இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நியூ கலிடோனியத் தமிழர்கள்..

படம்
நியூ கலிடோனியத் தமிழர்கள். . ************************************************* நியூ கலிடோனியா என்ற தீவு, ஆஸ்திரேலியா அருகில் உள்ளது. இந்தத் தீவில்   இந்திய வம்சாவளியினர் சுமார் 500 பேர் வாழ்கின்றனர். மலபார்கள் என அழைக்கப்படும் இவர்கள் 19வது நூற்றாண்டில் பிரெஞ்சு குடியேற்றப் பகுதியாக இருந்த ரீயூனியனிலிருந்து வந்தவர்களாவர். வேலையில் சிறந்தவர்கள் தமிழர்கள் ------------------------------------------------------------------- நியூ கலிடோனியாவில் சென்ற நூற்றாண்டில் பல தமிழ்க் குடிகள் உள்ளூர் குடிகளுடன் கலப்புமணம் செய்தனர். இந்தியர்கள் பெருந்திரளாக வேலைக்கு அங்கு சென்றதாகவும் அங்கிருந்த சீனர்களையும் சாவாகத்தாரையும் விடச் சிறப்பாக வேலை செய்ததாகவும் 1919 இல் வெளியான ஓர் நூல் கூறுகிறது. அழுகையில் தமிழ்ப்பாடல்.. --------------------------------------------------- ஆகஸ்டு 1967 இல் தாஹித்தியில் தமிழினத்தைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் கண்டறியப்பட்டனர். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தங்களின் மூதாதையர் குறித்து தெரியவில்லை எனினும் பெற்றோர் தங்களின் பெற்றோர் எவ்வாறு இந்தியர்களுடன் அவர்கள...

பல்லவர்கள் வரலாறு

                             பல்லவப் பேரரசர்கள் சிம்மவர்மன் முதல் அபராஜிதவர்மன் வரையிலான அரசர்கள் பல்லவர் ஆட்சிக்குச் சிறப்புச் செய்தனர். இவர்களில் முதலாம் மகேந்திரன் போன்றோர் கலைவல்லுநர்களாகவும் திகழ்ந்தனர்.   சிம்மவர்மனும் சிம்மவிஷ்ணுவும் செப்பேட்டுச் சான்றுகளாலும் , கல்வெட்டுச் சான்றுகளாலும் சிம்மவர்மனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. சிம்மவர்மனின் மகனாகிய சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்திய பெருமைக்கு உரியவன். சிம்மவர்மன் (கி.பி. 550-570)      இவன் காலத்தனவாக இரண்டு சாசனங்கள் கிடைத்துள்ளன. திருத்துறைப்பூண்டி வட்டம் பள்ளன் கோயில் எனும் ஊரிலிருந்து கிடைத்த செப்பேட்டுச் சாசனமும் , திருவள்ளூர்வட்டம் சிவன்வாயில் என்ற கிராமத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்றும் இவனது வரலாறு அறியத் துணை புரிகின்றன. பத்து அசுவமேதயாகங்களையும் , பகுசுவர்ணம் என்ற யாகத்தையும் செய்தவன் இவன் ...

தமிழ் மொழி, தமிழ் நாடு, தமிழர் பற்றி சங்க இலக்கியங்களில் ..

இலக்கியத்தில் தமிழர்நாடு *♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡♡*♡*♡*♡*♡ கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா? தமிழ்:- --------- தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறநானூறு 58 அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல் - புறநானூறு 50 தமிழ் வையைத் தண்ணம் புனல் - பரிபாடல் 6 தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார் - பரிபாடல் 9 தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4 __________________________________ தமிழர் :- ------------- தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19 (இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்) மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35 (தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்) தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8 (தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்) அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24 ________________________________ தமிழர்நாடு :- ---...

டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமென்ன?

டிஜிட்டல் இந்தியாவின் நோக்கமென்ன? மோடி தலைமையிலான இந்திய அரசானது,  டிஜிட்டல் இந்தியா எனும் முழக்கத்துடன் அதிகாரத்தைப் பரவலாக்கும் வண்ணம் (Power to Empower) , நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இணையதள சேவை மூலம் நாட்டின் வளங்களை மேம்படுத்த, சேவை ஆற்ற உறுதி பூண்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் அதிகாரப்பரவல் மூலம் சமூகம் மற்றும் பொருளாதரத்தில் அறிவு சார் நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவது என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இணையத் தள சேவை மூலம் பல்வேறு துறைகளை, ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக இந்த திட்டம் கீழ்க்கண்டவாறு அமைய உள்ளது.      பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, குறிக்கோளை அடைதல்,      சிறு செயல் திட்டங்கள் சிறந்து விளங்கினாலும், பொதுவான குறிக்கோளை எதிர்நோக்கல்,      தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு துறை   DeitY (Department of Electronics and Information Technology) மூலம் அரசின் மற்றத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்      அனைவரும் ஒருங்கிணைந...