திருக்குறள் நாற்சீர் மணிகள்
திருக்குறள்
நாற்சீர் மணிகள்
அகத்தானும் இன்சொ லினதே அறம்
உள்ளத்துடன் ஒன்றாகக் கலந்த இனிய சொற்களைச் சொல்லுதலின்கண் இருக்கின்றது அறம் 1
அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும்
கொடிய உள்ளம் உடையாரைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். 2
அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்
வாய்மையாலே உள்ளம் தூயதாகும். 3
அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு
உறவினர் போன்று மறைந்துநிற்கும் பகை வர் நட்பினை அஞ்சுதல் வேண்டும். 4
அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
அறிவுடையோர் தொழில் அஞ்சவேண்டிய தற்கு அஞ்சுதலாம் 5
அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு
சீரியோர் தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தைக் கண்டஞ்சுவர். 6
அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
அடங்காமையாகிய தீவினை கொடிய நரகத் தில் இருக்குமாறு செய்யும். 7
அரியர் அவையகத்து அஞ்சா தவர்
அவையகத்து அஞ்சாது சென்று சொல்ல வல்லார் சிலர். 8
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
சொன்னவாறு செய்தல் அருமை ஆகும். 9
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
மேற்கொண்டது அருமையாகிய வினை எனக் கருதித் தளருதல் ஆகாது. 10
அருளற்றார் அற்றார் மற்றாதல் அரிது
அருள் எனும் பண்பில்லாதவர் அழிந்தவரே; மீண்டும் சிறக்கமாட்டார். 11
அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
மாமிசம் உண்போர்க்கு அருளால் வரும் பயன் இல்லை. 12
அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்குஞ் சூது
சூது அருளைக் கெடுத்துத் துன்பத்தில் செலுத்தும். 13
அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு
துன்பம் வந்துழித் தானும் தன் நண்ப னுடன் அதனைத் துய்ப்பதே நட்பு ஆகும். 14
அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
உயிர்களுக்கு அறத்தினும் சிறந்த ஆக்கம் இல்லை. 15
அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று
தான் கேட்டறிந்த செயல்களில் சிறிதும் ஐயப்பாடு இல்லாதவனே ஒற்றனாவான். 18
அறிவுஅகற்றும் ஆகலூழ் உற்றக் கடை
நற்காலம் வந்தகாலத்தில் அறிவு விரிவடை யும். 17
அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி
அறிய வேண்டியவற்றை அறிந்து செய லாற்றாதிருத்தல் பழி ஆகும். 18
அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்
அறிவில்லாதவர்கள் எத்தகைய பொருள் பெறினும் ஒன்றும் இல்லாதவரே. 19
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அன்புடையவர்கள் தம் எலும்பையும் பிறர்க்கு உதவும் இயல்பினோர். 20
ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
நண்பினனுக்குத் தொல்லை வந்த காலத்தில் அப்பொழுதே சென்றுதவி அதனைக் களை வது நட்பாகும். 21
ஆதி பகவன் முதற்றே உலகு
உலகம் ஆதிபகவனாகிய இறைவனை முதல்வ னாக உடையது.22
ஆறாதே நாவினாற் சுட்ட வடு
கொடிய சொல்லொடு கூடிய நாவினால் சுட்ட வடு என்றும் ஆறாது.23
இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்
புகழைத் தேடாது வாழ்வோர் இறந்தோர் ஆவர். 24
இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு
ஒழுக்கம் இராது. இல்லாதவனிடத்தில் உயர்வு 25
இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை
நல்வினையால் வந்த பொருள்களை ஒருவன் இழந்தாலும் மீண்டும் வந்து பயன்தரும். 26
இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்
ஒழுக்கத்தினின்றும் தவறுகின்றவர் இழிந்த பிறப்பினராகுவர்.27
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி
ஒழுக்கத்தினின்றும் வழுவுவோர் தாம் அடைதற்குரித்தல்லாத பழியை அடைவர்.28
இனத்தானும் இன்னான் எனப்படுஞ் சொல்
இவன் இத்தன்மையுடையான் என்று சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாகும்.29
இனந்தூயார்க்கு இல்லை நன்றாகா வினை
குற்றமில்லா தவருடன் பழகுவோர்க்கு ஆகாத நல்வினை இல்லை. 30
இன்மையின் இன்மையே இன்னா தது
வறுமை போன்று கொடியது வறுமையே ; பிறிது இல்லை. 31
இன்னாதே கல்லார்கண் பட்ட திரு
கற்றறிவில்லானிடத்துள்ள செல்வம் அவ னுக்கும் நல்வழியில் பயன்படாதாகையால் கொடுமையையுடையது. 32
உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்
ஓத்த உணர்ச்சியுடைய இருவரே நண்ப ராகமுடியும். 33
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து
உதவியின் அளவு அதனைச் செய்வித்துக் கொண்டவருடைய அமைதியின் ஆகும். அளவு 34
உயிர்ப் பொருட்டால் நாண்துறவார் நாணாள்பவர்
நாணம் இன்னது என்றறிந்தோர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுதற்காக நாணத்தை இழக்கமாட்டார். 35
உய்த்துச் சொரியினும் போகா தம
முறையே தம்மைச் சாரும் பொருள்களைப் புறத்தே கொண்டுபோய் வீசிலும் தம்மை விட்டு நீங்க மாட்டா. 36
உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்
மிகச் சிறந்த தவத்தினையுடையார் வெகு ளின் உய்தல் இல்லை. 37
உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
பெரியோருக்குத் தீங்கு செய்வோர் உய்ந்து வாழமாட்டார். 38
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
ஒருவர் செய்த நன்றியைக் கொன் றவன் எக்காலத்திலும் உய்ய முடியாது. 39
உலகத் தியற்கை அறிந்து செயல்
நூலறிவுடையோர் உலகத்து நடைமுறை யையும் அறிந்து செய்தல் வேண்டும். 40
உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு
உலகத்தொடு பொருந்தி அதன்வழி ஒழுகுவது அறிவு ஆகும். 41
உள்ளதென் இல்லவள் மாணாக் கடை
மனைவியிடத்து மாண்புசிறந்த குணங்கள் இல்லையேல் அவளையடைந்தவன் ஒன்றும் அடைந்தவனாகான். 42
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
பிறப்பு என்பது உறங்கி விழித்தலை ஒத்தது. 43
உறுதி உழையிருந்தான் கூறல் கடன்
உறுதியாகிய உண்மையை எடுத்து இடித் துக் கூறவேண்டியது அமைச்சன் கடமை ஆகும். 44
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
ஊணும் உடையும் இவை ஒழிந்த பிறவும் உயிர்களுக்கெல்லாம் பொது. 45
ஊனுண்ண அண்ணணுத்தல் செய்யாது அளறு
ஊன் உண்ணுவோனை நரகம் விழுங்கி விடும்; பின்னர் என்றும் அவனை வெளியில் விடாது. 46
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
அறிவில்லாதிருத்தல் என்னும் ஒற்றுமைக் குணம்பற்றிக் கள்குடிப்போர் நஞ்சுண் போரை ஒத்தவர். 47
எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்
அரசன் தொழில் எல்லாரிடத்திலும் எப் பொழுதும் தும் நிகழ்கின் நிகழ்கின்றவற்றை றவற்றை வழியே விரைந்தறிதலாம். ஒற்றர் 48
-
எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு
தன்னெஞ்சம் பிறர் அறியாவண்ணம் அவர்* பொருளைக் கவரக் கருதாதிருக்குமாறு காக்கப்படல் வேண்டும். 49
எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்
சிறியதாயினும் தீவினையைப் பிறருக்குச் செய்யாதே. 50
என்னம் தகைமாண்ட தக்கார் செறின்
சாப அருளுக்கேதுவாகிய பெருமை மாட்சிமைபட்ட அருந்தவர் அரசனை வெகுண்டால் அவன் கதி என்ன ஆகும்? 51
என்னெருவன் சாந்துணையும் கல்லாத வாறு
உயிர் போந்துணையும் ஒருவன் படிக்கா திருப்பது ஏன்? 52
ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு
தான் சேர்ந்துவாழும் இனத்தினர் அறிவே தன் அறிவாக விளங்கும். 53
ஒருவற்கு உயற்பால தோரும் பழி
ஒருவன் ஒழிக்கவேண்டிய தன்மையுடை யது தீவினையே. 54
ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா
அவா ஒருவனை வஞ்சித்துப் பிறப்பின் கண்ணே வீழ்த்திக் கெடுக்கும். 55
ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது
புறங்கூறமாட்டான் எனப் பிறரால் கூறப் படுதல் இனிமையானது. 56
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
உயிர் ஒழுக்கத்தைவிடத் தாழ்ந்தது ஆத லின் உயிரை விட்டேனும் ஒழுக்கத்தைக் காப்பாற்றுக. 57
ஓன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று
ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாதிருத்தல் நல்லது, 58
ஓன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு
உலகத்தோடு ஒவ்வாதார் நட்பினை அவர் விரும்புவதைக் கொடுத்தேனும் விட்டு விடுக. 59
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
தம் நன்மதிப்பினை இழத்தற்குரிய செயல் களை விடுதல் வேண்டும். 60
ஓம்பா மெலியார்மேல் மேக பகை
மெலியார்க்குப் பகையாதலை விரும்புக. ஒழியாது 61
கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையு மில்
கண்களைப் பெற்றவர் அவற்றின் பயனாகிய அருளையும் உடையவராவர். 62
கண்ணென்னங் கண்ணேட்ட மில்லாத கண்
கண்ணுக்குரிய கருணை இல்லாதகாலத்தில் கண்ணிருந்தும் பயனில்லை. 63
கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்
இரப்போர் நிலையைக் கண்டும் இல்லை என் போர் கொடுமையை நினைந்தால் உள்ளம் அழிந்துவிடும். 64
கரும்புபோல் கொல்லப் பயன்படுங் கீழ்
கீழ்மக்கள் கரும்புபோல வலியார் நெருக்கும் காலத்தில் பயன்படுவர், நைய 65
கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு
களவில்லா வாழ்வினாரைத் தேவருலகமும் தள்ளாது கொள்ளும். 66
கற்றபின் நிற்க அதற்குத் தக
படித்த நூல்களின்வழியே படித்த பின்னர் நிற்றல் வேண்டும். 67
காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்
குலத்தின் இயல்பை அதன்கண் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும். 08
காலத்தால் தக்கது அறிவதாம் தூது
காலத்தொடு பொருந்த மேற்கொண்டதனை முடிக்கத்தக்க உபாயம் அறிபவனே தூத னாவான். 69
காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
அறிவுடையோர் தம் பகையை வெல்லும் காலத்தைப் பார்த்து அதுவரும் அளவும் உள்ளே வெகுள்வர். 70
காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
சினம் தன்னைப் பற்றாவண்ணம் ஒருவன் காத்துக்கொள்ளவில்லையேல் அவனுக்கே கடுந்துன்பங்களை அஃதுண்டாக்கும். 71
கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர்
செயற்கரிய செய்வோர் தாழ்நிலத்திருப்பா ராயினும் சிறியராகார், 72
குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்
நல்ல குடியில் பிறந்தவர்கள் தம் ஒழுக்கம் குன்றும் செயல்களைச் செய்யமாட்டார். 73
குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு
நற்குலப் பிறப்புரிமையுடையவன் ரிடத்தும் பணிந்தொழுகுவான். எவ 74
குற்றமே அற்றந் தரூஉம் பகை
உடையான் உயிருக்கு இறுதி தேடும் இயல் வாய்ந்தது பகை. 75
கூடாதே உட்பகை உற்ற குடி
உட்பகை உண்டாய குடியிலுள்ளவர் உள்ளத்தால் தம்முள் கூடமாட்டார். 76
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
ஒருவற்குக் கேடில்லாது சிறந்த செல்வம் கல்வி ஆகும். 77
கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்
பகைவரும் விரும்புமாறு சொல்லப்படுவதே சொல்லாகும். 78
கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
தமக்கொரு தொல்லை வந்தகாலத்தே கை விடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. 79
கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை
நீதிநூல்வல்லார் பகையை என்றும் கொள் ளாதே. 80
சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து
சான்றோர்களுடைய மன நன்மைக்குத் துணையாக இருப்பது இனநன்மை. 81
சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை
துறவறத்தோர்க்கு ஒருயிரைக் கொல்வ தால் வரும் செல்வம் கடைப்பட்டதாகும். 82
சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
சான்றோர் அறியாமையாகிய இருளினை ஒட்டும் பொய்யாமையாகிய விளக்காகக் கொள்வர். விளக்கை 83
சான்றோர் பயனில சொல்லாமை நன்று
சிறந்தோர் பயனில்லாதவற்றைச் சொல்ல மாட்டார். 84
சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு
நற்குடிப்பிறந்தார் நல்குரவு வந்த காலத் தில் பணியமாட்டார். 85
சிறியர் செயற்கரிய செய்கலா தார்
செய்தற்கு அருமையாகிய செயல்களைச் செய்தவரே சிறியவர் எனப்படுவோர், 86
சிறுமைதான் குற்றமே கூறி விடும்
சிறியோர் பிறர் குற்றத்தையே கூறுவர். 87
சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்
சிறியோர் சிற்றினமக்களை உறவினராகக் கொள்வர். 88
சிறுமை பணியுமாம் தன்னை வியந்து
சிறியோர் சிறப்பில்லாத தம்மை வியந்து நிற்பர். காலத்திலும் 89
சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூது
சூது, சிறுமைகள் பலவற்றைத் தந்து சிறப் பினையும் ஒழிக்கும். 90
செய்தக்க செய்யாமை யானும் கெடும்
செய்ய வேண்டியவற்றைச் செய்யாமை யாலே கேடு உண்டாம். 91
செய்தவம் ஈண்டு முயலப் படும்
அறிவுடையோர் இம்மைக்கண் தவமுயற்சி யுடையோராய் இருப்பர். 92
செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
அறிஞர் இழிவாக எண்ணும் செயல்களைச் செய்யாதே. 93
செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு
எல்லோரும் செல்வம் பெற்றவரைப் பாராட்டுவர். 94
சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
பயனில்லாத சொற்களைச் சொல்லாதே. 95
சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்
பேசப்படுவோன் இல்லாத இடத்தில் குற்றப்படும் சொற்களைச் சொல்லாதே. 96
சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்
அறிவுடையோர் பெரும் பயனைத் தராத சொற்களைச் சொல்லமாட்டார். 97
தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
கணவன் மனைவியர் எனும் இருவரிடத்தும் உள்ள புகழைக் காப்பாற்றிக்கொண்டு நற் குண நற்செய்கைகளை என்றும் கொள்பவள் பெண் எனப்படுவாள். 98
தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை
ஒரு குடிக்கண் பிறந்த பல்லோருள்ளும் அக் குடிச்சுமை தாங்குவார் மேலதாம். 99
தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தம்மைக் கீழாக மதிப்போரைப் பொறுத் துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும்.100
தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு
தம் நிலைக்குத் தகாதவற்றைச் செய்தால் உலகம் இகழும். 101
தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்
முயற்சியால் கிடைத்தவற்றை உண்டற்கு மேல் இனியது இல்லை. 102
தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு
பிறரிடத்தில் நுட்பமானவற்றைக் காணும் வன்மை அறிவுக்குண்டு. 103
திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர்
தமக்குறுதியானவற்றை அறியாமையால் கவலை இல்லாத நெஞ்சினையுடைய கீழ் மக்கள் நன்மை உடையர். 104
தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு
தீச்செயலின் நீக்கி நற்செயலில் செலுத்தும் தகுதி வாய்ந்தது அறிவு ஆகும். 105
தீதே புறனழீஇப் பொய்த்து நகை
ஒருவனைக் காணாதவிடத்து இகழ்ந்துரைத் துக் கண்டபொழுது பொய்யாகச் சிரித்தல் தீமையது. 108
தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்
நல்லவர் நட்பைக் கைவிடுவது தீமையினைப் பயக்கும். 107
தீயவும் நல்லவாம் செல்வஞ் செயற்கு
நல்வினை வந்தகாலத்தில் தீமைபயப்பனவும் செல்வத்தை ஆக்குதற்கு நல்லனவாம். 108
தீயவை தீயினும் அஞ்சப் படும்
தீயைவிடத் தீவினைகளைக் கண்டஞ்சுதல் வேண்டும். 109
தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்
தீய இனத்தைவிடக் கொடிய பகை வேறு இன்று. 110
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
தீநெறி ஒழுகுதல் எக்காலத்திற்கும் துன்பத் தைத் தரும். 111
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
ஒரு செயலைச் செய்யத் தொடங்கிய பின்னர் அதனைப்பற்றி நினைப்போம் என்றெண்ணு வது குற்றமாகும். 112
துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு
துன்பம் வந்தகாலத்தில் நமக்கு உற்ற உதவியைச் செய்தார் நட்பை விடாதே.
தூங்கற்க தூங்காது செய்யும் வினை
விரைந்து செய்ய வேண்டிய செயல்களைக் கடத்தாது உடனே செய்க. 1.4
நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது
இன்னாதனவற்றைச் சொல்லுங்கால் இனிய சொற்களால் சொல்லித் தம் அரசனுக்கு நன்மை பயப்பது தூதர் தொழில். 115
நகலானும் நன்னயம் என்னுஞ் செருக்கு
நட்பினாலே நல்ல நீதி என்னும் பெருஞ் செல்வம் உண்டாகும். 116
நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு
ஒருவனோடு நட்டபின் நட்பினை விரும்பு வோர் அவனை விட்டு நீங்கார். 117
நயவற்க நன்றி பயவா வினை
நன்மை பயவா வினைகளை விரும்பாதே .118
நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்
நல்கூர்ந்தவருடைய சொற்கள் பயன்படுதல் இல்லை 119
நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை
ஒருவனிடத்து நாணின்மை நிலைக்கின் அக்குணம் அவன் நலங்களெல்லாவற்றையும் ஒழிக்கும். 120
நன்றல்லது அன்றே மறப்பது நன்று
பிறர் செய்த தீச்செயல்களை அப்பொழுதே மறத்தல் வேண்டும். 121
நாடல்ல நாட வளந்தரு நாடு
தேடி வருந்தச் செல்வம் தரும் நாடுகள் நாடாக மாட்டா. 122
நாணென்னும் நன்மை குறித்தது சால்பு
சால்பு என்னும் குணம் நாணம் என்பத னொடு கூடிய வழியே பயன்படும். 123
நிரப்பினுள் யாதொன்றுங் கண்பாடு அரிது
நிரப்பு வந்தவழி எவ்வாற்றானும் உறங்கல் அரிதாகும். 124
நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு
அறிவுடையோர் இருக்கும் அவைக்கு அஞ்சு பவர் நூலறிவு பயனுடையதன்று. 125
நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம்
நெஞ்சகத்தில் மிகுந்தெழுவனவற்றை முகம் காட்டிவிடும். 126
நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
அன்பால் உள்ளம் அலர்ந்து நிற்க உடன் சேர்வதே நட்பாகும். 127
நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி
தீவினை நல்வினைகளான் நேரும் செயல்களுக் காக மனத்தில் மாறுபடாதிருத்தலே அறி வுடையோருக்கு அழகு. 128
நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று
தனக்குப் பிறர் துன்பம் செய்தால் இச் செய்கையால் அவர் துன்பம் அடைவரே என்று வருந்தித் தான் அறன் அல்லாதவற் றைச் செய்யாதிருத்தல் நன்று. 129
நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவர்
தமக்குத் துன்பம் வேண்டாம் என்று கருது வோர் பிறருக்குத் துன்பம் செய்யார்.130
நோற்பார் சிலர்பலர் நோலா தவர்
தவம் செய்வோர் சிலர்; செய்யாதோர் பலர்.131
பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு
பிறர் பெருமை அறிவாரிடத்துப் பகையுள் வழியும் அஃதுளதாகாது பண்புகளே உள்ளன. இனியவாய 132
பயவாக் களரனையர் கல்லா தவர்
படிப்பறிவில்லாதவர் தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத் தோடு ஒப்பர். 133
பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
அந்தணனது உயர்ந்த வருணம் அவன் ஒழுக்கம் குன் றுவதால் கெடும். 134
பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகை
பிறப்பினை ஒழிக்க முற்படுவோர்க்குப் பிறப் பிற்குக் கருவியாக உடல் மிகை ஆகும்.135
பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்
பிறருக்குத் துன்பம் செய்யாமையே குற்ற மற்ற பெரியோர் கொள்கை ஆகும். 136
பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு
பிறர் குற்றத்தை எடுத்துச் சொல்லாக் குணத்தால் சால்பு சிறந்ததாம். 137
பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று
மற்றொருவன் மனைவியை விரும்பாத குணம் சிறந்தது. 138
பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு
அறிவில்லார் கேண்மை நிறைமதி பின்னர்க் குறைவது போல நாள்தோறும் குறையும் தன்மையை உடையது. 139
பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற
ஒப்புரவைப் போன்று நல்ல பிற செயல் களை எங்கும் பெறுதல் அருமையானது.140
பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
அறிவில்லார் நட்பை அகற்றி விடுக. 141
பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
இழிந்தோரிடத்திலும் பொருளாகிய செல் வம் உண்டு. 142
பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
பொருட் செல்வம் நீங்கி யொழியும் இயல்பினது. 143
பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்
துன்பத்தைப் பொறுத்துக் கொள்வோர் அழியுமட்டும் புகழோடு வாழ்வர். 144
பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்
பொறுமை எனும் குணத்தைத் தன்பால் என்றும் கொள்ளல்வேண்டும். 145
மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை
பெண்கள் தம்மைக் கற்பு நிலையில் நிறுத்தித் தாங்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 146
மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்
திருமகள் சோம்பலில்லாதவன் முயற்சி யிலே தங்கியிருப்பாள்.147
மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை
தம்மைத் தாங்கும் துணை இல்லார்க்கு நிலைத்து நிற்கும் நிலையும் இவ்வுலகில் இல்லை. 148
மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்
நன் மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓர் அறிவினதாகிய மரத்தினை ஒப்பர்.
149
மறுத்துஇன்ன செய்யாமை மாசற்றார் கோள்
குற்றம் நீங்கியோர் தமக்குத் துன்பம் பிறர் செய்தாலும் மறுத்துத் தாமும் செய்ய மாட்டார்.150
மனத்தானும் மாணணுசெய் யாமை தலை
உள்ளத்தொடு கூடிய மாண்பற்ற செயல் களைச் செய்யாமை சிறந்தது. 151
மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி
குடிமக்கள் அரசன் செங்கோல் உளதாயின் துன்பமின்றி இருப்பர். 152
மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு
மக்களுக்கு நிலையுறும். இனத்தியல்பாகவே அறிவும் 153
மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
கற்ற அளவிற்கேற்ப மக்களுக்கு அறிவும் வளர்ந்து காணப்படும். 154
மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
உள்ளத்தால் அடையும் உயர்ச்சியை யொத்து மக்களும் உயர்வெய்துவர். 155
மாறல்ல துய்க்க துவரப் பசி்த்து
நன்றாகப் பசித்தபின்னர்த் தன்னுடலுக்கு ஆகும் தன்மையவற்றை உண்க. 156
முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
கல்வியறிவில்லாதவர் முகத்திலே கண்களைப் பெறாது புண்களைப் பெற்றவராவர். 157
முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
விருந்தினரை வேறுபட்ட முகத்துடன் பார்த்தால் அவர் உள்ளம் வருந்திக் குழைவர். 158
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
உடலின் வருத்தத்திற்கேற்ப முயற்சி பயன் கொடுக்கும். 159
முயற்றிள்மை இன்மை புகுத்தி விடும்
முயற்சி இல்லாத தன்மை நல்குரவில் ஆழ்த்திவிடும். 160
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று
ஈதலின் பயனாக வானுலகம் இல்லாதொழி யினும் கொடுத்தல் சிறந்தது. 161
மேவற்க மென்மை பகைவ ரகத்து
வலியின்மையைப் பார்த்திருக்கும் பகைவர் மாட்டு அவ்வலியின்மையை கொள்ளாதே. மேலிட்டுக் 162
வழிவந்த வன்க ணதுவே படை
தொன்றுதொட்டு வந்த தறுகண்மையை உடையது அரசனுக்குப் படை ஆவது. 163
வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
அறிவின்மையாலே துன்பஞ் செய்தாரைப் பொறுத்துக்கொள்ளுதல் உயர்ந்த வன்மை ஆகும். 164
விறலீனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு
பிறர் பொருள் வேண்டாமை என்னும் செல்வம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும். 165
வினைத்திட்பம் என்பதொருவன் மனத் திட்பம்
செயலாற்ற முற்படுவோன் மனத்திண்மை வினை செய்தற்கண் திண்மை என்று சொல் லப் படுவது. 166
வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு
செயலாற்றும் திண்ணிய வன்மை யில்லாத வரை உலகம் விரும்பிக்கொள்ளாது. 167
வினை நலம் வேண்டிய எல்லாந் தரும்
வினையது நன்மை ஒருவன் வேண்டியவை எல்லாம் தரும். 168
வினைப்பகை வீயாது பின்சென் றடும்
தீவினை அதனைச் செய்தவன் செல்லும் இடம் எல்லாம் சென்று கொல்லும். 169
வினைமாட்சி இல்லார்கண் இல்லா தரண்
காக்கும் தொழில்மாட்சி இல்லாதவரைப் பெறாத அரண் பயனில்லை. 170
வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்
பிறருடைய பொருளை விரும்புதல் தக்கது அன்று. 171
வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
ஒன்றாய்ச் சேரத்தக்க பண்புகளால் ஒத்தலே ஒப்பென்று சொல்லப்படும். 172
வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்
வெறுப்பில்லாதன வேண்டுவன ஆகிய வற்றை விரும்பும் வண்ணம் சொல்க. 173
வேட்பத் தாஞ்சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
பிறர் கேட்டலை விரும்புமாறு சொல்லி அவர் சொல்லின் பயனைக் கொள்ளுக. 174
வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
பிறர் தமக்குத் துன்பம் இழைத்தபோது பொறுத்துக் கொண்டோரைப் பொன் னைப்போல் அறிவுடையோர் ஏற்றுக்கொள் வர். 175
கருத்துகள்
கருத்துரையிடுக