அறன் வலியுறுத்தல்
அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் வள்ளுவர் கூறும் மனிதநேய பண்புகளை பார்ப்போம்
மனிதன் மனிதனாக வாழ. மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் திருக்குறள்
ஆகும். இது. நாடு மொழி இனம், சமயம் கடந்து எக்காலத்திற்கும் பொதுவான
நூல் ஆகும்.
பொதுவாக இலக்கியங்களை. அகஇலக்கியம், புற இலக்கியம் என பகுப்பது ஒரு
மரபு.
அறம், பொருள், இன்பம் என்னும். உறுதிப்பொருள் மூன்றை
உணர்த்தும்.
திருக்குறளானது இந்த மூன்றினையும், கூறுவதால் முப்பால் என்ற பெயரை பெற்றுள்ளது. பொருளும்
இன்பமும் அறத்தின் அடிப்படையில் வந்தால் அது போற்றப்படும்.
ஆனால், அறத்தின் வழியில் வராத பொருளும், இன்பமும். பழிக்கப்படும். அதனால்தான்.
வள்ளுவர். அறத்தை வலியுறுத்திக் கூறுகிறார் மற்ற அதிகாரங்களில் உள்ள
தலைப்புகளை பார்த்தல் அறத்தை தவிர வேறு எதையும் வலியுறுத்திக் கூறவில்லை.
இந்த அதிகாரத்தை பற்றி சுருக்கமாக சொன்னால்...
மனத்தால் நேர்மையுடன் இருப்பதே
அறமாகும். அப்படி அறமுடன் இருப்பவருக்கு செல்வமும் சிறப்பும் வளரும். அறத்தை
மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி.
மனதளவில் மற்றவர்களை அழிக்கும் குணம், பொருள்கள் அளவற்ற ஆசை, கடும் கோபம் வன்சொல் இவை நான்கும் இல்லாமல் இருப்பது அறமாகும்.
அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை போலியாக செய்யாமல், தனக்காக செய்ய
வேண்டும்.
அடிமையாக இருப்பது அறமாகாது.
இறுதியில் அறமே இன்பத்தைத் தரும்.
இந்தக் கருத்துகளை தான் வள்ளுவர் அதிகாரம் 4ல் அறன் என்று வலியுறுத்தி நமக்கு கூறுகிறார்.
எங்கெங்கு எப்படி எல்லா அறத்தை செயல்படுத்த முடியுமோ அங்கெல்லாம் இயன்ற வரை அறத்தைச் செயல்படுத்துவதே சிறப்பு.
அறத்தைப் போல உயர்வு வேறு இல்லை. அதே
நேரத்தில் செய்ய வேண்டிய அறத்தை மறுத்தால்
உயர்வு இல்லை. அதனால் கேடுதான் விளையும்.
மனதளவில்.குற்றம் குறை இல்லாமல் இருப்பதே அறம். மற்ற செயல்கள் எல்லாம் வெறும்
சடங்குகளே.
அறம் என்பது பல நற்பண்புகளை அகத்தே
அதாவது உள்ளத்தில் அடக்கிய ஒரு சொல்லாக
கொள்ள வேண்டும்.
இந்தக் கருத்துகளை வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் மட்டும் சொல்லவில்லை.
திருக்குறளில் பல்வேறு இடங்களில் சொல்லி இருக்கிறார்.
உதாரணம்.
·
“அகத் தானாம் இன்சொலினதே அறம்” (குறள் - 93)
· “அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்” (குறள் - 147)
·
“அறவினை யாதெனிற் கொல்லாமை” (குறள் - 321)
என்னும் இக்குறள்கள் இனியவை கூறலையும், பிறர் மனை விழையாமையையும், கொல்லாமையையும் அறமெனக் கூறுதல்
ஆகும்.
அறத்திற்கு அடிப்படை அன்பே. அறத்திற்குச் சிறந்தது அன்பாகும். அன்பின்
முதிர்ச்சியில் பிறப்பது அருளாகும். அருளின்றிச் செய்யும் அறவினை பயன்படாது
இதனை;
“தெருளாதான்
மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்” (குறள் - 249)
என்னும் குறளில் அருள் சிந்தை இல்லாதவன் அறத்தை ஆராய்ந்தால் அது, அறிவுத்
தெளிவில்லாதவன் நூலின் மெய்ப் பொருள் தெரிந்தது போலாகும்.என்கிறார்.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (குறள் -300)
என்னும் குறளில் யாம் உண்மையறிந்து கண்டவற்று எல்லாம் உண்மை பேசுதலைப் போல்
நன்மையுடையது வேறு எதுவும் இல்லை. இங்கே வாய்மையை அறம் என்று போற்றுகிறார்.
இறுதியாக அறத்தின் வழி எது என்றால் அது மனத்தின் தூய்மையே என்கிறார்
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள்- 322)
என்னும் குறளில் இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பல உயிர்களையும் காத்தல்
அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களில் எல்லாம் முதன்மையானது. எனவே உயிரோம்பலைச்
சிறந்த அறமாக வள்ளுவர் கூறுகிறார்.
எச்செயல் செய்தாலும், எம்மொழி பேசினாலும் அடிப்படையான
மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தூய மனத்தின்வழி வரும் மொழியும்
செயலும் தூயனவாக இருக்கும்.
வினைத்தூய்மை, மனத் தூய்மைகளைக்
காப்பதற்காகத்தான்.
மனத்தூய்மையைப் பெரிதும்
வற்புறுத்துகின்றார் வள்ளுவர். ஆகவே, மனத்தை எவ்வகை மாசும் படியாமல்
காக்க வேண்டும். இல்லறமாயினும், துறவறமாயினும் திருவள்ளுவர்
மனத்தூய்மையையே வற்புறுத்துகின்றார். இதனை;
·
“மனத்துக்கண் மாசிலனாதல்” (குறள் -36)
·
“உள்ளத்தால் பொய்யா தொழுகின்” (குறள் -294)
·
“தன்னெஞ்சறிவது பொய்யற்க” (குறள் -293)
·
“மனத்தொடு வாய்மை மொழியின்” (குறள் - 295)
·
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி” (குறள் -278)
என்னும் பல குறளால் வள்ளுவர் மனமாசு கூடாது என்பதை வலியுறுத்தல் மூலம்
சொல்கிறார்.
எனவே, அறன் வலியுறுத்தல் என்பது மனம் தூய்மையாக இருப்பதே என்பதை பல்வேறு வகைகளில்
வள்ளுவர் திருக்குறளில் நமக்கு வலியுறுத்தி சொல்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக