இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி (21 October 1816)

படம்
 மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி அதே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளியும் தொடங்கப் பெற்றது. அப்போது பள்ளியின் தலைவராக இருந்த ஆர்.எஸ்.ஹட்சிங்ஸ் (Robert Sparke Hutchings) என்பவரே தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கும் மூலகாரணமாக இருந்தவர் ஆவார். 1816 அக்டோபர் 21-ஆம் திகதி மலேசியாவின் முதல் பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்டது. அது ஓர் ஆங்கிலப்பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரி ஸ்கூல் (*Penang Free School*). மலேசியாவில் மட்டும் அல்ல. தென்கிழக்கு ஆசியாவிலேயே அதுதான் முதல் ஆங்கிலப் பள்ளியும் ஆகும். தொடக்கக் காலங்களில் அரசாங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள், உள்ளூர் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கல்வி போதிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளுக்கு என தனியார் வகுப்புகள் ரகசியமாக நடைபெற்றன. லண்டனில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். எல்லாக் குழந்தைகளும் கல்வி வசதிகள் கிடைக்கப்படவில்லை. ஆக அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கத்தில் தான் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பினாங்கு பிரி ஸ...

தானங்களைப் போற்றும் தமிழ்ச் சமணம்

படம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். - வள்ளுவர். பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக் காலத்தில் சமணச் சமயத்தில் இல்லை. எக்குலத்தைச் சேர்ந்தவரானாலும், தங்களது சமயக் கொள்கையைப் பின்பற்றினால் அவரைச் சமணர்கள் போற்றி வந்தனர். அருங்கலச் செப்பு எனும் நூலில் "பறையன் மகனெனினும் காட்சி யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று" என்று கூறப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் சாதி பேதம் பார்க்காத தமிழகத்தில், சாதி பேதம் பாராட்டாத சமணச் சமயம் பரவியதில் ஆச்சரியமில்லை. மேலும் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி ஆகிய நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர்கள் பேரறமாகக் கருதினர். இந்த நான்கும் அன்ன தானம், அபய தானம், ஔடத தானம், சாத்திர தானம் எனப்பட்டன. அன்ன தானம், சாத்திரம் போன்ற வார்த்தைகள் இப்படிப் பிரபலமானவைதான். இது குறித்துத் தமிழ் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி விரிவாக எழுதியிருக்கிறார். உணவு இல்லாத ஏழைகளுக்கு உணவு கொடுத்துப் பசியைப் போக்குவது தலை சிறந்த அறம் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், அன்ன தானத்தைச் சமணர்கள் முதல் தானமாகக் கொண்டிருந...