வில்ஃபிரட் ஓவன் (Wilfred Owen, பி. மார்ச் 18, 1893 - இ. நவம்பர் 4, 1918)
ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், போர் முனையிலிருந்து கொண்டே போரின் கடுமையினையும் உண்மையையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவன் எழுதிய கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
ஓவனின் நண்பரும் சக கவிஞருமான சிக்ஃபிரைட் சாசூன் சாதாரண போர் வீரனாக இருந்த ஓவனைக் கவிதை எழுதத் தூண்டினார். பதுங்கு குழி போர் முறையின் கொடூரங்களையும், நச்சுப்புகை தாக்குதல்களின் அவலங்களையும் ஓவனின் கவிதைகள் துல்லியமாக படம்பிடித்துக் காட்டின.
1918ல் போர் முடிவதற்கு ஒரு வாரம் முன்னர் போர்க்களத்தில் ஓவன் கொல்லப்பட்டார். 1919ல் அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானது. வெளியாகி சுமார் நூறாண்டுகள் கடந்த பின்னரும், போர்க் கவிதை மரபில் ஓவன் அழியாத இடம் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் உலகெங்கும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.
வில்ஃபிரெட் ஓவென் (Wilfred Owen) முதலாம் உலகப் போரின் கொடுமைகளை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்த ஆங்கிலக் கவிஞர். அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான "Anthem for Doomed Youth" கவிதையிலிருந்து ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு:
Anthem for Doomed Youth
அழிவிற்காக விதிக்கப்பட்ட இளைஞருக்கான இரங்கற்பா
(Anthem for Doomed Youth - தமிழாக்கம்)
எந்த மெழுகுவர்த்திகள் அவர்களை நினைவுகூர ஒளிரும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக