இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?

  நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா?  பல்லவர்களா? தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன அதில் ஆறுகள், ஏரிகள், வடிகால் பாசனங்கள்   உட்பட்டு நீர்ப் பாசனத்திற்கு அதிகம் பங்களித்தது சோழர்களா? பல்லவர்களா?  பட்டியல்கள் பங்களிப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. விடுபட்டு இருந்தால் சேர்க்கலாமே. சோழர்கள் பங்களிப்பு    முற்கால, பிற்காலச் சோழ அரசர்கள் என தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, நீர் மேலாண்மையை வெகுலாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கு ம் , குடிநீருக்கு ம்   என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள்.  இருப்பினும் , சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள். காவிரி கல்லணை ,  வீர நாராயண ஏரி , ஜம்பை – பள்ளிசந்தல் ஏரி   கி .பி. 871 இல் விஜயாலய சோழன் ஆட்சி மதுராந்தகம்   ஏரி , விண்ணமங்கலம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் ,  சோதியம்பாக்கம் ஏரி - முதலாம் பராந்தக சோழன் திருவண்ணாமலை ,  முதலாம் ராஜேந்திர சோழனின் கடம்பனேரி   பொன்னேரி - அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் , ச

சாராள் தக்கர் (Sarah Tucker ) அம்மையாரின் பணி

படம்
 சாராள் தக்கர் அம்மையாரின் பணி  சாராள் தக்கர் (Sarah Tucker ) இங்கிலாந்து நாட்டில், லண்டனில் பிறந்து இருந்தார். அவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரர் அவர் பெயர் ஜான் தக்கர் (John Tucker) இந்தியாவில் சென்னை மாகாணத்தில் சி.எம்.எஸ் கிருத்துவ மிஷினரியில் பணியாற்றிக் கொண்டு வந்தார். தனது சகோதரிக்கு தம்மை சுற்றிலும்  நடக்கும் நிகழ்வுகளை கடிதங்கள் மூலம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தார். தங்கைக்கு இரு கால்களாலும் எழுந்து நடக்க முடியாது. தங்கை மேல் உள்ள பாசத்தினால், அவரின் மகிழ்ச்சிக்காக இந்தியாவில் நடக்கும் செய்திகளை அடிக்கடி அனுப்புவது உண்டு. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ஜில்லாவில் தான் பார்த்திட்ட செய்தியை கடிதமாக அனுப்பி இருந்தார். அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.  இந்திய மிஷனரி ஊழிய வளரச்சியில் ஆண் மிஷனரிகளுக்கு இணையாக பெண் மிஷனரிகளின் பங்களிப்பும் முக்கியமானது.அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என

வர்த்தமான மகாவீரர்

படம்
  வர்த்தமான மகாவீரர் வர்த்தமான மகாவீரர்‌ இருபத்து நான்காவது (24) தீர்த்தங்கரராகக்‌ கூறப்படுகிறார்‌.  அர்த்தமாகதியில்‌ எழுதப்பட்ட பல நூல்களிலும்‌ இவர்‌ (வைசாலிகா) வேசாலியன்‌ என்றே அழைக்கப்பட்டார்‌.  'ஜைனமதம்‌' என்ற உயர்ந்த கட்டடத்திற்கு மிக உறுதியான அடித்தளம்‌ இட்டவர்‌. அதன்‌ காரணமாகவே இன்றைக்கும் ஜைனமதம்‌ விரிசல்களும்‌ ஓட்டைகளும்‌ இன்றி சிறந்து நிற்கக்‌ காண்கிறோம்‌. மற்றைய மதங்களைப் போல இவர்களுக்குள் பூசல்கள் இல்லை. மகாவீரர்‌ “நிகந்த நாதபுத்த” என்ற பெயருடன்‌ நிர்கிரந்த பிரிவின்‌ தலைவராக விளங்கினார்‌ என்பதையும்‌ அவருடைய பரிநிர்வாண காலத்தைப்‌ பற்றியும்‌ பவுத்த நூல்கள்‌ தெளிவாகக்‌ கூறுகின்றன.  பெற்றோர்‌ இவருக்கு வர்த்தமானர்‌ என்று பெயரிட்டனர்‌. யசோதா என்ற பெண்ணை மணந்து அனோஜா என்ற மகளுக்கும்‌ தகப்பன்‌ ஆகிறார்.  பெற்றோரின்‌ இறப்பிற்கு பின்னர்‌ அரசபதவிக்கு வந்த தன்‌ அண்ணன்‌ நந்தி வர்த்தன்‌ மற்றும்‌ முக்கிய மனிதர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ சமணத்‌ துறவியானார்‌.  தன்னுடைய முப்பதாவது வயதில்‌ அரச வாழ்வைத்‌ துறந்து பன்னிரெண்டு  ஆண்டுக்காலம்‌ கடுந்தவமிருந்து ஞானம்‌ பெற்றார்‌. தன்னுடைய 72 வத
  அறன் வலியுறுத்தல்   அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் வள்ளுவர் கூறும் மனிதநேய பண்புகளை பார்ப்போம் மனிதன் மனிதனாக வாழ. மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல்   திருக்குறள் ஆகும். இது. நாடு மொழி இனம் , சமயம் கடந்து எக்காலத்திற்கும் பொதுவான நூல் ஆகும். பொதுவாக இலக்கியங்களை. அகஇலக்கியம் , புற இலக்கியம் என பகுப்பது ஒரு மரபு.   அறம் , பொருள் , இன்பம் என்னும். உறுதிப்பொருள் மூன்றை   உணர்த்தும். திருக்குறளானது இந்த மூன்றினையும், கூறுவதால்   முப்பால் என்ற பெயரை பெற்றுள்ளது. பொருளும் இன்பமும் அறத்தின் அடிப்படையில் வந்தால் அது போற்றப்படும். ஆனால் , அறத்தின் வழியில் வராத பொருளும், இன்பமும். பழிக்கப்படும். அதனால்தான். வள்ளுவர். அறத்தை வலியுறுத்திக் கூறுகிறார் மற்ற அதிகாரங்களில்     உள்ள தலைப்புகளை பார்த்தல் அறத்தை தவிர வேறு எதையும்   வலியுறுத்திக் கூறவில்லை. இந்த அதிகாரத்தை பற்றி சுருக்கமாக சொன்னால்...   மனத்தால் நேர்மையுடன் இருப்பதே அறமாகும். அப்படி அறமுடன் இருப்பவருக்கு செல்வமும் சிறப்பும் வளரும். அறத்தை மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. மனதளவில் மற்றவர்களை   அழிக்கும் குணம் , பொருள