இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ருக்மா சிறு வயது திருமணம் - இந்தியாவில் தடை குறித்து..

படம்
ருக்மாவின் சிறுவயது திருமணமும் தடையும்.. ருக்மா பிறந்த நாள் 22 நவம்பர் 1864. 1864ல் மகராஷ்டிராவின் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ருக்மா. அப்பா ஜனார்த்தனன் பாண்டுரங்கன் . ஆசாரி குடும்பத்தை சேர்ந்தவர்..அம்மா ஜெயந்திபாய் ..ஒரளவு வசதியான குடும்பம்.அப்பா சிறு வயதில் இறந்து போக, அம்மா ஜெயந்தி குடும்ப சொத்துகளை மகள் ருக்மா பேரில் எழுதி வைத்துவிட்டு மனைவியை இழந்த சக்ராம் அர்ஜுன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்கிறார்.  சிறுவயது திருமணம்   11 வயதில் அந்த கால முறைபடி தன்னை விட 9 வயது மூத்த தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மா திருமணம் செய்து வைக்க படுகிறார். ஆனாலும் கணவன் வீட்டுக்கு போகாமல் ஸ்டெப் பாதர் அர்ஜுன் ,தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார். அருகில் இருந்த கிறிஸ்துவ மிஷன் லைப்ரரியில் வாசிப்பு .அம்மாவும் பெண்ணும் ஆரிய சமாஜ கூட்டங்களுக்கும் போகிறவர்கள்.  ருக்மாவின் மாமியார் இறந்து போக, தாதாஜி ருக்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார்..ருக்மா தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கிறார்.அவர் இரண்டாவது தந்தை அர்ஜுன், ருக்மாவின் கருத்தை ஆதரிக்கிறார். தாதாஜி ருக்மாவின் ...