இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமென்ன?

டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமென்ன? மோடி தலைமையிலான இந்திய அரசானது,  டிஜிட்டல் இந்தியா எனும் முழக்கத்துடன் அதிகாரத்தைப் பரவலாக்கும் வண்ணம் (Power to Empower) , நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இணையதள சேவை மூலம் நாட்டின் வளங்களை மேம்படுத்த, சேவை ஆற்ற உறுதி பூண்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் அதிகாரப்பரவல் மூலம் சமூகம் மற்றும் பொருளாதரத்தில் அறிவு சார் நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவது என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இணையத் தள சேவை மூலம் பல்வேறு துறைகளை, ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக இந்த திட்டம் கீழ்க்கண்டவாறு அமைய உள்ளது.      பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, குறிக்கோளை அடைதல்,      சிறு செயல் திட்டங்கள் சிறந்து விளங்கினாலும், பொதுவான குறிக்கோளை எதிர்நோக்கல்,      தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு துறை   DeitY (Department of Electronics and Information Technology) மூலம் அரசின் மற்றத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்      அனைவரும் ஒருங்கிணைந்து திட்டனங்களை வெளிப்படையான அணுகுமுறையில் செயல்படுத்துவதன் மூலம் குற