டத்தோ பீட்டர் வேலப்பன். இவர் ஒரு மலேசியா நாட்டை சார்ந்த தமிழர். இவர் தம் கடும் முயற்சியால் கிடைத்த 'ஆசிய காற்பந்தின் திருவாளர்' (Mr. Asian football award) விருது கிடைக்கப்பெற்றவர். சிறு வயதுகளில், மலேசியா நெகிரி செம்பிலான் ரப்பர் தோட்டங்களில் உழன்று, 12 வயது வரை தமிழ் மொழி மட்டுமே அறிந்திருந்தும், நம்பிக்கையுடன் தளராது முயன்று, கல்வியாளராகவும், பின் மலேசிய காற்பந்துக் குழு விளையாட்டாளராக, நிர்வாகியாக, பயிற்றுவிப்பாளராகவும் இருந்த டத்தோ பீட்டர் வேலப்பன் தனது நினைவுகளை 'கனவுகளுக்கு அப்பால்' என்ற புத்தகத்தை சிங்கப்பூரில் வெளியிட்டார். இவர் 1935 ஆம் ஆண்டு பிறந்து, பின்னர் பிர்மிங்ஹம் பல்கலைக் கழகத்தில் பயின்று, அதன் கனடாவில் மக்கில் பல்கலைக் கழகத்தில் பயின்றும் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் செரம்பான் நெகிரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, ஆசிய காற்பந்து கழகத்தின் சேர்ந்து, 1963-1980 வரை துணை இயக்குனராக மலேசியா காற்பந்து கூட்டமைப்பில் (Football Association of Malaysia) பணியாற்றினார். இவர் பணியாற்றிக் காலத்தில் தன் அனுபவத்தைக் கொண்டு மலேசிய காற்ப...
இடுகைகள்
நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது