மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பது உண்மையா? வடக்கு எல்லை தமிழர்களின் பாரம்பரிய பகுதி திருப்பதி வரை. விஜயநகர அரசின் தலைநகரம் திருப்பதிக்கு அருகில் சந்திரகிரிக்கு மாற்றப்படும் வரையில் தெலுங்கு மொழி அங்கு இல்லை. ஆனால், வரலாறு கணக்கில் கொள்ளப்படவில்லை. திருப்பதி, 1953 மாநிலப் பிரிப்பில் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது. திருத்தணியும் ஆந்திரத்திற்கு அளிக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் பட்டாஸ்கர் கமிட்டி முடிவுக்குப்பின் தான், திருத்தணி மற்றும் சுற்றி இருக்கும் 300 கிராமங்களில் தமிழ் பெரும்பாண்மை நிறுவப்பட்டு 1960 இல் தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பதி பகுதிகளில் இந்த வாய்ப்பு கூட அளிக்கப்படவில்லை. 1921 மக்கட்தொகைக்கணக்கின்படி சென்னையில் தமிழர் விழுக்காடி 77% 1931 மக்கட்தொகைக்கணக்கின்படி சென்னையில் தமிழர் விழுக்காடி 69.1%. தெலுங்கு மக்கள் விழுக்காடு 19% தான். பாரம்பரியமாகவும், மக்கட்தொகை அடிப்படையிலும் தமிழர்கள் பக்கமே நியாயாம் இருந்தது. எனினும் ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின்னரே சென்னையை மீட்க மு...
இடுகைகள்
2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது