சாராள் தக்கர் (Sarah Tucker ) அம்மையாரின் பணி

 சாராள் தக்கர் அம்மையாரின் பணி 

சாராள் தக்கர் (Sarah Tucker ) இங்கிலாந்து நாட்டில், லண்டனில் பிறந்து இருந்தார். அவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரர் அவர் பெயர் ஜான் தக்கர் (John Tucker) இந்தியாவில் சென்னை மாகாணத்தில் சி.எம்.எஸ் கிருத்துவ மிஷினரியில் பணியாற்றிக் கொண்டு வந்தார். தனது சகோதரிக்கு தம்மை சுற்றிலும்  நடக்கும் நிகழ்வுகளை கடிதங்கள் மூலம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தார். தங்கைக்கு இரு கால்களாலும் எழுந்து நடக்க முடியாது. தங்கை மேல் உள்ள பாசத்தினால், அவரின் மகிழ்ச்சிக்காக இந்தியாவில் நடக்கும் செய்திகளை அடிக்கடி அனுப்புவது உண்டு. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ஜில்லாவில் தான் பார்த்திட்ட செய்தியை கடிதமாக அனுப்பி இருந்தார். அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 



இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என்றே சொல்லலாம்.

சாராள் தக்கர் (Sarah Tucker )ஆசிரியை பயிற்சி நிறுவனத்தின் வரலாறு

சிஎம்எஸ் ஸின் (CMS) செயலராக சென்னையில் பணியாற்றிய ஐயர் கனம் ஜான்தக்கர் அவர்களின் சகோதரி தான் சாராள் தக்கர். 

ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து விட்டு பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். வேற்று ஆண்களை பார்த்தால்கூட வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்கிறார்கள் என்று எழுதின கடிதம், 

மாற்றுத் திறனாளி

இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சகோதரி, மாற்று திறனாளியான பதினாலு வயது சாராள் தக்கர் வாழ்வில் பெரும்பாதிப்பை கொண்டு வந்தது. 

இந்தியாவில், பெண்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பாமல் “அடுப்பூதும் பெண்டிருக்கு படிப்பெதற்கு” என நினைத்த சமுதாயத்தில் பெண்கள் கல்விக்காக உதவிகள் தேவை என்பதை கனம் ஜான் தக்கர் அவர்கள் தனது சகோதரிக்கு எழுதி அடிக்கடி தெரிவித்ததால் இருகால்களும் ஊனமுற்ற நிலையில் இருந்தாலும் பெண்கல்விக்காக தன்னை அர்பணித்தாள் சாராள் தக்கர். 


ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம்

ஜான் தக்காரின் கடிதத்தைப் படித்தவுடன், சாராள் தக்கர் தன்னுடைய 24 சவரன் நகைகளை   முதலில் (முதல் தவணையாக)  பின்னர் மேலும் தன்னுடைய 100 பவுன் நகைகளுடன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சுமார் 200 பவுன் வசூலித்து தனது அண்ணன் ஜான் தக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய பணி புரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள்.

🔅சாராள் தக்கர் அனுப்பின முதல் உதவித்தொகையில் 1843 ல் கடாட்சபுரத்தில் ஆசிரிய பயிற்சிப்பள்ளி பெண்களுக்கென தொடங்கபபட்டது. 

🔅அதே வருடம் சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும்,விடுதியும் கட்டப்பட்டது. சாராள்தக்கர் ஆசிரியை பயிற்சியில் படித்து முடித்த ஆசிரியைகளைக் கொண்டு மிக குறுகிய காலத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, நல்லூர், திருநெல்வேலி சந்திப்பு போன்ற இடங்களில் 20க்கும் மேற்பட்ட கிளைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

🔅அதுமட்டுமல்ல 1895ல் சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி தென் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. இன்று அநேக பள்ளிகள் ஆலமரம் போல் விழுது விட்டு வளர்ந்து நிற்கிறது. 

ஒவ்வொரு முறையும் தனது கால்கள் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் ஒரு நல்ல பணத்தொகையை சேர்த்து அனுப்பினார்.

1857ஆம் ஆண்டில்மறைவுற்றார் 

இந்நிலையில் 1857ஆம் ஆண்டில் செல்வி சாராள் தக்கர் இவ்வுலக வாழ்வை விட்டு மரணமுற்றார்.  இந்தியாவில் அவருக்கு நினைவகம் கட்டுவதற்காக அவரது சிநேகிதிகள் அருளட்திரு. ஜான் தக்கர் அவர்களுக்கு அனுப்பிய நிதியை கொண்டு ஜான் தக்கர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டையில் 1858ல் சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், அதனுடன் இணைந்த ஒரு சிறு மாதிரி பள்ளியும் உருவாக்கப்பட்டது. முதன் முதலாக டிப் தம்பதியினர் அதன் பொறுப்பை ஏற்றனர்.

தோழிகள் உதவி 

சாராள் தக்கர் தோழிகள், மரியா சைல்டர்ஸ், சோபியா டீக்கள், ஜோவன்னாகர் ஆகியோர்கள்   சாராள் தக்காரின் பொறுப்பினை ஏற்று மேலும் பணம், நகைகளை இங்கிலாந்தில் சேகரித்தும் அனுப்பிய தொகையில் பாளையங்கோட்டையில்  மேற்சொல்லப்பட்ட  சாராள் தக்கர் பெண்கள் பள்ளி மற்றும் ஆசிரியை பயிற்சிப்பள்ளி 1858ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி பல வருடங்களுக்கு முன்னால் உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததும் இல்லை.

The Sarah Tucker Institutions are to be remembered as the nursery of some pioneer institutions for the education of the handicapped in the whole of India. 

After three decades of resolute spadework, the Upper Primary Boarding School attached to the Training Institution was upgraded as the ‘Sarah Tucker High School’ in 1890 with 5 Girl students. 

Miss Askwith had the Confidence and Courage to raise the Sarah Tucker High School to a Second Grade College and get it affiliated to the University of Madras in 1895 as the First College exclusively for women in the whole of India to the South of Lucknow.


“Rome was not built in a day and so was Sarah Tucker College”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..