிற் சங்கம்)
  36. எஸ். அம்புஜம்மாள்
  37. எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
  38. எஸ்.சுப்பரமணிய ஐயர்
  39. எஸ். ராமகிருஷ்ண ஐயர்
  40. எஸ். வரதாசாரி வக்கீல்
  41. எஸ்.சீனிவாச ஐயங்கார்
  42. எஸ். ராஜம் ஐயங்கார்
  43. எஸ்.ஏ.ஐயர்
  44. எஸ்.ஆர். வெங்கடராமன்
  45. எம்.சிவசாமி
  46. எம்.ஆர்.வெங்கடராமன் (கம்யூனிஸ்ட்)
  47. எம்.ஆர்.கமலவேணி (பாடகர்)
  48. எம்.ஆர்.எஸ்.மணி
  49. எஸ்.என். சோயியாஜுலு
  50. எல்.என்.கோபால்சாமி ஐயர்
  51. எஸ்.பி.வி.அழகர் சாமி கொடைக்கானல்
  52. எஸ்.கமலம்
  53. ஏ.ரங்கசாமி ஐயங்கார்
  54. ஏ.கே.ஜி அகமது தம்பி மரைக்காயர்
  55. ஏ.பி.சி. வீரபாகு
  56. ஏ.வி.செல்லையா
  57. ஏ.வி. கங்காதர சாஸ்திரி
  58. ஏ.பாலசுப்பரமணியன் (கம்யூனிஸ்ட்)
  59. ஏ.எஸ்.பி.ஐயர் (சட்டம்)
  60. ஏ.என்.சிவராமன்
  61. ஐ. மாயாண்டி பாரத
  62. ஓமந்தூர் ராமமசாமி ரெட்டியார்
  63. கட்டபொம்மன்
  64. கடலூர் அஞ்சலையம்மாள்
  65. கண்ணம்மையார் ( பெரியார் நாகம்மையாரின் தங்கை )*
  66. கம்பன் அடிப்பொடி சா.கனேசன்
  67. கருமுத்து தியாகராசர்
  68. கரீம் கனி
  69. க.சந்தானம்
  70. க.மு.ஷெரிப் கவிஞர்
  71. கல்கி தி. சதாசிவம்
  72. கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி
  73. கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கர ஐயர் மனைவி லஷ்மி
  74. கல்லிடைக்குறிச்சி யக்னேஸ்வர சர்மா
  75. கல்லிடைக்குறிச்சி ஜி.மஹாதேவ ஐயர்
  76. கதர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்
  77. கஸ்தூரி ஐயங்கார்
  78. கருப்பு சேர்வை
  79. கரூர் எஸ்.பாப்பா அம்மாள்
  80. காந்தி ஆசிரம கிருஷ்ணன்
  81. கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்
  82. கிருஷ்ணசாமி ஐயர் வக்கீல்
  83. காளிஅம்மாள் (தலித்)
  84. காஞ்சிபுரம் கல்யாணராம ஐயர்
  85. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா
  86. காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சினுவாசன்
  87. காஞ்சிபுரம் டாக்டர் பி..எ.எஸ்.  ரகுராமன்
  88. குமாரண்டி பாளையம் ஏ.நாச்சி்ப்பன்
  89. குருசாமி ஐயர்
  90. குருமூர்த்தி (தொழிற் சங்கம்)
  91. கு.காமராசர
  92. கு.ராஜவேலு
  93. கும்பகோணம் டாக்டர் எம்.கே. சாம்பசிவ ஐயர்
  94. கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் கே.பி.சுந்தராம்பாள். கணவர் கிட்டப்பா
  95. கே. சுப்ரமணியம்
  96. கே.ஜகதீச ஐயர் (தொழிற் சங்கம்)
  97. கே.எஸ். ஜானகி ராமன் (தொழிற் சங்கம்)
  98. கே.எஸ்.மார்கம் ஐயர் (தொழிற் சங்கம்)
  99. கே.கே.காளியம்மாள்
  100. கே.பி.ஜானகியம்மாள்
  101. கே.ஆர். ராம ஐயர்
  102. கே.ஆர். கல்யாணராம ஐயர்
  103. கே.ஆர். வாசுதேவன்
  104. கே.ஜயராம ஐயர் வக்கீல்
  105. கே.ராஜா ஐயர் வக்கீல்
  106. கே.நாகேஸ்வர ராவ் பந்துலு
  107. கோவிந்தம்மாள்
  108. கோ. வெங்கடாசலபதி
  109. கோடை எஸ்.பி.வி. அழகர்சாமி
  110. கோத்தகிரி ஜி. மஹாதேவ ஐயர்
  111. கோவை என்.ஜி. ராமசாமி
  112. கோவை கே.வி். ராமசாமி
  113. கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
  114. கோவை அய்யா முத்து
  115. கோவை சி.பி.சுப்பையா
  116. பிசெட்டிபாளையம் வி. இராம ஐயங்கார்
  117. கோபிசெட்டிபாளையம் ஸ்ரீகண்ட ஐயர்
  118. கோபிசெட்டிபாளையம் லஷ்மண ஐயர்
  119. கோமதி சங்கர தீட்சிதர்
  120. சமையல் ரங்கசாமி ஐயங்கார்
  121. சங்கரலிங்கம் ஜெகன்நாதன்
  122. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
  123. சரஸ்வதி பாண்டுரங்கன்
  124. சரஸ்வதி ராஜாமணி (நேதாஜி படையின் உளவாளி )
  125. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
  126. ச.அ. சாமிநாத ஐயர்
  127. சாவடி அருணாசலம் பிள்ளை
  128. சின்ன மருது மகன் துரைச்சாமி
  129. சிதம்பரம் ஐயர்
  130. சி.சுப்பரமணியம்
  131. சி்.பி் ராமசாமி ஐயர்
  132. சி.எஸ். ரங்க ஐயர்
  133. சி.சு.செல்லப்பா
  134. சின்ன சேலம் கே.வேங்கடேச ஐயர்
  135. சீர்காழி சுப்பராயன்
  136. சுந்தர வரதன்
  137. சுந்தரம் சாஸ்திரி
  138. சுத்தானந்த பாரதி
  139. சுப்பரணிய சிவா
  140. சு.நாராஜ மணியகாரர்
  141. சுரேந்திரநாத் ஆர்யா
  142. செங்காளியப்பன் ( தொழிலாளர் தலைவர் )
  143. சென்பகராமன் பிள்ளை
  144. செல்லம்மா பாரதி
  145. சென்னை சங்கு எஸ். கனேசன்
  146. சென்னை ஆதம்பாக்கம் என். ராமகிருஷ்ண ஐயர்
  147. சேலம் ஏ.சுப்பிரணியம்
  148. சேலம் சி.வஜயராகாவாச்சாரியார்
  149. சேலம் கே.வி.சுப்பாராவ்
  150. சேலம் வாஞ்சிநாத ஐயர்
  151. டாக்டர் பெ.வரதராஜுலு நாயுடு
  152. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
  153. டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன்
  154. டாக்டர் ஆர்.காளமேக ஐயர்
  155. டி.சதாசிவ ஐயர் (சட்டம்)
  156. டி.செங்கல்வராயன்
  157. டி.என். தீரத்தகிரி.
  158. டி.கே.மாதவன்
  159. டி.ஆர்.பத்பநாப ஐயர்
  160. டி.வி.வெங்கடராம ஐயர்
  161. டி.வி.கனேசன்
  162. டி.வி.ராமசுப்ப ஐயர் (சட்டம்)
  163. டி.ஆ ர். வெங்கடராம ஐயர்
  164. டி.ரங்காசாரியார் வக்கீல்
  165. டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி (சட்டம்)
  166. டி.ராமசந்திர ஐயர் வக்கீல்
  167. டி.எஸ்.ராமானுஜம் (தொழிற் சங்கம்)
  168. டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் (சட்டம்)
  169. டி.எல்.சசிவர்ண தேவர்
  170. தஞ்சை ஏ.ஒய்.எஸ். பரிசுத்த நாடார்
  171. தஞ்சை வி.வி.சடகோபாசாரியார்
  172. தஞ்சை வி. பூவராக ஐயங்கார்
  173. தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
  174. தர்மபுரி குமாரசாமி
  175. தர்மபுரி தீர்த்தகிரி முதலியார்
  176. தலையயூர் மிராசுதார் ராயணசாமி ஐயர்
  177. தாணு ஐயர்
  178. தியாகி வைரப்பன் வேதாரண்யம்
  179. தியாகி  விஸ்வநாத தாஸ்
  180. தியாகி தங்கவேல் நாடார் ஆறுமுகனேரி
  181. தியாகி பி.எஸ். சின்னதுரை
  182. தியாகி ஆர்.சிதம்பர பாரதி
  183. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
  184. திண்டுக்கல் டி. அமிர்தலிங்க ஐயர்
  185. திண்டுக்கல் மஹாதேவ ஐயர்
  186. திண்டுக்கல் கே.கனேசன்
  187. திண்டுக்கல் மணிபாரதி
  188. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
  189. திருச்சி டி.எஸ் அருணாசலம்
  190. திருச்சி டாக்டர் டி.வி.சாமிநாத சாஸ்திரி
  191. திருச்சி டாக்டர் ராமசந்திர ஐயர்
  192. திருச்சி பி.ஆர். ரத்னவேல் தேவர்
  193. திருச்சி.வை. சாமிநாதன்
  194. திருப்பூர் குமரன்
  195. திருப்பூர் பி.எஸ். சுந்தரம்
  196. திருப்பூர் எஸ்..என். சுந்தராம்பாள்
  197. தில்லையாடி வள்ளியம்மை
  198. திருவள்ளூர் டி.என்.ஐயர்
  199. திருவல்லிக்கேணி கிருஷ்ணசாமி
  200. திருநெல்வேலி ஆயக்குடி ச.வெ. இராமசந்திர ஐயர்
  201. திருச்செங்கோடு தியாகராய ஐயர்
  202. திருசெந்தூர் திரிசுதந்திரர் கே.சுப்பையர்
  203. திருசெந்தூர் மு. கிருஷ்ண சர்மா
  204. திருவாரூர் டாக்டர் வி.வி.நாகநாத ஐயர்
  205. திருச்சூர் ஏ.சுப்பரமணிய ஐயர் (எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர்)
  206. தினமணி என்.ராமரத்தினம்
  207. திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து
  208. தீரர் சத்தியமூர்த்தி
  209. தீரன் சின்னமலை
  210. து.நவநீத கிருஷ்ணன்
  211. துரைசாமி ஐயர் .ஆர்
  212. தூக்குமேடை ராஜகோபால் நாடார்
  213. தூத்துக்குடி பால்பாண்டியன்
  214. தூத்துக்குடி வேங்கட கிருஷ்ணன்
  215. தென்னாற்காடு நாராயண ஐயர்
  216. தென்னோடி விஸ்வநாதன்
  217. தொண்டர் காப்டன் சுப்பரமணிய ஐயர்
  218. தேசியகீதம் சுப்பையர்
  219. தேசிய கல்லூரி முதல்வர் வி.சாரநாத ஐயங்கார்
  220. தேனி என்.ஆர். தியாகராஜன்
  221. தேவகோட்டை என்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்
  222. தேவகோட்டை ரங்கசாமி ஐயங்கார் ( ஹரிஜன ரங்கண்ணா )
  223. தோழர் கே.டி. தங்கமணி
  224. தோழர் பாலதண்டாயுதம்
  225. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
  226. நாமக்கல் ஏ. ரங்காசாரி
  227. நாகம்மையார்*
  228. நீலாவதி இராம.சுப்பரமணியம்*
  229. நீலகண்ட பிரம்மசாரி
  230. நீலமேகம் பிள்ளை
  231. பத்மாசினியம்மாள்
  232. பங்கஜத்தம்மாள்
  233. பர்வதவர்தினி
  234. பத்மாவதி ஆஷா
  235. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
  236. ப.ஜீவானந்தம்
  237. பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி
  238. பழனி கே.ஆர். செல்லம் ஐயர்
  239. பதிப்பாளர் ஜி.ஏ.நடேசன்
  240. பழனி பி.எஸ்.கே. லக்ஷ்மிபதி ராஜு
  241. பழனி சே.அ. ஷேச ஐயர்
  242. பாஷயம் என்கிற ஆர்யா
  243. பாஷ்யம் ஐயங்கார் வக்கீல்
  244. பால் பாண்டியன்
  245. பி.எஸ். சிவசாமி ஐயர்
  246. பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (ஹரிஜன ஐயங்கார்)
  247. பி.எஸ். சின்னதுரை
  248. பி.எஸ்.குமாரசாமி ராஜா
  249. பி.கக்கன்
  250. பி.சீனிவாச ராவ் (கம்யூனிஸ்ட்)
  251. பி.என். சங்கர நாராயண ஐயர்
  252. பி.வேலுச்சாமி
  253. பி.கே. நாராயண ஐயங்கார்
  254. பி.கே.ராமாசாரி
  255. பி.கே.மூக்கையா தேவர்
  256. பி.ரே.கே.சர்மா (தொழிற் சங்கம்)
  257. புலி மீனாட்சி சுந்தரம் (திருமங்கலம்)
  258. புதுச்சேரி வ. சுப்பையா
  259. பூமேடை ராமையா
  260. பூலித்தேவன்
  261. பெரிய காலாடி
  262. பெரியகுளம் இராம சதாசிவம்
  263. பெரம்பலூர் ஆசிரியர் நரசிங்க ஐயங்கார்
  264. பெரியார்
  265. பொட்டி ஸ்ரீராமுலு
  266. மட்டப்பாறை வெங்கடராம ஐயர்
  267. மதுரை அ.வைத்தியநாதய்யர்
  268. மதுரை என்.எம்.ஆர்.சுப்பராமன்
  269. மதுரை ஆர். சுந்தர ராஜ ஐயங்கார்
  270. மதுரை கே.ஆர். சினுவாச ஐயங்கார்
  271. மதுரை ஏ.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
  272. மதுரை திரு கிருஷ்ண குந்து
  273. மதுரை தியாகராஜ சிவம்
  274. மதுரை கே.என். கிருஷ்ணன்.
  275. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
  276. மதுரை பழனிகுமாரு பிள்ளை
  277. மதுரை ஜாரஜ் ஜோசப்
  278. மதுரை எஸ்.வி.கே.தாஸ்
  279. மதுரை கே.எஸ்.பரமன் ( சுப்பு கோனார் மகன்)
  280. மதுரை எம்.என்.ஆதிநாராயணன்
  281. மதுரை ஸ்ரீநிவாசவரத ஐயங்கார்- ( மனைவி) பத்மாசினியம்மாள்
  282. ம.ப.பெரியசாமித்தூரன்
  283. மஞ்சுபாசினி
  284. மண்டையம் சீனிவாசச்சாரியார்
  285. மகாகவி பாரதியார்
  286. மார்ஷல் ஏ.நேசமணி
  287. மணலூர் மணியம்மா
  288. மயிலப்பன் சேர்வைகாரர்
  289. மருதநாயகம்
  290. மருது பாண்டியர்
  291. ம.சிங்காரவேலர்
  292. ம.பொ.சிவஞானம் கிராமணி
  293. மன்னார்குடி டாக்டர் பி.வி.முத்துகிருஷ்ண ஐயர்
  294. மாடசாமி பிள்ளை
  295. மாவீரன் அழகு முத்துகோன்
  296. மானாமதுரை என். இராமசாமி ஐயர்
  297. மாயனூர் கே.ஜி சிவசாமி ஐயர்
  298. மாயனூர் சாம்பசிவ ஐயர்
  299. மீனாம்பாள்
  300. மு.சுப்பையா பிள்ளை
  301. மு.பழனியாண்டி சேர்வை
  302. முனகால பட்டாபிராமையா (சோழவந்தான்)
  303. முத்துரங்க முதலியார்
  304. மு.வீரராகவ ஆச்சாரியார்
  305. முத்துலஷ்மி ரெட்டி
  306. முத்து விநாயகம்
  307. முஹம்மது இஸ்மாயில்
  308. மூவலூர் இராமாமிர்தம்
  309. மேயர் செங்கல்வராயன்
  310. மோகன் குமார மங்கலம்
  311. ராமசந்திர நாயக்கர்
  312. ராஜாஜி
  313. ரா.கிருஷ்ணசாமி நாயுடு
  314. லால்குடி டி.எஸ் அனந்த நாராயண ஐயர்
  315. லீலாவதி என்கிற அம்மாபொண்ணு
  316. வட ஆற்காடு சுப்பரமணிய சாஸ்திரியார்
  317. வக்கீல் பாஷ்யம் ஐயங்கார்
  318. வத்தலகுண்டு  பி.எஸ்.சங்கரன்
  319. வடஆற்காடு ஏ.தேவராஜ ஐயங்கார்
  320. வடிவு
  321. வ.ராமசாமி ஐயங்கார் (வா.ரா)
  322. வ.வு.சிதம்பரனார் ( வ.வு.சி )
  323. வ.வே. சுப்பரமணியம் ( வா.வே.சு )
  324. வாலாஜா சுந்திர வரதன்
  325. வாண்டாயத் தேவன்
  326. விருப்பாச்சி கோபால நாயகர்
  327. வி.கிருஷ்ணசாமி ஐயர்
  328. வி.கல்யானசுந்தரனார்  (திரு.வி.க.)
  329. வி.பாஷ்யம் ஐயங்கார்
  330. வி.அனந்தாசாரியார்
  331. வி.வி.சினுவாச ஐயங்கார் வக்கீல்
  332. வி.வி.கிரி
  333. வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி
  334. வீரன் சுந்தரலிங்கம்
  335. வீரன் வாஞ்சிநாதன்
  336. வெ.துரையனார்
  337. வெ.அ. சுந்தரம்
  338. வெ.சாமிநாத சர்மா
  339. வேலுநாச்சியார் (கணவர் முத்து வடுகநாதர்)
  340. வேலூர் என்.சோமசுந்திரம் ஐயர்
  341. வேலூர் சோளிங்கர் தேவராஜ ஐயங்கார்
  342. வை.மு. கோதைநாயகி
  343. வை.சங்கரன்
  344. ஜானாம்பாள் (பாஷ்யம் ஐயங்கார் மகள்)
  345. ஜானகி ஆதி நாகப்பன்
  346. ஜி.சுப்பரமணிய ஐயர்
  347. ஜி.ராமானுஜம் (தொழிற் சங்கம்)
  348. ஜி.கிருஷ்ணமூர்த்தி (தொழிற் சங்கம்)
  349. ஹரிஹர சர்மா
  350. ஹாஜி முகமது மௌலானா சாகிப்
  351. ஸ்டோர் கீபர் சீனுவாச ஐயர்
  352. ஸ்ரீமதி சௌந்திரம் ராமச்சந்திரன்
  353. ஸ்ரீநிவாச ஆழ்வார்
  354. ஸ்ரீரங்கம் ஜே. நடராஜ ஐயர்
  355. சுதந்திர போராட்ட வீரர்கள்
  356. சர்தார் பட்டம் வாங்கிய  #பு..#ஆதிகேசவ_நாயகர்
  357. தன் எழுத்துக்களால் சுதந்திரத்தை ஊட்டிய சு.#அர்த்தநாரீசநாயகவர்மாவையும், சுதேசமித்திரன் துணை ஆசிரியர் #உலகநாதன்நாயகர்.
  358. #அத்திப்பாக்கம் #வெங்கடாசல_நாயகர்.
  359. #தன் ஆன்மீகத்தின் மூலம் விடுதலையை ஊட்டியதை சொல்லும் நாம் அதற்கு காரணமும் அவரையே வெற்றிக்கொண்ட சூளை.#சோமசுந்தர_நாயகர்.
  360. ஆங்கிலேயன் கொடியை இறக்கிவிட்டு நம் தேசிய கொடியை முதலில் ஏற்றிய ஐயா.#முனுசாமி_நாயகர்.
  361. விடுதலைக்கு பாடுபட்டு சிறைசென்ற ஐயா #மாணிக்கவேல்_நாயகரை சொல்லமாட்டோம்.
  362. சுதேசி கப்பலை வாங்க ..#சிதம்பரம்சைவவேளார் முயற்சித்தபோது  பொருள் தந்து ஆலோசனையும் வழங்கியவர் பு..#ஆதிகேசவநாயகர்.
  363. புதுவையின் தந்தை என போற்றப்படுகிற செவாலிய #செல்லாநாயகர்.
  364. மக்கள் எழுத்தாளர் விந்தன் எனும் புனைப்பெயரை கொண்ட கோவிந்தன்_நாயகர்.
  365. ஜமதக்கனி
  366. ஐயா #ராமையா_நாயகர்
  367. ஐயா #குப்புசாமி_நாயகர்
  368. ஐயா #சுப்பிரமணி_நாயகர்
  369. ஐயா #உத்திரகுப்புசாமிநாயகர்
  370. ஐயா #அன்சாரிபெதுரைசாமி_நாயகர்
  371. ஐயா #தூசிஇராஜகோபால்பூபதி_நாயகர்
  372. ஐயா #பாலமுருகேச_நாயகர்
  373. ஐயா #சோமசுந்தரபாரதிநாயகர்
  374. ஐயா #வேகிருஷ்ணசாமிநாயகர்
  375. வீரமங்கை #வீரம்மாள்_நாச்சியார்
  376. வீரமங்கை #குப்பம்மாள்மாணிக்கவேல்நாயகர்
  377. தியாகி சொக்கலிங்கம் நாயகர் (உறவினர்)
  378. பூண்டியாங்குப்பம் இராமச்சந்திர படையாச்சி
  379. செய்யூர்நா. வேணுகோபால் நாயகர் 

 

வியாழன், 2 மே, 2024

பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) Brazil

பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) Brazil 

தமிழ் நாட்டில் மதிய உணவைப் புகுத்திய அதே சிந்தனையில் பிரேசிலில் ஒரு சிந்தனையாளர், கல்வியாளர் பாவுலோ பிரெய்ரி,  மே 2 நினைவு நாள். 

கற்றல் கலை

பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) ஒரு பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆவார். கற்றல் கலையில் நுண்ணாய்வுடைய திறனுடன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது.





பாவ்லோ பிரையர் 1921 ஆம் ஆண்டில் பிரேசிலில் பிறந்தார். உலகத்தின் மிகப்பெரும் பொருளாதார மந்தம் 1930களில் ஏற்பட்ட நேரம் இவரது குடும்பத்தையும் பாதித்தது . அந்த நேரம் கடும் பசியும் பட்டினியும் பாவ்லோ பிரையரை வாட்டியது. இந்த வறுமையின் காரணமாக அவரது படிப்பு நான்கு ஆண்டுகள் தாமதப்பட்டது. அந்த நேரத்தில் அவர் அருகாமையில் இருந்த சேரியில் வசிக்கும் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியபடியே கழித்தார். இந்த சேரியில் இருக்கும் சிறுவர்களுடன் அவர் மிகுந்த நட்புடன் இருந்த காலத்தில் தான் அவர் ஏராளமான விஷயங்களை கற்றார். கற்றல் என்பது வேறு படிப்பு என்பது வேறு என்பதை அங்கு உணர்கிறார் பாவ்லோ பிரையர்.பசிக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி சிந்திக்கும் பாவ்லோ பிரையர் , வகுப்பறையில் ஒருவன் பட்டினியாக அமர்ந்திருந்தால், நிச்சயமாக அவனுக்கு அங்கு நடத்தப்படும் பாடங்கள் புரியாது, அது புரியாததற்கு காரணம் அவன் மந்தமானவனோ, அல்லது படிப்பில் ஆர்வம் குறைவானவனோ என்பது அல்ல என்கிறார் பாவ்லோ பிரையர்.


" அனுபவம், வர்க்கம் மற்றும் அறிவுக்கு இடையிலான உறவை எனக்கு மீண்டும் காட்டியது"


1943ல் பாவ்லோ பிரையர் சட்டம் பயின்றார். 1946ல் அவர் சமூகப் பணி - கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1961ல் கலாச்சாரத்துறையின் இயக்குநரானார். 1964ல் அங்கு நடந்த ராணுவ ஆட்சியின் போது 70 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் சிறிது நாட்கள் பொலிவியாவில் இருந்து விட்டு பிறகு சிலியில் கிரிஸ்துவ ஜனநாயக விவசாய சீர்திருத்த இயக்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தார்.

முதல் நூல்

1967ல் விடுதலையின் ஆயுதமான கல்வி (Education as the Practice of Freedom) என்கிற அவரது முதல் நூல் வெளியானது. 1968ல் அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி (Pedagogy of the Oppressed) நூல் வெளியானது. போர்த்துகீசிய மொழியில் வெளியான இந்த நூல் 1970ல் தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.


பாவ்லோ பிரையர் மே 2, 1997 இல் இதயக் கோளாறு காரணமாக இறந்தார்.


வள்ளுவரின் 

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.


செவிக்கும், வயிற்றுக்கும் உணவு என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை, வள்ளுவரும், மதிய உணவு அளித்த தமிழ் அரசியலாளர்களும், பாவ்லோ பிரையரும் எளிய மக்களின் நண்பர்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2024

வின்செண்ட் வான்கா ((Vincent Van Gogh) டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர்.

மார்ச் 30  வின்செண்ட் வான்கா   (Vincent Van Gogh)

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது  வின்செண்ட் வான்கா (இடச்சு:; (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். 



இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். 

ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். 

பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..



இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. 

தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். 

வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.



வாங்கரி மாத்தாய் (Wangari Maathai), கென்யா, சுற்றுச்சூழல் ஆர்வலர்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்.

ஏப்ரல் 01 வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 

1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 

நோபெல் பரிசு

2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். 

இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   

ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.



முதல் பெண் பேராசிரியர்

இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி இவரே. 

நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.

1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.

ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.




30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.

இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.

1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.

நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.

கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. 

இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. 

சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.




சனி, 30 மார்ச், 2024

ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens)

 ஜெசி ஓவென்ஸ்

ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 

1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. 

அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். 

ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 

ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமையான் (வள்ளுவர்)

திங்கள், 11 டிசம்பர், 2023

நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

 நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன அதில் ஆறுகள், ஏரிகள், வடிகால் பாசனங்கள்  உட்பட்டு நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா? 
பட்டியல்கள் பங்களிப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. விடுபட்டு இருந்தால் சேர்க்கலாமே.

சோழர்கள் பங்களிப்பு 
 
முற்கால, பிற்காலச் சோழ அரசர்கள் என தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, நீர் மேலாண்மையை வெகுலாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும்  என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள். 
இருப்பினும், சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள்.
காவிரி கல்லணை
வீர நாராயண ஏரி,
ஜம்பை – பள்ளிசந்தல் ஏரி  கி .பி. 871இல் விஜயாலய சோழன் ஆட்சி
மதுராந்தகம்  ஏரி,
விண்ணமங்கலம் ஏரி -
முதலாம் பராந்தக சோழன்
சோதியம்பாக்கம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் திருவண்ணாமலை
முதலாம் ராஜேந்திர சோழனின் கடம்பனேரி 
பொன்னேரி - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்,
சோமங்கலம் பெரிய ஏரி- மூன்றாம் குலோத்துங்க சோழன்

சோழர் கால வாய்க்கால்கள்:
அருள்மொழித் தேவ வாய்க்கால்
அறிஞ்சிகை வாய்க்கால்
இராசகேசரி வாய்க்கால்
இராசேந்திர சோழ வாய்க்கால்
இராசதிராச சோழ வாய்க்கால்
உத்தமசீலி வாய்க்கால்
உத்தம சோழ வாய்க்கால்
கங்கைகொண்ட சோழ வாய்க்கால்
கேரளமாதேவி வாய்க்கால்
கோதண்டராம வாய்க்கால்
சீபூதி வாய்க்கால்
சுங்கந்தவித்த வாய்க்கால்
சுந்தரசோழ வாய்க்கால்
செம்பியன் மாதேவி வாய்க்கால்
செனநாத வாய்க்கால்
சோழகுல வாய்க்கால்
சோழ சூளாமணி வாய்க்கால்
நித்தவிணோதன் வாய்க்கால்
பரசக்கரதட்ட வாய்க்கால்
பரமேஸ்வர வாய்க்கால்
மாதேவன் வாய்க்கால்
மாதேவி வாய்க்கால்
முடிகொண்ட சோழ வாய்க்கால்
வானவன் மாதேவி வாய்க்கால்
விமலாதித்த வாய்க்கால்
வீர நாரயண வாய்க்கால்
ஜெயங்கொண்டசோழ வாய்க்கால்
ஸ்ரீ அறிஞ்சிகை வாய்க்கால்,
ஸ்ரீகண்ட வாய்க்கால்
ஸ்ரீகண்டராதித்த வாய்க்கால்,
ஸ்ரீ செம்பியன்மாதேவி வாய்க்கால்

சோழர் கால வடிகால்கள் :
அமநி நாரயண வடி
ஆதித்த வடி
இராசகேசரி வடி
கண்டருள் கண்ட வடி
கண்ணர வடி
கிடாரங்கொண்ட வடி
குலோத்துங்க சோழ வடி
சோழகுலவல்ல வடி
சோழமாதேவி வடி
திரிபுவன மாதேவி வடி
நரதொங்க வடி
பஞ்சவன் மாதேவி வடி
பரமேஸ்வர வடி
பராக்கிரம வடி
மதுராந்தக வடி
மாதேவடிகள் வடி
மும்முடிசசோழ வடி
வயிரமேக வடி
வானவன் வடி
விடேல்விடுகு வடி
வீரநாராயண வடி
ஆயன நாத வடி,
ஸ்ரீ கண்டராத்தித்த வடி
ஸ்ரீ கொண்டக மாதேவி வடி
ஸ்ரீ செம்பியன் மாதேவி வடி
ஸ்ரீ இராசகேசரி வடி
ஸ்ரீ வானவன்மாதேவி வடி
ஸ்ரீ வீரநாராயண வடி
கவுசல வடி
காமதேவ வடி,
சங்கர வடி
திருசிற்றம்பலேச வடி
திருவரங்க வடி, ஸ்ரீதர வடி
பெருமாள் வடி
ஸ்ரீதேவி வடி
ஸ்ரீகாமுக வடி
ஸ்ரீவீரமுக வடி

பல்லவர்கள் பங்களிப்பு  

இவங்க எரிகளை தடாகம் என்றும் குறிப்பிட்டனர். தடாகம் என்பது நீர்நிலைகள் இருக்கும் ஏரிகளில் தாமரை, அல்லிப் பூக்கள் நிறைந்து இருக்கும். கோடை காலங்களில் நீராவியாகமல் இருக்க இது போன்ற தாவரங்களை விளையச் செய்ததினால், எரிகளை தடாகங்கள் என்றும் கூறினார்.

காவிரி ஆறு, பாலாறு முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 
அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. அவற்றும் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்பன.
பெரிய கால்வாய்களிலிருந்து நீரை எடுத்துச் செல்லச் சிறுசிறு கால்வாய்கள் பல்லவ நாடெங்கும் அமைக்கப்பட்டிருந்தன.

குணமிலி ஏரி - ஆனத்தூர், செஞ்சி — மகேந்திரவர்மன் காலம்,  பனமலை ஏரி — இராஜசிம்மன் காலம்,  ஓங்கூர் ஏரி — இரண்டாம் நந்திவர்மன்,  வைரமேகத்தடாகம் — உத்திரமேரூர்,  சித்திரமேகத் தடாகம் – மாமண்டூர் – சாருதேவி பல்லவர் தேவி,  இராச தடாகம் – மாமண்டூர்,  திரளய ஏரி – தென்னேரி – சாருதேவி பல்லவர் தேவி,  மகேந்திர தடாகம் – சோழிங்கர்,  சந்திரமேக தடாகம் – களக்காட்டூர்,  பரமேஸ்வர தடாகம் – பரமேஸ்வரமங்கலம், காஞ்சிபுரம்.
காவேரிப்பாக்கம் ஏரி — வேலூர் — மூன்றாம் நந்திவர்மன்,  மருதநாடு ஏரி — மருதாடு, வந்தவாசிமார்ப்பிடுகு ஏரி — ஆலம்பாக்கம் — மார்ப்பிடுகு பேரடியரையன், இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன், வெள்ளேரி ஏரி — எச்சூர், காஞ்சிபுரம், கனகவல்லி தடாகம் — வேலூர், தாமல் ஏரி- அதில் பாலாற்றை கலக்க செய்து, வேகவதி என்ற ஒரு கிளை நதியை உருவாக்குதல்
, செம்பரம்பாக்கம் ஏரி, பழவேற்காடு ஏரி, புழலேரி செங்குன்றம் ஏரி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

சாராள் தக்கர் (Sarah Tucker ) அம்மையாரின் பணி

 சாராள் தக்கர் அம்மையாரின் பணி 

சாராள் தக்கர் (Sarah Tucker ) இங்கிலாந்து நாட்டில், லண்டனில் பிறந்து இருந்தார். அவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரர் அவர் பெயர் ஜான் தக்கர் (John Tucker) இந்தியாவில் சென்னை மாகாணத்தில் சி.எம்.எஸ் கிருத்துவ மிஷினரியில் பணியாற்றிக் கொண்டு வந்தார். தனது சகோதரிக்கு தம்மை சுற்றிலும்  நடக்கும் நிகழ்வுகளை கடிதங்கள் மூலம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தார். தங்கைக்கு இரு கால்களாலும் எழுந்து நடக்க முடியாது. தங்கை மேல் உள்ள பாசத்தினால், அவரின் மகிழ்ச்சிக்காக இந்தியாவில் நடக்கும் செய்திகளை அடிக்கடி அனுப்புவது உண்டு. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ஜில்லாவில் தான் பார்த்திட்ட செய்தியை கடிதமாக அனுப்பி இருந்தார். அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 



இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என்றே சொல்லலாம்.

சாராள் தக்கர் (Sarah Tucker )ஆசிரியை பயிற்சி நிறுவனத்தின் வரலாறு

சிஎம்எஸ் ஸின் (CMS) செயலராக சென்னையில் பணியாற்றிய ஐயர் கனம் ஜான்தக்கர் அவர்களின் சகோதரி தான் சாராள் தக்கர். 

ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து விட்டு பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். வேற்று ஆண்களை பார்த்தால்கூட வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்கிறார்கள் என்று எழுதின கடிதம், 

மாற்றுத் திறனாளி

இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சகோதரி, மாற்று திறனாளியான பதினாலு வயது சாராள் தக்கர் வாழ்வில் பெரும்பாதிப்பை கொண்டு வந்தது. 

இந்தியாவில், பெண்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பாமல் “அடுப்பூதும் பெண்டிருக்கு படிப்பெதற்கு” என நினைத்த சமுதாயத்தில் பெண்கள் கல்விக்காக உதவிகள் தேவை என்பதை கனம் ஜான் தக்கர் அவர்கள் தனது சகோதரிக்கு எழுதி அடிக்கடி தெரிவித்ததால் இருகால்களும் ஊனமுற்ற நிலையில் இருந்தாலும் பெண்கல்விக்காக தன்னை அர்பணித்தாள் சாராள் தக்கர். 


ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம்

ஜான் தக்காரின் கடிதத்தைப் படித்தவுடன், சாராள் தக்கர் தன்னுடைய 24 சவரன் நகைகளை   முதலில் (முதல் தவணையாக)  பின்னர் மேலும் தன்னுடைய 100 பவுன் நகைகளுடன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சுமார் 200 பவுன் வசூலித்து தனது அண்ணன் ஜான் தக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய பணி புரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள்.

🔅சாராள் தக்கர் அனுப்பின முதல் உதவித்தொகையில் 1843 ல் கடாட்சபுரத்தில் ஆசிரிய பயிற்சிப்பள்ளி பெண்களுக்கென தொடங்கபபட்டது. 

🔅அதே வருடம் சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும்,விடுதியும் கட்டப்பட்டது. சாராள்தக்கர் ஆசிரியை பயிற்சியில் படித்து முடித்த ஆசிரியைகளைக் கொண்டு மிக குறுகிய காலத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, நல்லூர், திருநெல்வேலி சந்திப்பு போன்ற இடங்களில் 20க்கும் மேற்பட்ட கிளைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

🔅அதுமட்டுமல்ல 1895ல் சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி தென் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. இன்று அநேக பள்ளிகள் ஆலமரம் போல் விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது. 

ஒவ்வொரு முறையும் தனது கால்கள் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் ஒரு நல்ல பணத்தொகையை சேர்த்து அனுப்பினார்.

1857ஆம் ஆண்டில்மறைவுற்றார் 

இந்நிலையில் 1857ஆம் ஆண்டில் செல்வி சாராள் தக்கர் இவ்வுலக வாழ்வை விட்டு மரணமுற்றார்.  இந்தியாவில் அவருக்கு நினைவகம் கட்டுவதற்காக அவரது சிநேகிதிகள் அருளட்திரு. ஜான் தக்கர் அவர்களுக்கு அனுப்பிய நிதியை கொண்டு ஜான் தக்கர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டையில் 1858ல் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், அதனுடன் இணைந்த ஒரு சிறு மாதிரி பள்ளியும் உருவாக்கப்பட்டது. முதன் முதலாக டிப் தம்பதியினர் அதன் பொறுப்பை ஏற்றனர்.

தோழிகள் உதவி 

சாராள் தக்கர் தோழிகள், மரியா சைல்டர்ஸ், சோபியா டீக்கள், ஜோவன்னாகர் ஆகியோர்கள்   சாராள் தக்காரின் பொறுப்பினை ஏற்று மேலும் பணம், நகைகளை இங்கிலாந்தில் சேகரித்தும் அனுப்பிய தொகையில் பாளையங்கோட்டையில்  மேற்சொல்லப்பட்ட  சாராள் தக்கர் பெண்கள் பள்ளி மற்றும் ஆசிரியை பயிற்சிப்பள்ளி 1858ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி பல வருடங்களுக்கு முன்னால் உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததும் இல்லை.

The Sarah Tucker Institutions are to be remembered as the nursery of some pioneer institutions for the education of the handicapped in the whole of India. 

After three decades of resolute spadework, the Upper Primary Boarding School attached to the Training Institution was upgraded as the ‘Sarah Tucker High School’ in 1890 with 5 Girl students. 

Miss Askwith had the Confidence and Courage to raise the Sarah Tucker High School to a Second Grade College and get it affiliated to the University of Madras in 1895 as the First College exclusively for women in the whole of India to the South of Lucknow.


“Rome was not built in a day and so was Sarah Tucker College”


புதன், 29 நவம்பர், 2023

வர்த்தமான மகாவீரர்

 

வர்த்தமான மகாவீரர்

வர்த்தமான மகாவீரர்‌ இருபத்து நான்காவது (24) தீர்த்தங்கரராகக்‌ கூறப்படுகிறார்‌. 

அர்த்தமாகதியில்‌ எழுதப்பட்ட பல நூல்களிலும்‌ இவர்‌ (வைசாலிகா) வேசாலியன்‌ என்றே அழைக்கப்பட்டார்‌. 

'ஜைனமதம்‌' என்ற உயர்ந்த கட்டடத்திற்கு மிக உறுதியான அடித்தளம்‌ இட்டவர்‌. அதன்‌ காரணமாகவே இன்றைக்கும் ஜைனமதம்‌ விரிசல்களும்‌ ஓட்டைகளும்‌ இன்றி சிறந்து நிற்கக்‌ காண்கிறோம்‌. மற்றைய மதங்களைப் போல இவர்களுக்குள் பூசல்கள் இல்லை.

மகாவீரர்‌ “நிகந்த நாதபுத்த” என்ற பெயருடன்‌ நிர்கிரந்த பிரிவின்‌ தலைவராக விளங்கினார்‌ என்பதையும்‌ அவருடைய பரிநிர்வாண காலத்தைப்‌ பற்றியும்‌ பவுத்த நூல்கள்‌ தெளிவாகக்‌ கூறுகின்றன. 

பெற்றோர்‌ இவருக்கு வர்த்தமானர்‌ என்று பெயரிட்டனர்‌. யசோதா என்ற பெண்ணை மணந்து அனோஜா என்ற மகளுக்கும்‌ தகப்பன்‌ ஆகிறார். 

பெற்றோரின்‌ இறப்பிற்கு பின்னர்‌ அரசபதவிக்கு வந்த தன்‌ அண்ணன்‌ நந்தி வர்த்தன்‌ மற்றும்‌ முக்கிய மனிதர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ சமணத்‌ துறவியானார்‌. 

தன்னுடைய முப்பதாவது வயதில்‌ அரச வாழ்வைத்‌ துறந்து பன்னிரெண்டு 
ஆண்டுக்காலம்‌ கடுந்தவமிருந்து ஞானம்‌ பெற்றார்‌. தன்னுடைய 72 வது வயதில்‌ பாவாபுரியில்‌ பரிநிர்வாணம்‌ அடைந்தார்‌. 

72 ஆண்டுக்காலம்‌ அலைந்து திரிந்து கடுந்தவத்தால்‌ கேவல ஞானம்‌ பெற்ற அவர்‌ தம்முடைய 42 வது வயது முதல்‌ முப்பதாண்டுகள்‌ தம்‌ கொள்கைகளான கொல்லாமை, வாய்மை, பிறர்‌ பொருள்‌ விழையாமை, மிகுபொருள்‌ வெஃகாமை, பிரம்மச்சரியம்‌ என்ற ஐந்தையும்‌ மக்களுக்குப்‌ போதித்தார்‌. 



(மகாவீரர் பொன்னூர் மலை, வந்தவாசி)

ஜைனமதத்தின்‌ பழைய தத்துவங்களின்‌ நீண்ட பயணத்தில்‌ சில சீர்த்திருத்தங்களை கொண்டு வந்து கட்டுக்‌ கோப்பான மதமாக மாற்றினார்‌.

மக்களை ஒன்று திரட்டி. வழி நடத்தும்‌ சிறந்த வித்தையை அறிந்திருந்தார்‌. 

சங்கங்களை உருவாக்கினார்‌. பெண்களுக்கும்‌ தம்‌ மதத்தில்‌ இடங் கொடுத்தார்‌. 

பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினாலு.ம்‌ உலக வாழ்வில்‌ ஈடுபட்டவர்களுக்கென ஸ்ராவக விரதத்தை ஏற்படுத்தியதால்‌: ஜைன மதத்தின்‌ வேர்‌ மக்கள்‌ வாழ்வின்‌ அடிவரை பரவித்‌ தழைத்தது. 

மகாவீரர்
மகாவீரர்‌ வலியுறுத்தி சென்ற ஐந்து விரதங்கள்‌ ஜைன மதத்தி னரால்‌ இன்று வரை மாறாது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்ற பெருமையோடு அவருடைய மதக்‌ கொள்கைகளின்‌ தாக்கம்‌ இந்தியாவில்‌ வளர்ந்த பல மதங்களிலும்‌ காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்‌. அதிலும்‌ குறிப்பாக கொல்லாமை அதாவது உயிர்க்கொலை செய்தலை வெறுக்கும்‌ மாபெரும்‌ 
அறத்தைத்‌ தொடக்க காலத்திலிருந்து வலியுறுத்தி வரும்‌ நிலையில்‌ இந்து மதம்‌ போன்ற பிற பெரிய மதங்களும்‌ பிற்காலத்தில்‌ இதனை ஏற்றுக்‌ கொண்டு கொல்லாமையை வலியுறுத்தி வருவதைக்‌ காணலாம்‌. இது போல வாய்மை(சத்தியம்‌) என்பதையும்‌ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

யாகங்களில்‌ உயிர்கள்‌ பலியிடப்படுவதை வெகுவாகக்‌ கண்டித்தும்‌, கள்ளுண்ணும்‌ பழக்கத்தைக்‌ கைவிட்டெடொழிக்க கோரியும்‌ 2500 ஆண்டுகளுக்கு முன்பே அஹிம்சைப்‌ புரட்சி செய்த பெருமையாளர்‌. மகாவீரர்‌, கொல்லாமை, வாய்மை, கள்‌ உண்ணாமை இவற்றையே அடிப்படைக்‌ கொள்கையாக்கி நாடெங்கும்‌ அதைப்‌ பரப்பி மக்களை நெறிப்படுத்தியவர்‌. 

இந்திய மக்கள்‌. மனதில்‌ அவ்வெண்ணங்களை இன்று வரை நிலைத்திருக்கும் படிச்‌ செய்தவர்‌. அதனால்‌ அவர்‌ மகாவீரர்.

காந்தியடிகள்‌ 
அம்மாவீரரின்‌ கொள்கைகளை இந்த இருபதாம்‌ நூற்றாண்டில்‌ மீண்டும்‌ நாடெங்கும்‌ பரப்பியவர்‌ மகாத்மா காந்தியடிகள்‌. அவர்‌ எம்‌ மதமும்‌ சம்மதம்‌ என்ற கொள்கையினை உடையவார்‌. அஹிம்சை மற்றும்‌ வாய்மை என்பதை தாரக மந்திரமாகக்‌ கொண்டவர்‌. அதன்படி. வாழ்ந்தவர்‌. எனவே இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இணையற்ற அஹிம்சைப்‌ புரட்சியாளர்‌ காந்தியடிகள்‌ வரை இந்திய மக்கள்‌ அனைவருடைய மனத்திலும்‌ அஹிம்சையையும்‌ வாய்மையையும்‌ ஆழமாகப்‌ பதியச்‌ செய்தவர்‌ வர்த்தமான மகாவீரர்‌ தான்‌ என்பதில்‌ ஐயமில்லை. 

இன்று குடி குடியைக்‌ கெடுக்கும்‌ என்று இடிமுழக்கம்‌ செய்கிறோம்‌. இதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே முழக்கம்‌ செய்து மக்களை நல்வழிப்‌ படுத்தியவர்‌. எனவே மகாவீரர்‌ கொள்கைகளை தாமும்‌ கடைப்‌ பிடித்து நடக்க சபதம்‌ எடுப்போம்‌.


நாகமலை சமணர் வரலாற்றுச் சின்னங்கள்

மேம் ல்மருவத்தூர்-செய்யூர் நெடுஞ் சாலையில் உள்ள நாகமலை யில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுச் சான்றுகளுடன் சிறிய அளவிலான பல்லவர் கால குடை வரை கோயில் உள்ளது. இதனை சம ணத் துறவியர்கள் தங்களது வாழ்விடமா கவும், சமயத்தைப் போதிக்கும் கூடமா கவும், நோய்களைத் தீர்க்கும் இயற்கை மூலிகை மருத்துவத்தை அளிக்கும் இட மாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகத்தை அடுத்த விராலூரில் உள்ள இந்த மலையானது 'பஞ்சபாண்டவர்கள் மலை', 'கருப் பங்குன்று' உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையில் துற விகள் செய்த அறப்பணிகள் குறித்த விவரங்கள் மலைக்குன்றுகளில் கல் வெட்டுகளாக உள்ளன.

மூலிகைச் செடிகளை அரைக்கப் பயன்படுத்தும் கல் உரல்கள், மழைக்காலங்ளில் மழைநீர் உள்புகாதவாறு இயற்கையாக அமைந்த குகைகள், கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் திருவுருவச் சிலை கள் உள்ள தடயங்கள் வரலாற்றுச் சான்றுகள் இன்றளவிலும் காணப்படு கின்றன.

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய தமிழ் இலக்கியத் தொகுப்பு கல்வெட்டுக ளும் சிறிய குடவரை கோயிலில் உள் ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாக மலைக்கு தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாட்டு சுற்று லாப் பயணியர் என நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து பார் வையிட்டுச் செல்கின்றனர். வடமாநி லங்களில் இருந்து சமணர்கள் மாதம் தோறும் குறிப்பிட்ட சில நாள்களில் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

-மதுராந்தகம் குமார்



31 ஜூலை 1498, தனது மூன்றாவது பயணத்தின் போது கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் டிரினிடாட் தீவை கண்டடைந்தார்

  கொலம்பஸ் தனது மூன்றாவது பயணத்தில் ( 1498) டிரினிடாட் தீவை 31 ஜூலை 1498 அன்று கண்டடைந்தது , ஐரோப்பியர்கள் தென் அமெரிக்கக் கண்டத்தை முதன்முத...