உலகக் கடல் நாள் World Ocean Day08.07.2026
உலகின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியை
ஆக்கிரமித்து இருக்கும் பெருங்கடல்கள், பூமியின் உயிர் இயக்கத்தை தாங்கி நிற்கும்
முக்கியமான இயற்கை வளமாகும். ஆண்டுதோறும் ஜூன் 8 அன்று உலக
நாடுகள் உலகப் பெருங்கடல்கள் நாள் எனக் கொண்டாடுகின்றன. இந்த நாள், கடலின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அதை பாதுகாக்கும்
பொறுப்பை நினைவூட்டுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல்கள் தினத்தின்
கருப்பொருள்:
“Strong Marine Protected Areas for Our Blue Planet” — நமது
நீலக் கிரகத்திற்கான வலுவான கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
கடல் நமக்கு வழங்கும் முக்கியமான பயன்கள்:
- உலகின்
ஆக்சிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்கிறது
- காலநிலை
சமநிலையை கட்டுப்படுத்துகிறது
- கோடிக்கணக்கான
மக்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது
- மருந்து, வாணிபம், போக்குவரத்து போன்ற துறைகளுக்கு
ஆதாரமாக உள்ளது
ஆனால் பிளாஸ்டிக் மாசு, அதிக மீன்பிடி, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் கடல் சூழல் கடுமையாக
பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்ந்து உயிரினங்களை அழிக்கின்றன;
மனிதர்களின் உணவுச் சங்கிலியிலும் நுழைகின்றன.
இந்த நாளின் நோக்கம்:
- கடல்களைப்
பாதுகாக்கும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- பிளாஸ்டிக்
பயன்பாட்டை குறைத்தல்
- கடல்
உயிரினங்களை காக்கும் நடவடிக்கைகளில் சமூக பங்கேற்பை ஊக்குவித்தல்
- கடல்
பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துதல்
கடந்த சில காலங்களாகவே கடல்களில் சரக்கு கப்பல்கள், எண்ணெய்
கப்பல்கள், பயணிகள் கப்பல் உள்ளிட்டவற்றாலும் மனிதர்களால்
உருவான கழிவுகளும், குப்பைகளும் கடலிலும் கலந்து வருகிறது.
இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் கடல் கடுமையாக மாசடைந்து
வருகிறது.
இதனால், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதுடன்
அவைகள் பல தீங்குகளை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த கடல் வாழ்
உயிரினங்களை மீண்டும் மனிதர்கள் சாப்பிடுவதால் மனிதர்களும் பல்வேறு
உடல்நலக்குறைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த உலக பெருங்கடல் தினத்தில் கடல்களை
தூய்மையாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்போம்.
உலகக் கடல் நாள் நமக்கு கடலின் முக்கியத்துவதை நினைவூட்டும்
நாள். கடல் நம்மை காக்கிறது; அதனால் கடலை நாம் காக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக