இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பவுத்தநெறி வளர்த்த காஞ்சி..

படம்
பவுத்தநெறி வளர்த்த காஞ்சி..   காஞ்சிபுரம்: இந்த ஊர்தொன்றுதொடு சைவ, வைணவ, ஜைன, பவுத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்து வந்தது. பவுத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பவுத்த தூபி இருந்தாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங்சுவாங் என்ற சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். . கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளி-வளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், பைம்பூம் போதிப் பகவற்கு ஒரு சேதியம் (அதாவது சைன, பௌத்தரின் ஆலயம்/பள்ளி) அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். . இளங்கிள்ளி அரசாண்ட கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், தருமத வனம் என்றும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்..   பவுத்தநெறி வளர்த்த காஞ்சி.. அ