வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு

வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு. உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..! அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வே...