மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி (21 October 1816)

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி அதே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளியும் தொடங்கப் பெற்றது. அப்போது பள்ளியின் தலைவராக இருந்த ஆர்.எஸ்.ஹட்சிங்ஸ் (Robert Sparke Hutchings) என்பவரே தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கும் மூலகாரணமாக இருந்தவர் ஆவார். 1816 அக்டோபர் 21-ஆம் திகதி மலேசியாவின் முதல் பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்டது. அது ஓர் ஆங்கிலப்பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரி ஸ்கூல் (*Penang Free School*). மலேசியாவில் மட்டும் அல்ல. தென்கிழக்கு ஆசியாவிலேயே அதுதான் முதல் ஆங்கிலப் பள்ளியும் ஆகும். தொடக்கக் காலங்களில் அரசாங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள், உள்ளூர் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கல்வி போதிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளுக்கு என தனியார் வகுப்புகள் ரகசியமாக நடைபெற்றன. லண்டனில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். எல்லாக் குழந்தைகளும் கல்வி வசதிகள் கிடைக்கப்படவில்லை. ஆக அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கத்தில் தான் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பினாங்கு பிரி ஸ...