தொல்காப்பியம் வகுத்த 'சிறுபொழுது' 'பெரும்பொழுது'
தொல்காப்பியம் எனும் நல்காப்பியம்
ஞாலத்தில் நிகழும் காலத்தின் நிலையை
'சிறுபொழுது' 'பெரும்பொழுது' என இருவகைப் படுத்தி
நாளும் நிகழ்வதை 'சிறுபொழுது' என்றும் -அதில்
விடியலில் தோன்றுவதை 'வைகறை' என்றும்
சூரியன் உதிக்கும் நேரம் 'காலை' என்றும்
உச்சி வெய்யில் நேரமதை 'நண்பகலாகவும்'
அவனே மறையும் நேரம் 'எற்பாடு' பிறகு
முன்னிரவு நேரம் 'மாலைப் பொழுதாகவும்'
நள்ளிரவு நேரம் 'யாமம்' எனவும் உரைத்திட்டான்.
பெரும்பொழுது என்பது யாது எனில்
பன்னிரு மாதங்களை ஆறாய்ப் பகுத்து,
சித்திரை வைகாசி 'இளவேனில்' என்றும்
ஆனி ஆடி 'முதுவேனில்' என உரைத்து
'கார்காலம்' என்பது ஆவணி புரட்டாசி -பின்னர்
ஐப்பசி கார்த்திகை 'குளிர்காலம்' எனவும்
'முன்பனிக் காலம்' மார்கழி தை யாகவும்
மாசி பங்குனி 'பின்பனிக் காலத்தில்' சேர்த்தே
செம்மையாய் வகுத்தான் இந்த உலகுக்கு
ஒல்காப் புகழ் கொண்ட தொல்காப்பியன்!
ஞாலத்தில் நிகழும் காலத்தின் நிலையை
'சிறுபொழுது' 'பெரும்பொழுது' என இருவகைப் படுத்தி
நாளும் நிகழ்வதை 'சிறுபொழுது' என்றும் -அதில்
விடியலில் தோன்றுவதை 'வைகறை' என்றும்
சூரியன் உதிக்கும் நேரம் 'காலை' என்றும்
உச்சி வெய்யில் நேரமதை 'நண்பகலாகவும்'
அவனே மறையும் நேரம் 'எற்பாடு' பிறகு
முன்னிரவு நேரம் 'மாலைப் பொழுதாகவும்'
நள்ளிரவு நேரம் 'யாமம்' எனவும் உரைத்திட்டான்.
பெரும்பொழுது என்பது யாது எனில்
பன்னிரு மாதங்களை ஆறாய்ப் பகுத்து,
சித்திரை வைகாசி 'இளவேனில்' என்றும்
ஆனி ஆடி 'முதுவேனில்' என உரைத்து
'கார்காலம்' என்பது ஆவணி புரட்டாசி -பின்னர்
ஐப்பசி கார்த்திகை 'குளிர்காலம்' எனவும்
'முன்பனிக் காலம்' மார்கழி தை யாகவும்
மாசி பங்குனி 'பின்பனிக் காலத்தில்' சேர்த்தே
செம்மையாய் வகுத்தான் இந்த உலகுக்கு
ஒல்காப் புகழ் கொண்ட தொல்காப்பியன்!
கருத்துகள்
கருத்துரையிடுக