ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West, a British writer)
ரெபெக்கா வெஸ்ட் (Rebecca West) டிசம்பர்.21, 1892. பிரிட்டன் எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் பெண் உரிமை ஆர்வலர் டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு, ரெபெக்கா வெஸ்ட் லண்டனில் பிறந்தவர். அவரது தந்தை துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உதவியது. அவரது தந்தை இறந்தபோது, அவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது. பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக் கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் அவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந...