தென்னை மரம்
🌴 தென்னை மரம் கடற்காற்றின் கையில் ஆடும் கம்பீரமான பசுமை வீரன், காலம் (பருவ) எத்தனை மாறினாலும் குனியாத நிமிர்ந்த நெஞ்சம் — அதுதான் தென்னை மரம். வெயிலின் வெப்பம் வந்தாலும் விரித்த இலைகள் நிழல் தரும், மழை மேகம் சூழ்ந்தாலும் மண்ணுக்கு வாழ்வு ஊற்றும். தண்ணீர் துளி தேடி நின்று தரையைத் தாங்கும் வேர்கள் போல, தாயின் கரம் போல காக்கும் தென்னையின் நெஞ்சம் ஆழம். பழம் கொடுத்து பசியை தீர்க்கும், தென்னைத் தண்ணீர் தாகம் போக்கும், இலைகள் வீடு கட்ட உதவும், நார் நெசவு வாழ்வை நிமிர்க்கும். கொம்பும் காயும் இலைகளும் கூட கொடையாய் அளிக்கும் மரபு அது; கொடுத்துக் கொண்டே வாழும் தன்மை தமிழரின் உயிர் அதில் தங்கும். காற்றோடு ஆடும் அதன் நிழலில் கதைகள் பிறக்கும், கனவுகள் மலரும்; கடற்கரைப் பாதையில் நின்று காலத்தைக் காப்பவன் தென்னை மரம். அன்னையைப் போல தென்னையைக் காப்போம்