வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர்
வெண்ணிப்போர் -2 அல்லது வெண்ணிப்பறந்தலைப் போர் வெண்ணியில் நடைபெற்ற போரில் சோழன் கரிகாலன் பெருவளத்தானும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்டு தமது வீரத்தைப் பறைசாற்றி இருந்துள்ளனர். இதில் வீரமும், மானமும் புகழ் பெற்று நின்றன என்பர். இதில் போரில் தோல்வியுற்றப் பின்னர் சேர நாடு ஒளி இழந்தது என்று சங்ககாலப் புலவர் பெருமக்கள் கூறுகின்றனர். கழாத்தலையார் என்ற சங்ககாலப் புலவர் புறநானுற்று வரிகளில், "மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப, இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழாவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்" (புறம் 65) விளக்கம்: முரசு முழங்கவில்லை, யாழ் இசையை மறந்து. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர்கள் உழுதலைத்தவிர்த்தனர். ஊர்புற வேலிகள் விழா ஏதுமின்றி கூட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. என்று சேர நாட்டில் உள்ள சோர்வான நிலையை எடுத்து இயம்புகிறார். அதே சமயத்தில்