இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்கின்ற யமுனா (31 March 1865 – 26 February 1887) மும்பை கல்யாண் நகரில் பிறந்த இவரின் கதை. " உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன் , ஆனா ஒரே கண்டிஷன் . அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில் , " இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க . பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது " என்கிறாள் . " சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம் . பின்னாடி பாத்துக்கலாம் " என்று சமாதானம் சொல்கிறான் அவளின் கணவன் . பெண்கல்வி கல்யாணமும் ஆகி விடுகிறது . பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க , அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து , இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு...