அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: உலக சுகாதார நிறுவனம்..
ஒருமுறை பாரிஸ் நகரில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில், பயணிகள் இருக்கையில் இரு பயணிகள் இந்த இ-சிகரெட் பிடித்துக் கொண்டு வந்தனர். திடுக்கிட்டுப் போனேன். விமானத்திலேயே மறைத்து பிடித்தனர். சொல்லலாமா என்று பார்த்தேன். பின்னர் நமக்கு ஏன் வம்பு என்று வாய் மூடி இருந்து விட்டேன். இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன? இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு பகுதியில் திரவ வடிவ நிகோடின் இருக்கும். மற்ற பகுதியில் பேட்டரியும், திரவ வடிவ நிக்கோட்டினை சூடாக்கும் சின்ன கம்பியும் இருக்கும். இதில், சில இ-சிகரெட்டுக்களில் உண்மையான சிகரெட்டின் முனையில் இருக்கும் நெருப்பு கங்கு கனன்றுகொண்டிருப்பது போன்ற தோற்றமும், புகை வெளியேறுவதைப்போல வெண்ணிற நீராவி வரும் வசதியும் கூட செய்யப்பட்டிருக்குமாம். அந்த வகைப் போன்றது போல இவைகள். இதனால் தீ விபத்து என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த வகை, இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு