நீலகிரியின் தந்தை: ஜான் சல்லிவன் (John Sullivan) சான் சல்லிவன் (ஜான் சல்லிவன்; John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில்யில் சாதாரண எழுத்தராக சேர்ந்த சல்லிவன், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 1839ம் ஆண்டு ஆளுனர் அவை உறுப்பினராக உயர்ந்தார். இயற்கை, சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் முயற்சியாலேயே ஊட்டி ஏரி வெட்டப்பட்டது. 1841ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய பின், 1855ம் ஆண்டு மரணமடைந்தார். பொருளடக்கம் 1 இளமைக்காலம் 2 கிழக்கிந்திய நிறுவனப்பணி 3 நீலகிரி உருவாக்கம் 4 குடும்பம் 5 இறப்பு 6 மேற்கோள்கள் 7 இவற்றையும் பார்க்கவும் இளமைக்காலம் சல்லிவன் 1788ம் ஆண்டு சூன் 15ம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை சிட்டீபன் சல்லினன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றியவர்....
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு யாருடைய காலத்தியது? புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் குடுமியான்மலை. இந்த ஊரில் உள்ள குன்றில் குடுமித்தேவர் என்ற பெயரில் உள்ள சிவபெருமானின் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள் புகழ் பெற்றவை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் அளிந்த நிவந்தங்களைப் பற்றிய கல்வெட்டுகள் குடுமித்தேவர் கோவிலிலும் அதை அடுத்துள்ள குடைவரைக் கோவிலிலும் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது குடைவரைக்கோவிலில் காணப்படும் இசைக்கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் இருந்துவரும் இசை மரபினுடைய ஆழத்தைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. சிகாகிரீசுவரர் திருநலகுன்றம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கோயில் இப்போது சிகாகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. (சிகா – குடுமி, குடுமியுள்ள சிவன்) இந்த பெயர் வந்ததற்கான காரணம் குறித்து ஒரு தல புராணம் உள்ளது. இங்குள்ள மேலக்கோயிலில் மலையின் கிழக்கு சரிவில் குடைவரை உள்ளது. இதற்கு தெற்கே உயர்ந்த பாறையில் புகழ் பெற்ற இசை கல்வெட்டொன்று உள்ளது. குகையினை மேலே 64 நாய...
வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர் வெண்ணியில் நடைபெற்ற போரில் சோழன் கரிகாலன் பெருவளத்தானும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்டு தமது வீரத்தைப் பறைசாற்றி இருந்துள்ளனர். இதில் வீரமும், மானமும் புகழ் பெற்று நின்றன என்பர். இதில் போரில் தோல்வியுற்றப் பின்னர் சேர நாடு ஒளி இழந்தது என்று சங்ககாலப் புலவர் பெருமக்கள் கூறுகின்றனர். கழாத்தலையார் என்ற சங்ககாலப் புலவர் புறநானுற்று வரிகளில், "மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப, இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழாவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்" (புறம் 65) விளக்கம்: முரசு முழங்கவில்லை, யாழ் இசையை மறந்து. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர்கள் உழுதலைத்தவிர்த்தனர். ஊர்புற வேலிகள் விழா ஏதுமின்றி கூட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. என்று சேர நாட்டில் உள்ள சோர...
தோண்டத்தோண்ட வெளிவரும் தமிழர் நாகரிகம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

தமிழக அளவில் தொல்லியல் துறை கீழ்க்கண்ட இடங்களில் அகழ்வாராழ்ச்சி நடைபெற்றால் மேலும் தமிழரின் தொன்மை நாகரிகங்கள் வெளிப்படும். கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண்மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி. இங்கிலாந்து தொல்லியல் அறிஞர் துப் ரெய்ஸ் போன்ற ஒரு சில வெள்ளையர்கள் இந்த இடங்களில் அகழ்வாராழ்ச்சி செய்து வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கூறி உள்ளனர். தமிழகத்தை மூவேந்தர் மட்டுமன்றி பல்லவர், களப்பிரர், என ஏராளமான அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அம்மன்னர்களைப் பற்றிய வரலாறு, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றி தொல்லியல் சான்றுகள் நமக்கு புதுப்புது தகவல்களைத் தருகின்றன. அப்படி தமிழகத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இடங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்கள் இங்கே. கரூர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கிரேக்க, ரோம, அரேபிய, சீன வியாபாரிகள் அதிக அளவில் வந்து சென்ற பிரசித்தி பெற்ற வர்த்தக மையம். ஆதிபுரம், கருவூர் வ...
நியூ கலிடோனியத் தமிழர்கள்..
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நியூ கலிடோனியத் தமிழர்கள். . ************************************************* நியூ கலிடோனியா என்ற தீவு, ஆஸ்திரேலியா அருகில் உள்ளது. இந்தத் தீவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 500 பேர் வாழ்கின்றனர். மலபார்கள் என அழைக்கப்படும் இவர்கள் 19வது நூற்றாண்டில் பிரெஞ்சு குடியேற்றப் பகுதியாக இருந்த ரீயூனியனிலிருந்து வந்தவர்களாவர். வேலையில் சிறந்தவர்கள் தமிழர்கள் ------------------------------------------------------------------- நியூ கலிடோனியாவில் சென்ற நூற்றாண்டில் பல தமிழ்க் குடிகள் உள்ளூர் குடிகளுடன் கலப்புமணம் செய்தனர். இந்தியர்கள் பெருந்திரளாக வேலைக்கு அங்கு சென்றதாகவும் அங்கிருந்த சீனர்களையும் சாவாகத்தாரையும் விடச் சிறப்பாக வேலை செய்ததாகவும் 1919 இல் வெளியான ஓர் நூல் கூறுகிறது. அழுகையில் தமிழ்ப்பாடல்.. --------------------------------------------------- ஆகஸ்டு 1967 இல் தாஹித்தியில் தமிழினத்தைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் கண்டறியப்பட்டனர். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தங்களின் மூதாதையர் குறித்து தெரியவில்லை எனினும் பெற்றோர் தங்களின் பெற்றோர் எவ்வாறு இந்தியர்களுடன் அவர்கள...
பல்லவர்கள் வரலாறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பல்லவப் பேரரசர்கள் சிம்மவர்மன் முதல் அபராஜிதவர்மன் வரையிலான அரசர்கள் பல்லவர் ஆட்சிக்குச் சிறப்புச் செய்தனர். இவர்களில் முதலாம் மகேந்திரன் போன்றோர் கலைவல்லுநர்களாகவும் திகழ்ந்தனர். சிம்மவர்மனும் சிம்மவிஷ்ணுவும் செப்பேட்டுச் சான்றுகளாலும் , கல்வெட்டுச் சான்றுகளாலும் சிம்மவர்மனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. சிம்மவர்மனின் மகனாகிய சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்திய பெருமைக்கு உரியவன். சிம்மவர்மன் (கி.பி. 550-570) இவன் காலத்தனவாக இரண்டு சாசனங்கள் கிடைத்துள்ளன. திருத்துறைப்பூண்டி வட்டம் பள்ளன் கோயில் எனும் ஊரிலிருந்து கிடைத்த செப்பேட்டுச் சாசனமும் , திருவள்ளூர்வட்டம் சிவன்வாயில் என்ற கிராமத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்றும் இவனது வரலாறு அறியத் துணை புரிகின்றன. பத்து அசுவமேதயாகங்களையும் , பகுசுவர்ணம் என்ற யாகத்தையும் செய்தவன் இவன் ...