இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வர்த்தமான மகாவீரர்

படம்
  வர்த்தமான மகாவீரர் வர்த்தமான மகாவீரர்‌ இருபத்து நான்காவது (24) தீர்த்தங்கரராகக்‌ கூறப்படுகிறார்‌.  அர்த்தமாகதியில்‌ எழுதப்பட்ட பல நூல்களிலும்‌ இவர்‌ (வைசாலிகா) வேசாலியன்‌ என்றே அழைக்கப்பட்டார்‌.  'ஜைனமதம்‌' என்ற உயர்ந்த கட்டடத்திற்கு மிக உறுதியான அடித்தளம்‌ இட்டவர்‌. அதன்‌ காரணமாகவே இன்றைக்கும் ஜைனமதம்‌ விரிசல்களும்‌ ஓட்டைகளும்‌ இன்றி சிறந்து நிற்கக்‌ காண்கிறோம்‌. மற்றைய மதங்களைப் போல இவர்களுக்குள் பூசல்கள் இல்லை. மகாவீரர்‌ “நிகந்த நாதபுத்த” என்ற பெயருடன்‌ நிர்கிரந்த பிரிவின்‌ தலைவராக விளங்கினார்‌ என்பதையும்‌ அவருடைய பரிநிர்வாண காலத்தைப்‌ பற்றியும்‌ பவுத்த நூல்கள்‌ தெளிவாகக்‌ கூறுகின்றன.  பெற்றோர்‌ இவருக்கு வர்த்தமானர்‌ என்று பெயரிட்டனர்‌. யசோதா என்ற பெண்ணை மணந்து அனோஜா என்ற மகளுக்கும்‌ தகப்பன்‌ ஆகிறார்.  பெற்றோரின்‌ இறப்பிற்கு பின்னர்‌ அரசபதவிக்கு வந்த தன்‌ அண்ணன்‌ நந்தி வர்த்தன்‌ மற்றும்‌ முக்கிய மனிதர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ சமணத்‌ துறவியானார்‌.  தன்னுடைய முப்பதாவது வயதில்‌ அரச வாழ்வைத்‌ துறந்து பன்னிரெண்டு  ஆண்டுக்காலம்‌ கடுந்தவமிருந்து ஞானம்‌ பெற்றார்‌. தன்னுடைய 72 வத