இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூறுதலைக் கூறத் தமிழில் இத்தனை சொற்களா? -- தமிழ் அறிக

படம்
அசைத்தல், அறைதல், அரற்றுதல், இசைத்தல், இறுத்தல், இயம்புதல், உரைத்தல், உளறுதல், உன்னுதல், என்னுதல், ஓதுதல், கதைத்தல், கத்துதல், கரைதல், கழறுதல், கிளத்துதல், குயிலுதல், குழறுதல், குறித்தல், கூறுதல், சாற்றுதல், செப்புதல், சொல்லுதல், நவிலுதல், நுவலுதல், நுதலுதல் நொடித்தல், பறைதல், பகருதல், பயிருதல், பன்னுதல், பிதற்றுதல், பினாத்துதல், பீற்றுதல், புகலுதல், புலம்புதல், புகழுதல், பேசுதல், பொழிதல், போற்றுதல், மாறுதல், மிழற்றுதல், முழங்குதல், மொழிதல், விள்ளுதல், விளத்தல், விளம்புதல், விடுத்தல், விதத்தல், வலித்தல்.  பொதுவாக, ‘சொல்லுதல்’ என்னும் பொருளினை இச்சொற்கள் குறித்தாலும், கூர்ந்து நோக்குங்கால் நுட்பமான பொருட்சிறப்பினைத் தருவதாகவும் இருக்கின்றன. குயிலுதல் - குயில் போலப் பேசுதல்,  கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்,  கதைத்தல் - கதைபோல் சொல்லுதல்,  கரைதல் - காக்கைபோல் கரைந்து அழைத்துச் சொல்லுதல்,  இயம்புதல் - இசைக் கருவியின் இனிமையுடன் பேசுதல்,  உளறுதல் - ஒன்று கிடக்க ஒன்று சொல்லுதல்,  பொழிதல் - மழைபோல் இடையறாது சொல்லுதல்,  விளம்ப...