இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)

படம்
ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West) டிசம்பர்.21, 1892.   பிரிட்டன் எழுத்தாளர்,  பத்திரிகையாளர் மற்றும்  பெண் உரிமை ஆர்வலர்  டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு, ரெபெக்கா வெஸ்ட்   லண்டனில் பிறந்தவர். அவரது தந்தை துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உதவியது. அவரது தந்தை இறந்தபோது, அவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது.  பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக் கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.  'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் அவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந...

சென்னை கன்னிமாரா பொது நூலகம்

படம்
சென்னை கன்னிமாரா பொது நூலகம் சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896 டிசம்பர் 05,  கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினா...
படம்
நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில்  தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, பிறந்த தினம் - 1795) இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார். * தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார். * படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். * 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர...