1806 - இந்தியாவில் ஐஏஎஸ்
1806 - இந்தியாவில் ஐஏஎஸ்
1806 - இந்தியாவில் ஐஏஎஸ் போன்று உலகின் பல பகுதிகளிலும் காணப்படும், அரசுப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடங்கிவைத்த, கிழக்கிந்தியக் கம்ப்பெனிக் கல்லூரி தொடங்கப்பட்ட நாள்...
1806-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கிய East India Company College என்பது, இன்று உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அடித்தளமாக அமைந்தது என்பது வரலாற்றின் ஒரு முக்கிய திருப்பமாகும்.
🔹 முக்கிய அம்சங்கள் சுருக்கமாக:
- 1806: ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்பெனி, தனது நிர்வாகத்திற்கான அதிகாரிகளை உருவாக்க East India Company College-ஐ தொடங்கியது.
- 1829: இந்தியன் சிவில் சர்வீஸ் (ICS) என்ற பெயரில் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது.
- 1857: இந்தியாவின் நிர்வாகம் நேரடியாக இங்கிலாந்து அரசின் கீழ் சென்றபின், ICS ஒரு அரசுத் தேர்வாக மாறியது.
- 1947: இந்திய விடுதலைக்குப் பிறகு ICS → IAS (Indian Administrative Service) என மாற்றம்.
- 1855: இங்கிலாந்தில் 'Her Majesty’s Civil Service' தொடங்கப்பட்டது.
- UN Civil Service: இன்று ஐநா அமைப்புகளிலும் “International Civil Service Commission (ICSC)” மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
🔹 வரலாற்று ஒப்பீடு:
- சீனாவின் இம்பீரியல் தேர்வுகள் (கி.மு. 140): அரசுப் பணிக்கான உலகின் முதல் தேர்வுகள்.
- மெரிட்டோக்ரசி என்ற கருத்து: கன்ஃபூசிய சிந்தனையின் அடிப்படையில், திறமை அடிப்படையில் தேர்வு செய்யும் முறை.
ஆம்! அரசு நிர்வாகத்துக்காகு அலுவலர்களுக்குப் பயிற்சியளிப்பது என்பதைத் தொடங்கியது ஒரு தனியார் வணிக நிறுவனம்தான்! இண்டீஸ் என்றழைக்கப்பட்ட, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் வணிகம் புரிவதற்காகத் தொடங்கப்பட்ட ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி(எச்ஈஐசி), 1700களின் இடைப்பகுதியில், அன்றைய உலக வணிகத்தில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருந்தது.
ப்ளாசிப் போர்
1757இல் ப்ளாசிப் போரின் வெற்றியையடுத்து, அரசாட்சி செய்யும் அமைப்பாக மாறி, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மட்டுமின்றி, ஹாங்க்காங் வரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தது.
உலகின் குறிப்பிடத்தக்க அளவு நிலப்பரப்பை ஒரு நிறுவனம் ஆட்சி செய்தது எனும்போது, அதற்கேற்ற அளவு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் அல்லவா?
16-18 வயதுடைய ஆங்கிலேய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பணிகளைச் செய்வதற்குரிய பயிற்சியளித்து, ஹானரபிள் ஈஸ்ட் இண்டியா கம்ப்பெனி'ஸ் சிவில் சர்வீஸ்(எச்ஈஐசிசிஎஸ்) என்று பட்டமளித்துப் பயன்படுத்த இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவே உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சிவில் சர்வீசஸ் என்ற தற்காலத்திய முறைக்குத் தொடக்கம் என்றாலும், கி.மு.140இல் சீனப் பேரரசர் வூ, 100 இளைஞர்களுக்கு நடத்திய 'இம்ப்பீரியல் எக்ஸாமினேஷன்' என்பதுதான், அரசுப் பணிகளுக்கான முதல் தேர்வு. பின்னாளில் மெரிட்டோக்ரசி என்று பெயரிடப்பட்ட, கன்ஃபூசியச் சிந்தனையின் அடிப்படையில், சீன அரசுப் பணிகளுக்கு, உயர்குடியினர் என்ற கட்டுப்பாடின்றி யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தேர்வுகள் அதன்பின் சீனாவில் 1905 வரை வழக்கமாகவே இருந்தன.
ஐசிஎஸ்
பிரபுக்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் நடைமுறை இங்கிலாந்தில் இருந்த நிலையில், 18ஆம் நூற்றாண்டின் பல ஆங்கில எழுத்தாளர்கள், சீனத் தேர்வு முறையைப் பற்றிப் புகழ்ந்து எழுதினர். அந்தப் பின்னணியில்தான், தனக்கான ஊழியர்களை உருவாக்க கிழக்கிந்தியக் கம்ப்பெனி இந்தக் கல்லூரியைத் தொடங்கியது. இந்தியன் சிவில் சர்வீஸ்(ஐசிஎஸ்) என்ற பெயரையும், தேர்வையும் 1829இல் அது அறிமுகப்படுத்தியது.
1857இன் முதல் சுதந்திரப் போருக்குப்பின், இந்தியாவின் ஆட்சி நேரடியாக இங்கிலாந்து அரசின்கீழ் சென்ற பின்னணியில், அரசுப் பணிக்கான தேர்வாகவே ஐசிஎஸ் மாறி, விடுதலைக்குப்பின் ஐஏஸ் ஆகியது. இங்கிலாந்து அரசுப் பணிகளுக்கான 'ஹர் மெஜஸ்ட்டீ'ஸ் சிவில் சர்வீஸ்' என்பதே 1855இல்தான் தொடங்கப்பட்டது.
இன்று உலகின் பல நாடுகளில் இம்முறை நடைமுறையிலிருப்பதுடன், ஐநாவின் அமைப்புகளுக்கும் இண்ட்டர்நேஷனல் சிவில் சர்வீஸ் கமிஷன்(ஐசிஎஸ்சி) என்ற அமைப்பின்மூலம்தான் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்!
குறிப்பு: பிரிட்டிஷ் இந்தியாவில், ஆட்சி பணிகளுக்காக பணியாற்றுவதற்கு ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் சிவில் சர்வீஸ் பணி புரிவதை பெருமையாக கொண்டிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக