நியூ கலிடோனியத் தமிழர்கள்..
நியூ கலிடோனியத் தமிழர்கள். . ************************************************* நியூ கலிடோனியா என்ற தீவு, ஆஸ்திரேலியா அருகில் உள்ளது. இந்தத் தீவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 500 பேர் வாழ்கின்றனர். மலபார்கள் என அழைக்கப்படும் இவர்கள் 19வது நூற்றாண்டில் பிரெஞ்சு குடியேற்றப் பகுதியாக இருந்த ரீயூனியனிலிருந்து வந்தவர்களாவர். வேலையில் சிறந்தவர்கள் தமிழர்கள் ------------------------------------------------------------------- நியூ கலிடோனியாவில் சென்ற நூற்றாண்டில் பல தமிழ்க் குடிகள் உள்ளூர் குடிகளுடன் கலப்புமணம் செய்தனர். இந்தியர்கள் பெருந்திரளாக வேலைக்கு அங்கு சென்றதாகவும் அங்கிருந்த சீனர்களையும் சாவாகத்தாரையும் விடச் சிறப்பாக வேலை செய்ததாகவும் 1919 இல் வெளியான ஓர் நூல் கூறுகிறது. அழுகையில் தமிழ்ப்பாடல்.. --------------------------------------------------- ஆகஸ்டு 1967 இல் தாஹித்தியில் தமிழினத்தைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் கண்டறியப்பட்டனர். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தங்களின் மூதாதையர் குறித்து தெரியவில்லை எனினும் பெற்றோர் தங்களின் பெற்றோர் எவ்வாறு இந்தியர்களுடன் அவர்களது மொழியி