பல்லவர்கள் வரலாறு
பல்லவப் பேரரசர்கள் சிம்மவர்மன் முதல் அபராஜிதவர்மன் வரையிலான அரசர்கள் பல்லவர் ஆட்சிக்குச் சிறப்புச் செய்தனர். இவர்களில் முதலாம் மகேந்திரன் போன்றோர் கலைவல்லுநர்களாகவும் திகழ்ந்தனர். சிம்மவர்மனும் சிம்மவிஷ்ணுவும் செப்பேட்டுச் சான்றுகளாலும் , கல்வெட்டுச் சான்றுகளாலும் சிம்மவர்மனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. சிம்மவர்மனின் மகனாகிய சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்திய பெருமைக்கு உரியவன். சிம்மவர்மன் (கி.பி. 550-570) இவன் காலத்தனவாக இரண்டு சாசனங்கள் கிடைத்துள்ளன. திருத்துறைப்பூண்டி வட்டம் பள்ளன் கோயில் எனும் ஊரிலிருந்து கிடைத்த செப்பேட்டுச் சாசனமும் , திருவள்ளூர்வட்டம் சிவன்வாயில் என்ற கிராமத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்றும் இவனது வரலாறு அறியத் துணை புரிகின்றன. பத்து அசுவமேதயாகங்களையும் , பகுசுவர்ணம் என்ற யாகத்தையும் செய்தவன் இவன் ...