தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

வீரமாமுனிவர்.
தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.
ஆறுமுக நாவலர்
தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.

உ.வே.சா.,
தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.

சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.

 சங்கரதாஸ் சுவாமிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார்.

பரிதிமாற் கலைஞர்எனும் சூரியநாராயண சாஸ்திரி (1870-1903).
தமிழ் மொழி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்றவர். இவர், கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிரியர்களால் வியந்து பாராட்டப்பட்டவர். மதுரைக் கல்லூரியில் இவர் படித்த போது, இயற்றிய மாலா பஞ்சகம் என்ற நூலை பார்த்த பாஸ்கர சேதுபதி, அவருடைய உயர்கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி தலைவர் டாக்டர் மில்லர், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி எனும் நூலின் ஒரு பகுதியை விளக்கினார். 'துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து செல்லும் படகு, அன்னப்பறவை தன் சிறகு விரித்து விசிறிக் கொண்டு நீந்துவது போல் இருக்கிறது' என்ற உவமை வேறு எந்த மொழியிலும் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம், என்றார்.வகுப்பில் இருந்த சூரிய நாராயண சாஸ்திரி, 'முடிகின நெடுவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினின் மடவண்ணக் கழியது செல நின்றார்' எனும் 9 நூற்றாண்டுக்கு முந்தைய கம்பரின் உவமை நயத்தை டென்னிசனுக்கு,சாஸ்திரி விளக்கினார். அதைக்கேட்ட மில்லர் அவருக்கு கைகொடுத்துப் பாராட்டினார். மதுரை அருகே வீராச்சேரியில் பிறந்த அவர், கல்லூரி பேராசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியராகவும் விளங்கிய அவர், தனித்தமிழ் உணர்வுக்கு வித்திட்டவர் ஆவார்.
தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று உரை நிகழ்த்தினார். எழுதி வந்தார். தன்னுடைய பெயரையும் தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
ரூபவதி,கலாவதி,
மான விஜயம்,
தனிப்பாசுரத் தொகை,
பாவலர் விருந்து,
மதிவாணன்,
நாடகவியல்,
தமிழ் விசயங்கள்,
தமிழ் மொழியின் வரலாறு,
சித்திரக்கவி விளக்கம்,சூர்ப்ப நகை - புராண நாடகம்.
பதிப்பித்த நூல்கள்:
சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898); 
மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898); 
புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899); 
உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901).

பாம்பன் சுவாமிகள் 
முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார். இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

நா.கதிரைவேற்பிள்ளை.
நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர்.

இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-
தமிழ்ப் பேரகராதி, அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை, பழநித் தல புராண விருத்தியுரை, சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம், சிலேடை வெண்பா, யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா, கருவூர் மான்மியம் (மஹாத்மியம்), சீட்டுக் கவிகள்  பல எழுதியுள்ளார்.




********************************************************************************
வ.உ.சிதம்பரனார் (1872-1936)
எண்ணி எண்ணிப் பெருமைப் படத்தக்க வகையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விடுதலை வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சி அவர்கள் வழக்கறிஞர் என்ற தொழிலோடு தமிழிலும் சிறந்தப் புலமைப் பெற்றிருந்தார்.
ஆங்கிலப் புலமைக் கொண்டதால் ஜேம்ஸ் ஆலன் எழுதிய சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என பெயர்சூட்டி வெளியிட்டார். மூல நூல்களைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பவர்களும் அருமையை உணர்ந்து கொள்ளலாம்.

கவிதை வடிவில்: மெய்யறம்,மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை உரை வடிவில்: இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். பதிக்கப்பட்ட நூல்களாக: திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்), தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)
கட்டுரை வடிவில்: கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே,மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் எனவும்,
அது தவிர அரசியல் சொற்பொழிவாளராக, ‘எனது அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பிலும், மொழி பெயர்ப்பாளராக, ‘மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்றும், செய்தித் தாள் ஆசிரியராக, விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றினார்.
பம்மல் சம்பந்த முதலியார்  (1873 - செப்டம்பர் 24, 1964).

வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
 
எழுபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி தமிழ் மக்களால் 'தமிழ் நாடகத் தந்தை' என்று அழைக்கப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டே, வாடி வதங்கிப் போய் இருந்த நாடகத் துறைக்கு புத்துயிர் ஊட்டியவர் இவர். மேலை நாட்டு நாடகங்கள், வடமொழி நாடகங்களை ஆழமாகப் படித்தார். மொழிநடை மற்றும் உரையாடல்களில் வித்தியாசமான பாணியைப் பின்பற்றினார். தொடர்ந்து நாடகக் கலைக்கு தெம்பூட்டி வந்தார். இவர் எழுதிய முதல் நாடகம் 'புஷ்பவல்லி' மக்கள் ஆதரவைப் பெற்றது. அதன் பின்னர் அவர் ஏராளமான நாடகங்களை எழுதிக்
குவித்தார்.
Image result for பம்மல் சம்மந்தம்

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார்.  கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வாணிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.
பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.
நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

சதாவதானி செய்குத்தம்பி பாவலர்.
முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்.கதராடை மற்றும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வையும் பரப்பினார். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தினார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார். அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்துள்ள பாவலரின் பெருமை தமிழின் பெருமையாகவே உள்ளது.



சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.

தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (1876-1954) சொற்பொழிவுகளும், உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூல் வடிவம் பெற்றன. உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி... கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்...

Image result for தேசிக விநாயகம் பிள்ளை

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை.
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.


மறைமலை அடிகள்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்... உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்... எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார் (1876-1950), இடையில் நிறுத்தி - 'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார். தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார். அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது. சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை 'பொது நிலைக்கழகம்' என்றும் மாற்றிக் கொண்டார்.

மு.ராகவையங்கார்
ராகவையங்கார் (1878-1960) வரலாற்று ஆய்வில் வரலாறு படைத்தவர் என்று போற்றப்பட்டவர். இலக்கிய ஆய்வில் புகழ்பெற்றவர். சிலாசனங்களை வெளியிட்டவர். செந்தமிழ் எனும் இதழில் 'வீரத்தாய்மார்' என்று எழுதிய கட்டுரைக்கு பாரதியே பாராட்டி எழுதியிருந்தார். 'இருளிலேயே மூழ்கிக் கிடக்கும் பாரத வாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்' என்று பாராட்டி எழுதினார். வேளிர் வரலாறு, ஆழ்வார்களின் கால நிலை, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் ராகவையங்கார்.

சாயுபு மரைக்காயர் 
தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர், தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்தவர் சாயுபு மரைக்காயர் (1878-1950). இவர் அமுதகவி என்றும் அழைக்கப்பட்டார். சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகியவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். மனோன்மணிக் கும்மி, உபதேசக் கீர்த்தனம், மும்மணி மாலை ஆகிய நூல்கள் சாயுபு மரைக்காயரின் தமிழாற்றலை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மொழிக்கும் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் தொண்டாற்றியவர்.

இராஜாஜி
சோக்ரதர், கண்ணன் காட்டிய வழி, குடிகெடுக்கும் கள், மார்க்கச அரேலியசர் உபதேச மொழிகள், ராஜாஜி குட்டிக் கதைகள், உபநிஷ பலகணி, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் ராஜாஜியின் (1878-1972) படைப்புகள். வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய இவரது நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. மகாபாரதமும்... ராமாயணமும் தமிழில் எழுதியதை, கவர்னர் ஜெனரல் பதவியை விட முக்கியமாக ராஜாஜி ஒரு முறை குறிப்பிட்டார்.விவேகானந்தர் மற்றும் பாரதியால் பாராட்டுப் பெற்றவர் ராஜாஜி. பின்னாளில் மூதறிஞர் என்று அழைக்கப்பட்டார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்
வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 - 1959). வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவர். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதை செய்தார்.இந்தி எதிர்ப்புத் தந்தை என்று இவரைக் குறிப்பிட்டால் மிகையில்லை. ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டாய இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு வெளிப்படையான கடிதம் எழுதினார்.

வ.வே.சு. ஐயர்
தமிழில் திறனாய்வுத் துறை வளம் பெறவும், சிறுகதைத் துறை வளரவும் உந்து சக்தியாக விளங்கியவர் வ.வே.சு.ஐயர் (1881 -1925). புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும் சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. தேச விடுதலைக்காக எழுதிய இவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார். ஆங்கிலத்தில் குறுந்தொகையை எழுதினார். 44 வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்.

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியாரை (1882-1921) அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. தமிழ்ப் பணியையும் விடுதலைப் பணியையும் ஒன்றாக பார்த்த அவர், மொழிப்பற்றை வளர்த்தவர். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று குறுங்காவியங்களை அவர் இயற்றினார். வ.வே.சு. ஐயர் இவரது பாடல்களை அட்சரம் லட்சம் பெறுமான பாக்கள்... அவை மனதை ஈர்க்கும் மாணிக்கங்கள் என பாராட்டினார். மகாகவி பாரதியார் ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியிடம் பேரார்வம் கொண்டிருந்தார். எங்கள் தமிழ்மொழி, எங்கள் தமிழ் மொழி என்று மொழியின் மீது தீராப்பற்றுக் கொண்டிருந்தவர் அவர்.

திரு.வி.க., 
பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் திரு.வி.க., (1883-1953). யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால், அவர் கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார். பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர். மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். மேலும், மேலும் தமிழகத்துக்கு தொண்டாற்ற வேண்டும். தமிழர்களை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.

இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (1888 - 1972) தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது... சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'' என்று பாடியவர். ''தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர். தமிழருக்கும் விடுதலை வீரர்களுக்கும் பாடிப் பெருமை சேர்த்தவர் அவர். காவலரின் மகனாகப் பிறந்த கவிஞர், தமிழ்க் காவலராக விளங்கினார்.

கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
கல்வெட்டுத் துறையில் ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டவர் கோவைக்கிழார் என்று அழைக்கப்பட்ட ராமச்சந்திரன் செட்டியார் (1888 - 1969). சேக்கிழாரும் கல்வெட்டும், நால்வர்களும் கல்வெட்டும், கல்லும் பேசுகிறது ஆகிய கல்வெட்டாய்வு நூல்களை படைத்தார். வெளிமாநிலங்களுக்குச் சென்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்றுக்குப் புதிய தகவல்களை சேகரித்துத் தந்தவர் இவர். அறநிலையத் துறையில் ஆணையர் பொறுப்பும் வகித்தார். கோவைப் பகுதியில் இவர் பங்கேற்காத மாநாடுகளோ, அரங்கமோ அல்லது அமைப்புகளோ இல்லை என்று கூறலாம்.

அறிஞர் வ.ரா.,
'வ.ரா.,' என்று அறியப்படும் வ.ராமசாமி அய்யங்கார் (1889-1951) மிகப் பழமையான நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்து, புதுமையான எண்ணங்களோடு வாழ்ந்தவர்.நாட்டு விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 
ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார்.
தமிழ் மீது கொண்ட பற்றால் பல்வேறு இதழ்களில் பணியாற்றியவர். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் குறுநாவலை ஜோடி மோதிரம் என்ற பெயரில் மொழி பெயர்த்து, பாரதியிடம் பாராட்டுப் பெற்றவர் வ.ரா., அந்த பாரதியை 'மகாகவி' என நிலை நிறுத்திய பெருமை வ.ரா.,வையே சேரும்.
  1. மாயா மேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி
  2. சுவர்க்கத்தில் சம்பாஷணை
  3. கற்றது குற்றமா
  4. மழையும் புயலும்
  5. வசந்த காலம்
  6. வாழ்க்கை விநோதங்கள்
  7. சின்ன சாம்பு
  8. சுந்தரி
  9. கலையும் கலை வளர்ச்சியும்
  10. வ.ரா. வாசகம்
  11. விஜயம்
  12. ஞானவல்லி
  13. மகாகவி பாரதியார்
  14. வாழ்க்கைச் சித்திரம்

இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும்.

பாபநாசம் சிவன்
வர்ணங்கள், கீர்த்தனைகள், தரு பதம், கண்ணிகள், திருப்புகழ், நொண்டிச்சிந்து, வழி நடைச் சிந்து என பாபநாசம் சிவன் (1890 -1973) இயற்றிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. பக்தியும் பைந்தமிழ் உணர்வும் ஒரு சேர அவரிடம் காணமுடியும். அவர் பாடல்களைக் கேட்டால் நெஞ்சம் உருகும், கண்கள் நனையும், கருத்தை உருக்கும். எழுதிப் பாடும் வல்லமை பெற்ற அவர், எழுதாமல் நினைத்த போதெல்லாம் பாடும் ஆற்றல் பெற்றவர் அவர். பஜனைகளிலும் இசைக்கச்சேரிகளிலும் அவர் பாடல்கள் ஒலித்தன. இசை அறிஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், மதுரை மணி அய்யர், லால்குடி ஜெயராமன் உள்ளிட்டோர் பாபநாசம் சிவனிடமே பாடல்களைக் கற்றுக் கொண்டனர். இவரது திரைப்படப் பாடல்கள் தமிழகத்தில் அனைத்துப் தரப்பினரையும் கவர்ந்ததாக இருந்தது.

தமிழ் வளர்த்த அறிஞர்கள் : சுத்தானந்த பாரதியார் 
சிவகங்கையில் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் (1891 - 1990). அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், 'ஆயுட்காவியம்' என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் 'பாரத சக்தி' மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

பாவேந்தர் பாரதிதாசன் 
இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் பிறந்த கனகசுப்புரத்தினம், மகாகவி பாரதியாரின் வழிகாட்டியாக கொண்டதால் தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் (1891 - 1964). 1935 ஆம் ஆண்டு 'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' என்ற இந்திய நாட்டின் முதல் கவிதை இதழை துவங்கினார். பகுத்தறிவு கொள்கைக்கு உரமூட்டி, மக்களின் சிந்தனைப் போக்கில் புதிய மாற்றத்தை வடிவாக்கம் செய்து கொண்டிருந்த இவரை பெரியார் ஈ.வெ.ரா., 'தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்' எனப் புகழ்ந்துரைத்தார். பாண்டியன் பரிசு, குடும்பவிளக்கு, ஆத்திசூடி, இருண்ட வீடு, இசையமுது உள்ளிட்ட ஒப்பற்ற நூல்களை எழுதியுள்ளார்.

பொ.திருகூட சுந்தரம் பிள்ளை
'புதிய பார்வையுடன் கூடிய புதிய செய்திகளை உணர்த்துவதன் மூலமே, தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் புதிய நலம் மேவச் செய்ய முடியும்' என்ற கருத்தை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டிருந்தவர் அறிஞர் திருகூட சுந்தரம் பிள்ளை(1891 - 1969). குழந்தைகளின் சிந்தனைகளை மேம்படுத்த 'அப்பாவும் மகனும்', 'கேள்வியும் பதிலும்' ஆகிய இரு நூல்களை இயற்றினார். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பக் கட்டுப்பாடு பற்றி தமிழில் நூல் உருவாக்கிய அறிஞர் இவர் தான். மகாத்மா காந்தியை பின்பற்றிய இவர் வாழ்வு முழுவதும் ஒரு வேட்டியும், துண்டுமே உடையாக அணிந்திருந்தார். இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் போற்றிச் சிறப்பித்து 1958ஆம் ஆண்டு, சென்னை பாரதியார் சங்கம் கேடயம் வழங்கி மகிழ்ந்தது.

பெ.நா.அப்புஸ்வாமி 
பெங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி (1891 - 1986) என்பது அவரது முழுப்பெயர். பாரதியார் தமிழோசை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என ஆசை கொண்டார். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை போன்றவற்றை ஆங்கில மொழியில் மொழி மாற்றம் செய்து, 'Tamil Verse in Translation' எனத்தலைப்பிட்டு ஒரு பெருநூல் உருவாக்கினார். இந்நூல் 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார்
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதி பதிப்பித்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892-1953). தமிழிசையில் பண்களைப் பற்றி ஆராய்வதில் விருப்பம் கொண்ட இவர், பண் ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினார்.ஆங்கில மொழியிலும் அறிஞராகத் திகழ்ந்தவர். சமய நம்பிக்கை, இறை பக்தி மற்றும் தமிழ்ப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். அரசு தமிழில் நடக்க வேண்டும். சட்டசபையில் தமிழில்தான் பேச வேண்டும். பொருளாதாரத்தையும் அறிவியலையும் தமிழில்தான் கற்க வேண்டும் என்று பெரிய விருப்பம் கொண்டிருந்தவர் இவர்.

சுவாமி விபுலானந்தர்
இலங்கைத் தமிழர்களிடையே பாரதியாரின் பெருமைகளை பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் (1892-1949). அங்கிருந்த அடக்குமுறைகளுக்கு அச்சசமில்லாது, தமிழகத்தில் நடந்த பாராட்டு விழாக்களுக்கு வந்து செசன்றவர். திரிகோணமலை இந்துக் கல்லூரியில் பாரதி படத்தைப் பார்த்த ஒருவர் இவரிடம் கேட்டார். 'யார் இந்த தலைப்பாக்கட்டு ஆசாமி' என்று? அதற்கு பதில் அளித்த விபுலானந்தர், 'தமிழனாகப் பிறந்திருந்தால், இந்த பெருங்கவிஞனைத் தெரியாமல் இருக்க முடியாது. பாரதியை அறியாதவன் தமிழன் என்று செசால்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்' என்று கூறியவர்.இசைசத்தமிழ் பற்றி ஆய்வு செசய்த இவர், யாழ்நூல் எனும் நூலை வெளியிட்டார்.

அறிஞர் கந்தையாபிள்ளை
பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப் பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை உள்ளிட்ட சங்க நூல்களை உரைநடையில் வழங்கியவர் இலங்கையைச் சேர்ந்த அறிஞர் கந்தையாபிள்ளை (1893-1967). சங்க நூல்களின் பாடல்களை உரைநடைகளாக்கி, படித்தவர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக வெளியிட்டவர் இவர். தமிழகம், தமிழர் யார், தமிழ் இந்தியா உள்ளிட்ட நூல்கள் மூலம் தமிழர்களின் மற்றும் தமிழின் பெருமையை அறியச் செய்தவர். தமிழைப் பேணி காப்பது தமிழரின் உயர் கடமை, உயிர்க் கடமை என்று கூறியவர்.

சாமிநாத சர்மா
சாமிநாத சர்மா (1895-1978) எழுதிய நூல்கள் அனைத்தும் தேசாபிமானத்தை தழைக்கச் செய்தவை. இவருடைய எழுத்துக்களை பாரதியார் விரும்பிப் படிப்பார். ஒருமுறை இவரிடம் பாரதியார், 'உம்முடைய எழுத்தில் உள்ள திண்மை, உமது உடலில் இல்லையே. வன்மை கொண்ட ஓர் உருவத்தை, உமது எழுத்தை வாசிக்கும் போதெல்லாம், என் மனத்துக்குள் கொண்டிருந்தேன். என் கணிப்பு உம்மை கண்டதும், சுக்குநூறாய் சிதறிப் போய்விட்டது' என்றார்.மெலிந்த தேகமும் மென்மையாகப் பேசும் இயல்பையும் கொண்டவர் சாமிநாத சர்மா. எழுத்துத்துறை, இதழியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றில் இவரது திறனை காணலாம்.

 சுத்தானந்த பாரதியார் 
சிவகங்கையில் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் (1891 - 1990). அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீசிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும் புலவர், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980) ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி 'யாப்பருங்கல விருத்தி' என்னும் நூலை படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாக கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. 'அட்டா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்?' என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர். இத்தகைய நூல்களின் பெயர்களை தொகுத்து வெளியிட நினைத்து, அதனை செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி.

'மறைந்து போன தமிழ் நூல்கள்' என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,' களப்பிரர் காலத் தமிழகம்' என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார். 'கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சுவாமி ஞானப்பிரகாசர்
யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர் (1857-1947). கொழும்பு ரயில் நிலையத் தலைவராக பதவி வகித்தவர். இவர் 70 மொழிகளைக் கற்றறிந்தவர். தமிழ் மொழிச் சொற்களோடு பிற மொழிச் சொற்களை ஒப்பிட்ட அறிஞர். வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இவருக்கு நிகர் இவரே. நம் முன்னோர்களின் மொழிப்புலமையை நன்கு வெளிப்படுத்தினார். இவருடைய ஆராய்ச்சியினால் தமிழ்மொழியின் முதன்மையை உலகம் உணர்ந்து கொண்டது. தமிழ்ச்சொற் பிறப்பகராய்ச்சி எனும் இவரது நூல் உலகப் புகழ் பெற்றது. சொற்பொருளில் தமிழ் சிறந்த மொழி என்பதையும் இவர் நிரூபித்தார்.

பூரணலிங்கம் பிள்ளை
தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் மு.சு.பூரணலிங்கம் பிள்ளை (1866-1931). திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பணிபுரியும் போது பரிதிமாற்கலைஞருடன் தொடர்பு கொண்டார். பாளையங்கோட்டையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் 'பவணந்தி முனிவர்' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மறுநாள் தெரிந்து செயல்வகை எனும் திருக்குறள் தலைப்பில் தமிழிலும் உரையாற்றினார். 50க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். இந்நூல்களை ஆங்கில அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

பா.வே.மாணிக்க நாயக்கர்
பொறியியல் தமிழ் அறிஞர் என்று மாணிக்க நாயக்கரை (1871-1931) குறிப்பிடலாம். 'தமிழ் தொல்பெருந் தனிமொழி. இவ்வுலகிலேயே தன்னிகரற்றுத் தனித்தியங்கும் பண்டைமொழி. ஹா, ஹீ என்று மூச்சைசப் பறிக்காமல் மூச்சுச் செசட்டுடன் இயங்குவது தமிழ் ஒன்றே. வலிய எழுத்தொலிகளால் மூச்சு வீணாகிறது. பிற செசால் கலப்பால் தமிழின் தூய்மை கெடுகிறது' என்று கூறியவர். இவர் இயற்றிய தமிழ் ஒலியிலக்கணம் எனும் நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. மரநூல் எனும் தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் அறிவியல் தமிழுக்கு இவரது மிக முக்கிய கொடையாகும்.

தணிகை மணி வ.சு.செங்கல்வராய பிள்ளை 
வ.சு.செங்கல்வராய பிள்ளை (1883-1971) தணிகை மணி என்று அழைக்கப்பட்டவர். அருணகிரிநாதர் எழுதிய 'திருப்புகழை' பதிப்பித்தவர் இவரே. மயில் பாட்டு, வேல் பாட்டு, சேவல் பாட்டு, வள்ளி கல்யாண கும்மிப் பாட்டு, திருவாசக ஒளிநெறி, தேவார ஒளி நெறி, திருக்கோவையார் ஒளிநெறி, வள்ளிக்கிழவர் வாக்கு உள்ளிட்ட நூல்களை அவர் வெளியிட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரை செய்ததன் அடிப்படையில் 1969ல் தணிகை மணிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தணிகை மணியின் இல்லம் சென்று அவரது ஆராய்ச்சி நூல்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

தண்டபாணி தேசிகர்
பத்மபூஷண் விருது பெற்ற முதல் தமிழ் அறிஞர் தண்டபாணி தேசிகர் (1903-1990). உ.வே.சாமிநாத அய்யரிடம் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியவர்.திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் இவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய போது, தற்போது முதல்வராக உள்ள கருணாநிதி இவரது மாணவர். தண்டபாணி தேசிகர் மறைவின் போது, கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'தாய்ப்பால் தந்த அஞ்சுகம் அன்னையைப் போல், தமிழ்ப்பால் தந்த பேராசன்' என்று குறிப்பிட்டிருந்தார். குன்றக்குடி அடிகளாரும் தண்டபாணி தேசிகரின் மாணவர் தான். திருக்குறளில் இவருக்கு இருந்த புலமையால் தமிழக அரசு இவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கிப் பாராட்டியது.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
இசைப்பேரறிஞராகத் திகழ்ந்தவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1859-1930). கர்நாடக இசையுலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், முத்துச்சாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள். இவர்கள் இயற்றிய கீர்த்தனங்கள், வர்ணங்களும் தெலுங்கிலும் வடமொழியிலும் பாடப்பெற்று வந்தன. இவற்றுக்கு ஆபிரகாம் பண்டிதர் தமிழில் பாடல்களை எழுதி அவற்றுக்குத் தாமே இசையமைத்தார். மொத்தம் 96 பாடல்களை இவர் எழுதினார். சுவாமி விபுலானந்தர் 'யாழ் நூல்' எழுதுவதற்கு இவரது, 'கருணாமிர்த சாகரம்' நூல் காரணமாக அமைந்தது. 1912ல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

செல்வ கேசவராய முதலியார்
திருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921), தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். தமிழுக்கு கதி இருவர்... என்று கூறினார். க என்பது கம்பரையும், தி என்பது திருவள்ளுவரையும் குறிக்கின்றன. வியாகோவை, திருவள்ளுவர், தமிழ், கண்ணகி சரித்திரம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறந்த நூல்களைப் பதிப்பித்து தமிழுக்கு வளம் சேர்த்தார். அதற்காக பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டவர். தமிழறிஞர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இவருடைய மாணவர்கள்.

உமாமகேசுவரன் பிள்ளை
தஞ்சாவூருக்கு அருகே உள்ள கரந்தை என்னும் ஊரில் தமிழுக்கு சங்கம் வைத்து தமிழை வளப்படுத்தியவர்தான் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (1883-1941). சொற்பொழிவுகள் மூலம் தமிழையும், தமிழர்களின் நிலையையும் உயர்த்துதல். வேற்றுமொழி இலக்கண இலக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழின் தரத்தை பன்மடங்காக்குதல். தமிழ்ச் சங்கத்தில் படிப்போரிடையே நல்லொழுக்கங்களை வளர்த்தல் உள்ளிட்ட நல்ல விஷயங்களை இவரது கரந்தை தமிழ்ச்சங்கம் வலியுறுத்தியது. இவரது தமிழ்ப் பணிகளை ஆங்கிலேயே அரசே பாராட்டியது. பல பாராட்டுகளுக்கும், விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர்.

வேங்கடசாமி நாட்டார்

நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944)
திண்ணைப் பள்ளியில் மட்டுமே படித்துவிட்டு பண்டிதர் ஆனவர், ஆய்வறிஞர், தலைசிறந்த உரைவேந்தர்களுள் ஒருவர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
இவரின் இயற்பெயர் சிவப்பிரகாசம். ஆனால் இவர் ந.மு.வேங்கடசாமி என்றே தமிழுலகில் நிலைபெற்ற புகழைப் பெற்றிருக்கிறார்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், நடுக்காவேரி இவரின் சொந்த ஊர். தாயார் தைலம்மாள், தந்தை முத்துசாமி.இவர்களின் ஐந்தாம் மகன் சிவப்பிரகாசம் என்ற வேங்கடசாமி.சிறு வயதில் அக்காலத் திண்ணைப் பள்ளியில் படித்தார். இக்கால நான்காம் வகுப்புக்குச் சமமான படிப்பு அது.
திண்ணைப் பள்ளியிலும், தந்தையிடமும் எண்சுவடி, குழிமாற்று, நெடுங்கணக்கு, இலக்கம், நெல்லிலக்கம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, நன்னெறி, வெற்றிவேட்கை, இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது போன்றவைகளைக் கற்றுத் தேர்ந்தார்.
இவரின் தந்தை வேளாண் தொழில் செய்பவர். அதனால் பகலில் தந்தைக்கு உதவியாக கழனியில் வேலை செய்வதுடன், இரவில் படிக்கத் தொடங்கினார்.
இவருக்கு ஆசிரியர் என்று யாரும் இல்லை. ஆசிரியர் துணையின்றி நன்னூல் உள்பட தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும் கற்றார்.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரை அவர்கள் அச்சங்கத்தின் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி ஒன்றையும் நிறுவி இருந்தார். அக்கல்லூரியில் மூவகைத் தேர்வுகள் இருந்தன.
1. நுழைவுப் பண்டிதம் (பிரவேசப்பண்டிதம்)
2. இடைநிலைப் பண்டிதம் (பாலபண்டிதம்)
3. பண்டிதம்
ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டிய இப்பண்டிதர் படிப்பை 1905-1907 வரை மூன்று ஆண்டுகளில் முடித்து முதல் மாணவராகத் தேறினார் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.
இவர் அக்கல்லூரியில் படிக்கவில்லை. மாறாக தனித்தேர்வராகத் தேர்வு எழுதினார்.
இவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்த பாண்டித்துரையார், இவருக்குத் தங்கத்தாலான அணி ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்.
கோவை தூய மைக்கேல் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர், எஸ்.பி.ஜி. கல்லூரின் தமிழாசிரியர், திருச்சி பிசப் கல்லூரியின் தலைமைத் தமிழாசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய இவர்
தமிழவேள் உமாமகேசுவரனார் பரிந்துரையில், கரந்தைத் தமிழ்கல்லூரியின் முதல்வராகப் பெறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
உ.வே.சாமிநாதரால் ஓலைச்சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டுவரப்பட்ட அடியார்க்கு நல்லார், அரும்பதவுரைகாரர் ஆகியோரின் உரையுடன் கூடிய சிலப்பதிகாரத்திற்கு மிகச் சிறந்த உரை எழுதியவர் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.
அதைத் தொடர்ந்து மணிமேகலைக்கும் உரை எழுதினார். மணிமேகலையில் காணும் 30 காதைகளுள் ‘விழாவறை காதை’ தொடக்கம் ‘வஞ்சிமாநகர் புக்க காதை’ வரையான ௨௬ காதைகளுக்கு இவர் உரை எழுதினார்.
எஞ்சிய நான்கு காதைகளுக்கு உரை எழுத இவரின் நலிவுற்ற உடல்நிலை காரணமாக முடியாமல் போனது. இந்நான்கு காதைகளுக்கும் உரை எழுதியவர் உரை வேந்தர் ஔவை சு.துரைசாமி அவர்கள்.
இவ்விரு காப்பியங்களுக்கும் ந.மு.வேங்கடசாமி அவர்கள் உரை எழுதத் தூண்டுகோலாக இருந்தவர் பாகனேரி மு.காசி விசுவநாதன்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநாநூறு உள்பட தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியவைகளுக்கும் உரை எழுதியிருக்கிறார்.
‘சேரன் செங்குட்டுவன்’ என்ற சிறப்பான நூலை எழுதியவர் மூ.இராகவய்யங்கார். இவரின் இன்னொரு நூல் ‘வேளிர் வரலாறு’
இந்நூலைப் படித்த வேங்கடசாமி அவர்கள் அதிலுள்ள வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் தானும் ஒரு ‘வேளிர் வரலாறு’ நூலை எழுதினார். இந்நூலைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டது.
வேளிர் வரலாறு - சோழர் வரலாறு - கள்ளர் சரித்திரம் - நக்கீரர் - கபிலர் - கண்ணகி வரலாறும், கற்பும் மாண்பும் - கட்டுரைத் திரட்டு போன்ற நூல்கள் எழுதியிருக்கிறார்.
இவற்றுள் ‘நக்கீரர்’ என்ற நூல் இலண்டன் பல்கலைக் கழகத்திலும், காசி இந்துப் பல்கலைக் கழகத்திலும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளர் சரித்திரம் ஒரு சமூகம் சார்ந்த நூலாக இருந்தாலும், அது தமிழக மக்களின் வரலாறாக இருக்கிறது.
சமுதாய வரலாறாகக் கருதப்படும் இந்நூல், "கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி, தனது தென்பாண்டிச் சிங்கம் நூலின் முன்னுரையில்,‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று எழுதியுள்ளார்.
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தை சரவண முதலியார் அவர்களும், ந.மு.வேங்கடசாமி அவர்களும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ‘திருவிளையாடல் புராண’த்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். ந.மு.வேங்கடசாமி சிறந்த சைவநெறியாளர். சென்னை மயிலாப்பூர் சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக ஓராண்டு பொறுப்பு வகித்து இருக்கிறார்.



தமிழுக்கு வேற்று மொழிச் சொற்கள் தேவையில்லை. தமிழ் தனித்து இயங்கும். ஒருவேளை வேற்று மொழிச் சொற்கள் தேவைபட்டால் என்ன செய்வது?
தமிழில் உள்ள வேர் சொற்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும். புதிய சொற்களை உருவாக்க அல்லது கண்டுபிடிக்கத் தாமதமானால், வேற்று மொழிச் சொற்களைத் தமிழின் ஒலி இயல் இயல்புக்கு ஏற்பத் திரித்து வழங்க வேண்டும். எடுத்துக்காட்டு: ஜீசஸ் - இயேசு, ஜேக்கப் - யாகோபு என்று விளக்கம் தருகிறார் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.
இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர்.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் ௨௪ .௧௨ .௧௯௪௦ ஆம் ஆண்டு இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ந.மு.வேங்கடசாமி அவர்கள் வீட்டிற்குச் சென்று சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களின் சில ஐயங்களுக்குப் பாடம் கேட்டுச் சென்றுள்ளார் என்று ஒரு தகவல் இருக்கிறது.
தஞ்சையிலோ அல்லது திருச்சியிலோ ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைத்து விட வேண்டும் என்று ௧௯௨௨ காலகட்டங்களில் கடும் முயற்சி எடுத்தார். இருந்தும் முயற்சி பலன் தரவில்லை, தோல்வியாகவே முடிந்தது.
௧௯௮௦ ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றியபொழுது அதைப்பார்க்க ந.மு.வேங்கடசாமி அவர்கள் உயிருடன் இல்லை.
ஆம்! ௧௯௪௪ ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 28 ஆம் நாள், நாவலர் ந.மு.வேங்கடசாமி அவர்களின் பெரும் புலமையின் மீது காதல் கொண்ட மரணம், அவரை ஆரத்தழுவி அழைத்துக்கொண்டு போய்விட்டது.


கா. சுப்பிரமணியபிள்ளை
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு தாகூர் சட்ட விரிவுரையாளர் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தனர். 1920ல் அப்போட்டியில் கலந்து கொண்ட கா.சுப்பிரமணியபிள்ளை (1888-1945) குற்றங்களின்  நெறிமுறைகள் பற்றி எழுதி முதல் பரிசான ரூ.10 ஆயிரம் பெற்றார். அறிவு விளக்கம், திருநான்மறை விளக்கம், வான நூல், குற்றச்சட்டம், பதிவு விதி, இந்திய தண்டனை தொகுதி உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். 1934ல் துவங்கிய சென்னை மாகாண தமிழ்ச்சங்கத்துக்கு தலைவராகவும் இவர் தேர்வானார். 'மொழிநூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பம்' என்ற இவரது நூல் மிகவும் மிகச்சிறப்பு பெற்றது.

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
'தமிழத்தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியராகத் திகழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876). இளமையிலேயே தமிழார்வம் கொண்டு, தமிழை கற்றுத் தெளிய எதையும் செய்யலாம் என்ற ஆவலுடன் இவர் விளங்கினார். தலபுராணங்கள் பாடுவதில் வல்லவரான இவர், கோவை, பிள்ளைத்தமிழ், அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்கள் பாடுவதில் பெரும்புகழ் பெற்று விளங்கினார். நினைத்த அளவிலேயே விரைந்து கவிபாடும் திறமை மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தனிச் சிறப்பு. இவரது புலமையை கண்டு வியந்த திருவாவடுதுறை ஆதீன மடம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு 'மகா வித்துவான்' என்னும் பட்டமளித்து சிறப்பித்தது.

பாண்டித்துரைத் தேவர்
நான்காம் தமிழ்ச் சசங்கம் கண்ட நற்றமிழ் வித்தகர், வள்ளல் பாண்டித்துரைத் தேவர்தம்மை நாடி வந்த தமிழ்ப் புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கியும், அன்னைத் தமிழின் மேன்மைக்கெனப் பெரும்பொருள் வழங்கி தனியொருவராய் நின்று நான்காம் தமிழ்ச்சசங்கம் ஏற்படுத்திய பெருமைக்கு உரியவர் பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர் (1867-1911). இவர் காலத்தில் வாழ்ந்த அரைகுறை ஆங்கிலப்புலவர் ஸ்காட் என்னும் துரை. இவர் பிழையுடன் எழுதி வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி அவற்றை குழியில் போட்டு எரித்தார். பிறர் கையில் பிழையான புத்தகங்கள் கிடைக்கக்கூடாது என்பதே பாண்டித்துரைத் தேவரின் எண்ணமாக இருந்தது. தமிழன் எவ்வகையிலும் தாழக்கூடாது என்ற நினைப்பு கொண்டவர் பாண்டித்துரைத் தேவர். இவர் 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி.,யின் சுதேசிக் கப்பல் விடும், பெரும் பணிக்குத் தனியொருவராகவே ஒன்றரை லட்சசம் பணத்தை அள்ளி வழங்கியவர்.

தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதி தொண்டு புரிந்தவர், கா.நமச்சிவாய முதலியார்(1876-1934).  இவர் 'சிறுவர்களுக்கான  நூல்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். சிறுவர்களுக்கான நூல் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை அந்நூல் உணர்த்தியது. தமிழறிஞர்கள் பலரும் அந்நூலை பாராட்டினர்.  மேலும் இவர் தொல்காப்பியம் சொல்லதிகாரம்(இளம்பூரணர் உரை), நன்னூல், தணிகைப் புராணம், குறுந்தொகை  போன்ற அறிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இவர் திருவிளையாடற் புராணத்தை இனிய எளிய அழகான வசன நடையில் எழுதி சஞ்சிகைகளாக வெளியிட்டார். மேலும் இவர் தமிழ்வித்துவான் தேர்வை தொடங்கிய பெருமைக்குரியவர்.

கோவிந்தசாமி
கோவிந்தசாமி (1920-2003) டில்லியில் உள்ள மதராசி மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின் அண்ணாமலை பல்கலையில் தமிழப் பேராசிரியராகவும் உள்ளார். இவரது திருக்குறள் நூல்களும் திறனாய்வு சம்பந்தமான இவரது நூல்களும் மிகவும் பாராட்டப்பட்டவை. திருக்குறள் மக்களிடம் பரவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். 1996ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது இவருக்குக் கிடைத்தது. இவரது ஆராய்ச்சியான தமிழ் இலக்கியத்தில் வரலாற்று ஆதாரங்கள் அவரது முனைவர் பட்டத்துக்கே பெருமை சேர்த்தது.

அண்ணாமலை செட்டியார்
சிவ பக்தியையும், தமிழ்ப்பணியையும் தமது இரு கண்களாகக் கருதியவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் (1881-1948). தனியொருவராய் நின்று இயல் தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும், இசைத் தமிழ் வளர்ச்சிக்காகப் தமிழிசைச் சங்கமும் கண்ட பெருமைக்குரியவர். இவரின் வாழ்வு நகமும், சதையும் போலத் தமிழோடு பின்னிப் பிணைந்தது. பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென விரும்பினார். ஏற்கனவே தமிழகத்தில் இருந்த சென்னைப் பல்கலையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம், தர வேண்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 1929ம் ஆண்டு நிறுவினார். 

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் அண்ணாமலை செட்டியாரின் காலத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு 1943ம் ஆண்டு 'தமிழிசைச் சங்கம்' என்னும் அமைப்பினை உருவாக்கினார். இதற்கு தலைவராகவும் இவரே விளங்கினார். அண்ணாமலை செட்டியாரின் கொடை வன்மையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு 'சர்' என்னும் பட்டத்தை வழங்கியது.

கி.ஆ.பெ.விசுவநாதனார்
இந்தியை கட்டாய பாடமாகத் திணிக்க, அரசு முயன்ற போது அதனைத் தகர்த்தெறிய முன்னணியில் நின்றவர் கி.ஆ.பெ.விசுவநாதனார் (1899-1994). திருக்குறள் மேல் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு. திருக்குறள் ஒன்றே வாழ்வை வளமாக்கும் நூல் என்பதில் ஆணித்தரமான கருத்துடையவர். தமிழின் சிறப்பு, தமிழ்செசல்வம், திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள், திருக்குறளில் செசயல்திறன், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். 

'தமிழர் புலவர் குழு' என்ற குழுவை தோற்றுவித்த பெருமைக்குரியவர். தற்பொழுது விசுவநாதனாரின் புதல்வி திருமதி மணிமேகலை கண்ணன் இப்புலவர் குழுவை திருச்சியில் நடத்தி வருகிறார். இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சசங்கம் இவருக்கு 'முத்தமிழ்க் காவலர்' என்னும் விருது வழங்கி பாராட்டியது.

ஞா.தேவநேயப் பாவாணர்
தமிழன்னையின் கண்களில் வழிந்த அவலக் கண்ணீரை தமது எழுத்து வன்மையாலும், வலுவான இலக்கியச் சசான்றுகளாலும் துடைத்தெறிந்தவர் தமிழ்ப் பெரியவர் தேவநேயப் பாவாணர் (1902-1981). தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குறிப்புரை, தொல்காப்பியம் செசால்லதிகாரம் குறிப்புரை, ஒப்பியன்மொழி நூல், பழத்தமிழாட்சி, தமிழ் இலக்கிய வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். சேசலம் தமிழ்ப்பேரவை 1955ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில், பாவாணரின் அருந்தமிழ்த் தொண்டைப் பாராட்டி 'திராவிட மொழி நூல் ஞாயிறு' என்னும் பட்டமும், வெள்ளித் தட்டமும் வழங்கிப் பாராட்டியது. மேலும் தமிழக அரசு இவருக்கு, 1979ம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் 'செசந்தமிழ்ச் செசல்வர்' என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது.

அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு தெளிவான உரை எழுதி தமிழக மக்களால் நினைக்கப்படுபவர் துரைசாமிப் பிள்ளை (1903-1981). துரைசாமிப் பிள்ளை அவர்கள் கம்பீரமான தோற்றமும், கணீரென்ற குரல் வளமும் கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். தமிழ்ப்பற்றும், சைவப்பற்றும் இவருடைய இரு கண்களாகத் திகழ்ந்தன. தமிழ்த் தாமரை, சைவத் திறவு, கோமகள் கண்ணகி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் இயற்றிய 'சைவ இலக்கிய வரலாறு' என்னும் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகமே வெளியிட்டுள்ளது. இவருடைய உரைப்பணியையும், சைவப்பற்றையும் கண்ட, தமிழறிஞர்கள் இவரை 'உரை வேந்தர்' என்றும், 'சித்தாந்த கலாநிதி' என்றும் அழைத்தனர்.

சாமி சிதம்பரனார்
குறுந்தொகை என்னும் சங்க இலக்கிய நூலைக் கற்று மிக இனிய 'குறுந்தொகைப் பெருஞ்செல்வம்' என்னும் அரிய ஆய்வு நூலைப் படைத்தவர் சாமி சிதம்பரனார் (1900-1961). இந்நூல் சாமி சிதம்பரனாரின் ஆழ்ந்த புலமையை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகிறது.தொல்காப்பியத் தமிழர், சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம், இலக்கியம் என்றால் என்ன?, பண்டைத் தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், அணைந்த விளக்கு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் மூழ்கிவிட்ட சாமி சிதம்பரனார் பதினாயிரம் பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்திலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த 3,949 பாடல்களைத் தேர்தெடுத்து, கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் மயிலை சிவமுத்து
பேராசிரியர் மயிலை சிவமுத்து கருதிச் செய்த மாபெரும் பணிகள், மாணவர் உலகுக்கு மகத்தான பயன்களை வழங்கின. சொல்லப்போனால், தமிழ் மொழியின் வளமான வளர்ச்சிக்கும், தமிழர்களின் நலமான எழுச்சிக்கும் இந்தப் பணிகளே அடிப்படையானவை, அவசியமானவை என இவர் நம்பினார். பேராசிரியர் எழுதிய 'தங்கநாணயம்', ' ஒரு சந்நியாசியின் இளமைப்பருவம்', 'சிவஞானம்', 'நாராயணன்', 'நல்ல குழந்தை' போன்ற நூல்கள் மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. 1959ம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம், இவருக்கு கேடயம் அளித்து கவுரவித்தது. அந்த ஆண்டிலேயே, குழந்தை இலக்கியச் சேவைக்காக, மத்திய அரசும் பரிசு வழங்கிப் பாராட்டியது.

சதாசிவப் பண்டாரத்தார்
தமது ஆயுட்காலம் முழுவதையும் தமிழ்ப்பணிக்கென்றே அர்ப்பணித்துப் புகழ் பெற்றவர் தமிழறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். இவர் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள சொத்துக்கள் மிகவும் அரியவை; மிகவும் வித்தியாசமானவை. இவர், தமிழர் வரலாற்றை தமிழிலேயே அறிந்து கொள்ள வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் இயற்றிய 'முதற்குலோத்துங்க சோழன்', 'பாண்டியர் வரலாறு', 'திருப்புறம்பியத் தல வரலாறு', 'காவிரிப்பூம்பட்டினம்', ஆகிய வரலாற்றுத் திருநூல்கள் அறிஞரின் ஆர்வத்தாலும், தளர்வறியா உழைப்பாலும் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பான நூல்கள்.

பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி

1892ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள 'பூதலப்பட்டு' எனும் சிற்றூரில் பிறந்தார். திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை கருத்து மாறாமல் தெலுங்கில் மொழி பெயர்த்த பெருமை ஸ்ரீராமுலு ரெட்டியை சேரும். இது மட்டுமல்லாமல் பாரதியாரின் பாடல்களையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். ஆந்திர மாநில அரசு அவரை மதித்துப் பாராட்டி 'வித்வக்குலத் திலகம்' எனும் விருதளித்துப் பெருமைப் படுத்தியது. சித்தூர் சாரதா பீடம் அப்பேரறிஞருக்கு 'சாகித்ய ரத்னாகரம்' எனும் பட்டமளித்தது.

அறிஞர் சொ.முருகப்பா
காரைக்குடியை சேர்ந்த சி.சொ.சொக்கலிங்கம் செட்டியார் - விசாலாட்சி தம்பதியினருக்கு 1893ஆம்ஆண்டு மகனாகப் பிறந்தார் முருகப்பா. தமிழுக்கும், தமிழ் நாட்டாருக்கும் ஊட்டம் அளிக்கும் நோக்கத்துடன் 'குமரன்' என்னும் மாதப் பத்திரிகையை 1923ஆம் ஆண்டு துவங்கி வெளியிட்டார். சுயமரியாதை இயக்கத்திற்கு வல்லமை சேர்க்க 'சண்ட மாருதம்' என்னும் தினசரியைத் திருச்சியில் துவங்கினார் இவர். முருகப்பா தொடங்கிய 'குமரன்', கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் முதற் கவிதைக்கு இடமளித்து, பின் அவருடைய கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டு, கவிமணியைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்து பெருமை பெற்றது.

பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூக ரெங்கபுரத்தில் 1893ஆம் ஆண்டு வேங்கடாசல ரெட்டியாருக்கும், லட்சுமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் வேங்கடராஜூலு. இவருடைய பெற்றோர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட பக்தியின் காரணமாக இந்த பெயர் சூட்டினர். பன்மொழிப் புலமை பெற்றிருந்த இவர், மொழி ஒப்பீட்டு ஆய்வில், உ.வே.சா., தமிழ் அறிஞர் கா.நமச்சிவாய முதலியார் ஆகிய அறிஞர்களின் போற்றுதலைப் பெற்று, அவர்களின் துணையால் தமிழாசிரியராகப் பணியில் அமர்ந்தார். அறிஞர் வேங்கடராஜூலு ரெட்டியார், சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக 'கபிலர்' வரலாற்று நூலை 1936ஆம் ஆண்டு வெளியிட்டார்.

ந.சி.கந்தையாபிள்ளை

இலங்கையில் கந்தரோடை என்னுமிடத்தில் நன்னியர் சின்னத் தம்பியின் புதல்வராகப் பிறந்தார் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893 - 1967). பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப் பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்கநூல்கள் பலவற்றை வசன நடையில் எழுதிய இவர் இலங்கைத் தமிழறிஞராவார். 'தமிழ் ஆராய்ச்சி', 'தமிழ் விளக்கம்', 'முச்சங்கம்', ' நமதுநாடு', 'திராவிடம் என்றால் என்னஉ', 'நமது நாடு', ' தமிழர் சமயம் எது?', முதலிய ஆராய்ச்சி நூல்கள் அப்பெருந்தகையின் அறிவூட்டத்தையும், ஆய்வு நாட்டத்தையும் தெளிவுபடுத்தின. 'அறிவுரைக்கோவை',' அறிவுரை மாலை', 'பொருளுரைக் கொத்து' ஆகிய நூல்கள் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தன.

பண்டிதர் அருணகிரிநாதர்
எழுத்தாற்றலும், கற்பனையாற்றலும் மிகுந்த நாவல் ஆசிரியராக திகழ்ந்த அருணகிரிநாதர் (1895 - 1974) எழுதிய 'குமுதரஞ்சனி',' அமிர்தசாகரன்',' அமிர்த குமாரி','சற்குணவல்லி','பத்மாசனி','திருக்கழுக்குன்றத்துக் கொலை' ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழாசிரியர் பொறுப்பையே விட்டுவிட்டு புதினங்களைப் படைப்பதில் நாளும் ஈடுபட்டார் இவர். வரலாற்று நூல்கள் படைப்பதிலும் சாதனை படைத்தார் அருணகிரிநாதர். 'புத்தர்', 'அசோகர்', 'அயல்நாட்டுப் பெரியோர்', 'சேம்ஸ் கார்ல்பீல்டு', ' வில்லியம் மில்லர்' ஆகிய நூல்கள் பெரும் புகழ் பெற்றவை. இவருடைய கவியாற்றலை 'வடபழநியாண்டவர் அந்தாதி' தமிழுலகிற்கு தெளிவுபடுத்தியது.

அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 
இளமைக் காலம் முதலாகவே, திருக்குறளை மிகுந்த வேட்கையோடும், நிறைந்த ஈடுபாட்டோடும் பயின்று வந்த சேதுப்பிள்ளை (1896 - 1961), 'இல்லை உலகில் இது போலொரு நூல்' என வியந்தார். 

அதன் வெளிப்பாடே 'திருவள்ளுவர் நூல் நயம்' எனும் திருநூலை உருவாக்கம் செய்து, தமிழின் பெருமையை எடுத்துரைப்பதாகியது. அறிஞர் சேதுப்பிள்ளை தமிழில் படைத்தளித்த உரைநடை நூல்கள் பதினேழு. 

1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தா லும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார்.

அவற்றிற்குள்ளே சேதுப்பிள்ளையின் புகழைப் பெரிதும் ஓங்கச் செய்த 'தமிழகம் - ஊரும் பேரும்' என்ற ஆய்வுப் பெருநூல், செந்தமிழுக்குச் சிறந்த சொத்தானது. சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் திறமறிந்த பேரறிஞர் கா.சு.பிள்ளை, இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பணியாற்ற உதவினார்.


*********************************************************************************************************************
அ.சிதம்பரநாதனார்
தமிழின் சுவையை மற்றவர்களுக்குப் புலப்படுத்த முயன்ற தமிழறிஞர்களில் சிதம்பரநாதனாரும் (1907-1965) ஒருவர். இவர் 1928ம் ஆண்டு பி.ஏ., தேர்வெழுதி மாநிலத்திலேயே முதன்மையாகத் தேறினார். குறிப்பாக தமிழில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றமைக்காக ஜி.யூ.போப் தங்கப் பதக்கமும், பிராங்ளின் கெல் தங்கப் பதக்கமும் பரிசசாகப் பெற்றார். சிதம்பரனார் தமிழோசைச, முன்பனிக்காலம், இளங்கோவின் இன்கவி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், உழைப்பால் உயர்ந்த ஒருவர் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியாற்றியதற்காக தருமபுர ஆதீனம் சிதம்பரநாதனாருக்கு 'செசந்தமிழ்ச் செசல்வர்' என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது.

அறிஞர் அண்ணா:
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். சென்னை மாகாணம் என்ற நிலையை மாற்றி தமிழ் நாடு என்று பெயர் சூட்டினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்று, எழுத்திலும் பேச்சிலும் தனக்கேயுரிய பாணியைப் பின்பற்றி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். இவர் எழுதிய நூல்கள்.
சிறுகதைகள்
  1. இரும்பு முள்வேலி
  2. சொல்லாதது
  3. காமக் குரங்கு
  4. தீர்ப்பளியுங்கள்
  5. சுடுமூஞ்சி
  6. 'கொக்கரகோ'
புதினங்கள்
  1. ரங்கோன் ராதா
கட்டுரை நூல்கள்
  1. வெள்ளை மாளிகையில்
************************************************************************************************************************

கலைஞர் கருணாநிதி:

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, பிறப்பு: சூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார்.  கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.  அந்தக் கலைஞர் என்ற  பட்டமே  அவருக்கு பெயராக உள்ளது.
 தமிழ் மொழியைப் பற்றி இந்திய அரசிடம் எடுத்து சொல்லி,அதனை செம்மொழிப் பட்டியலில் சேர்த்தவர். இவர் எழுதிய நூல்கள்:
  • குறளோவியம்
  • நெஞ்சுக்கு நீதி
  • தொல்காப்பிய உரை
  • சங்கத் தமிழ்
  • ‎பாயும் புலி பண்டாரக வன்னியன்
  • ரோமாபுரி பாண்டியன்
  • தென்பாண்டி சிங்கம்
  • வெள்ளிக்கிழமை
  • இனியவை இருபது
  • சங்கத் தமிழ்
  • பொன்னர் சங்கர்
  • திருக்குறள் உரை
  • ‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று.
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்  என்பதோடு மட்டுமில்லாது, கணினித்துறையில் தமிழ் மொழி வளர்வதற்கு காரணமாகத் திகழ்பவர்.
******************************************************************************************

தி. வே. கோபாலையர்

தி. வே. கோபாலையர் (22 சனவரி 1926 – 1 ஏப்ரல் 2007) ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.

திருப்பனந்தாள் கல்லூரி (1946-1950), திருவையாறு கல்லூரி (1965-1979), பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துப் புதுவை மையம் [EFEO] (1979-2007) முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்தவர். இவர் மிகச்சிறந்த பதிப்பாளர் என்பது போல உரைவரையும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

********************************************************************************************************************

சிவஸ்ரீ அ.குமாரசுவாமிப் புலவர்


இலங்கை,சுன்னாகம் சிவஸ்ரீ அ.குமாரசுவாமிப் புலவர்
[ஜனவரி 18, 1854 மார்ச்சு 23, 1922 - அகவை 68]
“இலக்கணம், இலக்கியம், உரை, பதிப்பு, அகராதி, மொழிபெயர்ப்பு, புராண படனம், கண்டனங்கள் என்று விரிந்து பரந்த தளத்தில் குமாரசுவாமிப் புலவர் இயங்கி இருக்கின்றார். இவர் எழுதிய இலக்கண ஆய்வு நூல்களுள் இலக்கண சந்திரிகையும், வினைபகுபத விளக்குமும் முக்கியமானதாகும். இவை இவரது இலக்கண ஆராய்ச்சிக்கு சான்று பகர்வனவாகும்." என ஈழத்து எழுத்தாளர் த. அஜந்தகுமார் புகழ்ந்துரைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சுன்னாகம் என்னும் ஊரில் அம்பலவாணப் புலவருக்கும் சிதம்பரம் அம்மையாருக்கும் 1854 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.
தமது தந்தையிடம் ஆரம்பக் கல்வி பயின்றார். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களை முருகேச பண்டிதர், அ.நாகநாத பண்டிதர் ஆகியோரிடமும், சமஸ்கிருத மொழியை நாகநாத கனகசபைப் பண்டிதரிடமும் கற்றுத் தேர்ந்தார். சமயநூல்களை நமசிவாய தேசிகரிடம் கற்றார்.
தமது பதினாறாவது வயதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரிடம் இலக்கண, இலக்கியங்களில் தமக்கேற்பட்ட ஐயங்களைக் கேட்டுதா தெளிந்தார். கனகசபைப்புலவரிடம் இலக்கணம் சம்பந்தமானவற்றைக் கற்றறிந்தார். மேலும் சைவசித்தாந்த சாஸ்திரம் குறித்து இணுவில் நடராசையரிம் கற்றுத் தெளிவு பெற்றார். ‘பதிப்புச் செம்மல்’ சி.வை. தாமோதரம் பிள்ளையால் நிறுவப்பட்ட ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1878 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்பு 1884 முதல் தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். சின்னாச்சியம்மையாரை 1892 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு இருபது ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆறுமுக நாவலருக்குப் பின் சைவப்பிரகாச வித்தியாசாலையை உயர் கல்வி நிறுவனமாக வளர்த்திட பாடுபட்டார். சைவப்பிரகாச சபையின் ஒர் அங்கமாக நிறுவப்பட்ட காவிய பாடசாலையும் இவரது முயற்சியால் ஒரு மரபுக் கல்வி நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது வாதநோயால் பாதிக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு பணியிலிருந்து விலகினார்.
ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பணியாற்றிய போது நன்னூல், தொல்காப்பியம், முல்லையந்தாதி, கம்பரந்தாதி, தணிகைப்புராணம், கந்தபுராணம், இரகுவம்சம் முதலிய நூல்களை ஆழமாகக் கற்றுணர்ந்து, அர்ப்பணிப்புணர்வுடன் கற்பித்தார்.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் பயின்று பிற்காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞர்களாக விளங்கியவர்கள் வித்துவசிரோமணி சி.கணேசையர், சுன்னாகம் பண்டிதர் மாணிக்க தியாகராசா, தெல்லிப்பளை பாலசுப்பிரமணிய ஐயர், பன்னாலை வித்துவான் சிவானந்தையர் ஆகியோர் ஆவர்.
வண்ணார்பண்னை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இவரிடம் பயின்று பேரறிஞர்களாகத் திகழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பண்டிதர் இரத்தினேஸ்வர ஐயர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதர் மருதையனார், மட்டக்களப்பு புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை, தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை, வவுனியா பண்டிதர் இராசையனார் ஆகியோராவர்.
திருகோணமலை அகிலேசபிள்ளை, பழைய ஏடுகளைப் பரிசோதித்து கையெழுத்துப் பிரதியாகத் தயாரித்த திருக்கரசைப் புராணத்துக்கு அரியதோர் ஆராய்ச்சி உரை எழுதி அளித்தார். அந்நூல் 1893 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. திருவாதவூரடிகள் புராணத்தின் மூலத்தைத் திருத்திப் பதிப்பித்த புலவர், பின்னர் அதனை உரையுடன் பதிப்பித்தார். குணசேகரரால் இயற்றப்பட்ட யாப்பருங்கலத்தையும், குணவீர பண்டிதரால் ஆக்கப்பட்ட வெண்பாப் பாட்டியலையும் தாம் எழுதிய பொழிப்புரைகளுடன் 1900 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.
குமரகுருபர தேசிகரின் நீதிநெறி விளக்கத்துக்கு உரை எழுதி அந்நூலையும், தண்டியலங்காரத்துக்குப் புத்துரை எழுதியும், சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய மறைசை அந்தாதிக்கு உரை எழுதியும், தணிகைப் புராணத்தைத் தமது ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் இணைத்து பதிப்பித்தார். மேலும், காங்கேயர் என்பவர் எழுதிய வெண்பா யாப்பிற் பாடப்பட்ட 200 செய்யுள்களைக் கொண்ட உரிச்சொல் நிகண்டின் பன்னிரு தொகுதிகளையும் 1905 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.
மாவை இரட்டை மணிமாலை, மாவைப்பதிகம், துணுவைப்பதிகம், ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல், மிலேச்சமத விகற்பக்கும்மி, அமராபதிபூதூர் பாலவிநாயகர் பதிகம், வதுளைக் கதிரேசர் பதிகம், வதுளை மாணிக்க விநாயகர் பதிகம், வதுளைக் கதிரேசர் சிந்து, துணைவை அரசடி விநாயகர் பதிகம், துணைவை அரசரடி விநாயகர் ஊஞ்சல், கீரிமலை நகுலேசர் ஊஞ்சல், நகுலேசர் சதகம், இராமோதந்தம், கைலாய பிள்ளையார் ஊஞ்சல் முதலிய பல நூல்களையும், இலக்கண சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் என்னும் இலக்கண நூல்களையும், கண்ணகி கதை, தமிழ்ப் புலவர் சரிதம், சிவபாலசரிதம், இரகுவம்ச சரிதாமிர்தம் முதலிய உரை நடை நூல்களையும் புலவர் வெளியிட்டு உள்ளார்.
திருக்கரைசைப் புராண பொழிப்புரை, சூடாமணி நிகண்டு சொற்பொருள் விளக்கம், தண்டியலங்காரப்புத்துரை, கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, மறைசையந்தாதியுரை என்னும் நூல்களைப் படைத்து அளித்துள்ளார்.
மேகதூதக் காரிகை, ஏகவிருத்த பாரதம், இராமாணயம், பாகவாதம், இராவணன் சிவதோத்திரம் என்னும் மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி அளித்துள்ளார். தி.கனகசுந்தரம் பிள்ளையுடன் இணைந்து இராமாயணம் பாலகண்ட அரும்பத உரை எழுதி வெளியிட்டுள்ளார். மறைசையந்தாதி அரும்பதவுரை, கல்வளையந்தாதிப் பதவுரை, முத்தக பஞ்சவிஞ்சதி குறிப்புரை முதலிய உரைநூல்கள் இவரது பரந்துபட்ட இலக்கிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிப் புலமையும் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆசாரக் கோவை, நான்மணிக்கடிகை, நகுமலைக் குறவஞ்சி நாடகம், உரிச்சொனிகண்டு முதலிய நூல்களைப் பதிப்பு வெளியிட்டுள்ளார். பிரபந்தங்களையும், தனிச்செய்யுள்கள் பலவற்றையும் எழுதி அளித்துள்ளார்.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரால் இயற்றப்பட்ட சிசுபாலசரிதம், கண்ணகி கதை என்பனவும், அவரால் வெளியிடப்பட்ட நூல்களுக்கு எழுதியுள்ள உரைகளும், ‘செந்தமிழ்’, ‘தமிழ்ப் பொழில்’ முதலிய இதழ்களில் வெளிவந்த இலக்கிய இலக்கணம் தொடர்பான அவருடைய ஏராளமான கட்டுரைகளும் அவரது சிறந்த உரைநடையை விளக்குவனாக இருக்கின்றன.
உதய தாரகை, இலங்கைநேசன், உதய பானு, இந்து சாதனம் முதலிய ஈழத்து இதழ்களிலும், செந்தமிழ், ஸ்ரீலோகரஞ்சனி, ஞானசாகரம், வைசிய மித்திரன், தமிழ் மகவு முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும் இலக்கிய, இலக்கண, சமய, வரலாறு முதலியவைகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
நன்னூலார் வகுத்துக் கூறிய நட, வா, மடி, சீ முதலிய 23 வினைப்பகுபதங்களுக்கும், பகுதி விகுதி முதலிய உறுப்புகளை பகுத்துக்காட்டி, ‘வினைப்பகுபத விளக்கம்’ என்னும் நூலினையும், ‘இலக்கணச் சந்திரிகை’ என்னும் நூலையும் எழுதி அளித்துள்ளார். இவ்விரு நூல்களும் நன்னூல் கற்போருக்குப் பேருதவியாக அமைந்துள்ளனவென அறிஞர்கள் பாரட்டுகின்றனர்.
‘இலக்கியச் சொல்லகராதி’ என்னும் பெயரில் 1924 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகராதி நூலானது, சங்க இலக்கியங்களைக் கற்போருக்குப் பயனுள்ளதாக விளங்குகிறது.
மேகதூதக்காரிகை, சாணக்கிய நீதி வெண்பா, இதோபதேசம் முதலிய படைப்புகளை சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்’ என்னும் நூலினை எழுதி 1916 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அந்நூலில் 182 தமிழ்ப்புலவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 1898 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும், 1902 ஆம் ஆண்டு முதல் அதன் செயலாளராகவும் அரும் பணியாற்றினார். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இரண்டிலும் வித்துவ அங்கத்தினராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித தேர்வுகளுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று பணியாற்றினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமுள்ள கோயில்களிலும் பாடசாலைகளிலும் சமயம், கல்வி சம்பந்தமாக புலவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பொதுமக்கள் மத்தியில் சமய ஒழுக்கத்தையும் கல்வியறிவை வளர்ப்பதற்கு விழிப்புணர்வையும் உருவாக்கியது.
கண்டனமெழுதுவதிலும் இவர் மிகத் திறமை பெற்றவராக விளங்கினார். ஆறுமுக நாவலர், முருகேச பண்டிதர், சங்கர பண்டிதர் ஆகியோரிடம் கண்டனம் எழுதும் கலையைக் கற்றார். இலக்கியம், இலக்கணம், சமயம் முதலிய துறைகளில் போலிக் கல்விமான்களையும், போலிக் கொள்கைகளையும் காரசாரமாகக் கண்டித்துள்ளார். சபாபதி நாவலர், உ. வே. சாமிநாதையர் போன்றோருக்கும் கண்டனம் எழுதியுள்ளார்.
“காவி வேட்டியினால் கிளம்புகிற சாமிகள் மாதிரி, தமிழ்ப் பாஷையின் பேரால் புகழ் சம்பாதிக்கிற எண்ணம் புலவருக்குக் கிடையாது . தமக்குத் தாழ்வு வந்த போதும் தம்மாலே தமிழுக்குத் தாழ்வு வராமற் பாதுகாப்பதே புலவரவர்கள் வாழ்க்கையின் நோக்கமாயிருந்தது. செல்வாக்குள்ளவர்கள் தமிழுக்குச் செய்யுந் துரோகங்களுக்குப் புலவர் அவர்களின் தலை ஒன்றே ஒன்றுதான் தமிழ்நாடு முழுவதும் சாய்ந்து கொடாதது” எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை புகழாரம் சூட்டியுள்ளார்.
குமாரசுவாமிப் புலவர் 22.03.1922 அன்று தமது அறுபத்தெட்டாவது வயதில் காலமானார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரா. திருமுருகனார்

தமிழ்த்தொண்டு புரிந்த அறிஞர் இரா. திருமுருகனார் அவர்களின் வரலாற்றுச்சுருக்கம் (மார்ச் 16, 1925) புதுச்சேரி மாநிலம், கூனிச்சம் பட்டு கிராமத்தில் ராசு அரங்கநாயகி தம்பதிக்கு மகனாக 1929ல் இதே நாளில் பிறந்தவர், திருமுருகன் எனும் சுப்பிரமணியன். இவர் தமிழில் பண்டிதர், புல்லாங்குழல் இசையில் மேல்நிலை. கல்வியியலில் முதுகலை, சிந்துப்பாடல் யாப்பிலக்கண ஆய்வில் முனைவர் உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர். புதுச்சேரி அரசு பள்ளியில் தமிழாசிரியர், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தனி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக போராடினார். தமிழ் வளர்ச்சி நடவடிக்கை குழு சிறப்பு தலை வர், புதுவை தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளை நிறுவனர், 'தெளிதமிழ்' இதழின் ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். 'இலக்கணச்சுடர், முத்தமிழ் சான்றோர், இலக்கணக்கடல்' உள்ளிட்ட பட்டங்களை பெற்ற இவர், 2009, ஜூன் 3ல் தன், 80 வது வயதில் மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------------
இராமலிங்க அடிகளார் 

வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

1850ஆம் ஆண்டு ராமலிங்க அடிகளாரருக்கு அவரது மூத்த சகோதரியின்மகளான தனக்கொடி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். எனினும் திருமணம் முடித்த அன்று இரவே திருமண வாழ்க்கையை துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டு உலக மக்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் துயர் போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து கடலூர் சென்ற இராமலிங்க அடிகளார், அங்கு 1865 ஆம் ஆண்டு “சமரச சன்மார்க்க சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். இதன் மூலம் மக்களுக்கு கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர், ஜீவகாருண்யம், பிற உயிர்களின் பசி போக்குதல், சாதி சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதுப் போன்ற கொள்கைகளை பரப்பி வந்தார்.

தன் வாழ்நாளில் சாதி – சமய வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக்க அரும்பாடுபட்டவரும், மக்களுக்கு மெய்யான இறைவழியை காட்டி அவர்களை இறைநிலையை அடைய தொடர்ந்து முயற்சித்தவருமான வள்ளல் பெருமான் எனப்படும் வள்ளலார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு தனி அறைகுள்ளாக சென்று தாழிட்டுக் கொண்டார் அருள் ஜோதியில் கலந்தார்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள் 

  1. அருளாசிரியர்
  2. இதழாசிரியர்
  3. இறையன்பர்
  4. உரையாசிரியர்
  5. சமூக சீர்திருத்தவாதி
  6. சித்தமருத்துவர்
  7. சிறந்த சொற்பொழிவாளர்
  8. ஞானாசிரியர்
  9. தீர்க்கதரிசி
  10. நூலாசிரியர்
  11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
  12. பதிப்பாசிரியர்
  13. போதகாசிரியர்
  14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
  15. பண்பாளர்

வள்ளலார் பதிப்பித்த நூல்கள் 

  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டைமண்டல சதகம்

வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள் 
  1. மனுமுறைகண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

-**************************************************************************************
செந்தமிழ்க் கலாநிதி, வித்துவான். கா.ம. வேங்கடராமையா
(ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995)
காரம்பாக்கம்
தொண்டை நாட்டில், செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னைக்கருகிலுள்ள போரூருக்குப் பக்கத்தில் காரம்பாக்கம் என்ற சிற்றூரில் கிருஷ்ணய்யா- வெங்கடசுப்பம்மாள் என்ற தம்பதியர் வசித்து வந்தனர். பலதலைமுறைகட்கு முன் ஆந்திர நாட்டிலிருந்து குடிபெயர்ந்த வேகிநாடு என்ற பிரிவைச் சேர்ந்த அந்தணர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தனர்.
ம. வேங்கடராமையா. பூவிருந்தவல்லி அரசினர் பள்ளியில் தமது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் இலயோலா கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) பட்டப் படிப்பில் சேர்ந்து சிறந்த முறையில் தேறினார். , தமிழ் மீதிருந்த ஆராக்காதலால் தமிழ் வித்துவான் படிப்பையும் எம்.ஏ. (தமிழ்) பட்டத்தையும் சிறப்பான முறையில் படித்துத் தேர்ந்தார். பி.ஓ.எல். (BACHELAR OF ORIENTAL LANGUAGES) என்னும் சிறப்புத் தேர்விலும் தேறிப் பட்டம் பெற்றார். செங்கற்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.
இவ்வாறு தமிழ்ப்பணி புரிந்து வரும் காலத்தில் அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இறைவனது திருவருளால் 1945-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். இந்தப் பணியில் அவர் சேரும் பொழுது திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தில் தலைவராக இருந்தவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவார்.
மடத்துத் தலைவரின் ஊக்கத்தாலும் அருளாசியாலும் கா.ம. வேங்கடராமையா. அவர்கள் ஆற்றிய ஆசிரியப் பணியும் தமிழ்ப் பணியும் மிகச் சிறப்பானவை. மடத்தின் தமிழ், சைவ நூல்களின் பதிப்புகளில் இவர்தம் பங்கும் பங்களிப்பும் அளவிடற் கரியன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்களைத் தமிழகத்துக்கு உருவாக்கித் தந்தவர் இவர்.

திருக்குறள் இருக்கை
இங்ஙனம் கல்லூரி முதல்வராக 28 ஆண்டுகள் சீரிய முறையில் பணியாற்றிய . கா.ம. வேங்கடராமையா பின்னர்ச் செட்டிநாட்டு அரசர் முத்தையவேள் நிறுவிய ’தமிழ் ஸம்ஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் ஆராய்ச்சி’ நிலையத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் (TIRUKKURAL CHAIR) ஆய்வாளராக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடித் துறையின் தலைவராகச் சீரிய பணியாற்றினார்.

நூல்கள்
இங்ஙனம் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் சிறப்பான பணிபுரிந்து வந்த . கா.ம. வேங்கடராமையா நூற்றுக்கணக்கான சமய, இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவருடைய தமிழ்ப் புலமையையும் ஆராய்ச்சி வல்லமையையும் உணர்த்தும் நூல்கள் வருமாறு:
1. இலக்கியக் கேணி-1961
2. சோழர் கால அரசியல் தலைவர்கள்-1963
3. கல்லெழுத்துக்களில்-1963
4. கல்வெட்டில் தேவார மூவர்
5. STORY OF SAIVA SAINTS
6. ஆய்வுப் பேழை
7. சிவன் அருள் திரட்டு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
8. நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
9. திருக்குறள் குறிப்புரை
10. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
11. திருக்குறள் அறத்துப்பால் பொழிப்புரை
12. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு-மெக்கன்சி சுவடி ஆய்வு. 1985
13. திருக்குறள் பரிப்பெருமாள் உரை-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். 1993
14. திருக்குறள் சைனர் உரை-பதிப்பு, சரஸ்வதி மகால். 1994
15. விண்ணப்பக் கலிவெண்பா (வள்ளலார் ஆய்வு)
16. திருவருள் முறையீடு (வள்ளலார் ஆய்வு)
17. திருவடிப் புகழ்ச்சி (வள்ளலார் ஆய்வு)
18. A HAND BOOK OF TAMIL NADU (FIRST PART) 8-ஆவது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு.
19. தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ் நோக்காய்வு.

தமிழ்ப் பணி
கா.ம. வேங்கடராமையாஅவர்கள் தாம் ஆற்றிய 50 ஆண்டுத் தமிழ்ப் பணிக்குப் பெற்ற சிறப்புக்களும், பட்டங்களும் பற்பல; அவற்றுள் கீழ்கண்டவை சிறப்பானவை.
1. சிவநெறிச் செல்வர் (மதுரையாதீனம்)
2. கல்வெட்டாராய்ச்சிப் புலவர் (காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்)
3. செந்தமிழ்க் கலாநிதி (தருமையாதீனம், தங்கப் பதக்கத்துடன்)
4. தமிழ் மாமணி (பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்)
5. ஸ்ரீ-ல-ஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அருளிய பண முடிப்புக்கள், பொன்னாடைகள், தங்கப்பதக்கம், பொன் மாலைகள்.
6. சைவத் தமிழ் ஞாயிறு-தஞ்சை அருள் நெறித் திருக் கூட்டம்.
7. குருமகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அருளிய பொன்னாடைகள்.
8. தருமை 26-ஆம் குருமகாசந்நிதானம் அருளிய தங்கப்பதக்கம்.
9. கயிலை மாமுனிவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் அருளிய பொன்னாடைகள், பொன் மோதிரம்.
10. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளிய பொன்னாடைகள், பொன் மோதிரம்.
11. கம்பன் கழகம்-பாராட்டும் பணமுடிப்பும்
12. தமிழகப் புலவர் குழு-முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. பாராட்டு
கா.ம. வேங்கடராமையா தமது இறுதிக்காலத்தில் சில ஆண்டுகள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் டாக்டர் வ.அய். சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் தமது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்ந்தார்.
இங்ஙனம் அல்லும் பகலும் அயராது தமிழ்ப் பணியில் ஈடுபட்ட கா.ம. வேங்கடராமையா அவர்கள் 31-1-1994 அன்று தாம் இடையறாது வணங்கி வந்த சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார். இவர் துணைவியார் வாழ்வரசியாக 1-06-1982-இல் இறையடி அடைந்தார்.
பிறப்பால் தெலுங்கராய் இருப்பினும், தமிழ்மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தமது பிள்ளைகளுக்கு வேறு உலகியல் உயர்கல்வி கற்பிக்கும் வாய்ப்பிருந்தும் தமிழ்க் கல்வியே உயர்கல்வி என்னும் உறுதியுடன் அவர்களைத் தமிழ்ப் புலவராக்கித் தமிழாசிரியராகப் பணிபுரியுமாறு செய்த ஒரே சான்றோர் .கா.ம. வேங்கடராமையா. என்று உறுதியாகக் கூறலாம்.
கா.ம. வேங்கடராமையா அவர்கள் அயராது உழைப்பவர். பொன்போன்ற காலத்தை வீணாக்காதவர். மென்மையான தன்மை உடையவர். தாமறியாத பொருளைப் பற்றி யார் எது கேட்பினும் அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று கூறும் உறுதி படைத்தவர். நேர்மையும், தூய ஒழுக்கமும் இவர்தம் சிறப்பு இயல்புகள். நாளொன்றுக்குக் குறைந்தது 12 மணி நேரம் உழைத்தவர். நன்றியறிவுடைமையும் நாவடக்கமும் உடையவர். எல்லாப் பொழுதினும் மகாதேவ நாமத்தை இடையறாது ஓதி வந்தவர்.
*********************************************************************************************************
மனோன்மணியம் பெ சுந்தரம் பிள்ளை
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ஆம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார்.
1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார்.திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

ஆசிரியப் பணி
1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார்..

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

மனோன்மணீயம்
ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.



தமிழவேள் கோ. சாரங்கபாணி
கோ. சாரங்கபாணி (ஏப்ரல் 19, 1903 - 1974) சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றிய தமிழறிஞர் ஆவார். பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1935 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார்.

சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர் களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெறுவோம் என்ற வழியில் சாரங்கபாணி செயல்பட்டார். தமி­ழர் பிரதி­நிதித்­துவ சபை, தமி­ழர் சீர்­திருத்­தச் சங்­கம் ஆகிய அமைப்பு­களை நிறு­வினார். தமிழ்க் கல்­வித் துறையை அன்­றைய மலாயா பல்கலைக்­க­ழ­கத்­தில் அமைக்க சேவையாற்றினார். இந்­தி­யர்­களை சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மைப் பெற ஊக்­கு­வித்தார். கல்­வி­யி­லும் வேலை­யி­லும் இந்­தி­யர்­ முன்­னேற வேண்டும் என்று உந்துதல் அளித்தார்
பிறப்பு 1903- ஆம் ஆண்டு தமிழகத்தின் திருவாரூரில் பிறந்தார். திருவாரூரில் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேசன் பரீட்சையில் தேறினார். 1924- ஆம் ஆண்டில் தமது இருபதாவது வயதில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் "முன்னேற்றம்" என்னும் பத்திரிகையில் துணையாசிரியராக தமது எழுத்துப் பணியைத் துவங்கினார்.

1928 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் பெரியாரைச் சந்தித்த பிறகு சீர்திருத்தக் கருத்துகளை தீவிரமாகப் பரப்பத் தொடங்கினார். 1930 ஆம் ஆண்டில் முன்னேற்றம் பத்திரிகையின் ஆசிரியரானார். இப்பத்திரிகையில் பல சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் தொடர்து எழுதினார்.
"தமிழ் முரசு" 1934-இல் "தமிழ் முரசு" செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். இப்பத்திரிகை மக்களிடம் அதிக செல்வாக்குப் பெறவே அது 1935- ஆம் ஆண்டு முதல் தினசரியாக விரிவடைந்தது. தமிழ் முரசு பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின் முற்போக்கான இலட்சியங்களையும் சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பையும் சனாதனக் கொள்கைகளையும் எழுதியது.



நாளிதழ், மாத இதழ் கோ.சா அவர்கள் 'சீர்திருத்தம்' என்ற மாத இதழையும் 'ரிபார்ம்' (Reform) என்னும் ஆங்கில மாத இதழையும், 'இந்தியன் டெய்லி மெயில்' (Indian Daily Mail) என்ற ஆங்கிலத் தினசரி செய்தி இதழையும் நடத்தினார்.
"தமிழவேள்" தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955- ஆம் ஆண்டு கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்குத் "தமிழவேள்" எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார். ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ்த் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------
இர.ந. வீரப்பனார் 

மலேசியத் தமிழ் அறிஞர், எழுத்தாளர், ஆசிரியர்

உலகத் தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை உரித்தாக்கிக் கொண்டவர்.

இலங்கையில் பிறந்தவர். அங்கிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறியவர். மலேசியாவை தாய்நாடாக மதித்தவர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்.

‘உலகத்தமிழர் குரல்’ என்ற மாதிகை சிற்றிதழை வெளியிட்டு வந்தார். மலாய் தமிழ் ஆங்கில அகரமுதலி, மலேசியத் தமிழர்கள், உலகத் தமிழர், இலக்கிய இதயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.

43 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களோடு தொடர்பு கொண்டு, ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். 33 நூல்களை எழுதி வெளியிட்டு மலேசியத் தமிழர்களுக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.

40 நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழ் உயர்வுக்காக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக 25 ஆண்டுகாலம் இருந்து தொண்டாற்றினார். உலகத் தமிழர் - மலேசியத் தமிழர்கள் இடையே நல்ல அறிமுகத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தியவர்.




தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய பயன்மிகு பணிகளையும் மேற்கொண்டவர். மலேசியத் தமிழரின் நிலையை புள்ளி விளக்கங்கள், வரலாற்று எடுத்துக் காட்டுகளோடு தொகுத்து இவர் எழுதிய ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற புத்தகம் மிகவும் புகழ்மிக்கது.
பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்திய இவர், தன் பெயருக்கு முன்னால், முதலில் தாயின் பெயரையும் (இரத்தினம்), பின்னர் தந்தையின் பெயரையும் (நடேசன்) முதலெழுத்துகளாக இணைத்துக் கொண்டார்.

தன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டியதோடு அவர்களுக்குத் தமிழ் உணர்வையும் ஊட்டி வளர்த்தவர். இவரது மகள் வீ.முல்லை, சிறந்த எழுத்தாளராக, தமிழ்ச் சிந்தனையாளராக தமிழ்ப் பணி ஆற்றிவருகிறார்.

இவர் தொடங்கிய 'மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம்' ஆகிய அமைப்புகள், தமிழுக்கு பயன்மிகு பணிகளை இன்றும் அமைதியாக செய்துவருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உலகத் தமிழர் என்று போற்றப்பட்டவரும், புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதியவருமான இர.ந. வீரப்பனார் 69 அகவையில் (1999) மறைந்தார். 

*************************************************************************************
அடிகளாசிரியர்:
இயற்பெயர் குருசாமி ,தமிழ் மீது உள்ள பற்றால் அடிகளாசிரியர் என்று பெயர் மாற்றம் செய்தார்.எட்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அடிகளாசிரியர், முதல் மகனுக்கு வைத்த பெயர் பேராசிரியர். சொல் வேறு, செயல்வேறு என முரண்பாடாக இல்லாமல், இளங்கோவன், நச்சினார்க்கினியன், சிவபெருமான் என்றும் பெண் பிள்ளைகளுக்கு திருநாவுக்கரசி, குமுதவல்லி, செந்தாமரை, சிவா என, தான் உயிராய் சுவாசித்த தமிழ்ப் பெயர்களையே சூட்டினார். அடிகளாசிரியரிடம் தமிழ் கற்ற மாணவர்கள், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மெச்சத்தக்க ஆய்வு களைச் செய்து வருகின்றனர்.



ஏப்ரல் ௧௭, ௧௯௧௦.
பிறப்பு கூகையூர், விழுப்புரம், தமிழ்நாடு.
சிவனடி சேர்ந்தது  ஜனவரி ௮, ௨௦௧௨.

௨௦௧௧ ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ்ப் பணிக்காக ௨௦௦௫ - ௨௦௦௬ ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர்.

அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள கூகையூரில் பிறந்தவர் [௧௯௧௦] சாதாரண ஆண்டு, சித்திரைத் திங்கள் ஐந்தாம் நாள், ஞாயிற்றுக்கிழமை). இவர் தம் பெற்றோர் பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள். வீரசைவ மரபினர். அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும். 

அடிகளாசிரியரின் ஏழாம் அகவையில் தந்தையார் இயற்கை எய்தினார். எனவே அடிகளாசிரியர் தம் தாய்மாமனான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணிய தேவர், கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். தாய்மாமன்கள் மருத்துவம், சோதிடம் வல்லவர்கள். அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார்.

பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தவர். முசிறியில் வாழ்ந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய வீ. குமார வீரையர் என்பவரிடம் நன்னூல் காண்டிகையுரையைப் பாடம் கேட்டவர். ௧௯௩௭ இல் இவர் தனித்தேர்வராகத் தேர்வெழுதி ௧௯௩௭ இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றவர்.

௧௪.௭. ௧௯௩௮ இல் மயிலம் திருமடத்தில் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில்  முதல் ஆசிரியராக  இவர் அமர்த்தம் பெற்றார். அங்கு விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார். அதுபொழுது மறைமலையடிகளார், நா.மு.வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகியதாக அறியமுடிகிறது.

௩.௭.௧௯௫௦ முதல் ௩.௭.௧௯௭௦ வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கினார். இவர் வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்கள் விரும்பிப் பாடம்கேட்பது உண்டாம். கடுஞ்சொல் சொல்லாதவர். இவருக்குச் சினம் வருவதே இல்லையாம். இவர்மேல் மாணவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. 

கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த பொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்புகளை இலவயமாக நடத்தியுள்ளார். இதில் பல மாணவர்கள் கற்றுள்ளனர். இங்குப் பணிபுரியும்பொழுது பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். சரசுவதிமகால் நூலகம் இதில் இவரைப் பயன்படுத்திக் கொண்டது.

௧௯௭௭ இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப்  பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

௨௦. ௧. ௧௯௮௦  முதல் ௧. ௧௦ .௧௯௮௫ வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் சிறப்புநிலை இணைப்பேராசிரியராக அமர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார். மூப்பின் காரணமாகத் தாமே அப்பணியிலிருந்து விலகி வந்தாலும், வீட்டிலிருந்தபடியே அப்பணியை நிறைவுசெய்து வழங்கினார். அவ்வகையில் தொல்காப்பியம் செய்யுளியல், பிற இயல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இவர் எழுதிய ௧௦௦ பாடல்களைக் கொண்ட சிறுவர் இலக்கியத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இவரது பங்காற்றலுக்காக தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ்ப் பேரவை செம்மல் என்று பாராட்டியுள்ளது..

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.’ 
[திருமந்திரம் .]

என்னும் திருமந்திரத்தையே தனக்கிடப்பட்ட தெய்வ ஆணையாகக் கொண்டு தமிழ்ப் பணி செய்து வந்தார்.

புதிய இலக்கியம் புனைவதை விட முன்னோர் மொழிந்தவற்றைப் பின்னோர் அறியப் பதிப்பிக்கும் பணியே சிறப்புடையது என எண்ணித் தொல்காப்பியம் முதலான முப்பது  நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து செயலாற்றினார்.

பலவகைகளிலும் ஆராய்ந்து முடிவை வெளிக்கொணர்தல், கற்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் புரியும் படியும் கருத்துக்களைத் தருதல், சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு பதிப்பித்தல், நூலாசிரியரின் அல்லது உரையாசிரியரின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கருத்துக்களை அறிந்து உரையெழுதுதல் போன்றவற்றைத் தம் குறிக்கோளாகக் கொண்டு தொல்காப்பியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார்.

            இலக்கணங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போதுஇலக்கியத்திற்கு உரை எழுதுவது ஓரளவு எளிமையாகும். ஆனால் மரபு வழுவாது கருத்துக்கள் கூறவேண்டிய கட்டாயம் இலக்கணத்திற்கு உண்டு. அது மட்டுமல்லாமல் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் குறிக்கோளை உள்ளத்தில்கொண்டு இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர்களுள் அடிகளாசிரியர் முக்கியமானவர்.

‘அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகள் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் பதிக்கப்பட்டுள்ளவை என்பதே அவற்றின் தனிச் சிறப்பாகும்.’ [சிவபெருமான்,௨௦௦௯]

அடிகளாசிரியர் சி.வை.தாமோதரம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி, தி.வே.கோபாலையர், போன்ற தொல்காப்பியப் பதிப்பாசிரியர் களுக்கும் இவருக்குமான பதிப்பு வேறுபாடுகள் பல உண்டு. முதலாவதாக, சிறப்புப் பாயிரத்திற்கு மட்டுமே இருபது பக்க அளவில் விளக்கவுரை எழுதியிருப்பது அவருடைய தனித் தன்மையாகும். இரண்டாவதாக, இளம்பூரணாரின் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பின் போது வெகுவாக ஆராய்ந்து, சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் ஆகியோரின் உரைகளையும் இலக்கண நூல் உரையாசிரியர்களின் உரைகளையும் நிகண்டுகளையும் பயன்படுத்தி உரை எழுதியது. மூன்றாவதாக, உரைக்கே உரைவிளக்கம் எழுதிப் பதிப்பிக்கும் முறையைக் கையாண்டார்.

உரையாசிரியர்களின் மொழி நடையைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் இன்னல்களை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு உரைவிளக்கம் அளித்தார். அதை அவருடைய சிறந்த பங்களிப்பு எனக் கூறலாம்.

இவர் இளம்பூரணாரின் உரையைத் தெரிவுசெய்ததற்குக் காரணம், ‘தொல்காப்பியத்தை உணர்ந்துகொள்ள இளம்பூரணர் உரையே ஏற்றது என்பது அடிகளாசிரியரின் துணிபாகும். எனவே, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்-செய்யுளியல் மற்றும் ஏனைய எட்டு இயல்கள் ஆகியவற்றைப் பதிப்பிக்க இளம்பூரணர் உரையையே தேர்வு செய்தார். அவ்வாறே பதிப்பித்தும் வந்துள்ளார்.’  எனச் சிவபெருமான் தம் முன்னுரையில் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பிய எழுத்ததிகார வளர்நிலைப் பதிப்பில் இவரின் பங்கு முக்கியமானது. அவ்வுரையைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் போது அதிலுள்ள பிழைகளை நீக்கி வடிவமைத்தார். அதுவே மாணவர்களையும் ஈர்த்தது என்பதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை.

சிறப்புப் பாயிரத்திற்கென ௨௫ பக்க அளவில் விளக்க உரையும் நூல் மரபு பற்றி ௩௫ பக்கங்களில் தெளிவுரையும் எழுதியது அவர்க்கு இலக்கணத்தில் இருந்த ஆர்வத்தை மேம்படுத்தி நம் இலக்கண அறிவையும் தூண்டியதில் வியப்பொன்றுமில்லை.

அடிகளாசிரியர் மிகத் திறமை வாய்ந்த பதிப்பாசிரியர். அவரது தொல்காப்பிய பதிப்புக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இன்றும் தங்கள் இலக்கண வகுப்புகளில் பயன்படுத்துவது அவரின் பதிப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். அவரின் தனிக் கவனமும் பதிப்புக்கள் செம்மையாக வரவேண்டும் என்பதில் காட்டிய அக்கறையும் அவருடைய பதிப்புக்கள் சிறந்து விளங்கக் காரணமாயின. அவருடைய ‘உரைக்கு உரைவிளக்கம்’ அளித்த உத்தி காலந்தோறும்  பின்பற்றப்படும் முன்மாதிரியாகத் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை.

நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என்னும் மூவரில் பதிப்பாசிரியரின் பணிசிறப்பு மிக்கது என்பதை அடிகளாசிரியர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இவர் தம் தொல்காப்பிய ஆராய்ச்சியைப் போற்றி ஐந்து இலட்சம் உருபாய் மதிப்புள்ள தொல்காப்பியர் விருதினை மாண்புயர் இந்தியக் குடியரசுத்தலைவரின் திருக்கையால் வழங்கிச் சிறப்பித்தது. இத்தகு பெருமைக்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள் ௮. ௧. ௨௦௧௨ இரவு ௧௧ மணிக்குத் தம் ௧௦௨ ஆம் அகவையில் சிவப்பரம்பொருளடி எய்தினார்.

எழுதிய நூல்கள்:
அருணகிரி அந்தாதி (௧௯௬௭) சரசுவதி மகால் வெளியீடு.
மருதூரந்தாதி உரை (௧௯௬௮)
காலச்சக்கரம் ௧௯௬௯ (சோதிடம்)
வராகர் ஓரா சாத்திரம் ௧௯௭௦
சிவஞானதீபம் உரை ௧௯௭௦
சிவப்பிரகாச விகாசம் ௧௯௭௭
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை ௧௯௩௭
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை ௧௯௬௭
தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை ௧௯௬௭(மு.கோவிந்தராசனாருடன்)
திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை ௧௯௫௮
திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை ௧௯௫௬
சிவபுராணச் சிற்றுரை ௧௯௮௮
சதமணிமாலை மூலமும் உரையும் ௧௯௯௦
சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை ௧௯௯௧
சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை ௧௯௯௧
குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் ௧௯௯௧
இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் ௨௦௦௧
சசிவன்ன போதம் மூலமும் உரையும் ௨௦௦௨
பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் ௨௦௦௩

பதிப்பு நூல்கள்:
வீரசைவப் பிரமாணம் ௧௯௩௩
சதமணிமாலை ௧௯௩௫
சிவப்பிரகாச விகாசம் ௧௯௩௫
காமநாதர் கோவை ௧௯௫௭
மேன்மைப் பதிகம் ௧௯௫௭
சதுர்லிங்க தசகோத்திர சதகம் ௧௯௫௮

ஆராய்ச்சி நூல்கள்:
தொல்காப்பியம்- எழுத்தத்திகாரம்-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு ௧௯௬௬
ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,௧௯௭௮
தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம் த.ப. ௧௯௯௦
தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல் த.ப.௧௯௮௫
தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)

படைப்பிலக்கிய நூல்கள்:
பிள்ளைப்பாட்டு ௧௯௪௫
திரு அரசிலிக்காதை ௧௯௪௮
குழந்தை இலக்கியம் ௧௯௬௩
சான்றாண்மை ௧௯௬௪
சென்னிமலை முருகன் தோத்திரம் ௧௯௮௦
அரசியல் இயக்கம் ௧௯௮௧
பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் ௧௯௮௧
அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் ௧௯௮௨
உளத்தூய்மை,௧௯௮௪
தண்ணிழல் ௧௯௯௦
மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் ௧௯௯௩
தொழிலியல் ௧௯௯௩
மெய்பொருட்காதை
தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் ௧௯௯௮
ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் ௧௯௯௩
சிறுவர் இலக்கியம்
எங்களூர்
தொடக்கப்பள்ளி - நாடகம்
வீரசைவ சிவபூசாவிதி ௧௯௪௯
விலையேற்றமும் வாழும் வழியும் ௧௯௮௪
திருமூலரும் பேருரையும் ௧௯௯௮
காயத்துள் நின்ற கடவுள்,௧௯௯௯
திருவாசக அநுபூதி ௨௦௦௦
கீதையின் அறிவுப்பொருள் ௨௦௦௦
திருமந்திர உணர்வு ௨௦௦௧
தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
திருமந்திரத்தில் எட்டாம் திரும்முறை,௨௦௦௫

தமிழ் எண்கள்:
௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௧௦.

*******************************************************ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை

அபிதான கோசத்தை
 ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஓர் ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர். தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதான கோசத்தை எழுதியவர். முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார். பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. 

யாழ்ப்பாணம்

ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார். 

 தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். 

இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார். 

சத்தியாபிமானி
அதன் பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார். 1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். 

சி. வை. தாமோதரம்பிள்ளையின் தொல்காப்பியம் சொல்லதிகாரப்பதிப்பும், உ. வே. சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன. 1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். 

நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார். ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது. 

நாவலர் அச்சுக்கூடம்
 1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளையவர்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார். 

 முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. 

அபிதானகோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவருமுன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

 இயற்றிய நூல்கள்: 
 இலங்கைச் சரித்திர சூசனம் (1883)
காளிதாச சரித்திரம் (1884) 
பிரபோத சந்திரோதய வசனம் (1889) 
விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897) 
அபிதானகோசம் (1902) 
பாரதச் சுருக்கம் (1903) 
நன்னூல் இலகுபோதம்-எழுத்ததிகாரம் (1904) 
நன்னூல் இலகுபோதம்-சொல்லதிகாரம் (1905) 
ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி (1907) 
Civilian Tamil Grammar (1912) 
நன்னூல் உதாரண விளக்கம் (1912) 
யாழ்ப்பாணச் சரித்திரம் (1912) 
இலங்கைப் பூமிசாத்திரம் (1914) 
சைவ பாலபோதம் (1916) 
தென்மொழி வரலாறு (1920) 
ஈழமண்டலப் புலவர் சரித்திரம் காளமேகப் புலவர் 
சரித்திரம் அற்புதயோகி சரித்திரம் 
சந்திரகாசன் கதை ஸ்ரீமதி அன்னி பெசன்ட் 
சமய வரலாறு திருவாசகம் (பதிப்பு) நிகண்டு 1-5 தொகுதி (பதிப்பு) 
புதிய இலகுபோத பிள்ளைப்பாடம் (பாடநூல்) 
புதிய இலகுபோத பாலபாடம் 1-8 ஆம் வகுப்பு (பாடநூல்) 
புதிய இலகுபோத இலக்கணம் 4-5 ஆம் வகுப்பு (பாடநூல்) 
 தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து 1-4 செந்தமிழ் அகராதி (வெளியிடப்படவில்லை) 
 வெளியிட்ட இதழ்கள் சத்தியாபிமானி (1884) 
வார இதழ் (தமிழ் நாடு) 
வைத்திய விசாரணி (1897) 
திங்கள் இதழ் (ஈழம்) மறைவு எழுத்தாளர்✏️✏️ 

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தமது 59வது அகவையில் நவம்பர் 2,1917ல் காலமானார்.

********************************************************************
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) 

கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். 

ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 

1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள்வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் மீது பெரும்பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
தமிழ்த் தொண்டுகள் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.



1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

மூன்று இறுதி விருப்பங்கள்முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.

இறப்புக்குப் பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்
(அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.




கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது. 

எழுதிய நூல்கள்
First Catechism of Tamil Grammar for Schools.
Second Catechism of Tamil Grammar for Schools.
Third and complete Grammar of the - Tamil Language in both its dialects, with the native authorities.
Grammar of the Tulu Language.
Tamil - English.and English - Tamil Lexicon
Tirukkural — English Translation.
Naladiyar — ⁠English Translation.
Tiruvasagam — English Translation.
Select Stanzas from Purananuru, Purapporul Venba Malai etc.translated into English. (Contributed to the journal of the Royal Asiatic Society and the Siddantha Deepika.
***********************************************************************************
பிலிப்பு தெ மெல்லோ (Philip de Melho)

ஏப்ரல் 27, 1723 - ஆகத்து 10, 1790) 

கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர். எபிரேயு, கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசம், தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் வேதசாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.

கிறிஸ்தவக் குருவானவராக ஆகும் முன்னரே இவர் சத்திய வேதாகமத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார்.

1753 இல் இலங்கையின் வட மாகாணக் குரவராய் நியமனம் பெற்று யாழ்ப்பாணம் வந்தார்.

1759 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதும் இலங்கையில் அச்சிடப்பட்டது. இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் சில பாகங்களையும் மொழிபெயர்த்தார். அத்துடன் சூடாமணி நிகண்டு 2ஆம் தொகுதிக்கு அனுபந்தமாக 20 உவமைப் பாட்டுகளைப் பாடிச் சேர்த்தார். இவை மெல்லோ பாதிரியாரால் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள் என்ற பெயரில் மானிப்பாயில் அச்சிடப்பட்ட நிகண்டுடன் சேர்ந்திருக்கின்றன. 12வது தொகுதியோடு நூறு பாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும் பாடியிருக்கிறார்.

மற்ற குறிப்புகள் 

பிலிப்பு-தெ-மெல்லோ:(1723-1790) - இவர் உயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையைச் சேர்ந்த கொழும்பில் கேட்வாசல் முதலியார் என்னும் உயர்தர உத்தியோகத்தராயிருந்த சைமன்-தெ-மெல்லோ என்பவரின் புதல்வர். தமிழ், எபிரேயு, கிரீக்கு, லத்தீன், டச்சு, போர்ச்சுகீஸ் பாஷைகளை நன்கு கற்றவர். சமய ஊழியம் செய்து, பின்னர்க் கொழும்பு நார்மல் பாடசாலையில் ஆசிரியராக இருந்தார். 1753 வருசம் இலங்கை வட மாகாணத்திற்குப் பெரிய மத குருவாக ஏற்படுத்தப்பட்டார். 
அரசாங்கத்தாராலும் மற்றவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் “சத்தியத்தின் செயம்”என்னும் நூலையும், கேட்வாசல் முதலியார் உத்தியோகம் செய்திருந்த மருதப்ப பிள்ளை என்பவர்மேல் “மருதப்பக் குறவஞ்சி”என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். 
இவர் இயற்றிய 120 செய்யுள்கள் சூடாமணி நிகண்டிற் சேர்க்கப்பட்டு, 1859-இல் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் அச்சிடப் பட்டிருக்கின்றன. இன்னும் மத சம்பந்தமாக சில நூல்களையும் இவர் இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. கூழங்கைத் தம்பிரான் என்பவர் “யோசேப்புப் புராணம்” இயற்றி, அதனை இவருக்கு உரிமை செய்ததாகக் கூறுவர்.
https://telibrary.com/wp-content/uploads/2021/04/17554.pdf


*****************************************

பி.ஆர்.ராஜமையர் (B.R.Rajam Iyer)
(தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்)

தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்

 (ஜனவரி 25, 1872 - மே 13, 1898)

தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரும், குறுகிய காலத்தில் படைப்புலகுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான பி.ஆர்.ராஜமையர் (B.R.Rajam Iyer) 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் (1872) பிறந்தார். திண்ணைப் பள்ளி, உள்ளூர் பள்ளி, மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் கல்வி கற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர், எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கணித வித்வான் பூண்டி அரங்கநாத முதலியாரால் இயற்றப்பட்ட கச்சிக்கலம்பகப் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார்.

இவருக்கு 13 வயதில் திருமணம் ஆனது. மனைவி 9 வயதான ராமலெட்சுமி.

திருமணமானதும் சென்னையில் குடியேறினார். கம்பன் பாடல்களும், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் உள்ளிட்டோரின் படைப்புகளும் கவிதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. உலகமே வியக்கும் வண்ணம் ஒரு வரலாற்று நூல் எழுத விரும்பினார்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் முன் னேற்றத்துக்கான வழிமுறைகளை அறிந்துவந்து, நம் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது.

பட்டம் பெற்றதும் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததால் விரக்தியடைந்தார். தாயுமானவர் எழுதிய நூலைப் படித்ததும், இவருக்குள் ஆக்கமும் எழுச்சியும் பிறந்தன. ஆழமாகச் சிந்தித்து நிலையானது, நிலையற்றது குறித்த விழிப்புணர்வைப் பெற்றார். கைவல்ய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள் இவரை ஞானமார்க்கத்துக்கு வழிநடத்தின.



குட்டிக் கதை கள்
‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலைத் தொடராக 3 ஆண்டுகளுக்கு எழுதினார். சமூகம், பெண்கள் நலன், நகைச்சுவை, ஆன்மிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நாவலில் பல்வேறு பழமொழிகள், குட்டிக் கதை கள், வேத, வேதாந்தக் கருத்துகளை எளிய நடையில் எழுதினார்.

வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இது, 1896-ல் நூல் வடிவம் பெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. நூலாக வெளிவந்த பிறகு குறுகிய காலத்தில் 6 பதிப்புகள் வெளிவந்தன. பிற்காலத்தில் மேலும் பல பதிப்புகள் வெளிவந்தன.

கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, கம்பனின் கவிச்சிறப்பு, சீதையின் பெருமை குறித்து எழுதினார். ‘பிரம்மவாதின்’ என்ற ஆங்கில மாத இதழில் கட்டுரை எழுதினார். சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகளின் அறிமுகம் கிடைத்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றார். அவரிடம் உபதேசம் பெற்று ஆன்மிக, தியான, யோக மார்க்க முறைகளைப் பயிற்சி செய்தார்.

சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தரின் அறிமுகமும் கிடைத்தது. அவரது ஆசியுடன் தொடங்கப்பட்ட ‘பிரபுத்தபாரதா’ என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் தத்துவ, வேதாந்த, புராண, சமயக் கட்டுரைகளை எழுதினார். இவை தொகுக்கப்பட்டு பின்னாளில் ‘வேதாந்த சஞ்சாரம்’ (ஆங்கிலத்தில் ‘ராம்பிள்ஸ் இன் வேதாந்தா’) என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்தது.

ஓய்வே இல்லாமல், எழுதுவதிலும், ஆன்மிகப் பயிற்சியிலும் ஈடுபட்ட இவர், உடல்நலனைப் புறக்கணித்ததால் நோய்வாய்ப்பட்டார். சாதனைப் படைப்பைத் தந்தவரும், எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், ஆன்மிக சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான பி.ஆர்.ராஜமையர் 26-வது வயதில் (1898) மறைந்தார்.

*********************************************************************

கவியோகி சுத்தானந்த பாரதியார்
(பிறந்த நாள் 11.5.1897)


சுத்தானந்த பாரதியார் சிவகங்கையில் ஜடாதர ஐயர்-காமாட்சியம்மை இணையருக்கு நான்காவது மகனாகப் 11.5.1897இல் பிறந்தார். இவரின் முன்னோர்கள் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவர்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட சுப்பிரமணியன். இவரை வீட்டில் செல்லையா என்று அன்போடு அழைத்தனர்.

வேங்கட சுப்பிரமணியன் சிறு வயதிலேயே தமது பாட்டியிடமிருந்து கர்ணப் பரம்பரை கதைகளையும், தந்தையாரிடமிருந்து நீதிக் கதைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு ஆன்மிகத்தின்பால் இவரின் சிந்தனை ஈர்க்கப்பட்டது. இதற்குக் காரணம் இவரின் மாமா இராமசாமி. பெருஞ்செல்வந்தராக இருந்தபோதும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். இதனைக் கண்ட பிறகு இவரின் மனம் யோக வாழ்க்கையிலும், சன்மார்க்க நெறியிலும் திசை திரும்பியது.

பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இவர் அரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு சிவகங்கை அரசர் பள்ளிக் கூடத்தில் படித்து வந்தார். தானாகவே கற்று மெய்யுணர்வை வளர்த்துக் கொண்ட இவர் தெய்வசிகாமணிப் புலவரிடம் சேர்ந்து தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தமது எட்டாம் வயதில் மதுரை மீனாட்சி அம்மையை தரிசித்து “அம்மா பரதேவி தயா பரியே” என்று முதல் கவி பாடத்தொடங்கினார்.



தனித்த ஆற்றல் பெற்றவராய் மாணவப் பருவத்திலே விளங்கியதால், இமயமலை மகான் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். அவர்தான் இவருக்கு “சுத்தா னந்தம்” என்று பெயர் சூட்டினார். பின்னர் சிருங்கேரி சங்கர மடத்தினர் “பாரதி” என்றும், சுவாமி சிவானந்தர் என்பவர் “மகரிஷி” என்றும் பட்டப் பெயர் அளித்து சிறப்பித்தனர். அது முதல் இவர் “மகரிஷி” என்றும், “கவியோகி” என்றும் பட்டப்பெயரோடு சுத்தானந்த பாரதி என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு சுத்தானந்தர் பசுமலை கிறித்துவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து உடலுறுதி, மனவுறுதி, நல்லொழுக்கம், நன்னடை ஆகிய சிறந்த வாழ்வியல் நெறிகளை போதனைகள் மூலம் கற்றுக் கொண்டார்.

பல நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் பேரார்வத்தோடு இருந்த சுத்தானந்தருக்கு நல் வாய்ப்பாக சிவகங்கை அரசர் கலாசாலையில் நூலகர் வேலை கிடைத்தது. அங்கு இருந்த மேலை நாட்டு அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, உலக இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் ஆகியவை இவரின் கற்கும் திறனை வளர்க்க உதவி செய்தன.

சிலகாலம் அங்கு பணிபுரிந்து விட்டு, காட்டுப் புதூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

அப்போது பிரித்தானியருக்கு எதிராக இந்திய விடுதலைப் போர் காந்தியார் தலைமையில் நடைபெற்று வந்தது. அதில் ஈர்க்கப்பட்ட சுத்தானந்தர், “Freedom calls; no more walls” என்று விடுப்புக்கடிதம் கொடுத்து, விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கதர்த்துணி விற்றல், மதுவிலக்கு பரப்புரை செய்தல், தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுதல் போன்ற காந்தியாரின் சீர்திருத்தப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

காந்தியார் கைது செய்யப்பட்ட போது, பள்ளிக் கூடத்தைவிட, சிறைக்கூடமே மேலானது என்று கூறி தமது ஆசிரியர் பணியைத் துறந்தார்.

1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் உற்சாகம் குன்றாமல் போராட வேண்டும் நோக்கில், எழுச்சிப் பாடல்கள் மூலம் தமிழர்களைத் தட்டியெழுப்பினார் ஓர் சந்நியாசி. அவர் பெயர் சுத்தானந்த பாரதி!

இந்தி எதிர்ப்புப் போரில்

சென்னை, ஏழுகிணறு, நாகூர், நாங்குநேரி, பாபநாசம், ஈரோடு – கருங்கல்பாளையம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரித்தானியரின் அடக்குமுறைக்கு எதிராக முழங்கினார்.

வ.வே.சு. ஐயரின் ‘பாலபாரதி’ ஏட்டில் பெரும் பங்கு வகித்ததோடு, சமரஸ போதினி, சுயராஜ்யா, இயற்கை, தொழிற்கல்வி போன்ற பல்வேறு ஏடுகளில் கட்டுரைகள் எழுதி விடுதலை உணர்வை ஊட்டினார்.

1928இல் சுத்தானந்தர் அரசியலில் இருந்து விடுபட்டு, ஆன்மீக வாழ்வில் தம்மை பிணைத்துக் கொண்டார். புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் இருப தாண்டுகள் தவ வாழ்க்கையை மேற் கொண்டார்.

சுத்தானந்தர் ஆன்மிக வாழ்வில் ஈடுபட்ட போதிலும், தமிழை முன்னிறுத்தியே இவரின் வாழ்வு பயணித்தது. இவர் பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதால், கவிதை, கட்டுரை, காவியம், புதினம், நாடகம், இசைப்பாடல்கள் என்று அனைத்து இலக்கிய வடிவங்களிலும் 1000க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ், இந்தி, பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, சமசுகிருத மொழிகளில் எழுதினார்.

திருக்குறள் இன்பம், இன்பத் திருப்புகழ், தமிழ்க் கனல், தமிழ் உணர்ச்சி, வீரத் தமிழர்க்கு ஆவேச கடிதங்கள், பைந்தமிழ்ச் சோலை, சிலம்புச் செல்வம், மணிமேகலை அமுதம், இனிய தமிழ் இலக்கணம், திருநூல், கல்விக்கதிர், கலைக்கோயில் ஆகிய நூல்கள் போற்றத்தகுத்தவை.

1930ஆம் ஆண்டு தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் திருக்குறளுக்கு உரையெழுதினார்.

திருக்குறள் தமிழரின் நாகரீகக் கண்ணாடி மட்டு மல்லாது, பேரின்பம் அனைத்திற்கும் வழி காட்டும் நூல் என்பதால், தமிழர்கள் இந்த முப்பாலைத் தாய்ப் பாலாகப் பருக வேண்டும் என்று திருக்குறள் இன்பம் நூலில் வேண்டுகோள் விடுத்தார்.

இலக்கிய உலகின் சிறந்த வரலாற்றுக் காப்பியமாக போற்றப்படும் சிலப்பதிகாரத்தை கதையாகவும், செய்யுளாகவும் எழுதாமல் கலை விளக்கக் களஞ்சியமாக படைத்தார். அதில் தமிழர்களின் நாட்டியக்கலை, இசைக் கலையின் சிறப்புகள் அற்புதமாக கூறப்பட்டுள்ளன.

மணிமேகலை பெருங்காப்பியத்தில் சங்கத் தமிழர் பண்பாடு குறித்தவற்றை 47 தலைப்புகளின் கீழ் எழுதி எளிய தமிழில் விளக்கமளித்தார்.

தமிழன்னை ஐம்பெருஙகாப்பியங்களை தமது அணிகலனாகக் கொண்டு திகழ்வதை தமது பாடல் மூலம் வெளிக் காட்டுகிறார்.

“காதொளிருங் குண்டலமும்,
கைக்கு வளையாபதியுங்
கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பாரின்பப் போதொளிர் பூந்தாமரையும்
பொன்முடி சூளாமணியும்
பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !”

தமிழிசையில் மிகச் சிறந்து விளங்கிய சுத்தானந்தர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழிசைப் பாடல்களை இயற்றினார். அவை புதுமைப் பாடல்கள், முருகன் அருள், கவியின்பக் கனவுகள், திருமணப்பாட்டு ஆகிய தலைப்புகளின் கீழ் தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. இவரது தமிழிசைப் பாடல்களை புகழ்வாய்ந்த இசைக் கலைஞர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, பி.யு. சின்னப்பா ஆகியோர் பாடி, இசைத்தட்டுகளாக வலம் வந்தன.

தமிழர் பெருங்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்து வழிபாடு நடத்துவதற்கு இன்றும் நம்மால் முடிவதில்லை. ஆனால் 1940ஆம் ஆண்டிலேயே தமிழ் அருச்சனைப் பாடல்களை “மந்திர மாலை”, “வேத சாதனம்” என்ற பெயரில் வெளியிட்டதோடு, கோயில்களில் இப்பாடல்களே முழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

1938இல் தமிழகப் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்ட போது, “தமிழன்” என்ற இன உணர்ச்சியோடு தமிழர்கள் போராடி வந்தனர். அப்போது சுத்தானந்தர் எழுதிய “தமிழுணர்ச்சி” நூல் மிகுந்த வரவேற்பைபெற்றது.

22 தலைப்புகளில் எழுதப்பட்ட அந்நூலிலே, தமிழ் மொழியானது முதல் மொழியாகவும், தொன்மை மொழியாகவும் விளங்குவதோடு, பின் தோன்றிய மொழிகளான வடமொழி, இந்திமொழிகளைக் காட்டிலும் நூறு மடங்கு இந்நாட்டில் முதன்மை பெறுவதற்கு தமிழ் மட்டுமே தகுதி படைத்த மொழியாக இருக்கிறது என்று தமது வீறு கொண்ட நடைமூலம் தமிழின உணர்ச்சியைக் கொட்டி எழுதினார்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’
இந்தி எதிர்ப்புப் போர்ச்செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த அன்றைய “செந்தமிழ்ச் செல்வி” ஏட்டில் தொடர்ந்து ‘புதுக்கவி’ பகுதியில் கவிதை தீட்டினார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை முழங்கவும் அவர் தவறவில்லை.

“தமிழ்நாட்டுக் கல்விமுறை
தமிழர் கையில்,
தாய்நாட்டுத் தொழில்க ளெலாந்
தனயர் கையில்; தமிழர்வாணிபமெல்லாந்
தமிழர் கையில்;
தமிழ்த் துறையிலியங்குவது
தமிழர் கப்பல்;
தமிழ்ச் சமுதாயப் பணியுந்
தமிழர் கூட்டால்;
தமிழ்நாடு தமிழர்க்கே;
தமிழர் சேமங்
தமிழர்களின் ஒற்றுமையே;
தமிழர் பேச்சு தனித் தமிழேயெனில் வாழ்வு தழைப்பதாமே!

அன்றைக்கு தமிழ்ப் புலவர்கள் நடத்தும் கூட்டங்களில் இன்றைக்கு நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாகப்பாடும் பெ.சுந்தரனார் எழுதிய பாடல் பயன்படுத்தப்பட்டது. தற்போது நீக்கப்பட்டவரிகளாம் “கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னு துரத் தெழுந்து” வரிகளும் சேர்த்து பாடப்பட்டது. இதைப் பாடுவதால் தமிழருக்குப் பயன் ஏற்படாது என்றும், ஆந்திரர்கள் ‘அரவான் அத்துவானம்’ என்று தமிழை இகழ்ந்து வருவதாகவும் நம்மிலிருந்து பிரிந்த மொழியினர் ஆரிய மொழியை போற்றி வருவதாகவும் வேதனையோடு குறிப்பிடவும் சுத்தானந்தர் தவற வில்லை.

பிரித்தானியரின் கல்விக் கொள்கையால் தமிழைப் புறக்கணித்து, ஆங்கிலத்திற்கு முதன்மை தரும்போக்கு தமிழர்களிடத்தில் அன்று நிலவியது. இதனை அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, தாசி கையில் வாளைக் கொடுத்து தாய்க்கழுத்தை அறுக்கச் சொல்வாயா? என்று கடுஞ்சொற்களால் சாடினார்.

அதுபோல், தாய்மொழி வழிக் கல்வி பற்றி கூறுங்கால், “ஒரு மனிதன் தன் இரைப்பையினால் மட்டுமே உணவை சீரணிக்க முடியும். அதுபோல் தாய் மொழியால் மட்டுமே அறிவை வளர்க்க முடியும்” என்று குறிப் பிட்டார்.

தமிழர்கள் மதமாகவும், சாதியாகவும் பிளவுபடாமல் தமிழராய் ஒன்றிணைய வேண்டும் என்பதிலும் நாட்டங் கொண்டவராய் சுத்தானந்தர் திகழ்ந்தார். எப்போதும் நான் தமிழன் என்றும், தமிழ்நாடு என் நாடு என்றும், நான் எங்கிருந்தாலும் தமிழர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் தலை நிமிர்ந்து கம்பீரமாக உரத்துக் கூற வேண்டும் என்பார்.

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாக எழுந்த மொழிவழித் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கும் சுத்தானந்தர் ஆதரவு தெரிவித்தார். சென்னை மாகாணம் பம்பாய் மாகாணம் என்பதற்குப் பதிலாக ஆந்திரம், தமிழகம், வங்கம் என்றிருப்பதுதான் பொருத்தமானது என்றார். ஆந்திர தேசம், ஆந்திர மொழி என்பதில் ஆந்திரருக்கு ஒரு வீர உணர்ச்சி இருப்பது போல், தமிழ்நாடு, தமிழ்மொழி என்பதிலும் தமிழருக்கு அன்பு பிறக்க வேண்டும் என்றார்.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சித்தூர், சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களை இணைத்து ‘தமிழ்நாடு’ உருவாக்கப்பட்டு, அத்தமிழ்நாட்டிற்குத் தனி ஆட்சியும், அவ்வாட்சி தமிழரால் தேர்ந்தெடுக்கப் பட்டு தமிழ் அவையால் நடத்தப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1949இல் ஆந்திரர்கள் சென்னையை அபகரிக்க முயன்றபோது அதை கடுமையாக சுத்தானந்தர் எதிர்த்தார்.

“தமிழர் தனி உரிமை” என்ற தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கு ஆக்கம் கிடைத்ததைப் போல “சென்னை நமதே” இயக்கத்தால் தமிழர் தமது நாட்டைக் காக்க வீறு கொண்டெழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழர் கூலிகளாகவும், குமாஸ்தாக்களாகவும், அடிமை வேலை செய்யாமல் தமிழ்நாட்டிற்கு உரிய தொழில், வாணிகம், அலுவலர்கள் முதலிய அனைத்து வேலைகளையும் கைப்பற்றி தமிழ்நாட்டை தமிழருக்கே உரித்தாக மாற்ற வேண்டும் என்று அழுத்தந் திருத்தமாக எடுத்துரைத்தார்.

“வீரத் தமிழருக்கு ஆவேச கடிதங்கள்” நூலில் , தனித் தமிழியக்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மறைமலையடிகள், கா.சுப்பிரமணியனார், உமா மகேசுவரனார், இளவழகனார் எழுதும் தனித்தமிழ் நடை செவிக்கு இனிமையாக இருப்பதாக குறிப்பிடும் சுத்தானந்தர் தமிழ் தனித்து இயங்குமா என்று பலர் கேட்ட போது, இயங்கும் என்பதே எனது விடை என்றதாக தெரிவித்தார்.

இத்தாலிய மகாகவி தாந்தே, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் ஆகியோரின் வரலாறுகளைத் தந்த தோடு, பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘லே மிசிரபிள் (Lay Missirable), லம்கிரி (Lomgiri) ஆகிய இரண்டு புதினங்களையும் ஏழைபடும் பாடு’, ‘இளிச்சவாயன்’ என்ற பெயர்களில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

 51 நூல்களில்

சுத்தானந்தர் ஆங்கிலத்தில் எழுதிய 51 நூல்களில் தாயுமானவர் வரலாறும், திருவள்ளுவர் வரலாறும் அடங்கும். திருக்குறளுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில உரைகள் இருப்பினும், இவரின் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வள்ளலாரைப் பற்றி இந்தியில் நூலொன்றும் எழுதி அறிமுகம் செய்தார்.

1984இல் இவர் எழுதிய “பாரத சக்தி” பெருங்காவியம் சிறந்த படைப்பிலக்கியமாக அறிவிக்கப்பட்டு, இவருக்குத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் முதன் முறையாக மாமன்னன் இராசராசன் விருது வழங்கப்பட்டது.

1948 இல் சுத்தானந்தர் அரவிந்தர் ஆசிரமத்தை விட்டு விலகி, சில காலம் சென்னையில் தங்கினார். அங்கு யோக சமாஜத்தை நிறுவிய போதிலும், சரியாக செயல்படவில்லை. பின்னர் தாம் பிறந்த ஊரான சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் 1973இல் மீண்டும் யோக சமாஜத்தை நிறுவி செயல்படுத்தி வந்த நிலையில், 07.03.1990இல் காலமானார்.

பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், “பாரத சக்தி மகாகாவியம்” அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.

சுத்தானந்தரின் ஆன்மிகம் என்பது வேதாந்தந்தையும், சித்தாந்தத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது. இரண்டும் வெவ்வேறானவை என்ற பார்வை அவருக்கில்லை. அவரின் வேதாந்த கருத்துகளை நீக்கி விட்டு அவர் தமிழுக்குச் செய்த தொண்டினை அணுகினால் அவை அப்பழுக்கற்றவை என்ற உண்மை விளங்கும்.


சக்கரவர்த்தி நயினார்
(மே 17 1880-பிப்பிரவரி 12.1960)

சக்கரவர்த்தி நயினார் (மே 17 1880-பிப்பிரவரி 12.1960) தத்துவத் துறையில் புகழ் பெற்று விளங்கிய பேராசிரியர். திருக்குறள் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். சமணத் தத்துவ அறிஞர் எனவும் போற்றப் படுகிறார்.
திண்டிவனம் அருகில் வீடூரில் பிறந்தார். சமண சமயத்தைச் சேர்ந்தவர். இளம் அகவையிலேயே கல்வியில் நாட்டம் கொண்டவராக இருந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்று மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி தங்கப் பதக்கம் பெற்றார்.முதுகலைப் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றார்.
தத்துவம்,சமயம்,இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அவ்வத்துறை நூல்களைப் படிக்கலானார்.
#தமிழ், #ஆங்கிலம், #சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றார்.
>தொடக்கத்தில் சென்னை கணக்காயர் அலுவலக எழுத்தராகப் பணி புரிந்தார். பின்னர் கீழ்க் காணும் கல்லூரிகளில் தத்துவத் துறை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.
>சென்னை மாநிலக் கல்லூரி (1906-1908)
>குடந்தை அரசுக் கல்லூரி (1908-1912)
>இராச முந்திரி அரசுக் கல்லூரி (1912-1917)
>சென்னை மாநிலக் கல்லூரி தத்துவத் துறைத் தலைவர் (1917-1930)
>இராசமுந்திரி அரசுக் கல்லூரி முதல்வர் (1930-1932)
>குடந்தை அரசுக் கல்லூரி முதல்வர் (1932-1938)
> இவரின் படைப்புகளும் பதிப்புகளும் :
சக்கரவர்த்தி நயினார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.இந்நூல் 'திருக்குறள் வழியில் செய்தி' என்று தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
>திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை இவர் பதிப்பித்தார். இதுமட்டுமல்லாது நீலகேசி திவாகர வாமன முனிவர் உரை, மேரு மந்திரப் புராண உரை ஆகியவற்றையும் பதிப்பித்தார்.
>நீலகேசிக்கு முதன் முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினாரே ஆவார்.
>சமண மதம் பற்றி அறிய விரும்பிய #திருவிக.அவர்கள் சக்கரவர்த்தி நயினார் #இல்லம் #வந்து #பாடம் #கேட்டார் என்கிறது ஒரு செய்தி.
>குடந்தைக் கல்லூரியில் பணி புரிந்த போது ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்ப்பொதுமக்கள் எனப் பலரிடம் செல்வாக்குடன் விளங்கினார்.
>குடந்தையில் மக்கள் மன்றம் ஒன்றை ஏற்படுத்தினார். டென்னிசு விளையாட்டில் ஆர்வம் கொண்டார். இவரைப் பாராட்டி ஆங்கிலேய இந்திய அரசு இந்தியக் கல்விப் பணி (ஐ.இ.எசு ) என்னும் பட்டத்தையும் இராவ் பகதூர் பட்டத்தையும் வழங்கியது.
கல்விக் கடலாக விளங்கிய சக்கரவர்த்தி நயினார் தமது 80 ஆம் அகவையில் 12.2.1960 இல் மகாவீரர் திருவடிகளை அடைந்தார்.

ராபின் மெக்கிலாசன்-
நினைவு நாள் June 19 (2012)
அலத்தார் உரொபின் மெக்கிலாசன் (Alastair Robin McGlashan, அலஸ்டர் ரொபின் மெக்கிலாசன்.
ஆங்கிலேயத் தமிழறிஞரும், கிரேக்க செவ்வியல் அறிஞரும், ஆங்கிலிக்கக் கிறித்தவ மதகுருவும் ஆவார்.
இவர் சேக்கிழாரின் பெரியபுராணத்தை, அதில் அடங்கியுள்ள 4281 பாடல்களையும் எளிய ஆங்கில உரைநடையில் மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்.
இவரது மூதாதையருள் ஒருவர் வடமொழிகளுக்கான ஒப்பீட்டு இலக்கண நூலொன்றை (கால்டுவெலின் நூலைப் போல) பிரித்தானிய இந்தியா காலத்தில் பதிப்புத்துள்ளார்.
இவரது வெளியீடுகள் தமிழ் ஆய்வுகள் என்ற தலைப்பில் 13, இறையியல் தமிழில்-5 , இறையியல் ஆங்கிலத்தில் 7 என்று பல்வேறு கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ளார்.

இரா. கனகரத்தினம்

2016 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (பி. 1934)
விடியற்காலையில் எழுந்து தினம் தோறும் தமிழ் சுவடிகளை கால அட்டவணைப்படி ஆவணப் படுத்திய தமிழ்ப் பெருமகன்.
பல நூல்களை படைத்திட்ட தமிழ் அறிஞர்.
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார்.
இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி (Microfilm) யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்
சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952)
2500,000 மக்கள் தலைவர் (தந்தை செல்வா பற்றிய தொகுப்பு நூல், 1960)
அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),
உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)
இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)
மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)
உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்
உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)
ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு
ஒரு குடையின்கீழ் உலகத்தமிழினம்


தமிழுக்காக அரும்பணியாற்றியவர் வ.அய். சுப்பிரமணியம்
நினைவு தினசிறப்பு
பகிர்வு
திராவிட மொழி, இலக்கியம், பண்பாடு முதலியவற்றை மையப்படுத்திய திராவிடவியல் ஆய்வைத் மது உயிர் மூச்சாகக் கொண்டு தம் வாணாள் முழுதும் பாடுபட்டவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியனார். துணைவேந்தராகும் முன்பே, தமிழியல், மொழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல அறிஞர்களை உருவாக்கியவர்.
அவரது திட்டமிடும் பாங்கும், செயல் திறனும் அவரது தலைமையில் செயல்பட்ட சில நிறுவனங்கள் நன்கு வளர்ச்சியுற்றுப் பெருமையுறக் காரணமாயின. தமிழ்ப் பல்கலைக்கழகமும் அவற்றுள் ஒன்றாகும். 1981 முதல் 1986 வரையுள்ள ஐந்தாண்டு காலம் அவர் யார்க்கும் அஞ்சாது, குறிக்கோளை விட்டுத்தராது, துணிவோடும், நேர்மையோடும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செயல்பட்டார். பன்னாட்டுத் தமிழறிஞர்கள், மாணவர்களை மட்டுமின்றி, பிறமொழியினரையும் பல்கலைக்கழகம் தன்பால் ஈர்க்க அவரது செயல்முறை உதவியது. போலந்து, ஜெர்மனி, மலேசியா, சீனா, மொரீசியஸ் எனப் பல நாடுகளைச் சார்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தமிழ் கற்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் முனைந்தனர். இவ்வாறு தமிழ்ப் பல்கலைக்கழககத்துக்கு ஒரு உலகளாவிய பெருமையை பெற்றுத் தந்த அந்தப் பெருமகன் நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி 29.06.2009 அன்று இயற்கை எய்தினார்.
இவரது குடும்பம் பெரியது பொருளாதார நெருக்கடிக்குட்பட்டது. இதைப் புரிந்து கொண்டதால், அதற்கேற்பத் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மனைவி பெயர் இரத்தினம். மக்கள் நால்வர். மூத்தவர்கள் இருவரும் இவரை முந்திக் கொண்டனர். இளைய மகனும், மகளும் உள்ளனர்.
நாகர்கோவில் வடசேரியில் 18.2.1926 அன்று பிறந்தார் வ.அய். சுப்பிரமணியம். தந்தை கே. அய்யம்பெருமாள் பிள்ளை; தாய் கே. சிவகாமி.
1941-ல் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. இந்து உயர்நிலைப் பள்ளியில் உயர் நிலைக் கல்வியை முடித்தார். 1943-ல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி மற்றும் இளநிலைப் பட்டத்தைப் பெற்றார்.
1946-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டமும், 1957-ல் அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் "முனைவர்' பட்டமும் பெற்றார்.
1983-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதுமுனைவர் (டி.லிட்.) பட்டமும், 2002-ல் தமிழ்ப் பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டமும் வழங்கின.
1947 முதல் 1953 வரை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1953 முதல் 1958 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1958-ல் இதே பல்கலைக்கழகம் கேரளப் பல்கலைக்கழகமாக உருமாறியபோது, 1965 வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் மொழியியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
1978-ல் கேரளப் பல்கலைக்கழக கீழைக்கலைப் புலத்தின் முதன்மையராகப் பணியாற்றினார்.
பின்னர், 1981-ல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1986 வரை தொடர்ந்து துணைவேந்தராகப் பதவி வகித்தார்.
1997 முதல் 2001 வரை ஆந்திர மாநிலம், குப்பத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழக இணைவேந்தராகப் பணியாற்றினார்.
சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம், இந்திய இடப் பெயராய்வு நிறுவனம், தில்லியிலுள்ள ஞானபீடப் பரிசு வழங்கும் மைய அமைப்பு, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள காந்தியப் படிப்பிற்கான பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அமைத்த குழு, மத்திய அரசின் கல்வித் துறை சார்ந்த குழு உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
காலஞ்சென்ற தனிநாயக அடிகளாருடன் இணைந்து "உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை (ஐஅபத)’ உருவாக்கி அதன்மூலம் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறக் காரணமாக விளங்கினார். 1967 முதல் 1980 வரை அந்தக் கழகத்தின் பொதுச் செயலராகவும் பதவி வகித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, ஜப்பான், இலங்கை, ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி மற்றும் ஆய்வுக்காகச் சென்றார். தனது அனுபவங்களை பலநாளிதழ்களில் கட்டுரைகளாக எழுதினார். இவரது தமிழ்ப் பணி மற்றும் இவர் எழுதிய நூல்களுக்கு மிக உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டன.
கேரள மண்ணில் தமிழ் மொழிக்கு கால்கோள் செய்தவர், பல அறிஞர்களை உருவாக்கிய அறிவுத் தொழிற்சாலை, திக்கு தெரியாத ஆய்வுக் களங்களுக்கு கலங்கரை விளக்கம், பட்ட மரத்தையும் பழு மரமாக்கிய நீருற்று என்ற பெருமைக்குரியவர்.
பல்துறை அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிவழிக் கல்வியே முதன்மையானது என்பதை ஏற்று, பொறியியல், மருத்துவம், இரண்டையும் தமிழ் வழிக் கற்பிக்கும் திட்டத்தில், அதற்கான பாடநூல்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (9 மாதம் முதல் ஓராண்டு வரை) 27 நூல்கள் (பொறியியல் 13, மருத்துவம் 14) பெறப்பட்டு, அவை தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. பொறியியலைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கற்பிப்பிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தஞ்சை மருத்துவக்கல்லூரியுடன் சேர்ந்து மருத்துவப் படிப்பைத் தமிழ் வழிச் செயல்படுத்தும் திட்டமும் இருந்தது. பல்வேறு காரணங்களால் இவை இரண்டும் செயல்படுவதில் தயக்கம் ஏற்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தமிழில் இத்துறைகளுக்கான நூல்களை ஆங்கில நூல்களின் தரத்துக்கிணையாகத் தமிழில் எழுதித்தரும் வல்லுநர்கள் உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது. ‘தமிழில் எதையும் சொல்ல முடியும்’ என்ற இவரது கருத்து. இதன் மூலம் வலுப்பெற்றது.
பணிமுடித்து சென்றபோது எழுதியது...
"இன்று (31.7.1986) மாலை 5 மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து, ஆய்வுக்காக திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல பிறர் கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் அனைவருடன் உழைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கிறோம் என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்று ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுச்சான்றோர் சிலரே இடம் பெற முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குள்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும், பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர், அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம். "அறநெறி தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன் பிற மாநிலத்தார்கூட உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில், அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சி இருப்பின் என் முகம் வாடும்.
அன்றுள்ள (இன்றுள்ள) பல்கலைக்கழக அலுவலர்கள் அனுமதித்தால், நான் காலமான பிறகு என் உடல் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை பல்கலைக்கழக தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர், புதைத்திடுக. நீங்கள் அனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்' என அந்தச் செய்தி மடலில் சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
பல துறைசார் ஆயு்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் 150க்குக் குறையாத கட்டுரைகள். சில மதிப்புரைகளும் எழுதியுள்ளார். 215 நூல்கள் வெளியிட்டுள்ளார். Index of Puranaanuuru, Survey of Malayalam Dialects முதலியன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. இவரது ஆய்வின் மையம் திராவிடவியலாகும். இவரது மறைவுக்குப் பின் இவரைப் பற்றி எழுதிய ஒரு மலையாள அறிஞர் "இவரது உடலும் உயிரும் திராவிடவியலே" என்று குறிப்பிட்டார்.
சுப்பிரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் சூன் 29 2009 அன்று காலை எட்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்




கருத்துகள்

  1. Thiruvarut Prakasa Vallalar Ramalinga Adigalar is deliberately omitted

    பதிலளிநீக்கு
  2. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ ஙநபம

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை கூறும் அறக் கருத்துகள்..

காஞ்சி கைலாயநாதர் கோவில்..